இஸ்லாமிய பயங்கரவாதத்தினால் இஸ்லாமைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாகி விட்டது. இஸ்லாம் சோதனைக்கு உட்பட்டிருக்கிறது. மேற்கத்தியர்கள் இந்த மிதவாத முஸ்லிம்கள் எங்கே என்று கேட்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள் இல்லவே இல்லை. இந்த வார்த்தையே அபத்தமானது. இந்த விசயத்தில் முஸ்லிம்களின் கண்ணோட்டம் மாறுபட்டது. நீங்கள் ஒன்று மதத்தை பின்பற்றும் ‘நல்ல’ முஸ்லிம் அல்லது மேம்போக்கான ‘கெட்ட’ முஸ்லிம். இந்த ‘கெட்ட’ முஸ்லிம்களைத் தான் மேற்கத்தியர்கள் மிதவாத முஸ்லிம்கள் என்று தவறாக அழைக்கின்றனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்கள் கபடதாரிகள் அல்லது போலிகள். இந்த ‘மிதவாதிகள்’ கூட தாங்கள் போலிகள் என்று ஒத்துக்கொள்கிறார்கள். அவர்கள் தாங்கள் இஸ்லாமை நம்புவதாகவும் ஆனால் கெட்ட முஸ்லிம்கள் என்றும் கூறுவார்கள். அவர்களின் மனதிற்குள் ‘நல்ல’ முஸ்லிம்களாக மாறுவதற்கு திட்டம் இருக்கிறது, ஆனால் எல்லா ‘பாவங்களையும்’ செய்து வாழ்க்கையை போதுமான அளவு அனுபவித்ததற்கு பிறகு மட்டுமே.

இஸ்லாம் உண்மையிலேயே ஒரு தீய மதம். இஸ்லாமின் தீய்மை அதை பின்பற்றுபவர்களிடம் மட்டும் இல்லை அதன் மதப் புத்தகங்களிலேயே இருக்கிறது. இந்த குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு வகையான முஸ்லிம்கள் இஸ்லாமை சீர்திருத்தம் (Reform) செய்வோம் என்கிறார்கள். இதில் சில ‘சீர்திருத்தக்காரர்கள்’ (Reformers) அப்பாவி மேற்கத்தியர்களிடம் நன் மதிப்பைப் பெற்று இருக்கிறார்கள். இவர்கள் மற்ற பொதுவான முஸ்லிம்களால் அலட்சியப் படுத்தப்பட்டாலும் அல்லது கேலிசெய்யப்பட்டாலும், இந்த மேற்கத்தியர்கள் இவர்கள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.
இந்த கட்டுரையில் இஸ்லாம் சீர்திருத்தப்பட முடியுமா என்று விவாதிக்கிறேன்.

Re-form (சீர்திருத்தல்) என்ற வார்த்தையின் தோற்றத்தையும் சரியான பொருளையும் பார்ப்போம். இந்த வார்த்தை மீட்டல், திரும்பப் பெறுதல், புதுப்பித்தல் என்ற பொருளுடைய refōrmāre என்ற லத்தின் வார்த்தையில் இருந்து தோன்றியிருக்கிறது. இந்த எல்லா வார்த்தைகளும் ஒன்றை அதன் மூலவடிவிற்கு மாற்றுதல் என்று பொருள்படுகின்றன.

இஸ்லாமின் சீர்திருத்தத்தைப் பற்றி பார்க்கும் முன் கிருத்துவத்தின் சீர்திருத்தத்தைப் பற்றி ஒரு கண் பார்த்து விடலாம்.

கிருத்துவ சீர்திருத்தம்

கிருத்துவ சீர்திருத்தம் என்பது உண்மையில் கத்தோலிக்க சபையினை சீர்திருத்த எடுக்கப்பட்ட முயற்சிகளே தவிர கிருத்துவ மதத்தை அல்ல. பல கிருத்துவர்கள் சபையையும் அதன் நடவடிக்கைகளையும் குறிப்பாக அது பாவங்கள் செய்வதற்கான அனுமதிக்காகவும் பரலோகம் செல்லத் தகுதி பெறவும் கட்டணம் (indulgences) வசூலிப்பது, சபையில் உள்ள வேலைகளை விற்பது பரிமாற்றம் செய்வது (simony) போன்றவற்றைக் கண்டு வருந்தினார்கள். இவைகளை தவறான கொள்கைகள் என்றும் சபையின் மோசடிகள் என்றும் அவர்கள் கருதினார்கள்.

இவைகளையும், மேரி வழிபாடு, பாவமன்னிப்பு, புனிதர்களை தொழுதல், போதகர்களுக்கு கட்டாய சன்யாசம், போப்பிற்கு அதிகாரம் போன்ற சபையின் மற்ற நம்பிக்கைகளையும் Martin Luther, Ulrich Zwingli, John Calvin போன்ற சீர்திருத்தவாதிகள் எதிர்த்தனர். இவைகள் எதுவுமே கிருத்துவமத போதனைகள் அல்ல. சபையின் வழக்கங்கள் மட்டுமே. சீர்திருத்தவாதிகள் சபையைத் தான் எதிர்த்தார்கள். அவர்கள் பைபிளின் அதிகாரத்தை மீறவில்லை. அவர்கள் பைபிளில் உள்ளதை உள்ளபடி பின்பற்றவேண்டும் என்றனர். பைபிள் வாசகங்களுக்கு பூடகமான பொருள் கொடுப்பதை எதிர்த்தனர். பழைய மற்றும் புதிய ஏற்பாட்டினை சட்டங்களாக பின்பற்ற வேண்டும் என்றனர். அதில் இருக்கும் வார்த்தைகளுக்கு நேரான பொருளை மட்டுமே ஏற்றுக்கொண்டனர்.

பைபிளில் தெளிவாக எழுதப் படாததை பின்பற்றக் கூடாது. அவ்வாறு எழுதப்பட்டதைப் சிறிதும் பிசகாமல் பின்பற்ற வேண்டும். ஆதாரம்

இதுதான் ப்ராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்தின் சாரமாகும்.

