நான்காம் முதல் ஆறாம் நூற்றாண்டு வரையான இஸ்லாமுக்கு முந்தைய அரேபியப் பெண்கள்

முஸ்லிம்கள் சொல்லிக் கொள்வதற்கு மாறாக, இஸ்லாம் அரேபியாவின் பெண்களின் நிலையை உயர்த்தவில்லை. அது உண்மையில் அவர்களை மேன்மை படுத்துவதற்கு பதிலாக சிறுமைப்படுத்தி இருக்கிறது.

புகாரி Volume 3, Book 43, Number 648:
இப்னு அப்பாஸ் அறிவித்தார்:
நான் நபி அவர்களின் மனைவிமார்களில் இருவரைப் பற்றி உமர் அவர்களிடம் கேட்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். ஏனெனில், அவ்விருவரைப் பற்றித்தான் அல்லா (திருக்குர்ஆனில்), ‘நீங்கள் இருவரும் அல்லாவிடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால் (அது உங்களுக்குச் சிறந்ததாகும்.) ஏனெனில், உங்கள் உள்ளங்கள் நேரிய வழியிலிருந்து (சற்றே) பிறழ்ந்து விட்டிருக்கின்றன” (திருக்குர்ஆன் 66:04) என்று கூறியிருந்தான்.
(ஒரு முறை) உமர் அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். அவர்கள் (மலஜலம் கழிப்பதற்காக) விலகிச் சென்றார்கள். நானும் அவர்களுடன் தண்ணீர்க் குவளையை எடுத்துக் கொண்டு விலகிச் சென்றேன். அவர்கள் மலஜலம் கழித்துவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் அவர்களின் கைகளில் குவளையிலிருந்த தண்ணீரை ஊற்றினேன். (அதில்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது நான், ‘விசுவாசிகளின் தலைவரே! நபி அவர்களின் மனைவிமார்களில் இருவரைக் குறித்து, ‘நீங்கள் இருவரும் அல்லாவிடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால் (அது உங்களக்குச் சிறந்ததாகும்)’ என்று இறைவன் கூறியுள்ளானே, அந்த இருவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு உமர் , ‘இப்னு அப்பாஸே! உங்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (குர்ஆனின் விளக்கத்தில் பெரும் அறிஞரான உங்களுக்கு இது கூடவா தெரியாது?) ஆயிஷா அவர்களும் ஹஃப்ஸா அவர்களும் தான் அந்த இருவர்” என்று கூறினார்கள். பிறகு உமர் நடந்த நிகழ்ச்சி முழுவதையும் கூறலானார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள் நான் அன்சாரியான என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருடன் பனூ உமய்யா இப்னு ஸைத் குலத்தாரின் குடியிருப்பில் வசித்து வந்தேன். அது மதீனாவை ஒட்டிய ஒரு குடியிருப்புப் பகுதியாகும். நாங்கள் இருவரும் முறை வைத்துக் கொண்டு நபி அவர்களிடம் தங்குவோம். அவர் ஒரு நாள் நபி அவர்களுடன் இருப்பார். நான் ஒரு நாள் அவர்களுடன் இருப்பேன். நான் நபி அவர்களுடன் இருக்கும்போது நபி அவர்களின் அன்றைய நாளின் கட்டளைகள், போதனைகளையும் பிறவற்றையும் அவரிடம் தெரிவிப்பேன். அவர் நபி அவர்களுடன் இருக்கும்போது இதே போன்று அவரும் எனக்குத் தெரிவிப்பார். குறைஷிக் குலத்தினராகிய நாங்கள் பெண்களை மிஞ்சி விடுபவர்களாக இருந்து வந்தோம். (பெண்களை எங்கள் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக, எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்.) நாங்கள் அன்சாரிகளிடம் (மதீனா நகருக்கு) வந்தபோது பெண்கள் அவர்களை (ஆண்களை) மிஞ்சி விடக் கூடியவர்களாக இருக்கக் கண்டோம். (பெண்கள் ஆண்களைக் கட்டுப்படுத்துபவர்களாக, தம் மனத்திற்குப் பிடிக்காதவற்றைக் கூறும்போது ஆண்களை எதிர்த்துப் பேசக் கூடியவர்களாக இருக்கக் கண்டோம்.) (இதைக் கண்ட) எங்களுடைய பெண்களும் அன்சாரிப் பெண்களின் வழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினார்கள். (ஒரு நாள்) நான் என் மனைவியிடம் (கோபத்துடன்) இரைந்து பேசினேன். அவள் என்னை எதிர்த்துப் பேசினாள், அவள் என்னை எதிர்த்துப் பேசியதை நான் வெறுத்தேன். நான் உம்மை எதிர்த்துப் பேசியதை நீர் ஏன் வெறுக்கிறீர்? அல்லாவின் மீதாணையாக!நபி அவர்களின் மனைவிமார்கள் கூட அவர்களிடம்எதிர்த்துப் பேசுகிறார்கள். அவர்களில் சிலர் நபியவர்களிடம் ஒருநாள் முழுக்கவும் இரவு வரை பேசுவதில்லை” என்று கூறினாள். இதைக் கேட்டு நான் அச்சமுற்று, ‘அவர்களில் இப்படிச் செய்தவர் பெரும் இழப்புக்கு ஆளாகிவிட்டார்” என்று கூறினேன்.

