முகமது ஒரு பொய்யன் என்பதை என் கட்டுரைகள் முழுக்க நிரூபித்திருக்கிறேன். குறைந்த பட்சம் ஒரு விசயத்தில் அவன் உண்மையை பேசி இருக்கிறான் என்று இந்த கட்டுரையில் நிரூபிக்கப் போகிறேன். தான் எழுதப்படிக்கத் தெரியாதவன் என்று அவன் சொன்னது உண்மை.

குரான் முழுக்க அறிவியல் பூர்வமான புரளிகளும், வரலாற்றில் முட்டாள்தனமான தவறுகளும், இலக்கணப் பிழைகளும், தவறான தர்க்கங்களும் பரவி இருக்கின்றன. இதில் மிகவும் வெளிப்படையானவை கணிதப் பிழைகள். சிறிதும் எழுதப்படிக்கத் தெரியாத ஒரு மனிதனிடமிருந்து மட்டுமே இது போன்ற பிழைகளை எதிர் பார்க்கமுடியும். இஸ்லாமின் தூதர் உண்மையிலேயே ஒரு தற்குறி என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

பாகப்பிரிவினை பற்றிய இஸ்லாமிய சட்டம் குரானின் பல வாசகங்களில் கொடுக்கப் பட்டுள்ளது. அல்-பகரா(2), அல்-மைதா(5), அல்-அன்ஃபால்(8) போன்ற சூரா (Sura) க்களில் இதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் சூரா நிசா(4) வில் தான் இந்த சட்டங்கள் விளக்கப்பட்டு இருக்கின்றன.

“உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லா உங்களுக்கு உபதேசிக்கின்றார்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்; இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான். இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்;…” Q. 4:11

“இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் – அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து உங்களுக்கு கால் பாகம்தான் – அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் – தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்; உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்; நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்;…” Q. 4: 12

“ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு இதற்கு மாறாக அவள் இறந்து விட்டால், அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், சகோதரன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான்; இரு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள்; அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும் பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு – நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லா உங்களுக்கு விளக்கமாக சொல்லி இருக்கிறார்; அல்லா யாவற்றையும் நன்கு அறிந்தவராக இருக்கின்றார்.” Q. 4:176

“அல்லா இவ்விதிகளை தெளிவாக்கி இருக்கிறார்” என்று சொல்லிக்கொள்ளப் பட்டதற்கு மாறாக, இவைகள் சிறிதும் தெளிவானவை அல்ல.

வாசகம் 4:11 ஒரு ஆணுக்கு ஒரே ஒரு மகள் மட்டும் இருந்தால், மற்ற வாரிசுகள் எப்படி இருந்தாலும், அவள் பாதி சொத்தைப் பெறுவாள் என்கிறது. ஆனால் இதே வாசகம் ஒரு மகனின் பங்கு மகளின் பங்கை விட இருமடங்கு என்று சொல்வதால், அவளின் சகோதரனுக்கு முழு பங்கும் கிடைக்க வேண்டுமே. இது குழப்பமாக இல்லையா? இந்த சட்டத்தில் நிச்சயமாக பிழை இருக்கிறது.

பெற்றோர்கள் மனைவிகள் போன்ற மற்ற வாரிசுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்த சட்டம் மேலும் சிக்கலாகிறது.

சமயங்களில் வாரிசுகளுக்கு ஒதுக்கப்படும் பங்குகளின் கூட்டு மதிப்பு மொத்த சொத்து மதிப்பைத் தாண்டுகிறது. பின்வரும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

