கீழ்க்கண்ட ஈமெயில் கடிதம் ஆரம்பத்தில் http://www.faithfreedom.org/features/debates/a-debate-with-a-palestinian-over-israel பதியப்பட்டு கிட்டத்தட்ட 1800 பின்னூட்டங்களைப் பெற்றது.
நீங்கள் மறுபடியும் முஸ்லிமாக மாறினீர்கள் என்றால் உங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் போய்விடும் என்று நினைக்கிறேன் – நிலவரத்தைப் பயன்படுத்தி காசு பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு வேசக்கார ஒட்டுண்ணிக் கூட்டம். வெறுப்பை பரப்புவதன் மூலம் மட்டுமே உங்களால் வாழ முடியும்.
தினந்தோறும் பாலஸ்தீனியர்கள் கொல்லப் படுகிறார்கள். உங்களிடமிருந்து ஒரு பச்சாதாப வார்த்தையாவது வரும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் உங்களிடம் ஒன்றுமில்லை. இன்ஷா அல்லா ஒரு நாள் நீங்களும் உங்கள் இடங்களில் இருந்து விரட்டப்படுவீர்கள். (பாலஸ்தீனியர்களின் வீடுகளைப் போலவே) உங்கள் வீடுகளும் தரைமட்டமாக்கப் படும். அப்போதுதான் நீங்கள் உணர்வீர்கள்.
இப்போது பாதுகாப்பாக இருக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் பாலஸ்தீனியர்களின் எதிரிகளுக்கு உதவியாக இருக்கிறீர்கள். ஆனால் இதில் ஒருமுறை தவறிவிட்டாலும், நீங்கள் சோற்றுக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான்.
ராயிஃப் அவர்களே,
நீங்கள் எங்களுடன் மிகவும் கோபமாக இருப்பது தெரிகிறது. உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. சில வருடங்களுக்கு முன்னர் குரானைப் படித்து, முஸ்லிம் உலகில் உள்ள எல்லா தீமைகளுக்கும் அந்த புத்தகம் தான் காரணம் என்று அறிந்துகொள்ளும் வரை நானும் உங்களைப்போன்று தான் உணர்ந்தேன்.
யாரை எல்லாம் கேட்கமுடியுமோ கேட்டேன். பதிலேதும் இல்லை. மாறாக கேள்விகள் கேட்டதற்காகவே அவமதிக்கப் பட்டேன், மிரட்டப் பட்டேன். இரண்டு வருடங்களாக நிறைய ஹதித்களை படித்ததற்குப் பிறகு இஸ்லாம் கடவுளிடம் இருந்து வந்த மதமல்ல என்றும், அது தான் இஸ்லாமிய நாடுகள் ஏழ்மையிலும், சர்வாதிகாரத்திலும், தொடர்ந்த போர்களிலும் இருப்பதற்கு முதற்காரணம் என்றும் கண்டேன். ஆகையால் இணையதளத்தில் எழுதி நான் தெரிந்து கொண்டதை மற்றவர்களுக்கு கூற ஆரம்பித்தேன்.
இஸ்லாமை விட்டுவிலக ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் உதவி இருக்கிறேன். இது ஒன்றும் மிகையல்ல. ஆயினும் நான் இன்னும் திறந்த மனதுடன் தான் உள்ளேன். நான் நினைப்பது தவறு என்றும் இஸ்லாம் ஒரு உண்மையான மதம் தான் என்றும் எனக்கு பகுத்தறிவு பூர்வமாக விளக்க யார் வேண்டுமானாலும் முன்வரலாம். இஸ்லாம் ஒரு உண்மையான மதம்தான் என்று பொது மேடையில் ஒத்துக்கொள்வேன். மற்றவர்களும் அதேபோன்றே செய்வார்கள். கடந்த ஒன்பது வருடங்களாக எனது சவால் பதில் அளிக்கப் படாமலே இருக்கிறது.
நீங்கள் எங்களை தொடர்ந்து அவமரியாதை செய்துகொண்டும், இவ்வுலகில் கோரமான சாவையும், மறுமையில் நரகத்தையும் காட்டி மிரட்டிக்கொண்டும் இருக்கலாம். அது ஒன்றும் எங்களுக்குப் புதிதல்ல. நாங்கள் அதைக் கண்டுகொள்வதும் இல்லை. அதற்குப் பதிலாக எங்களிடம் விவாதத்தில் கலந்து கொண்டு எங்கள் தவறுகளை சுட்டிக் காட்டவும் செய்யலாம்.