(இது ஒரு நீளமான ஹதித். அதை முழுவதையும் படிக்க எனது Maryiah the Coptic Maid என்ற கட்டுரையை படிக்கவும்.)
குறைஷி ஆண்கள் தங்கள் பெண்களின் மீது “அதிகாரம்” கொண்டிருந்தது இருக்க, அவர்கள் மதீனாவிற்கு வந்ததிலிருந்து தங்கள் ஆண்களிடம் அதிகாரம் கொண்டிருந்த அன்சாரிப் பெண்களைப் பார்த்து மிகவும் மாறி விட்டார்கள் என்று ஓமர் புலம்புகிறான்.

 

மெக்கா ஒரு வழிபாட்டு மையம். எல்லா வழிபாட்டுத்தலங்களிலும், அறிவை விட மூடத்தனத்திற்குத்தான் மதிப்பு அதிகம். மதத்தில் ஆண் ஆதிக்கம் அதிகம் உள்ள இடங்களில் எல்லாம் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது வாடிக்கை. மெக்கா இதற்கு ஒரு விதிவிலக்கல்ல. யூத பெண்கள் மற்றும் மதீனாவின் அன்சாரி (முகமதிற்கு ஆதரவளித்த மதீனாவின் அரபியர்கள்) பெண்களை விட மெக்காவின் பெண்களின் சமூக நிலை மோசமாகவே இருந்தது. மதீனா பெண்களின் சுதந்திரத்தைப் பார்த்த மெக்கா பெண்கள் தங்களுக்கும் அது போன்ற சுதந்திரத்தை எடுத்துக் கொண்டார்கள். மெக்காவின் பெண்களை வெறுக்கும் மனிதர்களில் (misogynist) இருவரான உமருக்கும் முகமதுக்கும் இது பிடிக்கவில்லை. மேலேயுள்ள இஸ்லாமின் இரு முக்கிய நபர்களுக் கிடையிலான உரையாடல் அவர்கள் தங்கள் மனைவிகள் சுதந்திரத்தை அனுபவிப்பதை சிறிதும் விரும்பவில்லை என்று தெளிவாக காட்டுகிறது.

அரேபியர்களிடம் தங்கள் வரலாற்றை எழுதி வைக்கும் பழக்கம் இல்லை. இஸ்லாமிற்கு முந்தைய அவர்களின் வரலாறைப் பற்றியும் வாழ்க்கை முறையைப் பற்றியும் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. எழுதப்பட்ட கொஞ்சத்தையும் கூட முஸ்லிம்கள் அழித்துவிட்டனர். இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் அந்த காலத்தைப் பற்றி எழுதியதெல்லாம் அதை இழிவு படுத்தும் வகையில் தான் உள்ளது. இஸ்லாமிற்கு முந்தைய எல்லாவற்றையும் ஜஹிலியா (jahiliya = அறியாமையின் காலம்) என்றான் முகமது. இஸ்லாம் தோன்றும் வரை இருந்த அரபியர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் என்றான். அரபியர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தார்கள் என்றும் தங்களுக்குள் தொடர்ந்து போர் புரிந்து கொண்டார்கள் என்றும் முஸ்லிம்கள் சொல்லிக்கொள்கிறார்கள். இஸ்லாமிற்கு முந்தைய பெண்கள் ஒட்டகத்தை விட மதிப்பு குறைந்தவர்கள் என்றும் தூதர்தான் அவர்களுக்கு மனித அந்தஸ்து கொடுத்தார் என்றும் சொல்லிகொள்கிறார்கள். மேலே கொடுக்கப் பட்ட ஹதித் உண்மை நிலவரத்தை காட்டுகிறது. அதன் மூலம் இஸ்லாமிற்கு முன் அரேபியப் பெண்கள் அதிக உரிமைகளைக் கொண்டிருந்தார்கள் என்று அறியமுடிகிறது. இஸ்லாம் இந்த உரிமைகளை பறித்துக் கொண்டது.

குறைஷி இனத்தினனான முகமது பெண்களை சிறுமைப் படுத்துவது இயல்பு. அவனுக்கு அதுதான் சரியான வழி. மேலும் அவன் ஆண்மைக் குறைவினால் தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்ததால் தனது மனைவிகளிடம் மிகவும் கண்டிப்பாக இருந்தான். தனது இளம் மனைவிகளின் மீது மற்ற ஆண்களின் கண்கள் பட்டு விடக் கூடாது என்ற பயத்தில் வாழ்ந்து வந்தான். தனது மனைவிகள் தங்கள் ஆசையைத் தீர்க்க வேறு ஆண்களைத் தேடி விடக்கூடாது என்று அவர்களை பயமுறுத்த அவன் வெளிப்படுத்திய வாசகங்கள் எல்லா பெண்களுக்கான விதிகளாக மாறிவிட்டன. முகமது பெண்களை வெறுப்பவனாக (misogynist) இருந்ததனால் இஸ்லாமும் அப்படியே உருவெடுத்திருக்கிறது.
தனது வாக்கு தான் எடுபடவேண்டும் என்றும் மற்றவர்கள் மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவன் நினைக்கும் போதெல்லாம், அல்லா வெளிப்படுத்தியதாக ஒரு வாசகத்தை வெளிவிடுவான். அவன் இருபதற்கும் மேலான மனைவிகளையும் வைப்பாட்டிகளையும் கொண்ட ஒரு வயதானவன். அவன் மனைவிகள் எல்லோருமே இளம் அழகிகள். அவன் தனது கிழ வயதில் அதிகாரம் வாய்ந்த தலைவனாக ஆனான். அதனால் அவனால் பலரை மணக்க முடிந்தது. சிலர் தானே முன்வந்து அவனுக்கு தன்னை கொடுத்துக் கொண்டார்கள். அவன் மிகவும் அழகான பெண்களை மட்டுமே ஏற்றுக்கொண்டான். ஆனால் ஆளும் அதிகாரம் சரசத்தில் கைகொடுக்குமா? இத்தூதுவருக்கு தனக்கும் தன் இளம் மனைவிகளுக்கும் இடையிலான வயது வித்தியாசம் நன்கு தெரியும். அவன் சந்தேகப் பேர்வழியாக இருந்தான். தனது மனைவிகளை தனக்கு மோசம் செய்துவிடாதபடி எச்சரிக்கை செய்தான்.