இஸ்லாமின் சீர்திருத்தம்

மேற்கண்டதை ஒத்த சீர்திருத்தம் இஸ்லாமிலும் ஏற்பட்டது. அதன் பெயர் சலாஃபிசம் (Salafism)

அப்துல் வஹாப் (Muhammad ibn Abdul Wahhab, 1703–1792) இஸ்லாமின் ஒரு தீவிர பிரிவை தோற்று வித்தவர் என்று பல மேற்கத்தியர்கள் தவறாக நினைக்கிறார்கள். அது உண்மை அல்ல. அப்துல் வஹாப் ஒரு புதிய பிரிவை ஆரம்பிக்க வில்லை. லூதர் கிருத்துவத்தை சீர்திருத்தம் செய்ததைப் போலத்தான் இவரும் இஸ்லாமை சீர்திருத்தினார்.

வஹாபின் அடிப்படைக் கொள்கை என்னவென்றால் இஸ்லாம் குறையற்றது என்றும் அது முகமது காலத்திலேயே முற்றுப்பெற்ற வடிவம் பெற்றது என்றும் இஸ்லாமின் குறைவுக்குக் காரணம் அதில் புகுத்தப்பட்ட புதுமைகள்தான் (bid‘ah = innovations ) என்றும் இஸ்லாமின் முதல் மூன்று தலைமுறைகளை அப்படியே பின்பற்றுவதன் மூலமும் இஸ்லாமில் அந்நிய தாக்கங்களை அழிப்பதன் மூலமும் அது மறுமலர்ச்சி அடையும் என்றும் என்பதே.
இஸ்லாம் அதன் ஆரம்ப காலத்திலேயே நிறைவு பெற்றது என்ற கருத்து குரானிலேயே (5:3) வலியுறுத்தப் படுகிறது.

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا

“இன்று நான் உங்களுக்காக மதச் சட்டத்தை நிறைவு படுத்தி, உங்களை முழு அளவு ஆசீர்வாதித்திருக்கிறேன். எனக்கு முழுவதும் சரணடைவது தான் உங்கள் மதமாக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.”

அப்துல் வஹாப் முஸ்லிம்கள் எல்லா புதுமைகளில் இருந்தும் விலகி சலாஃப்களின் (Salaf = “முன்னோடிகள்”, “ஆரம்பத் தலைமுறைகள்) முன்மாதிரிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று கூறினார்.

அதனால்தான் சலாஃபிக்கள் என்ற பெயர்.

ஒரு சலாஃபி سلفي, இஸ்லாமின் ஆரம்பகால தீவிரமான முஸ்லிம் முன்னோடிகளை சிறந்த மாதிரிகளாக எடுத்துக் கொள்கின்றனர்.
இந்த நம்பிக்கை வஹாபின் கண்டுபிடிப்பல்ல. ஆனால் ஹதிதில் முகமது பின்வருமாறு சொல்வதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
எனது தலைமுறை மக்களும், அவர்களை பின்பற்றுபவர்களும் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்களும் (அதாவது, இஸ்லாமின் முதல் மூன்று தலைமுறைகள்) தான் சிறந்தவர்கள். [Bukhari 3:48:819 and 820 and Muslim 31:6150 and 6151.] (Tabi‘in and the Taba‘ at-Tabi‘in,)

வஹாப்தான் சலாஃபிசத்தை தோற்றுவித்தவர் என்ற தவறான கருத்தை உடைப்பதற்கு இப்னு தய்மிய்யா [ibn Taymiyyah (1263 – 1328) ] என்பவரும் ஒரு சலாஃபி என்பதே ஆதாரம். இவர் முகமதின் பிறந்தநாளைக் கொண்டாடுவதையும் புகழ்பெற்ற சூஃபிக்களின் கல்லறைகளை தர்காக்களாக மாற்றுவதையும் எதிர்த்தார். “இவர்களில் [முஸ்லிம்கள்] பலருக்கு இதுபோன்ற பழக்கங்கள் கிருத்துவத்தில் [கத்தோலிக்க] இருந்து வருகின்றது என்று கூட அறியமாட்டார்கள். கிருத்துவமும் அதை பின்பற்றுபவர்களும் நாசமாகப் போகட்டும்” என்று கூறினார்.

சலாஃப் என்ற வார்த்தையின் ஆரம்பகால பயன்பாடு, 1166 வருடத்தில் (இஸ்லாமிய வருடத்தில் 562) இறந்த Abu Sa’d Abd al-Kareem al-Sama’ni யால் எழுதப்பட்ட Al-Ansab என்ற புத்தகத்தில் உள்ளது. அல்- சலாஃபி என்ற வார்த்தையை வரையறுக்கும்போது, அவர் இவ்வாறு கூறுகிறார். “எனக்கு தெரிந்த மட்டில், இது சலாஃபுக்களுக்கு அல்லது முன்னோடிகளுக்கு உயர்வான அங்கீகாரம் கொடுப்பதும் அவர்களின் கொள்கைகளை பின்பற்றுவதுமாகும்”. பிறகு அவர் இந்த அங்கீகாரத்தை கொடுத்த மற்ற பல அறிஞர்களின் எடுத்துக்காட்டுகளையும் குறிப்பிடுகிறார்.

“நான் தான் உங்களுக்கான ஆகச் சிறந்த சலாஃப்” என்று முகமது கூறும் ஒரு ஹதிதும் உண்டு. [Sahih Muslim: no. 2450]

சொல்லப் போனால், இஸ்லாமை சீர்திருத்தம் செய்து அதன் ஆரம்பகாலத்து மூல வடிவத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்பது ஒரு பழைய எண்ணமே. இருப்பினும் இந்த எண்ணத்திற்கு வடிவம் கொடுத்து வெற்றிகண்டார் அப்துல் வஹாப். சவுதி மன்னர்கள் வஹாபின் மகள் வழி சந்ததிகளாகையால் இது அரேபியாவில் நன்கு வேரூன்றி விட்டது.

கிருத்துவ சீர்திருத்தத்திற்கும் இஸ்லாமின் சீர்திருத்தத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்.