மேற்கண்ட வாசகங்களின் படி, ஒரு மனைவி, மூன்று மகள்கள், இரு பெற்றோர்களை உயிருடன் கொண்ட ஒரு ஆண் இறந்து போனால், அவனுடைய சொத்தில் மனைவியின் பங்கு 1/8. (உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்; உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்)
அவரின் மகள்கள் 2/3 பங்கை பெறுவார்கள் (பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும்)
அவரின் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் 1/6 பங்கைப் பெறுவார்கள். (இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு)
இந்த பங்குகளின் கூட்டுத் தொகை மொத்த சொத்து மதிப்பை விட அதிகம்.
பிள்ளையுள்ள மனைவி 1/8 =3/24
மகள்கள் 2/3 =16/24
தந்தை 1/6 =4/24
தாய் 1/6 =4/24
எல்லோருக்கும் விதிக்கப்பட்ட பங்கை கொடுப்பதற்கு போதுமான பங்குகள் இல்லை. பற்றாக்குறை 1/8
மனைவிக்கு பிள்ளைகள் இல்லை என்றால் மகள்கள் ‘தலாக்’ செய்யப்பட பழைய மனைவியின் பிள்ளைகளாக இருந்தால் என்ன நடக்கும்.
பிள்ளையில்லா மனைவி 1/4 =6/24
மகள்கள் 2/3 =16/24
தந்தை 1/6 =4/24
தாய் 1/6 =4/24
மொத்தம் =30/24
இந்த முறை பற்றாக்குறை ¼
இந்த சட்டத்தின் அநீதி மிகவும் தெளிவு. ஒரு பெண் ஒரு மனிதனுக்கு 25 வருடங்களாக மனைவியாக இருந்து அவனுடன் பிள்ளை பெற்றிருக்கிறாள் என்று கொள்வோம். அவள் 1/8 பங்கை பெறுகிறாள். ஆனால் அதே மனிதன் அவன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் ஒரு புதிய பெண்ணை மணக்கிறான் என்று கொண்டால் அவள் பழைய மனைவியைவிட இரு மடங்கு பங்கைப் பெறுவாள். பொதுவாக குருடாக இருக்கும் முஸ்லிம் கூட இந்த சட்டத்தின் முட்டாள்தனத்தை பார்க்கமுடியும் என்று நான் நம்புகிறேன். மனிதர்களுக்கு நியாய அநியாய உணர்வுடன் தான் பிறக்கிறார்கள். எந்தளவுக்கு தவறான கொள்கைகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு இருந்தாலும், நம்மில் கொஞ்சமேனும் இந்த நியாய அநியாய உணர்வு மீதி இருக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் சில முஸ்லிம்களாவது இந்த சட்டத்தின் கணக்குப் பிழையைக் கூட இல்லை, அதன் அநீதியை உணர்ந்து இஸ்லாம் கடவுளிடம் இருந்து வந்தது இல்லை என்று முடிவெடுப்பார்கள் என்பது உறுதி.

மற்றொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

ஒரு ஆண் தனது பிள்ளையில்லா மனைவியையும், தாயையும், சகோதரிகளையும் விட்டுவிட்டு இறக்கிறான் என்று கொள்வோம்.

மனைவியின் பங்கு 1/4 (உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்)

தாய் 1/3 (ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்)

சகோதரிகள் 2/3 பங்கை பெறுவார்கள். (இரு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள் (அவர்களுக்கு இடையில்))

மறுபடியும் பங்குகளின் கூட்டுத்தொகை மொத்தத்தை விட அதிகம், இம்முறை பற்றாக்குறை 3/12 அல்லது 25%. இது அலட்சியப்படுத்த முடியாத அளவிற்கு பெரிய பற்றாக்குறை.

மனைவி 1/4 =3/12
தாய் 1/3 =4/12
சகோதரிகள் 2/3 =8/12
மொத்தம் =15/12

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், வாரிசுகளுக்கு பிரிக்கப்பட்ட பங்குகள் மொத்த சொத்தை விட அதிகம். இந்த இரண்டு உதாரணங்களிலும், சொத்தின் மொத்த மதிப்பு, மனைவியின் பங்கை கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு முன்னர் வரும் பங்குகளின் கூட்டுத்தொகைக்கு சமமாக உள்ளது.