33:30. நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாவுக்கு மிகவும் சுலபமேயாகும்!
33:31. அன்றியும் உங்களில் எவர் அல்லாவுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.
அவன் தனது மனைவிகளிடம் மற்ற ஆண்களை கவர்ந்து விடாதபடி நடந்து கொள்ளவும், மற்றவர்களால் பார்க்கப்பட்டு இச்சிக்கப்படாமல் இருப்பதற்காக தங்களை மூடிக்கொள்ளுமாறும் அடிக்கடி வலியுறுத்துவான்.

33:32. நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.

33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாவுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லா நாடுகிறான்.
இந்த வாசகங்கள் கடவுளிடம் இருந்து வந்தவையா இல்லை இளம் அழகிகளை மனைவிகளாகக் கொண்ட ஆண்மையற்ற கிழவனிடமிருந்து வந்தவையா?

முகமது தனது மனைவிகளை கட்டுபாட்டில் வைக்க நினைத்தான். இதுதான் இஸ்லாமிய முகத்திரைக்குக் காரணம். ஆரம்பத்தில் தூதரின் மனைவிகளுக்கான கட்டுப்பாடுகளாக இருந்தது பின்னர் ஷரியாவின் சட்டமாக மாறி எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் திணிக்கப் பட்டது.

முகமது பெண்கள் தங்கள் கணவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தினான். இதற்கும் அவனின் பெரும்பாலான மனைவிகள் கட்டுக்குள் அடங்கமறுக்கும் இளம் பெண்கள் என்பதற்கும் சம்பந்தம் இல்லையா? எல்லா பதின்ம வயது (teenage) பெண்களைப் போல அவனின் மனைவிகளும் மிகவும் தற்பெருமை வாய்ந்தவர்கள். அவர்களை பயமுறுத்தி பணிய வைப்பதற்காக தனது சொந்த விருப்பங்களையே கடவுளின் கட்டளைகளாக வெளிப்படுத்தினான். எப்பொழுதெல்லாம் அவனுக்கு தன் மனைவிகளிடம் பிரச்சனையோ அப்பொழுதெல்லாம் அவனது அல்லா அவனைக் காப்பாற்ற வாசகங்களை வெளிப்படுத்துவார். பின்வரும் வாசகம் தன் மனைவிகளை எல்லாம் அடக்கி வைப்பதற்காக வெளிப்படுத்தப் பட்டது.

“அவர் உங்களை “தலாக்” சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த – முஸ்லிம்களான, நம்பிக்கையாளர்களான, அல்லாவுக்கு பணிந்து நடப்பவர்களான, தங்கள் தவறுகளுக்காக அல்லாவுடன் வருந்தி மன்றாடுபவர்களான, அல்லாவை உண்மையாக வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான, (அல்லாவுக்காக) இடம்பெயர்ந்தவர்களான, உங்களை விட உயர்ந்த, முன்னர் மணந்த பெண்களையோ அல்லது கன்னிப் பெண்களையோ இறைவன் உங்களுக்குப் பதிலாக அவருக்கு மனைவியராய் கொடுப்பார்.” Q. 66: 5

முகமதின் முதல் மனைவியான கதீஜா வணிகம் செய்ததில் இருந்தும், அவர் தனக்காக வேலை செய்ய பல ஆண்களை அமர்த்தியிருந்ததில் இருந்தும் இஸ்லாமிற்கு முந்தைய அரேபியப் பெண்கள் அதற்குப் பிந்தைய பெண்களை விட அதிக சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் கொண்டிருந்தார்கள் என்ற உண்மையை புரிந்து கொள்ளலாம். முகமதுவே அவரின் பல வேலையாட்களில் ஒருவன் தானே. இஸ்லாமிற்க்குப் பிறகு பெண்கள் சொந்த தொழில் செய்ததைப் பற்றியோ ஆண்களை தங்களின் வேலையாட்களாக அமர்த்தியதைப் பற்றியோ கதைகள் ஏதேனும் உண்டா?

முகமதிற்கு பெண்கள் பாலின்பப் பொருட்கள் மட்டுமே. அவன் பெண்களிடம் கைகுலுக்க மறுத்தான் என்று அறிவிக்கப்படுகிறது. அவனின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிவதாக அறிவிக்க வந்த பெண் தலைவர்களை சந்திக்கும் பொறுப்பைக்கூட உமரிடம் ஒப்படைத்தான். ஒரு பெண்ணுடனான சாதாரண கைகுலுக்கலில் என்ன கெட்டுவிடப் போகிறது? அவன் தனது பாலியல் ஆசைகளுக்கும் அவனது மத நெறிகளுக்கும் இடையில் அலைக்கழிக்கப் பட்டிருந்திருக்கவேண்டும். ஒரு பெண்ணை தொடும்போது அவனின் மனதில் அவனையே வெட்கப்படும்படி ஏதோ தோன்றியிருக்க வேண்டும்.