ப்ராட்டஸ்டண்டிசத்திற்கும் சலாஃபிசத்திற்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. முன்னது மேரி மற்றும் ‘புனிதர்கள்’ வழிபாட்டையும் அவர்களின் இடைஈட்டையும் மறுக்கிறது. பிந்தியது முகமது வழிபாட்டையும் அவனுடைய இடைஈட்டையும் மற்ற (ஷியாக்கள் நம்புகின்ற) இஸ்லாமிய ‘புனிதர்களின்’ இடைஈட்டையும் மறுக்கிறது. இந்த இரு இயக்கங்களும் தங்கள் மதங்களை அதன் ஆதார வடிவத்தின் தூய்மைக்கு திரும்பச் செல்லவும், மத நிறுவனரின் இறப்பிற்குப் பிறகு புகுத்தப்பட்ட புதுமைகளை தூக்கி எறியவும் விரும்புகிறது.

ஹுசைன் ஒபாமாவால் Democrats Presidential convention ல் பன்மத தொழுகையில் முஸ்லிம்களை பிரதிநிதிப் படுத்துவதற்காக அழைக்கப்பட்ட Islamic Society of North America (ISNA) வின் ப்ரெசிடென்ட் ஆன Dr. Ingrid Mattson என்ற பெண்மணியிடம், வஹாபிசம் இஸ்லாமின் ஒரு தீவிர வலது சாரி பிரிவா என்று கேட்டபோது இவ்வாறு பதில் அளித்தார்:

“இல்லை வஹாபிசத்தை அவ்வாறு எடைபோடுவது சரியல்ல. அது ஒரு பிரிவு கிடையாது. அது பல நூற்றாண்டுகளாக பெறப்பட்ட சில கலாச்சார பழக்க வழக்கங்களையும், கெட்டிப்பட்ட விளக்கங்களையும் இஸ்லாமிய சமூகங்களில் இருந்து துடைத்து எறிவதற்காக 200 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு சீர்திருத்த இயக்கத்தின் பெயர் தான். அது ஐரோப்பாவின் ப்ராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்திற்கு ஒத்தது”.

கிருத்துவமத சீர்திருத்தத்தின் விளைவு

கிருத்துவ மற்றும் இஸ்லாமிய சீர்திருத்தங்களின் நோக்கம் கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தபோதிலும் அவைகளின் விளைவுகள் மிகவும் மாறுபட்டவை. பைபிளில் இருப்பதை இருப்பது போல் புரிந்து கொள்வதே சமூக கோட்பாடுகளுக்கும் ப்ராட்டஸ்டன்ட் சமூகத்தின் அமைப்பிற்கும் ஆதாரமாக அமைந்தது. அமெரிக்காவில் அமைந்த ஆங்கிலேயக் காலனிகளின் சமூக அமைப்பிற்கும் இதுவே ஆதாரமாக அமைந்தது.

இந்த சீர்திருத்தவாதிகள் ஐரோப்பாவின் தத்துவ, அரசியல், மத மற்றும் சமூக அமைப்பினில் முற்றிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தனர். ப்ராட்டஸ்டன்ட் கோட்பாடுகளின் பெரிய தாக்கம் பெற்ற சமூகத்தில் தான் நாம் இன்னும் வாழ்ந்துவருகிறோம்.

அமெரிக்காவின் அரசியல் உரையாடல் முக்கியமாக கால்விநிசத்தினால் தாக்கம் பெற்றது (Calvinistic). அதாவது அதன் சமூக அமைப்பானது பைபிளை இருப்பதை இருப்பது போல் பொருள் கொள்வதால் உருவானது.

கால்வின் (Calvin) மற்றும் ஜ்விங்க்லி (Zwingli) போன்றவர்களின் கூற்றின்படி, எல்லா மத நம்பிக்கைகளும் பைபிள் வாசகங்களை ஆதாரமானதாக கொண்டிருக்க வேண்டியது மட்டுமில்லாமல், சபையின் அமைப்பு, அரசியல் அமைப்பு, மற்றும் சமூகம் கூட இதை ஆதாரமானதாக கொண்டிருக்க வேண்டும்.

லூதர் போப் லியோ வுக்கு (லூதரை சபை விளக்கம் செய்ய காரணமாக இருந்த ) ஒரு கடிதம் எழுதினார். அதில் அவருடைய சிந்தனைகளின் சாரத்தை விளக்கி இருந்தார். அந்த கடிதம் “கிருத்துவனின் சதந்திரம் பற்றி” என்ற தலைப்பைக் கொண்டது. லூதரின் கூற்றுப் படி, கிருத்துவத்தின் சாரமே ‘சுதந்திரம்’ (“freedom”) அல்லது விடுதலை (“liberty”) தான்.

இந்த கோட்பாடுதான் காலப்போக்கில் தனிமனித சுதந்திரத்தையும் மற்றும் அரசியல் பொருளாதார சுதந்திரத்தையும் வளர்த்தது.

ஐரோப்பியாவின் பெரும்பகுதி மலர்ச்சி (Enlightenment), சுதந்திரத்தைப் பற்றியும் மக்களை தவறான நம்பிக்கைகளில் இருந்தும், தவறான மதங்களில் இருந்தும், அராஜகமான அதிகாரங்களிடம் இருந்தும் விடுவிப்பதைப் பற்றியும் ஆனதே. இதைத்தான் ‘விடுதலை உரையாடல்’ (“liberation discourse” ) என்று சொல்கிறார்கள். இன்றும் மேற்கத்தியர்கள் இந்த பரிமாற்றத்தில் பங்கு கொள்கிறார்கள்.

அதனால் தான் அமெரிக்கா, ஒரு சர்வாதிகாரி உலகின் பெரும்பாலான எண்ணை கிணறுகளை கைப்பற்றுவதை தடுக்கவும், குவைத்தினரை விடுவிக்கவும், இராக்கின் மீது படை எடுத்தது. பத்தாண்டுகள் கழித்து இராக்கியர்களையும் விடுவித்தது. அதனால் தான் அமெரிக்கா ஜப்பானில், ஜெர்மனியில், இத்தாலியில், பனாமாவில், நிக்கராகுவாவில், கொசோவோவில், வியட்நாமில், கொரியாவில், அங்கோலாவில், சோமாலியாவில் கிட்டத்தட்ட 40 போர்களை, தொடுத்தது. இந்த போர்கள் தவறோ சரியோ நோக்கம் எப்போதுமே ஒன்றாகவே இருந்தது, அதாவது மக்களை விடுவிப்பதும், சர்வாதிகாரிகளை தடை செய்வதும், மக்களாட்சியையும் சுதந்திரத்தையும் பரப்புவதுமே நோக்கமாக இருந்தது. அமெரிக்காவின் பன்னாட்டு அரசியலில் ஆழப்பதிந்துள்ள இந்த மக்களை ‘விடுவிப்பது’ என்ற கருத்து லூதரின் ‘சுதந்திரம்’ என்ற கருத்தில் இருந்து வருகிறது.