ஒரு மனிதனுக்கு இரண்டு மனைவிகள், ஒருவர் பிள்ளையுடனும், மற்றவர் பிள்ளையில்லாமலும், இருந்தால் என்ன செய்வது?

ஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகள் இருந்தால் என்ன செய்வது? எல்லா மனிவிகளும் ¼ பங்கை பெறுவார்களா? அது முடியாது. ஏனென்றால் அவரின் சகோதரிகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஒன்றுமிருக்காது. அப்படியென்றால் மனைவிகள் ¼ பங்கை தங்களுக்குள் பங்கிட்டு ஆளுக்கு 1/16 பங்கை பெறுவார்களா?

இந்த சட்டம் கணிதத்தில் மட்டும் பிழையானது அல்ல, குழப்பமானதும் அநீதியானதும் கூட.

ஒரு ஆண் பெற்றோர்களையும், இரு சகோதரிகளையும், நான்கு மனைவிகளையும் விட்டுவிட்டு இறக்கிறார் என்று கொள்வோம். கணக்குப் பிழைகள் இருந்துவிட்டுப் போகட்டும். இரு சகோதரிகள் ஆளுக்கு 1/3 பங்கையும் மனைவிகள் ஆளுக்கு 1/16 பங்கையும் பெறுவார்கள். இது ஒரு நியாயமான பாகப்பிரிவினையாக தோன்றுகிறதா?

இறந்தது பெண்ணாக இருந்தால்?

கணவனுக்கு பாதி (உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் – அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு)

சகோதரனுக்கு எல்லாமே (ஒரு பெண் இறந்து விட்டால், அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், சகோதரன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான்)

சகோதரன் எல்லாவற்றையும் பெற்றுவிட்டால் கணவன் எப்படி பாதியைப் பெறுவான்?

கணவன், (1/2) =1/2
சகோதரன் (எல்லாமே) =2/2
மொத்தம் =3/2

மறுபடியும் இந்த பாகப்பிரிவினை கணக்களவில் பிழையானது மட்டுமல்ல அநீதியானதும் கூட.

அவளின் பெற்றோர்கள் சகோதரிகள் என்ன ஆனார்கள்? அவர்களுக்கு ஒன்றும் இல்லையா?

இந்த வாசகம் மற்ற வாரிசுகள் இல்லாதபோதுதான் சகோதரன் முழு பங்கையும் பெறுகிறான் என்று கூறவில்லை. பிள்ளைகள் இல்லையென்றால் அவனுக்கு எல்லாமே என்று மட்டுமே சொல்கிறது. இதே வாசகம் ஒரு ஆண் சகோதரியை விட்டுவிட்டு இறந்தால், அவளுக்கு பாதி கிடைக்கும் என்கிறது. மீதி பாதி என்ன ஆகும்?

மற்றொரு முட்டாள்தனமான பாகப்பிரிவினையைப் பார்ப்போம். ஒரு பெண் ஒரு கணவனையும், ஒரு சகோதரியையும், தாயையும் விட்டுவிட்டு இறக்கிறார் என்று கொள்வோம்.
கணவன், (1/2) =3/6
சகோதரி, (1/2) =3/6
தாய் (1/3) =2/6
மொத்தம் =8/6
1/3 பங்கு பத்தவில்லை!

பாகப்பிரிவினை விசயத்தில் குரான் மிகவும் மொண்ணையாக இருக்கிறது என்பது இதனால் தெளிவாகிறது. இந்த தவறுகள் நாலாவது வகுப்பு மாணவனிடம் இருந்து எதிர்பார்க்கலாம். கடவுளுக்கே இந்த சாதாரண பின்னங்களை கூட்டுதல் எப்படி என்று தெரியவில்லை என்பதை நம்புவது மிகவும் கடினம். இந்த தவறுகள் ஆரம்பக்கல்வி கூட இல்லாத மனிதனுடையது.