பெண்களுக்கு புத்தி மட்டு என்றும் அவர்கள் தனது கணவர்களுக்கு நன்றியற்றவர்கள் என்றும் அதனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் நரகத்திற்குத் தான் போவார்கள் என்றும் எண்ணினான்.

அபூ ஸயீதுல் குத்ரீ அறிவித்தார்.
நபி அவர்கள் நோன்புப் பெருநாளிலோ ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார். ‘மக்களே! தர்மம் செய்யுங்கள்!” என்று மக்களுக்குக் கட்டளையிட்டார். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று ‘பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமக இருப்பதை பார்த்தேன்!” என்றார். ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் இந்நிலை?’ எனப் பெண்கள் கேட்டதும், ‘நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; உங்கள் கணவர்களுக்கு நன்றியற்றவர்களாக உள்ளீர்கள். புத்தியிலும் மத நம்பிக்கையிலும் உங்களைவிட குறைவுள்ள மற்றவர்களை நான் கண்டதில்லை. உங்களில் சிலர் அறிவுடைய கவனமான ஆண்களைக்கூட வழிதவறச் செய்வீர்கள்.” [Bukhari Volume 2, Book 24, Number 541]

பெண்கள் ஆண்கள் வழிதவறிச் செல்வதற்கு காரணம் என்றும், அவர்கள் தங்கள் கணவர்களுக்கு நன்றியற்றவர்களாக இருக்கிறார்கள் என்றும் அதனால் பெரும்பாலான பெண்கள் நரகத்திற்குத் தான் செல்வார்கள் என்றும், அவர்களுக்கு புத்தி மட்டு என்றும் நினைக்கின்ற மனிதன் பெண்களை மதிப்பவனா? இந்த ஹதித் பல வடிவங்களில் பல எண்களில் காணப்படுகின்றது. ஒரு வடிவத்தில் அவன் பெண்களுக்கு ஏன் புத்தி மட்டு என்று தான் நம்புவதாக விளக்குகிறான்.

அபூ ஸயீதுல் குத்ரீ அறிவித்தார்.
‘ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, ‘பெண்களே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது’ என்று கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! ஏன்’ என்று அப்பெண்கள் கேட்டதற்கு, ‘நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கத்திலும் அறிவிலும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை’ என்று இறைத்தூதர் அவர்கள் கூறியபோது ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கமும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன’ என்று பெண்கள் கேட்டனர். ‘ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?’ என்று நபி அவர்கள் கேட்டதற்கு, ‘ஆம்’ என அப்பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?’ என்று நபி அவர்கள் கேட்டதற்கும் ‘ஆம்!’ எனப் பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் பெண்கள் மார்க்கத்தில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்” என்று நபி கூறினார்கள்”. [Bukhari Volume 1, Book 6, Number 301]

அதாவது, முகமதுவின் தர்க்கத்தின்படி இரண்டு பெண்களின் சாட்சி ஒரு ஆணின் சாட்சிக்கு சமம் என்ற கட்டுப்பாட்டின் படி பெண்கள் புத்தி குறைந்தவர்கள் என்றும் அவர்கள் மாதவிடாய் சமயத்தில் தொழுகையும் நோன்பும் செய்யக்க் கூடாது என்ற கட்டுப்பாட்டின் படி பெண்கள் மார்க்கத்தில் குறைந்தவர்கள் ஆவர்.
“மார்க்கத்தில் குறைந்தவர்கள்” என்று எந்த அர்த்தத்தில் சொன்னான்? ஒருவேளை பெண்கள் மத விசயத்தில் ஆண்களை விட குறைவாகவே பரினமித்தவர்கள் என்று சொல்கிறானோ?

இஸ்லாம் படையெடுப்புக்கு 1000 ஆண்டுகள் முந்தைய பாரசீக பெண்வீரர்களின் அக்கேமேனிட் அணி

இந்த அநியாயமான கட்டுப்பாடுகளை விதித்தது யார் என்ற கேள்வி எழவில்லையா? பெண்கள் மாதவிடாய் சமயத்தில் தொழக்கூடாது என்றும் அவர்களின் சாட்சி மதிப்பற்றது என்றும் கட்டுப்பாடு விதித்தது இதே மனிதன் தானே.

இதை மனதில் வைத்துக்கொண்டால், பெண்கள் மதத்திலும் அறிவிலும் குறைவானவர்கள் என்ற அவனின் கூற்று “நான் சொன்னால் அது உண்மையே” என்று பொருள்படுகிறது.
அவனுடைய மோசடி ஒரு முட்டாள்தனத்தை மற்றொரு முட்டாள்தனத்தின் உதவியுடன் நிரூபிப்பதே. பெண்களுக்கு எதிரான அவனுடைய வாதங்கள் அற்பமானவை.