(லுதரைப் பற்றி பேசுவதற்காக என்னை தாக்குபவர்களுக்கு ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். நான் அவருடைய யூதர்களுக்கு எதிரான (Anti-semitism) கருத்துக்களை ஆதரிக்கவில்லை. ப்ராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் என்ற கோட்பாட்டை மட்டுமே வரையறுக்கிறேன். இரண்டும் ஒன்றல்ல)

தனது பொருளாதார மற்றும் அரசியல் நலன்களைப் பாதுகாப்பது போன்ற மற்ற காரணங்களும் இந்த போர்களுக்கு காரணங்களாக இருந்தன. இருப்பினும், அடிப்படை காரணி பொதுவாக மக்களை சர்வாதிகாரத்தில் இருந்து விடுவிப்பதே. மக்களை விடுவிப்பதும் அமெரிக்காவின் நலன்களை பாதுகாப்பதும் ஒன்றுக்கொன்று முரணான விசயங்கள் அல்ல.

மக்களின் நலன்களைப் புறக்கணித்து, அமெரிக்காவின் சொந்த நலத்திற்க்காக மட்டுமே செயலாற்றிய விதிவிலக்குகளும் உண்டு. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு இரானில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதமர் Dr. Mossadq ஐ வெளியேற்றிவிட்டு விரைவில் சர்வாதிகாரியாக மாறிப்போன திறமையற்ற கைப்பாவை அரசனை திரும்ப ஆட்சியில் அமரவைத்தது.

இஸ்லாமிய சீர்திருத்தத்தின் விளைவு

இஸ்லாமிய சீர்திருத்தத்தின் சாரம் என்ன? வஹாபி கொள்கையின் சாரம் மனித இனம் சுதந்திரமற்றது என்பதும் அது அல்லாவின் அடிமை என்பது ஆகும். மக்கள் ‘இபாத்’ (அடிமைப்படுத்தப்பட்டவர்கள்) ஆவார்கள்.

இந்த கருத்து ப்ராட்டஸ்டன்ட் கருத்திடம் இருந்து தலைக்கும் வாலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கொண்டது. கிருத்துவத்திற்கும் இஸ்லாமிற்கும் இடையிலான அடிப்படை வித்தியாசங்கள் பின்வருமாறு.

மேலோட்டமாக பார்க்கும்போது கிருத்துவத்திற்கும் இஸ்லாமிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் ஒரு கடவுளை நம்புகின்றன; இரண்டும் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு மனித தூதுவரை நம்புகின்றன; இறந்ததும் நரகம், பரலோகம், இறப்பிற்குப்பின் வாழ்வு போன்றவற்றை நம்புகின்றன. இருப்பினும் அவற்றின் மையக் கருவில் அவைகள் மிகவும் வேறுபட்டவை. சொல்லப் போனால் எதிரெதிரானவை. இவைகளின் சீர்திருத்தம் ஒரே நோக்கத்தில் சென்றாலும் இரு எதிரெதிர் பாதையில் சென்றன.முகமதுவோ அல்லது அவனை பின்பற்றுபவர்களோ கூறிக்கொள்வதுபோல இஸ்லாம் கிருத்துவத்தின் தொடர்ச்சியல்ல, மாறாக, கிருத்துவத்திற்கு மிகவும் எதிரானது. கிருத்துவம் மனித இனத்தின் சுதந்திரத்தை கோருகிறது, இஸ்லாமோ அதனுடைய அடிமைத்தனத்தைக் கோருகிறது. ஒன்று விடுதலை செய்தியைக் கொண்டுவருகிறது மற்றது அடிமைச் செய்தியை கொண்டுவருகிறது.

 

கிருத்துவத்திற்கு மிகவும் முக்கியமான சுதந்திரம் என்ற பேச்சு இஸ்லாம் என்ற கருத்துக்கே எதிரானது. முஸ்லிம்கள் தங்கள் கூச்சலான பேரணிகளின் போது “democracy is hypocrisy” , “freedom go to hell” என்று எழுதப் பட்ட போஸ்டர்களை ஏந்தி வருவதன் மூலம், சுதந்திரத்திற்கும் மக்களாட்சிக்கும் எதிரான, அடிமைத்தனத்திற்கும், அடக்குமுறைக்கும் ஆதரவான இஸ்லாமின் உண்மையான சாரத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

முஸ்லிம்களுக்கு தேர்வு செய்வதற்கு சுதந்திரம் இல்லை. அவர்கள் அல்லாவுக்கும் அவருடைய தூதருக்கும் அடிபனியவேண்டும். குரானின் 33:36 சொல்கிறது:
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا
“மேலும், அல்லாவும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாவுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் அடிபணியாவிட்டால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமாக வழிதவறி இருக்கிறார்கள்.”

அவர்களுக்கு எது நல்லது என்று முடிவெடுக்கும் அதிகாரம் முஸ்லிம்களுக்கு இல்லை. அவர்களுக்காக இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது. அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் அடிபணிவதே, அதை அவர்கள் விரும்பாதபோதும் கூட.
كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ وَعَسَى أَن تَكْرَهُواْ شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ وَعَسَى أَن تُحِبُّواْ شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ وَاللّهُ يَعْلَمُ وَأَنتُمْ لاَ تَعْلَمُونَ
“போர் தொடுத்தல், உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும், உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது; உங்களுக்கு ஒன்று நன்மை பயப்பதாக இருப்பினும் நீங்கள் அதை வெறுக்கலாம்; உங்களுக்கு ஒன்று தீமை பயப்பதாக இருப்பினும் நீங்கள் அதை விரும்பலாம்; (இவற்றையெல்லாம்) அல்லா அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.” (Q. 2:216)

