இஸ்லாம் வன்முறையை தூண்டவில்லை என்று சொல்லிக்கொள்வதற்காக முஸ்லிம்கள் குரான் வாசகம் 5:32 ன் ஒரு பகுதியை அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றனர். “நிச்சயமாக எவன் ஒருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.”

கேட்கவே இனிமையாக இருக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இது முகமதின் போதனையே அல்ல. இது யூதர்களின் மதப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு மேற்கோள்.

“எவன் ஒருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.” ஜெருசலேம் தால்முட் சன்ஹெட்ரின் 4:1 (22a)

ஒரு மனிதரைக் கொல்வது மனித இனத்தையே கொல்வதைப் போன்றதல்ல. இந்த வரிக்கு சரியான பொருள் அதன் சரியான் இடத்தில் தான் கிடைக்கும். இந்த வரி அபெல் (Abel) மற்றும் கெயின் (Cain) பற்றிய கதையுடன் சம்பந்தப் பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் இருந்த ஆண்கள் இந்த இரு சகோதரர்கள் மட்டுமே என்பதால், இவர்களில் ஒருவரைக் கொல்வதென்பது அவனுடைய சந்ததியையே பிறக்காமல் செய்து இருக்கும், மனித இனமே உருவாகியிருக்காது.

முஸ்லிம்கள் சொல்லிக்கொள்வதற்கு மாறாக முகமது இதை தன் சொந்த போதனையாக சொல்லவில்லை. முழூ வாசகம் இதுதான்:

“இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன், கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் குழப்பத்தை பரப்புவதற்கோ அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.”

இங்கே முகமது ஒரு பைபிள் கதையை மேற்கோள் காட்டுகிறான். இதற்காக முஸ்லிம்கள் எப்படி நல்லபெயருக்கு உரிமை கோரமுடியும்?

பிரச்சனை இத்தோடு முடியவில்லை. தால்முட் கடவுளின் வார்த்தையாக கருதப் படுவதில்லை. இது உயர் ரப்பைகளின் குழுவான சன்ஹெட்ரின் தொகுத்த போதனைகளின் பதிவுகள்.

எனவே அல்லா ஏன் “…இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம்” என்று சொல்கிறார்?

குரானின் கடவுள் தான் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்லிக்கொள்கிறது. இதில் இருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால் கீழ்க்கண்ட 4 வரிகளில் ஒன்று உண்மை என்பதுதான்.
1- அல்லா ரப்பைகளின் போதனைகளை காப்பி அடித்துவிட்டார்.
2- அவர் குழம்பிப்போய் அந்த வார்த்தைகள் தனதல்ல என்பதை மறந்து விட்டார்.
3- இந்த வாசகம் அல்லா வெளிப்படுத்தவில்லை. தனக்கு சில சமயங்களில் கடவுள் சொன்னதாக தான் நினைத்த வாசகங்களை ஷைத்தான் வெளிப்படுத்துவார் என்று முகமது ஒத்துக்கொண்டிருக்கிறான். இந்த வாசகம் அப்படிப்பட்ட ஒன்றாக இருக்குமோ?
4- முகமது பொய் சொல்லிவிட்டான். குரான் கடவுளின் வெளிப்பாடல்ல.

அல்லா தான் சொல்லாத ஒன்றை சொன்னதாக ஏன் கூறிக் கொண்டார் என்பதற்கு வேறு ஏதும் விளக்கம் என்னால் கொடுக்க முடியவில்லை.இந்த வாசகம் பைபிளில் இல்லை. தால்முட்டில் தான் இருக்கிறது. தால்முட் கடவுளின் வார்த்தையாக கருதப் படுவதில்லை.

இந்த வாசகம் கொல்வது சரியல்ல என்கிறது. ஆனால் முகமது தன்னை பின்பற்றுபவர்களுக்கு போர்தொடுத்தலும், சண்டையிடுதலும், கொல்தலும் மிக உயர்ந்த வெகுமதிகளை உடைய சிறந்த தொழில்கள் என்று சொல்லி இருக்கிறான்.

“(இஸ்லாமில்) நம்பிக்கை கொண்டவர்களே! வலி மிகுந்த வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு தொழிலை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது) நீங்கள் அல்லாவின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாவின் பாதையில் ஜிஹாத் (சண்டை) செய்வதாகும்;….” (Q .61:10-11)

ஆகையால் அவன் ஒரு நிபந்தனையை போட்டான். தால்முட்டை மேற்கோள்காட்டும் போது இடையே “கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் குழப்பத்தை பரப்புவதற்கோ அன்றி,” என்ற நிபந்தனையை சொருகிவிட்டான். இந்த நிபந்தனை தால்முட்டின் வாசகத்தில் இல்லை.

இந்த நிபந்தனையுடன் முகமதை பின்பற்றுபவர்களுக்கு முஸ்லிமல்லாதோரைத் தாக்கவும் கொல்லவும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் குழப்பத்தை பரப்புபவர்களாக கருதப்படுகிறார்கள்.

மாறுபடல், இணங்க மறுத்தல், எதிர்த்தல், அதிகாரத்திற்கு எதிராக நடத்தல் போன்ற பொருள்களையுடைய ‘பித்னா’ (fitnah) என்ற அரபு வார்த்தையைத்தான் குழப்பம் விளைவித்தல் என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். நீங்கள் இஸ்லாமின் கருத்துக்களுடன் இணங்க மறுத்தால், அல்லது எதிர்த்தால் நீங்கள் அதிகாரத்திற்கு எதிராக நடந்து, நாட்டில் குழப்பம் விளைவிக்கிறீர்கள் என்று பொருள். நீங்கள் இஸ்லாமிற்கு எதிராக போர்தொடுக்கிறீர்கள் என்று கருதப்படுவீர்கள். இந்த போர் வன்முறையானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இஸ்லாமுடன் இணங்க மறுப்பதே அதற்க்கெதிராக போர்தொடுப்பதற்குச் சமம். நீங்கள் இஸ்லாமை கண்டித்தாலோ அல்லது குறைகூறினாலோ, முஸ்லிம்களுக்கு வேறு மதம் எதையேனும் போதித்தாலோ நீங்கள் அதன் அதிகாரத்திற்கு அல்லது ஆட்சிக்கு எதிராக நடந்து கொள்கிறீர்கள் என்று பொருள். இவைகள் எல்லாமே குழப்பங்கள்தான்.

குழப்பத்தை பரப்புபவர்களுக்கு என்ன தண்டனை?

“அல்லாவுக்கும் அவர் தூதருக்கும் எதிராக போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; மரணதண்டனை, அல்லது சிலுவையிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறுகை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு” (Q 5:33)

முகமது கொல்வதை தடை செய்திருக்கிறார் என்று கூறிக்கொள்வதற்கு முஸ்லிம்கள் பயன்படுத்தும் ஒரே ஒரு வாசகம் கூட யூத மதத்தில் இருந்து எடுக்கப்பட்டு, அல்லா சொன்னதாக சொல்லப்படுகிறது. அதிலும் இஸ்லாமுடன் இணங்க மறுக்கும் யாரையும் முஸ்லிம்கள் கொன்று குவிக்க அனுமதிக்கும் ஒரு நிபந்தனையும் இடைச்செருகப்பட்டுள்ளது.