தனது கருத்தை திணிக்க அவன் பயமுறுத்தலை பயன்படுத்தினான். கணவனின் மனம் கோணலுக்குக் காரணமாதல் போன்ற மிகவும் அற்பமான காரணங்களுக்காக கூட அவனுடைய அல்லா பெண்களை நரகத்தில் தள்ளுவார் என்று பயமுறுத்தினான்.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அறிவித்தார்:
“…..மேலும் நான் நரகத்தையும் கண்டேன். அதைப் போல் ஒரு பயங்கரமான காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. மேலும், நரகவாசிகளில் அதிகமாகப் பெண்களையே கண்டேன்” என்று கூறினார்கள். மக்கள், ‘ஏன் இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், ‘பெண்களின் நன்றியற்றதன்மையே காரணம்” என்றார்கள். அப்போது ‘பெண்கள் அல்லாவிற்கு நன்றியற்றவர்களாக இருக்கிறார்களா?’ என வினவப்பட்டது. அதற்கு ‘கணவர்களுக்கு நன்றியற்றவர்களாக இருக்கிறார்கள். உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவி, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால் ‘உன்னிடமிருந்து நான் எந்த சுகத்தையும் கண்டதேயில்லை’ என்று சொல்லிவிடுவாள்” என்று பதிலளித்தார்கள்.” [Bukhari Volume 2, Book 18, Number 161]

எனது புத்தகத்தில் (Understanding Muhammad) விளக்கியபடி, வியர்வையும் நாற்றமுமாக உள்ள கையாலாகாத ஒரு வயதான மனிதனுடன் படுக்க விரும்ப வாய்ப்பு இல்லாத தனது மனைவிகளை பயமுறுத்தத்தான் இந்த கதையை சொல்லி இருப்பான் என்று நான் உறுதியாகச் சொல்கிறேன். முரண்நகையாக தங்கள் மனைவிகளை மோசமாக நடத்துவதற்காக ஆண்கள் எந்தவித பின்விளைவுகள் சந்திப்பார்கள் என்பதை பற்றி ஒரு பேச்சுமூச்சு இல்லை. மாறாக, ஆண்களுக்கு தங்கள் மனைவிகளை பேச்சளவிலும் உணர்வளவிலும் உடலளவிலும் மோசமாக நடத்தும்படி கட்டளை இடுகிறான்.

Q.4:34
ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர் ஏனென்றால் அல்லா சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான் மற்றும் ஆண்கள் தங்கள் சொத்துகளிலிருந்து செலவு செய்து வருகிறார்கள். எனவே நல்ல பெண்கள் பணிந்து நடப்பார்கள். பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லா காத்ததைப் போல, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களை கடிந்து கொள்ளுங்கள்; அவர்களுடன் படுக்காதீர்கள்; அவர்களை அடியுங்கள். இதற்கு பணிந்து விட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லா மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
இஸ்லாமில் பெண்களின் நிலையைப் பற்றி யாருக்கேனும் ஏதேனும் சந்தேகம் இருந்தால், இந்த வாசகம் அதை முற்றிலுமாக நீக்கி விடும். இது பெண்களின் சுதந்திரத்தை பறித்து, ஆண்களுக்கு அடிமைப்பட்டவர்களாக்குகிறது. ஆண்கள் பொருளீட்டும் காரணத்திற்க்காக அவர்களை குடும்பத்தின் முதலாளியாக்குகிறது. பெண்கள் கையாலாகாதவர்கள் என்றும் அவர்கள் வேலை செய்து பொருளீட்டி குடும்பத்தின் தேவைகளுக்கு பங்களிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் பொருள்படுகிறது. பெண்களின் வேலை வீட்டில் மட்டுமே என்றும் குழந்தைகளையும் வீட்டையும் கவனித்துக் கொள்வது மதிப்பற்றது என்றும் அவர்கள் தங்கள் கணவர்கள் சம்பாதிக்கும் ரொட்டித்துண்டிற்காக நன்றியோடு இருக்கவேண்டும் என்றும் சொல்கிறது.

முதலில் முகமது பெண்களை அடிமைநிலைக்கு தாழ்த்துகிறான். பிறகு இன்னும் மேலே போகிறான். ஆண்களை தங்கள் மனைவிகளை பேச்சளவிலும் உணர்வளவிலும் உடலளவிலும் தண்டித்து, அவர்களை விலங்குகளின் நிலைக்கு தாழ்த்தச் சொல்கிறான். விலங்குகளை வதை செய்வதற்காக அபராதம் செலுத்தவேண்டிய இந்த காலத்தில், குரானின் போதனைகள் விழுங்குவதற்கு கடினமானவை. பெண்களைப் பற்றி எப்படிப்பட்ட அபாண்டமான விசயங்கள் ஒரு நியாயமான கடவுளிடம் இருந்து வெளிப்படும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பெண்களைவிட ஆண்கள் உயர்வானவர்களென்று 2:228 என்ற வாசகமும் சொல்கிறது. இது “மேலும் ஆண்கள் அவர்களை (பெண்களை) விட ஒரு படி மேலானவர்கள்” என்கிறது.

மேற்கண்ட ஹதிதின் வேறொரு வடிவம் ‘சஹி முஸ்லிம்’ (Sahih Muslim) என்ற தொகுப்பில் உள்ளது.