இந்த மதத்தை அதன் பெயரான ‘அடிபணிதல்’ என்ற பொருளுடைய இஸ்லாம் என்ற ஒரு வார்த்தையில் அடக்கிவிடலாம். அல்லாவுக்குத் தான் எல்லாம் தெரியும். ஆகையால் மனித இனம் அவருடைய கட்டளையை தயங்காமல், எல்லாவற்றையும் மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மக்களாட்சி என்றால் மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி. இதில் மனிதர்கள் தான் சட்டத்தை உருவாக்குகிறார்கள். இஸ்லாமில் சட்டம் கடவுளிடம் இருந்து வருகிறது. இந்த சட்டங்கள் பகுத்தறிவுக்கு புறம்பானதாகவும், அடக்குமுறை கட்டுப்பாடுகளாகவும் தெரிந்தால் கூட, மனிதர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இந்த காரணத்திற்காகத் தான் “மிதவாத” முஸ்லிம்கள், இஸ்லாமின் விதிகளுக்கு உட்படாத உறவுகளுக்காக கல்லால் அடித்து கொல்லப்படுவதையோ, இஸ்லாமை துறந்தவர்கள் கொல்லப்படுவதையோ, மற்ற முஸ்லிம் அராஜகங்களையோ எதிர்த்துக் கேட்கமுடிவதில்லை. அப்படி ஏதேனும் எதிர்ப்பு என்றிருந்தால் அது வெறும் வாய்ப்பந்தலாகவே இருக்கும் அதுவும் மேற்க்கத்திய ஊடகங்களில் காட்டப்படுவதற்காக மட்டுமே.

கிருத்துவம் இஸ்லாம் இந்த இரண்டுமே சீர்திருத்தத்திற்கு உட்பட்டன. அவை இரண்டுமே ஒரே மாதிரியான பாதையில் தான் சென்றன. ஆனால் விளைவாக இரு வேறு துருவங்களை சென்றடைந்தன. கிருத்துவ சீர்திருத்தம் சுதந்திரத்தையும், அறிவுமலர்ச்சியையும், மக்களாட்சியையும் கொண்டுவந்தபோது, இஸ்லாமிய சீர்திருத்தம் பயங்கரவாதத்தை கொண்டிவந்திருக்கிறது.

இப்னு தய்மிய்யாவும் இப்னு அப்துல் வஹாபும் இஸ்லாமிய சீர்திருத்தவாதிகள் ஆவர். சமகாலத்திய சீர்திருத்தவாதிகளாக குரானுக்கு ஒரு விளக்கம் எழுதிய மௌதூதியையும் (1903 – 1979), 50 மற்றும் 60 களில் ‘Muslim Brotherhood’ ன் முக்கிய நபரும், அயதொல்லா கொமேனி மற்றும் பின் லாடன் உட்பட்ட எல்லா முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கும் தூண்டுதலாக இருந்த சயித் குதுப்பையும் (1906-1966) அழைக்கலாம்.

சீர்திருத்தமா (Reformation) உருமாற்றமா (Transformation)
இன்றைய இஸ்லாமிய சீர்திருத்தவாதிகள் என்றழைக்கப் படுபவர்கள் கூறுவது இஸ்லாமின் உருமாற்றம் தான், சீர்திருத்தம் அல்ல. மேற்கூறப்பட்ட சீர்திருத்தவாதிகளைப் போல் அல்லாமல், இந்த புதிய பெயர்விரும்பிகள் இஸ்லாமின் மூலத்திற்கு போக விரும்பவில்லை மாறாக குரானின் சில பாகங்களை விலக்கிவிட்டு, முழூ ஷரியாவையும் தள்ளிவிட்டு, முழுக்க முழுக்க ஒரு புதிய மதத்தை உருவாக்கி அதை இஸ்லாம் என்றே அழைக்கிறார்கள்.

இது தர்க்கரீதியாகவும், அமல்படுத்தும் முறையிலும் சாத்தியமற்ற ஒரு ஏமாற்றுவேலை. மேலும் இதுபோன்ற மாற்றங்கள் குரானில் மிகவும் உறுதியாக தடை செய்யப்பட்டவை.

இந்த புதிய சீர்திருத்தவாதிகள் இஸ்லாமை மற்றொன்றாக மாற்ற விரும்புகிறார்கள். அவர்கள் இஸ்லாமிற்குள் பிதாவை (bid’a = innovation) புகுத்தப் பார்க்கிறார்கள். இது சாத்தியமா? குரானில் நம்பிக்கையுள்ளவர்கள் அதில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் கொள்ள முடியுமா? குரானின் 33:36 என்ற வாசகம் நம்பிக்கையுள்ளவர்கள் தங்களுக்கு எது நல்லது என்ற தங்கள் சொந்த விசயங்களில் கூட எந்த முடிவையும் எடுப்பதற்கு முடியாது என்றும் அல்லாவும் அவரின் தூதரும் அவர்களுக்காக முடிவெடுத்துவிட்டர்கள் என்றும் தெளிவாக சொல்வதை ஏற்கனவே பார்த்துவிட்டோம். அவர்கள் எப்படி மதத்திற்கு எது நல்லது என்று முடிவெடுப்பார்கள்?
“போர் தொடுத்தல், உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும், உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது” என்று குரான் சொல்லும்போது, செய்தி மிகவும் தெளிவானது. சொல்வது கடவுள் என்று ஆரம்பத்திலேயே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள். எப்படி கடவுளையே மறுத்துப் பேசமுடியும்? குரான் கடவுளின் வெளிப்பாடு என்று ஏற்றுக்கொண்டதற்க்குப் பிறகு நீங்கள் உங்களுக்குப் பிடித்ததை எடுத்துக்கொண்டும் பிடிக்காததை அலட்சியப் படுத்தவும் முடியாது. இது ஒருமுறை அல்ல திரும்பத் திரும்ப தடை செய்யப்பட்டிருக்கிறது.
أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاء مَن يَفْعَلُ ذَلِكَ مِنكُمْ إِلاَّ خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ وَمَا اللّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ
Q.2:85 “நீங்கள் [குரானில்] எழுதப்பட்டதை சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் தள்ளப்படுவார்கள்; நீங்கள் செய்து வருவதை அல்லா கவனிக்காமல் இல்லை.”
أَفَغَيْرَ اللّهِ أَبْتَغِي حَكَمًا وَهُوَ الَّذِي أَنَزَلَ إِلَيْكُمُ الْكِتَابَ مُفَصَّلاً
Q 6:114 “அல்லா அல்லாதவனையா நீதிபதியாக [எது தவறு எது சரியென்று] நான் தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு, உண்மையை தெளிவாகக் கூறி, விளக்கமான குரானை இறக்கியுள்ளான்”
وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللّهِ إِن يَتَّبِعُونَ إِلاَّ الظَّنَّ وَإِنْ هُمْ إِلاَّ يَخْرُصُونَ