இந்த பாகப்பிரிவினை சட்டங்கள் எந்த அளவுக்கு மொண்ணையானது என்றால் ஷியாக்களும் சுன்னிகளும் இதை வெவ்வேறு விதமாக பின்பற்றுகிறார்கள். உதாரணத்திற்கு:

ஒரு ஆண் ஒரு மனைவியையும் இரு பெற்றோர்களையும் விட்டுவிட்டு இறந்தால், ஷியாக்கள் மனைவிக்கு முழு சொத்திலிருந்து 1/4 பங்கை கொடுத்துவிட்டு மீதமுள்ளதை மற்ற வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுப்பார்கள். ஷியாக்கள் பங்கை பிரித்துக்கொடுக்க வாரிசுகளின் வரிசைக்கிரமத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த வரிசையில் முதலில் வருபவர்கள் முதலில் பங்கைப் பெறுவார்கள். மீதி உள்ளதில் இருந்து அடுத்து வரும் வாரிசுகள் தன் பங்கைப் பெறுவார்கள். மூன்றாவது இடத்தில் உள்ள வாரிசுகள் மீத உள்ளதில் இருந்து பங்கிட்டுக் கொள்வார்கள். இப்படியே கடைசி வரைச் செல்லும். இந்த முறையில் வாரிசுகள் பெற்ற பங்கு குரானில் சொல்லப்பட்டதைப் போன்று இருக்காது. (see #2741).

சுன்னிகள் மனைவிக்கு ¼ பங்கையும், தாயாருக்கு 1/3 பங்கையும், தந்தையை நெருங்கிய ஆண் வாரிசு என்று எடுத்துக் கொண்டு மீதமுள்ள முழூ பங்கையும், அதாவது 5/12 பங்கையும், தந்தைக்கே கொடுப்பார்கள்.

இதுபோன்ற சிக்கல்களை தீர்ப்பதற்கு இஸ்லாமிய ‘சட்ட வல்லுனர்கள்’, மற்றுமொரு சிக்கலான ‘அல்-பாராயித்’ (Al-Fara’id) என்று அழைக்கப்படும் “விஞ்ஞானத்தை” உருவாக்கி இருக்கிறார்கள். இதில் “Awl” விதிகள், “Usbah” விதிகள், “Usool” சட்டங்கள், “Hajb wa Hirman” சட்டங்கள் போன்ற பலப்பல சட்டங்கள் அடங்கும்.
“Awl” (இடம் கொடுத்தல்) சட்டம் வாரிசுகளின் பங்குகளின் கூட்டுத்தொகை மொத்த சொத்துமதிப்பைவிட அதிகமாகும் போது பயன்படுகிறது. இந்த சட்டத்தின் படி, பங்குகள் எல்லோருக்கும் இடம் கொடுக்கும்படி குறைக்கப்படுகிறது. உதாரணம்:
மனைவி 1/8 = 3/24 குறைக்கப்பட்ட பங்கு 3/27
மகள்கள் 2/3 = 16/24 குறைக்கப்பட்ட பங்கு 16/27
தந்தை 1/6 = 4/24 குறைக்கப்பட்ட பங்கு 4/27
தாய் 1/6 = 4/24 குறைக்கப்பட்ட பங்கு 4/27
மொத்தம் = 27/24 27/27

இரண்டாவது பாகப் பிரிவினையில்

மனைவி 1/4 = 3/12 குறைக்கப்பட்ட பங்கு 3/15
தாய் 1/3 = 4/12 குறைக்கப்பட்ட பங்கு 4/15
சகோதரிகள் 2/3 = 8/12 குறைக்கப்பட்ட பங்கு 8/15
மொத்தம் = 15/12 15/15

குரானால் உருவான சிக்கல் மனிதனின் புத்தி கூர்மையால் தீர்க்கப்படுகிறது. ஆனால் குரானை மீறாமல் இது முடியவில்லை. ஒவ்வொரு வாரிசும் தனது பங்கில் சிறிதளவு விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கிறது. மனிதனின் தலையீடு இல்லாமல் அல்லாவின் வார்த்தைகளை அமல் படுத்தமுடியாது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. குரானின் சட்டங்களை அமல் படுத்த இஸ்லாமிய ‘சட்ட வல்லுனர்கள்’ தலையை சுற்றி மூக்கை நோண்டவேண்டியிருக்கிறது.