ஜாபிர் பின் அப்துல்லா அறிவித்தார்: ஈத் நாளன்று நபி அவர்களுடன் தொழுகை செய்தேன். அவர் பிரசங்கத்திற்கு முந்தைய வழிபாட்டை ‘அதன்’ மற்றும் ‘இகமா’ இல்லாமல் ஆரம்பித்தார். பிறகு பிலாலின் மீது சாய்ந்து கொண்டு எழுந்து நின்றார். கவனமாக (அல்லாவிற்காக தீய்மைக்கு எதிராக ) இருக்கும்படி (அவர்களுக்கு) கட்டளை இட்டார். (அவர்களை) தனக்கு கீழ்படிந்து நடக்குமாறு வலியுறுத்தினார். மக்களுக்கு பிரசங்கம் செய்தார். அவர்களை கடிந்து கொண்டார். பிறகு பெண்களை அடையும் வரை நடந்தார். அவர்களுக்கு பிரசங்கம் செய்தார். அவர்களை கடிந்து கொண்டார். அவர்களிடம் தர்மம் செய்யுங்கள் என்று கூறினார். ஏனெனில் உங்களில் பெரும்பாலானோர் நரக நெருப்பிற்கு விறகாவீர்கள் என்று கூறினார். கன்னத்தில் ஒரு கரும்புள்ளியைக் கொண்ட ஒரு பெண் எழுந்து நின்று ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் அப்படி?’ என்று கேட்டாள். ஏனென்றால் நீங்கள் புலம்பிக்கொண்டே இருக்கிறீர்கள், கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள் என்றார். பிறகு அவர்கள் தங்கள் தோடு, மோதிரம் போன்ற நகைகளை தர்மமாக பிலாலின் துணியில் போட்டார்கள். [Sahih Muslim Book 004, Number 1926]
முகமது இது போன்று பூச்சாண்டி காட்டி தன்னைப் பின்பற்றிய தன்னுடைய பிதற்றல்களை கேட்டுவந்த பெண்களிடமிருந்து பணம் வசூல் செய்தான்.

வேறொரு இடத்தில் பெண்களை சாத்தானுடன் ஒப்பிடுகிறான்.
இறைத்தூதர் ஒரு பெண்ணைப் பார்த்தார், அவர் தன் மனைவி, ‘ஜைனாப்’ பிடம் வந்து அவள் தோலை பதனிட்டுக் கொண்டு இருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டார். அவர் பிறகு தனது துணைவர்களிடம் சென்று சொன்னார், “ஷைத்தான் பெண்களின் வடிவத்தில் நடமாடும். எனவே யாரேனும் ஒரு பெண்ணைப் பார்த்தால் அவர்கள் தனது மனைவியிடம் வந்து தணித்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் அது அவனின் இதையத்தில் எழுந்த (தீய) எண்ணத்தை விரட்டிவிடும்” என்று ஜாபிர் அறிவித்தார்.[ Bukhari Volume 1, Book 6, Number 301] [wrong number]

ஒரு பெண் தனது கணவன் வேறொரு பெண்ணுடன் மணக் கலவி செய்து கொண்டு தன்னுடன் அவனது விரைப்பை தணித்துக் கொள்கிறான் என்று அறிந்தால் அவள் எப்படி உணர்வாள்? இது தான் 1.2 பில்லியன் மக்களின் தூதுவரின் ஒழுக்கம்!

குரானிலும் ஹதிதிலும் எண்ணற்ற அதிர்ச்சி அளிக்கும் வாசகங்கள் உள்ளன. பின் வரும் ஹதித் இவற்றில் முதலிடம் பெரும் என்பது என் கருத்து.

அபூ ஹுரைரா அறிவித்தார்:
இறைத்தூதர் கூறினார், “ஒரு கணவன் மனைவியை படுக்கைக்கு அழைத்து அவள் மறுத்து அவனை கோபமாக தூங்கச் செய்தால், தேவதைகள் அவளை காலை வரை சபிக்கும்” [Bukhari Volume 4, Book 54, Number 460]

தனது ஆண் வேலையாட்களுக்கான கலவியின்பத்தைப் பற்றி கவலைப்படுவதை தவிர அல்லாவுக்கு வேறு எந்த பிரயோஜனமான வேலையும் இல்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கணவர்களுடன் படுக்க மறுத்த பெண்களை அருகில் அமர்ந்து இரவெல்லாம் சபிப்பதற்காகவே எண்ணற்ற தேவதைகளை அல்லா படைத்திருக்கிறார் என்பது மிகவும் மூடத்தனமாக இருக்கிறது. அல்லா மற்றவர்கள் கலவிகொள்வதை மறைவில் இருந்து பார்த்து இன்பமடையும் கிழட்டு மனிதனோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இது போன்ற ஹதித்துகள் பலமுறை திரும்பத் திரும்ப வருகின்றன.
இறைத்தூதர் கூறினார், “…ஒருவன் தனது மனைவியை படுக்கைக்கு அழைக்கும் பொது, அவள் வராவிட்டால், ஆவலுடன் அவன் (கணவன்) திருப்தி கொள்ளும் வரை பரலோகத்தில் உள்ளவர் அவளுடன் அதிருப்தி அடைவார்.” என்று அபூ ஹுரைரா அறிவித்தார் [Sahih Muslim Book 008, Number 3367]

மற்றும்

இறைத்தூதர் கூறினார், “ஒரு பெண் தனது கணவனின் படுக்கையை புறக்கணித்தால் (அவனுடன் படுக்காமல் இருந்தால்), அவள் மீண்டும் (தனது கணவனிடம்) வரும் வரை தேவதைகள் அவளை சபிக்கும்.” என்று அபூ ஹுரைரா அறிவித்தார் [Bukhari Volume 7, Book 62, Number 122]