Q 6:116 “பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாவின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். அவர்கள் வெறும் யூகங்களைத்தான் பின்பற்றுகிறார்கள் – கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்.”
إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلَ اللّهُ مِنَ الْكِتَابِ وَيَشْتَرُونَ بِهِ ثَمَنًا قَلِيلاً أُولَـئِكَ مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ إِلاَّ النَّارَ وَلاَ يُكَلِّمُهُمُ اللّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ

Q 2:174 “எவர், அல்லா குரானில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லா அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தலும் வேதனையும் உண்டு.”
16:89 & 39:23 யும் பார்க்கவும்.
كَمَا أَنزَلْنَا عَلَى المُقْتَسِمِينَ الَّذِينَ جَعَلُوا الْقُرْآنَ عِضِين فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِيْنَ:
Q. 15:90-92 “பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே, இந்த குரானை பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்). (உம்) இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக நாம் அவர்களனைவரையும் விசாரிப்போம்.”
وَلاَ مُبَدِّلَ لِكَلِمَاتِ اللّهِ
Q. 6:34 “அல்லாவின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது”
لاَ تَبْدِيلَ لِكَلِمَاتِ اللّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
Q. 64 “அல்லாவின் வாக்குகளில் எவ்வித மாற்றமுமில்லை – இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.”
وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِن كِتَابِ رَبِّكَ لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَلَن تَجِدَ مِن دُونِهِ مُلْتَحَدًا
Q. 18:27 “இன்னும் உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை நீர் ஓதுவீராக – அவருடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் எவருமில்லை; இன்னும் அவரையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்”.

குரானை நம்பிக்கொண்டு இந்த எல்லா எச்சரிக்கைகளையும் ஒருவரால் எப்படி மீறமுடியும்?

இஸ்லாமின் சீர்திருத்தவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் குறைந்தபட்சம் அப்பாவிகளாகவும் அதிகபட்சம் நயவஞ்சகர்களாகவும் உள்ளனர். அவர்களின் முயற்சிகள் வரவேற்க்கப்படக்கூடாதது. அவர்களின் நோக்கம், நேர்மையானதோ வஞ்சகமானதோ, எதுவாக இருந்த போதும், அது முஸ்லிமல்லாதோரை ஏமாற்றி அபாயகரமான நம்பிக்கைக்கு நம்பகத்தன்மையை அளிக்கவே பயன்படுகிறது.

நல்ல, கெட்ட, அருவருப்பான:
முஸ்லிம்களை மூன்று வகையாக பிரிக்கலாம்: நல்ல முஸ்லிம், கெட்ட முஸ்லிம், அருவருப்பான முஸ்லிம்.

குரானையும் முகமதின் வழிகாட்டுதலையும் பின்பற்றி பயங்கரவாதிகளாக செயல்படுபவர்கள் நல்ல முஸ்லிம்கள்.

இஸ்லாமை முழுவதும் கடைப் பிடிக்காத, குரானைப் படிக்காத, தொழுகை செய்யாத, எப்பொழுதாவது மசூதிக்குப் போகின்ற முஸ்லிம்கள் கெட்ட முஸ்லிம்கள். இறை நம்பிக்கையில் நிறைந்தவர்களாக இருந்தபோதும், இஸ்லாமைப் பற்றிய அவர்களின் அறிவு மிகவும் குறைவே. முஸ்லிமல்லாதோரை அவர்கள் பெரும்பாலும் சந்தேகக் கண் கொண்டு பார்த்தாலும், முஸ்லிமல்லாதோரைப் போல அவர்களும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சித்தாலும், இஸ்லாமைப்பற்றிய புரிதல் அவர்களுக்கு குறைவே என்பதால் அவர்கள் முஸ்லிமல்லாதோரின் மீது வெறுப்பு கொள்வதில்லை.

பெரும்பாலான இந்த கெட்ட முஸ்லிம்கள் தாங்கள் நல்ல முஸ்லிம்கள் இல்லை என்று ஒத்துக்கொள்வார்கள். இவர்கள் ஒருகாலத்தில் போதுமான நம்பிக்கையைப் பெற்று நல்ல முஸ்லிம்களாக வருவோம் என்று விரும்புபவர்கள். இவர்கள்தான் பெரும்பான்மை.

இஸ்லாமைப் பற்றிய உண்மையை அறிந்து அதைப்பற்றி நயவஞ்சகம் பேசி மறைப்பவர்கள் தான் அருவருப்பான முஸ்லிம்கள். அவர்கள் தன்னாலான வரையில் இஸ்லாமை சிறந்ததாகக் காட்ட முயற்சிப்பார்கள். அவர்கள் நல்ல முஸ்லிம்களை கெட்ட முஸ்லிம்கள் என்றும் இந்த கெட்ட முஸ்லிம்கள் இஸ்லாமின் பெயரை கெடுத்துவிட்டார்கள் என்றும் கூடச் சொல்வார்கள்.

உண்மை மட்டுமே நம்மை விடுவிக்கும். தேன் பூச்சு கொடுப்பதன் மூலம் இஸ்லாமின் இயற்கையை மாற்றமுடியாது. அசுத்தமான நீரை சுத்தப்படுத்தி அருந்தலாம். சிறுநீரைக் கூட குடிநீராக மாற்றலாம். ஆனால் எந்த அளவுக்கும் சுத்திகரித்தாலும் பெட்ரோலியம் நீராக மாறாது. இஸ்லாமின் சாரம் தீய்மையானது. அது அசுத்தப்பட்ட நல்ல நம்பிக்கை அல்ல. அதை எப்படி சுத்தப் படுத்தினாலும் ஒரு மனிதாபிமான மதமாக மாற்ற முடியாது. நாசிசத்தை சீர்திருத்த முடியுமா? அந்த எண்ணமே அப்பாவித்தனமானது அல்லது முட்டாள்தனமானது.