வாரிசுகளின் பங்குகளின் கூட்டுத் தொகை மொத்த சொத்தைவிட குறைவாக இருக்கும் பாகப்பிரிவினைகளும் உண்டு.

ஒரு மனைவியையும் பெற்றோர்களையும் விட்டுவிட்டு இறந்த ஆணை எடுத்துக்கொள்ளலாம்.

பெற்றோர்கள் 1/3 =4/12
மனைவி 1/4 =3/12
மொத்தம் =7/12

மீதி இருக்கும் 5/12 பங்கை யார் பெறுவார்கள்?

பின்வரும் கேஸ்களிலும் கூட சொத்து மீதியாகிறது.

நிலைமை கொடுக்கப்பட்ட பங்கு மீதி பங்கு
மனைவி மட்டும் 1/4 ¾
தாய் மட்டும் 1/3 2/3
மகள் மட்டும் 1/2 ½
இரண்டு மகள்கள் 2/3 1/3
ஒரு சகோதரி மட்டும் 1/2 1/2
தாய் + ஒரு சகோதரி 1/3 + 1/2 = 5/6 1/6
ஒரு மனைவி + தாய் 1/4 + 1/3 = 5/12 7/12
ஒரு மனைவி + ஒரு சகோதரி 1/2 + 1/4 = 3/4 1/4

மேற்காட்டப்பட்ட நிலைமைகளிலும் மற்றும் பல நிலைமைகளிலும் சொத்து மீதியாக இருக்கும். அதை யார் பெறுவார்கள்?
இந்த சிக்கலை தீர்ப்பதற்காக ‘Usbah’ சட்டம் வந்தது. குரானின் சட்டத்தின் படி வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுத்தது போக மீதி இருக்கும் சொத்தை சரிகட்டுவதற்க்காக இந்த சட்டம் உருவாக்கப் பட்டது. குரான் பிழைகள் இல்லாமலும் தெளிவாகவும் இருந்தால் இவ்வளவு “அறிவியலுக்கும்”, திருத்தங்களுக்கும் வேலை இருந்து இருக்காது.

‘Usbah’ சட்டம் பின்வரும் ஹதீதை ஆதாரமாகக் கொண்டது.

இப்னு அப்பாஸ் அறிவித்தார்:நபி சொன்னார், ”பங்குகளை அதைப் பெற உரிமையுள்ளவர்களுக்கு கொடுங்கள். மீதி இருப்பதை இறந்தவரின் நெருங்கிய ஆண் சொந்தத்திற்கு கொடுத்துவிடுங்கள்”

இந்த சட்டத்தின் படி, தனது ஒரே பெண்ணைமட்டும் விட்டுவிட்டு இறக்கும் ஒரு ஆணுக்கு நெருங்கிய ஆண் உறவாக ஒரு தூரத்து அத்தைப் பையன் மட்டும் இருந்தால், அவன் மகள் பாதி சொத்தையும் இந்த தூரத்து அத்தைப் பையன் பாதி சொத்தையும் பெறுவார்கள். இது அந்த பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநீதி. இதில் இதைவிட அநீதி என்னவென்றால் இறந்தவனுக்கு வசதி குறைந்த பெரியம்மாவோ சின்னம்மாவோ அல்லது அவர்களின் மகளோ இருந்தால் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்காது. ஏனென்றால் அவர்களுக்கு இருப்பது தவறான ‘குறி’.