இஸ்லாமின் தூதர் கலவியின்பத்தைப் பற்றி ஏன் இந்த அளவுக்கு பைத்தியமாக இருந்தான் என்று தீர்மானிப்பது கடினமே. ஆனால் நாம் அவன் ஒரு வயதானவன் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அவனுடைய பற்கள் சொத்தைகளாகவும், வாய் துர்நாற்றம் வீசக் கூடியதாகவும் இருந்தது. ஆனால் அவன் மனைவிகள் அழகான பதுமைகளாக இருந்தனர். அந்த பெண்கள் அரேபியாவின் ஆட்சியில் உள்ளவனின் மனைவிகள் என்பதில் ஆனந்தம் கொண்டிருந்து இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒரு கிழவனுடன் படுக்க ஆவலுடன் இருந்திருப்பார்கள் என்பது சந்தேகமே. இந்த பெண்களை தன்னுடன் படுக்க நிர்பந்திக்கவே சபிக்கும் தேவதைகள் பற்றி கதை கட்டியிருப்பானோ?
எப்படி இஸ்லாமியப் பெண்கள் இவ்வளவு அவமானத்தையும் தாங்கிக் கொண்டு, இன்னும் இந்த முகமதை நம்பமுடிகிறது? பின்வரும் “புனித தூதரின்” கருத்தைப் போல மிகவும் அசிங்கமான அராஜகமான கருத்து வேறெதுவும் இருக்க முடியாது. இது பெண்களை மிகவும் கேவலப் படுத்தும் கருத்து என்று நான் நினைக்கிறேன்.

உசாமா பின் சைத் அறிவித்தார்:
நபி சொன்னார், ” நான் எனக்குப் பிறகு ஆணுக்கு பெண்ணைவிட அதிக தீங்கிழைக்கும் நோயை விட்டுச் செல்லவில்லை”[ Bukhari Volume 7, Book 62, Number 33]

அவன் அத்தோடு நிறுத்தவில்லை. ஒவ்வொரு சமயத்திலும் ஏதேனும் ஒரு காரணத்திற்க்காக பெண்களை கேவலப் படுத்தி முஸ்லிம் ஆண்களின் மனதில் விஷத்தை விதைத்தான். பின்வரும் ஹதித் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள், “பெண் விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஓடித்தேவிடுவாய். நீ அவளை அப்படியே விட்டுவிட்டால் அவளால் நீ பயனடைவாய், அவளில் கோணல் இருந்துகொண்டே தான் இருக்கும்” என அபூ ஹுரைரா அறிவித்தார். [Sahih Muslim Book 008, Number 3466]

தங்களது வழிகாட்டி பெண்களின் மீது இவ்வளவு வெறுப்பு மிக்கவனாகவும், அவர்களின் மதநம்பிக்கையின் மீது இவ்வளவு ஏளனம் கொண்டவனாகவும், அவர்களின் அறிவை கேவலப் படுத்துபவனாகவும், அவர்களின் உரிமைகளை மதிக்காதவனாகவும், அவர்களின் சமூக அந்தஸ்தை அவமதிப்பவனாகவும் இருக்கும் போது, எப்படி ஒரு முஸ்லிம் அவர்களின் பெண்களை மதிப்பார்?
நபி கூறினார், “ஆண்களில் பலர் நிறைவு (நிலை) அடைந்திருக்கிறார்கள் ஆனால் பெண்களில் யாருமில்லை, பரோவாவின் மனைவி அசியா மற்றும் இம்ரானின் மகளான மேரியைத் தவிர. சந்தேகமே இல்லை, மற்ற பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவின் மேன்மை மற்ற உணவுகளைவிட ‘தரிடி’ன் [கறியும் ரொட்டியும் ஆனா ஒரு உணவு] மேன்மை போன்றது.” என்று அபு மூஸா அறிவித்தார் [Bukhari Volume 4, Book 55, Number 623]

இங்கே முகமது இம்ரானின் மகளும் மோசஸ் மற்றும் ஆரோனின் சகோதரியான மிரியமை (அரபியில் மரியம்) ஏசுவின் தாய் மேரியுடன் (இதற்கும் அரபியில் மரியம்) குழப்பிகொள்கிறான். இதே தவறை குரானிலும் செய்திருக்கிறான். மதத்தில் மிரியம் ஒரு முக்கியமான நபர் இல்லை. அவள் ஒருமுறை கடவுளைக் கூட கீழ்ப் படிய மறுத்து இருக்கிறாள். பரோவாவின் மனைவி என்று சொல்லப்படும் இந்த அசியாவும் யாரென்று நமக்குத் தெரியாது. இது இப்பொழுது மறக்கப்பட்ட, முகமது காலத்தில் புழக்கத்தில் இருந்த ஒரு கதையாக இருக்க வேண்டும்.

பாரசீக சசனிட் பெண் வீரர்.

முகமதினுடைய ஒழுக்கத்தின் தரம் பின்வரும் கதையின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

அபூ உசைத் அறிவித்தார்
நாங்கள் நபி அவர்களுடன் ‘அஷ்ஷவ்த்’ என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்திற்கு கிளம்பினோம். இரண்டு சுவர்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். அப்போது நபி அவர்கள், ‘இங்கேயே அமர்ந்திருங்கள்’ என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். ஜௌவனியா (ஜவ்ன் குலத்துப் பெண்) அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் என்பவரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார், அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். நபி அவர்கள் நுழைந்து ‘உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!’ (உடலுறவுக்காக ) என்று கூறினார்கள். அந்தப்பெண் ‘ஓர் இளவரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?’ என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் ‘உங்களிடமிருந்து நான் அல்லாவிடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று கூறினார். அப்போது நபி அவர்கள் அவரை நோக்கி ‘அடைக்கலம் கொடுப்பவனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், ‘அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் போக விடு’ என்று கூறினார்கள். [Bukhari Volume 7, Book 63, Number 182]