பொய், பித்தலாட்டம், வல்லுறவு, சித்ரவதை, அதிகாலைத் திடீர் தாக்குதல், கொள்ளையடித்தல், கூட்டுப் படுகொலைகள் மற்றும் பல கொடூரமான குற்றங்களைப் புரிந்த ஒரு வக்கிர மனநிலை பெற்ற மனிதனால் நிறுவப்பட்ட ஒரு மதத்தை சீர்திருத்துவதில் என்ன பயன்? அவனைத் தொழும் மதத்தையும் அவனின் நினைவையும் ஏன் பாதுகாக்க வேண்டும்? அவன் மதிக்கப்பட அல்ல அவமதிக்கப்பட வேண்டியவன்.

இஸ்லாமை சீர்திருத்துவது முடியாதது. அது ஒரு ஏமாற்றுவேலை. ஜிஹாத் என்பது போர் மற்றும் நயவஞ்சகம் என்ற இரு கால்களில் நிற்கிறது. இஸ்லாமிய சீர்திருத்தவாதிகளின் இதமான வார்த்தைகளால் யாரும் ஏமாந்துவிடக்கூடாது. மிதவாத இஸ்லாம் என்று ஒன்று இல்லை. அது ஒரு கட்டுக்கதை.

ஷாரியாவுக்கு எதிரான முஸ்லிம்களை நான் நம்பவில்லை. அவர்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் சொல்வது முன்னுக்குப்பின் முரணானது. அவர்களின் திட்டம் என்ன என்று புரியவில்லை. “நான் ஒரு முகமதியன் ஆனால் முகமதைப் பின்பற்றுவதில்லை” என்று சொல்பவரை என்னால் நம்ப முடியவில்லை. அவர்கள் சொல்வதில் சந்தேகமான, நேர்மையற்ற, போலியான ஏதோ ஒன்று இருக்கிறது.

நீங்கள் முஸ்லிம் என்றால் முஸ்லிமாக இருங்கள். உங்களிடம் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், குறைந்த பட்சம், உங்கள் நிலை என்ன வென்றும் உங்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க நான் எப்படி இருக்க வேண்டும் என்றும் எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் ஒரு முஸ்லிம் என்றும் ஆனால் இஸ்லாமிற்கும் ஷரியாவிற்கும் எதிரானவன் என்றால் உங்களை நம்பமுடியாது. நீங்கள் ஒன்று மூடனாக இருக்கவேண்டும் இல்லை ஏமாற்றுப்பேர்வழியாக இருக்கவேண்டும். “இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று துப்பிவிடுவேன்”

சில பெயரளவு இஸ்லாமிய சீர்திருத்தவாதிகள் “மற்ற முஸ்லிம்களுக்கு பயந்து” தங்கள் முகத்தையும் அடையாளத்தையும் மறைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் ஏன் பயப்படவேண்டும்? அமெரிக்கர்களை ஏமாற்ற வேண்டும் எம்பதற்க்காக இஸ்லாமிய தந்திரத்தைப் பயன்படுத்தும் CAIR சொல்லாததையா இவர்கள் சொல்கிறார்கள்? எல்லாம் வெறும் நாடகம்.

இஸ்லாமை சீர்திருத்துவது சாத்தியமற்றது. அதை உருமாற்றுவதற்கு நமக்கு இறை அதிகாரம் வேண்டும். கடவுள் மட்டுமே அவரின் வார்த்தைகளை மாற்ற முடியும். அந்த இறை அதிகாரம் எங்கே? உங்களுக்கு குரானில் இருந்து தேவையானதை எடுத்துக் கொண்டு வேண்டாததை விட்டுவிட அதிகாரம் இருந்தால், ஒசாமா பின் லாடனுக்கும் அந்த அதிகாரம் இல்லையா? எந்த இஸ்லாம் சரியான இஸ்லாம்? இது முஸ்லிம்களுக்கிடையே மேலும் பிரிவினைகள் அதிகரித்து மோதல்களும் அதிகரிக்காதா?

உண்மையிலேயே இஸ்லாமை சீர்திருத்த முயன்றவர் பஹாயுல்லா (Baha’u’llah) மட்டுமே. அவர் இஸ்லாமை சீர்திருத்த முடியாது என்ற முடிவுக்கு வந்தார். ஆகையால் அவர் ஒரு புதிய மதத்தை நிறுவினார். குரானில் சொல்லப்பட்ட கட்டளைகளை எல்லாம் தள்ளுபடி செய்வதற்கான ஆணையை கடவுளிடம் இருந்து தான் பெற்றுள்ளதாக அறிவித்தார்.