ஒரு ஆணுக்கு தனது ஒரு மனைவி மற்றும் ஒரு தூரத்து ஆண் உறவு தவிர வேறு எந்த உறவும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். மனைவிக்கு கிடைப்பது ¼ பங்குதான். மீதி ¾ பங்கு தூரத்து ஆணுக்குப் போய்விடும். அவன் அந்த பெண்ணை விட மூன்ற மடங்கு பெறுவான். தனது தேவைகளைக் குறைத்துக் கொண்டு அந்த சொத்தை சேமிக்க உதவிய அந்த பெண்ணுக்கு அதை முழுவதுமாக பெறத்தகுதியுள்ள அந்த பெண்ணுக்கு கிடைப்பது கால் பங்கு தான். இதுதான் நீதியா?

இறந்தவனுக்கு தூரத்திலும் கூட ஆண் உறவே இல்லை என்றால்? சொத்தில் மீதி என்னாகும்? இறந்தவர் உறவுகளற்ற ஒரு பெண்ணாக இருந்தால் என்னாகும்? கணவனுக்குப் பாதி, மீதி யாருக்கு?

குர்ஆனில் பங்கை பிரித்துக் கொடுக்க வாரிசுகளில் எந்த வரிசைக் கிரமமும் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள். ஷியாக்கள் செய்வது ‘பிதா’ (bid’a) – ஒரு ‘புதுமை’ ஆகும். இதனால் அவர்கள் “இறை அவமதிப்பாளர்கள்” ஆகிறார்கள். குரான் எந்த இடத்திலும் “முதலில் இவர்களுக்குக் கொடுங்கள், மீதி இருப்பதில் அவர்களுக்குக் கொடுங்கள்” என்று கூறவில்லை. இந்த சட்டங்களை அது சொல்லப்பட்ட வரிசையில் பயன்படுத்தினாலும் கூட, அவைகள் சரியாக வரவில்லை. ஏனென்றால் பின்வரும் ஒவ்வொரு வாரிசின் பங்கும் சுருங்கிக் கொண்டே போகும். பெரும்பாலான கேஸ்களில் முழு சொத்தும் பிரித்துக் கொடுக்கப்பட முடியாமல் போய்விடும்.

இந்த பிழைகள் மிகவும் தெளிவானதும் மறுக்கப்பட முடியாதது ஆகும். இருப்பினும், குருட்டு நம்பிக்கையுள்ளவர்களுக்கு இதெல்லாம் உரைக்காது. இந்த கட்டுரைக்கு பதில் கொடுக்கும் விதமாக Sami Zaatari சொல்கிறார், “இ [இறந்தவர்] தனது விதவனை அல்லது விதவையை விட்டுச் சென்றிருந்தால், விதவனின் அல்லது விதவையின் பங்கு முதலில் 4:11 வாசகத்தின் முதல் பாதியில் சொல்லப்பட்டபடி கணக்கிடப்படும்.”

திரு Zaatari அவர்கள் இந்த கட்டளை குரானில் எந்த இடத்தில் இருக்கிறது என்று நமக்கு காட்டவில்லை. குரானில் சில வாரிசுகளுக்கு முதலில் பங்கு கொடுக்கவும் மீதியை மற்ற வாரிசுகளுக்கு பிரித்துக்கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. சொத்தைப் பிரிக்கும் விசயத்தில், குரானுக்கு கூட்டல் கழித்தல் கூட தெரியவில்லை என்பதே உண்மை.

பின்வரும் உதாரணத்தை வைத்து பாகப்பிரிவினை சட்டத்தின் மொண்ணைத்தனத்தை மேலும் புரிந்து கொள்ளலாம். ஒரு மகளையும் பத்து மகன்களையும் கொண்ட ஒரு ஆணை எடுத்துக் கொள்வோம். குரானின் படி, மகள் பாதி சொத்தையும் மற்ற எல்லா மகன்களும் மீதி பாதியையும் தங்களுக்குள் பிரித்துக்கொள்ளவேண்டும். எனவே ஒவ்வொரு மகனும் 1/20 பங்கை பெறுவான். ஒரு ஆண் ஒரு பெண்ணின் பங்கை விட இரு மடங்கு பெறவேண்டும் என்ற மற்றொரு சட்டத்தோடு இது முரண்படுகிறது. ஏதோவொரு வால் சுருட்டிக் கொள்ளவேண்டியதுதான். இரண்டு வாலும் ஆடமுடியாது.