முகமதுக்கு முன்னரே இருக்கும் மனைவிகள் போதாதா? தான் பார்க்கும் அழகான பெண்களுடன் எல்லாம் படுக்க வேண்டுமா? அவனின் குணத்தைப் பாருங்கள். சிறுமி ஜௌவனியாவை பார்த்த உடனே அவனின் காமம் தலைக்கேறுகிறது. “உன்னை தானமாக கொடு” என்கிறான். மறுக்கப் பட்டவுடன் அவன் கோபம் தலைக்கேறி அவளை அடிக்க கையை ஓங்குகிறான். அவள் கடவுளே காப்பாற்று என்று அலறியவுடன் அந்த வெறியன் மனம் திரும்பி தனது அருவருப்பான நடத்தைக்காக குற்ற உணர்ச்சி கொள்கிறான். தனது மனசாட்சியை தேற்ற அந்த பெண்ணுக்கு இழப்பீடாக சில துணிகளை கொடுக்க முடிவெடுக்கிறான். இது போன்ற நடத்தை ஒரு ஆரோக்கியமான மனவளர்ச்சியுள்ள மனிதனுடையதாகுமா?

ஈரானிய இஸ்லாமிய குடியரசின் பெண்கள் தங்கள் மனித உரிமைகளை மீட்க போராடுவதற்காக தாக்கப் படுகிறார்கள்.

ஜௌவனியா ஒரு தாதியுடன் இருப்பதால் அவள் ஒரு மிகச் சிறிய சிறுமியாகத் தான் இருக்க முடியும். தன்னை கொல்லவும் கூடிய மனிதனிடம் மறுத்துப் பேசும் விதம் கூட அவள் ஒரு சிறுமி என்றே காட்டுகிறது. முகமது அவளுக்கு கொடுக்கும் துணிகள் கூட அவளிடமிருந்து திருடப்பட்டதாகத் தான் இருக்கும். அவன் மெதீனாவில் இருந்து சில துணிகளை தன்னால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுவந்து இருப்பான் என்பதற்கு வாய்ப்பு மிகக் குறைவே.

முகமது பெண்களின் மேல் எந்தவித மதிப்பும் கொண்டிருக்கவில்லை. அவனுக்கு பெண்கள் என்றாலே தீய்மை. அவனின் கனவில் கூட பெண்களை நோயாகவும் தீங்காகவுமே பார்த்தான். தன் கனவில் அவன் ஒரு கறுப்பின பெண்ணை கண்டதற்கு அது ஒரு தொற்று நோயை குறிக்கிறது என்றான்.

நபி கூறினார், ” நான் (கனவில்) களைந்த தலையுடன் ஒரு கறுப்பின பெண்ணைப் மதீனாவில் இருந்து வெளியேறி மகையாவில் குடியமர்வதைப் பார்த்தேன். அதை மதீனாவில் இருந்து விலகி மகையாவிற்கு மாற்றப் பட்ட தொற்றுநோயாக (அடையாளமாக ), அதாவது அல் – ஜுஹ்பா என்று, அதை நினைக்கிறேன்.” என்று சலிமின் தந்தை அறிவித்தார் [ Bukhari Volume 9, Book 87, Number 163]

தொழுகையிலும் கூட பெண்களை சிறுமைப்படுத்துவதில் உறுதியாக இருந்தான்.

சா’ல் பின் சா’த் அறிவித்தார்: தங்கள் சிறிய அளவிற்காக மக்கள் கழுத்தைக் சுற்றி இஜாரை அணிந்து நபி உடன் தொழுகை செய்வது வழக்கம் மற்றும் ஆண்கள் மண்டியில் இருந்து நேராக அமரும் வரை பெண்கள் தலையை தூக்கக் கூடாது என்று அறிவுறுத்தப் பட்டனர்.[Sahih Bukhari 1.778]

பின்வரும் ஹதிதில் அறிவித்தபடி, பெண்களின் காலத்திற்குமான அடிமைநிலையை உறுதிப் படுத்தினான்.

அபு ஹுரைரா அறிவித்தார்: நபி சொன்னார், ” அல்லாவையும் கடைசி நாளையும் நம்பும் பெண் மகரம் (தந்தை, கணவன், சகோதரன், மகன், போன்ற அனுமதிக்கப் பட்ட ஆண் துணை.) இல்லாமல் ஒரு பகலும் இரவும் பயணம் செய்வது அனுமதிக்கப் படவில்லை”[Sahih Bukhari 2.194]

இஸ்லாமில் பெண்களின் நிலையைப் பற்றிய மதிப்பீட்டை அல்லாவின் தூதரின் கீழ்க்கண்ட உற்சாகமூட்டும் ஞான மொழிகளுடன் முடித்துக் கொள்ளலாம்.

“பெண்களில் ஒரு நல்ல பெண்ணை காண்பது நூறு காகங்களில் ஒரு வெள்ளைக் காகத்தைக் காண்பது போன்றது”

“பெண்களுக்கு திருமண பந்தம் என்பது ஒருவகை அடிமைப்படுதலே”

“யாரேனும் கடவுளை அல்லாமல் மற்றவருக்கு முன் கிடையாக விழுந்து வணங்கவேண்டும் என்றால், பெண் தனது கணவனுக்கு முன் கிடையாக விழுந்து வணங்கவேண்டும்”.

“கணவனின் உடல் சீழ் பிடித்து இருக்க மனைவி அதை தனது நாவினால் நக்கித் துடைத்தாலும், அவள் அவனிடம் பட்ட கடனை கழிக்க முடியாது.”