அவர் முஸ்லிம்களுக்கு இவ்வாறு அறிவித்தார். முன்னர் உங்களுக்கு இஸ்லாமில் நம்பிக்கையில்லாதவர்களை கொல்லும்படி கூறப்பட்டது. இப்பொழுது கடவுள் மதவித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் நேசிக்கும்படி சொல்கிறார். முன்னர் பெண்கள் புத்தியில் குறைந்தவர்கள் என்றும், அவர்கள் உங்களுக்கு பணியமாட்டார்கள் என்று நினைத்தால் அடிக்கும் படியும் சொல்லப்பட்டது, இப்பொழுது ஆணும் பெண்ணும் சமம் என்றும் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றும் ஏனென்றால் அவர்கள் தான் எதிர்கால சந்ததிகளுக்கு தாய்களாகவும் முதல் ஆசிரியர்களாகவும் விளங்கப் போகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. முந்தைய ஏற்பாட்டில் இஸ்லாமில் நம்பிக்கையற்றவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் எனப்பட்டது ஆனால் இப்பொழுது, உங்கள் செயல்கள் தான் முக்கியம் என்றும் நல்ல செயல்கள் இல்லாமல் வெறும் நம்பிக்கையினால் பயனில்லை என்றும் கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் பாரபட்சம் காட்ட மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது. உங்கள் இதயத்தின் தூய்மை தான் முக்கியமே தவிர உங்கள் நாவில் இருந்து வரும் வார்த்தைகள் அல்ல. முன்னர் கடவுள் நம்பிக்கையில்லாத மனிதர்களை வறுத்தெடுப்பதற்க்காக ஒரு பெரிய அடுப்பை வைத்திருந்தார் என்றும் ஆனால் இப்பொழுது அதை மூடிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. கடவுள் தன்னை பயத்தினால் அல்ல அன்பினால் பணியுமாறு விரும்புகிறார். பயமுறுத்தல் இல்லை என்றும் எனவே வளர்ந்த மக்களைப் போல நடந்து கொள்ளச் சொல்கிறார். முன்னர் ‘போர் தொடுத்தல் உங்களுக்கு நல்லது’ என்றார். ஆனால் இப்பொழுது அவருக்கு போர்கள் அலுத்து விட்டன என்றும், மிருகங்களே தங்களுக்குள் சண்டைபோட்டுக்கொள்ளும் என்றும் மனிதர்கள் நற்செயல்களையே செய்து கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார். முன்னர் பரலோகத்தில் கன்னிப்பெண்களை உறுதியளித்திருந்தார் அனால் இப்போது அப்படி இல்லை, உங்கள் உடல் இங்கேயே அழுகிவிடும். உங்களின் நற்செயல்களுக்காக வெகுமதியாக அன்புமும் ஆனந்தமுமே கிடைக்கும், பரலோகத்தில் ‘மஜா’ வுக்கு வாய்ப்பில்லை என்கிறார். இவ்வுலகில் நல்லவிதத்தில் வாழ்ந்து அன்பையும் ஆனந்தத்தையும் பெற முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தத்தைத் தவிர வேறு எந்த தண்டனைகளும் இல்லை என்கிறார்.

இவ்வாறு அறிவிப்பதற்கு நெஞ்சுரம் வேண்டும். அதுவும் 19வது நூற்றாண்டில் ஷியாக்களின் பாரசீகத்தில். சும்மா விடுவார்களா? பாதாளச் சிறையில் தள்ளப்பட்டார். பிறகு சாகும்வரை நாடுகடத்தப்பட்டார். அவரை பின்பற்றியவர்கள் பலர் கொல்லப்பட்டனர். அவரின் வாதத்தில் ஒரு பொருள் இருந்தது. அதாவது கடவுளின் விதிகளை மாற்றுவதற்கு அவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. முகமதை அனுப்பும்போது இந்த கடவுள் எதை புகைத்துக் கொண்டிருந்தார் என்று நாம் கேட்கும் வரை தான், இந்த தர்க்கத்திற்கு மதிப்பு இருக்கிறது. பஹாயுல்லா மட்டுமே ஒரு நம்பகத்தன்மையுள்ள இஸ்லாமிய சீர்திருத்தவாதி. ஆனால் அதில் கூட ஒரு சிக்கல் இருக்கிறது. பஹாய் மதத்திற்கும் இஸ்லாமிற்கும் சம்பந்தமே இல்லை. அது முற்றிலும் வேறுபட்ட மதம்.

 

இஸ்லாமை சீர்திருத்துவது என்பது கானல்நீரைத் தேடி ஓடுவதைப் போன்றது

இஸ்லாமை சீர்திருத்தவோ உருமாற்றவோ முடியாது. நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் மற்றும் செய்யவேண்டியதெல்லாம் அதை குப்பையில் எறிவதே. தயவு செய்து இந்த நாடகத்தை நிறுத்துங்கள். ஒன்று முஸ்லிமாக இருந்து முகமது சொன்னதைப் போல் செய்யுங்கள். இல்லை இஸ்லாமை விட்டு விலகி பயங்கரவாதிகளுக்கு கவசமாக இருப்பதை நிறுத்துங்கள். குட்டையை குழப்பிக் கொண்டு இருக்காதீர்கள். எதிரியுடம் சேர்ந்துகொண்டு நண்பனாக நடிக்காதீர்கள். இதைத்தான் பாலஸ்தீனியர்கள் போரில் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் பொதுமக்கள் மற்றும் அப்பாவிக் குழந்தைகள் மத்தியில் நின்றுகொண்டு எதிரியை தடுமாற வைக்கிறார்கள். நீங்கள் குழப்பத்தை விளைவிக்கிறீர்கள். நீங்கள் எதிரிக்கு பாதுகாப்பாக நிற்கிறீர்கள். இதை நான் உங்களுக்காக எழுதவில்லை. நீங்கள் மாறப்போவதில்லை என்று எனக்குத் தெரியும். நீங்கள் நயவஞ்சகர்கள். உங்கள் வலையில் விழாமல் இருக்கவும் உங்களுக்கு இலவசமாக ஊடகங்களில் ஏமாற்றும் வேலையைத் தொடர வாய்ப்பு கொடுக்காமல் இருக்கவும், முஸ்லிமல்லாதோருக்காக இதை எழுதுகிறேன்.

 

இஸ்லாமை சீர்திருத்தவே முடியாது. எல்லாவிதங்களிலும் முயற்சி செய்து பார்த்து விட்டார்கள். முதசளிக்கள் (Mu’tazelis) முயன்றுபார்த்தார்கள். சூஃபிக்கள் (Sufis) முயன்றுபார்த்தார்கள். நூற்றுக் கணக்கான பழைய மற்றும் புதிய குழுக்கள் முயன்றுபார்த்தார்கள். அவர்கள் எல்லோரும் தோற்றுவிட்டார்கள். உங்களால் ஷரியாவை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், இஸ்லாமை பாதுகாக்க ஏன் விரும்புகிறீர்கள்? இஸ்லாம் மலக்குழியினுள் சென்று சேர வேண்டிய காலம் வந்து விட்டது. அதை கழிப்பறையில் அமர்ந்து நீரூற்றி கழுவிவிடுங்கள். அந்த சனியனை துளைத்து தலை முழுகுங்கள். உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆம், உண்மைதான் முக்கியம். இஸ்லாம் ஒரு மோசடி. முகமது ஒரு வக்கிர மனநிலை பெற்ற மோடிமஸ்தான். மயக்கத்தில் இருந்து நினைவுக்கு வந்து சீர்திருத்தம் என்ற கேலிக்கூத்தை நிறுத்துங்கள்.