உங்கள் பதிலை எங்கள் தளத்தில் (www.faithfreedom.org) எல்லோரும் படிப்பதற்காக பதிவிடுவோம்.
இப்பொழுது உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுகிறேன். பாலஸ்தீனியர்களின் இன்னல்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லாமல் இல்லை என்பதை உங்களுக்கு உறுதியுடன் கூறிக்கொள்கிறேன். இருப்பினும் முஸ்லிம்களைப் போல் அல்லாமல், யூதர்களை கடலில் தள்ளுவது தான் தீர்வு என்று நாங்கள் நினைக்கவில்லை. இஸ்ரேல் எப்போதும் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே இருந்திருக்கிறது. ஆனால் பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலின் அழிவைத் தவிர வேறெதுவும் வேண்டியதில்லை. இது ஒரு தீர்வா?
பாலஸ்தீனிய மனித வெடிகுண்டுகளின் வீடுகளை இஸ்ரேல் அழித்ததற்குக் காரணம் மேலும் தாக்குதலை தடுப்பதற்காகத்தான். அந்த நாட்களில் சதாம் ஹுசைனும் பல அரபியர்களும் மனித வெடிகுண்டுகளின் குடும்பத்திற்கு ஏராளமான பணத்தை பரிசாக தந்து வந்தனர். இதனால் தன் ஏழைக் குடும்பத்திற்கு உதவ விரும்பியவனுக்கு மனித வெடிகுண்டாக மாறுவது ஒரு கவர்ச்சிமிக்க தொழிலாக மாறியது. அவன் இஸ்ரேலிக்களை கொன்றுவிட்டு பரலோகம் சென்று அங்கிருக்கும் என்றும்மாறாக்கன்னிகளுடன் சல்லாபம் செய்வான். இங்கே அவன் குடும்பம் வசதியாக வாழும். அவர்களின் வீடுகளை இடித்ததால் தாக்குதலின் எண்ணிக்கையும் குறைந்தது. எல்லைச் சுவர் கட்டியதன் மூலமும் இந்த எண்ணிக்கை குறைக்கப் பட்டிருக்கிறது.
தன்னையே சிதறடித்துக் கொள்ளும் தற்கொலைத் தாக்குதல் மூலம் இஸ்ரேலின் பொது மக்களை கொல்வது உங்களுக்கு தவறாகப் படவில்லை ஆனால் செங்கல்களாலும் சிமெண்டாலும் ஆன வீடுகள் இடிக்கப்படுவது ஒரு பெரிய அழிவாக உங்களுக்குப் படுவதைப் பற்றி எனக்கு புதிராகத் தான் இருக்கிறது. உங்களுடைய நியாயம் கிறுக்குத்தனமாக இருக்கிறது.
எனது கவலை என்னவென்றால், பாகிஸ்தான், ஈரான், ஈராக், ஏமன், சூடான் போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் சக முஸ்லிம்களாலேயே கொன்று குவிக்கப் படும்போது, நீங்கள் பாலஸ்தீனியர்களைப் பற்றி மட்டும் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள் என்பது தான்.
பாலஸ்தீனியர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு இருதரப்பும் சமம் என்ற நிலையில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தால், அந்த நாளே பாலஸ்தீனத்தில் அமைதி மலரும். முஸ்லிம்கள் யூதர்களை மிகவும் மோசமாக வெறுப்பதால் இது நடக்க வில்லை. ஆகையால் பிரச்சனை இஸ்லாம் தான். இஸ்ரேல்-பாலஸ்தீன சச்சரவிற்கு ஒரே ஒரு தீர்வு பாலஸ்தீனர்கள் இஸ்லாமை கைவிட்டு எல்லா மனிதர்களும் சமம் என்று ஏற்றுக் கொள்வது மட்டுமே.
நான் என் கடிதத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். முடிவு உங்களுடையது. எங்களை அவமதிப்பதிலும் எங்கள் மேல் வெறுப்பை உமிழ்வதிலும் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கிறது என்றால் நீங்கள் அதை தொடரலாம். அல்லது எங்களிடம் அறிவுபூர்வமான விவாதத்தை நடத்தலாம். எங்கள் தவறுகளை சுட்டிக்காட்ட நினைத்தால், சொல்லுங்கள், மகிழ்ச்சியுடன் எனது நூலை அனுப்பி வைக்கிறேன்.