1400 வருடங்களாக முஸ்லிம்கள் இஸ்லாமைப் பின்பற்றி இந்த சிக்கலான சட்டங்களையும் சமாளித்துக் கொண்டு வருகிறார்கள் என்பது ஆச்சர்யம்தான். எப்படி சாத்தியம்? அவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு அதற்கு விளக்கங்கள் கொடுத்தும், மாறுதல்கள் செய்தும் இதை சாதிக்கிறார்கள். சொத்து முழுவதையும் ஒரே கூறாக்கி அதில் இருந்து பெண் பிள்ளைகளின் பங்கை விட ஆண் பிள்ளைகளுக்கு இருமடங்கு கொடுத்துக் கொள்கிறார்கள். இந்த தீர்வு ஒரு கட்டளையை பின்பற்றும்போது மற்றொரு கட்டளையை அவமதிக்கிறது.

இவ்வளவு விகாரங்களும் பிழைகளும் இருந்தபோதும், இந்த சட்டத்தில் உள்ள உண்மையான பிரச்சனை கணக்கு சரியாக வரவில்லை என்பதல்ல. இது வழிகோலும் அநீதி தான் இந்த சட்டத்தின் பிரச்சனை. ஒரு நேர்மையான ஒருவர் மகள்களுக்கு மட்டும் ஏன் மகன்களின் பங்கில் பாதியைப் பெறவேண்டும் என்று கேட்கத் தவறமாட்டார்.

சகோதரர்களை விட சகோதரிகளுக்கு ஏன் குறைவான பங்கு? விதவைகளை விட விதவன்களுக்கு ஏன் இருமடங்கு பங்கு? ஏன் “ஆணுக்கு, இரு பெண்களின் பங்குக்கு சமமான பங்கு”? (4:11). நான்கு மனைவிகளை உடைய ஒரு ஆணை எடுத்துக் கொள்வோம். அவர்களுக்கு பிள்ளை இல்லாவிட்டால் 1/4 பங்கையும், பிள்ளை இருந்தால் 1/8 பங்கையும் அவர்கள் எல்லோரும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளவேண்டும். முதல் நிலையில் ஒவ்வொரு மனைவியும் 1/16 பங்கையும் இரண்டாம் 1/32 நிலையில் பங்கையும் பெறுவார்கள். மாறாக, நான்கு மனைவியையும் இழக்கும் ஆண் அவர்கள் ஒவ்வொருவரின் சொத்திலும் பாதியைப் பெறுவான். இது ஆண்களை பணக்காரனாக்கி பெண்களை ஏழையாக்கும் சூத்திரம் இலையா? குரானின் கணக்குப் பிழைகளை மறப்பது எளிது ஆனால் அதன் அநீதியை மன்னிப்பது கடினம்.

வாசகம் 4:176 “நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லா உங்களுக்கு விளக்கமாக சொல்லி இருக்கிறார்; அல்லா யாவற்றையும் நன்கு அறிந்தவராக இருக்கின்றார்” என்று சொல்லிக்கொள்கிறது. நாம் மேலே பார்த்ததைப் போல, இந்த சட்டங்கள் சிறுதும் விளக்கமற்றவை. பங்குகள் சரியாக வரையறுக்கப் படவோ அவைகள் நியாயமான முறையில் பிரித்துக் கொடுக்கப் படவோ இல்லை. அல்லாவுக்கு எளிய பின்னங்கள் கூட தெரியாது என்றோ, அவர் குழம்பிவிட்டார் என்றோ, அவர் அநியாயமானவர் என்றோ அல்லது குரானை எழுதிக்கொள்ளச் சொன்னது ஒரு தற்குறி என்றோ முஸ்லிம்கள் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் இதில் ஏதோ ஒன்று தான். உங்கள் முடிவு என்ன?