நம்மில் புன்னகை பரவட்டும்.
உலகில் உள்ள எல்லா முஸ்லிம்களும் விரும்புவது பாலஸ்தீனர்களுக்கு தனி நாடு மட்டுமல்ல, மாறாக இஸ்ரேல் என்ற நாடு முழுவதுமாக அழிக்கபடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்.
இதற்கு முழுகாரணம் முகம்மதுவே. அவன்தான் தன்னை பின்பற்றியவர்களிடம் யூதர்கள்மேல் வெறுப்புணர்வை வளர்த்தான். யூதர்களை அல்லாஹ் சபித்தார் என்றும் ஓய்வு நாளில் (சனிக்கிழமை) வேலையில் ஈடுபட்ட யூதர்களை அல்லாஹ் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றினார் என்றும் முஹம்மது தன்னுடைய குரான் என்கிற பயங்கரவாத புத்தகத்தில் யூதர்களை பற்றி மிகவும் இழிவாகவும் அவர்கள்மேல் வெறுப்புணர்வு ஏற்படும்படியும் கூறினான்.
இஸ்லாம் என்ற மதத்தின் முக்கிய கொள்கை அல் வலா மற்றும் அல் பரா (Al-Walaa’ and Al-Baraa’) அல் வலா என்பது முஸ்லிம்கள் மற்ற முஸ்லிம்களை நேசிக்கவேண்டும் என்பதையும் அல் பரா என்பது முகம்மதை நம்பி அவனை அல்லாஹ்வின் தூதராக ஏற்று முஸ்லிமாக மாறாத மனிதர்கள் அனைவரையும்(காபிர்கள்-நிராகரிப்பவர்கள்) முஸ்லிம்கள் வெறுக்கவேண்டும் என்பதையும் குறிக்கிறது.
மேலும், முஹம்மது தன்னுடைய குர்ஆனில் (5:51) முஸ்லிம்கள் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் நண்பர்களாக ஏற்றுகொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளான். முஸ்லிம்கள் யூதர்களையோ கிறிஸ்தவர்களையோ மணமுடிக்க கூடாது என்றும் கூறியுள்ளான் (60 : 10).
முஹம்மது ஊட்டி வளர்த்த இந்த வெறுப்புணர்வின் அடிப்படையிலேயே முஸ்லிம்கள் யூதர்களை அடியோடு வெறுக்கிறார்கள். அவர்களை அழிப்பதையே குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள்.
யாசர் அராபாதின் தலைமையிலான பாலஸ்தீன் விடுதலை இயக்கம் இஸ்ரேல் என்ற நாட்டை முற்றிலும் அழிக்கவேண்டும் என்பதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக யூதர்களுக்கு எதிராக பற்பல பயங்கரவாத செயல்களை ஈடுபட்டு வந்தது. பிற்பாடு அந்த இயக்கம் சமாதான பேச்சுவார்த்தைக்கு இணங்கி வந்து இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரித்தது. இப்போது ஹமாஸ் என்கிற பயங்கரவாத இயக்கம் இஸ்ரேல் என்ற நாட்டை அழிப்பது என்கிற நோக்கத்தோடு தொடங்கப்பட்டு பயங்கரவாத செயல்களை நிகழ்த்தி வருகிறது. ஹமாஸ் மட்டுமல்ல, பல முஸ்லிம் பயங்கரவாத இயக்கங்கள் பாலஸ்தீனில் இந்த நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றன. இவர்களுடைய நோக்கம் பாலஸ்தீனம் என்ற தனி நாடு மட்டுமல்ல. மாறாக, யூதர்களை கொன்றுவிட்டு அல்லது துரத்திவிட்டு அவர்களுடைய நாட்டையும் அபகரித்துக்கொள்வதே ஆகும்.
[...] இஸ்ரேலைப் பற்றி ஒரு பாலஸ்தீனியரிடம் … [...]
[...] 30th, 2011 / No Comments இந்த தொடரின் முதல் பாகம் இங்கே இரண்டாம் பாகம் இங்கே உள்ளது. 5) [...]
இஸ்லாம் என்றாலே சகிப்புத்தன்மை அற்றது என்று பொருளா…???