இந்த தொடரின் முதல் பாகம் இங்கே உள்ளது.

ராயிஃப் னுடைய பதிலுக்கு விளக்கமான மறுமொழி கொடுக்க வேண்டியிருப்பதால், அதை பத்தி பத்தியாக கொடுக்கிறேன்.

நீங்கள் ஒரு அகங்காரம் பிடித்த மனிதன். இஸ்லாமுக்கு உங்கள் அங்கீகாரம் தேவை இல்லை. தற்காலத்தில் மிகவும் அவமதிக்கப் பட்ட பிறகும் கூட, நிறைய பேர் இஸ்லாமிற்கு மாறுகிறார்கள் என்பதே அதனுடைய தூய்மைக்கு ஆதாரம். நீங்கள் சொல்வது கட்டுக்கதை:

ராயிஃப் அவர்களே,

பதிலுக்கு நன்றி. இஸ்லாமுக்கு எனது அங்கீகாரம் தேவையா இல்லையா என்பதல்ல பிரச்சனை. இஸ்லாம் கடவுளிடம் இருந்து வந்த மதமல்ல என்றும் அது ஒரு அபாயகரமான ‘தனிநபர் வழிபாடு’ (Cult) என்றும் நாங்கள் சொல்வதை மில்லியன் கணக்கான மக்கள் நம்புவது தான் பிரச்சனை. Radio Islam ன் கூற்றின் படி, இஸ்லாமுக்கு மாறும் ஒவ்வொரு ஐந்து பேர்களிலும் நால்வர் முதல் நான்கு வருடங்களிலேயே அதை விட்டு விலகிவிடுகிறார்கள். அவர்களில் பலர் faithfreedom.org ல் சேர்ந்து மற்றவர்களை இஸ்லாமை விட்டு விலகி இருக்குமாறு தீவிரமாக எச்சரிக்கை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

நாங்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் இல்லை, நேர்மையானவர்கள். நாங்கள் இஸ்லாம் ஒரு மோசடி என்று நம்புகிறோம். நான் சொல்வது தவறு என்று நிரூபிப்பவருக்கு 50,000 டாலர்களை பரிசாக தருவேன். முஸ்லிம்களுடனான எனது விவாதங்களை, அது வெறும் அவதூறுகளாக இல்லாத பட்சத்தில், உலகமே பார்க்கும் விதத்தில் பதிவிடுகிறேன். ஆகையால் எங்களின் நேர்மையைப் பற்றி கேள்வியே இல்லை.

நீங்கள் எங்களை தவறாகப் புரிந்து கொண்டவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் நேர்மை இல்லாதவர்கள் என்று கூறமுடியாது. ஏனென்றால் நாங்கள் விவாதத்திற்கு தயாராகத்தான் உள்ளோம்.

அதனால் தான் நாங்கள் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் என்று வெளிப்படையாக நிரூபிக்குமாறு முஸ்லிம்களை கேட்டுக் கொள்கிறோம். லட்சக்கணக்கான மக்கள் எங்கள் தளத்தை படிக்கிறார்கள். முகமது ஒரு மோசடிப் பேர்வழி என்றும் அவன்தான் முஸ்லிம் உலகின் எல்லா தீமைகளுக்கும் காரணம் என்றும் அருமையாக விளக்கி இருக்கிறோம்.

மூக்கை மூடிக் கொண்டு எங்களை கடந்து செல்லப் பார்க்காதீர்கள். நாங்கள் இஸ்லாமிற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். முகமதின் கேலிச்சித்திரத்தை வரைந்தவரையே முஸ்லிம்கள் கொல்லத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சொல்வது தவறு என்று நிரூபிக்க சொன்னால் மட்டும் ஏன் சத்தத்தையே காணோம்? இஸ்லாமிற்கு நாங்கள் செய்யும் பாதிப்பு அதை விட அதிகமில்லையா? அதிகம் தான். ஆனால் உங்களுக்கு கொல்வது தான் எளிது. அறிவுடன் விவாதிப்பது அல்ல.

1) பாலஸ்தீனர்கள் யூதர்களை கடலில் தள்ள வேண்டும் என்று சொல்லவில்லை (சில முஸ்லிம்கள் அப்படி கூறினாலும் அது பாலஸ்தீனர்களின் விருப்பம் அல்ல). உண்மையில் யூதர்கள்தான் பாலஸ்தீனர்களை பாலைவனதிற்குள் துரத்தி இருக்கிறார்கள். இன்னும் துரத்துகிறார்கள். அவர்கள் 2000 வருடங்களுக்கு முன்னர் அங்கே வாழ்ந்ததாக (கட்டுக்கதை) சொல்லிக்கொண்டு உலகில் எல்லாபக்கத்தில் இருந்தும் யூதர்களை கொண்டுவருகிறார்கள். நேற்றுவரை பாலஸ்தீனர்கள் எங்கே வாழ்ந்திருப்பார்கள்?

எல்லா முஸ்லிம்களும் யூதர்களை கடலில் தள்ள விரும்பவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் அகமதிநிஜாத் இஸ்ரேலின் மீது அணுகுண்டு போட்டு அதை உலகத்தில் இருந்தே அழித்து விடுவதாக சபதம் செய்திருக்கிறான். அவன் அணுகுண்டுகள் செய்வதற்க்காகவும் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறான். அவன் ஏவுகணைகளை தந்து உதவும் அவனுடைய கூட்டணிகளான, ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா, இஸ்ரேலின் எல்லையிலேயே நிற்கிறார்கள். நீங்கள் அழியவேண்டும் என்று எல்லா முஸ்லிம்களும் விரும்ப வேண்டியதில்லை. ஒரு சில வெறி பிடித்தவர்களே போதும். எல்லா ஜெர்மானியர்களும் ஹிட்லருக்கு ஆதரவாக இல்லை. எனினும், ஹிட்லர் 6 மில்லியன் யூதர்களைக் கொன்றான். இஸ்ரேலைப் பொருத்தமட்டில் இது வாழ்வா சாவா என்ற போராட்டம். அவர்கள் வேறெங்கு போவார்கள். பாலஸ்தீனர்களுக்கு தங்கள் நாட்டை அமைக்கவும் மகிழ்ச்சியாக வாழவும் போதுமான நிலம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அது முக்கியமில்லை. பழிவாங்கத் துடிக்கிறார்கள். அதற்காக தங்களையும் மாய்த்துக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். பெரும்பாலான் பாலஸ்தீனர்கள் இருக்கும் நிலத்தை யூதர்களிடம் பங்கிட்டுக் கொண்டு அமைதியுடன் வாழ்வதை விட இஸ்ரேல் மீது போடப்பட்ட அணுகுண்டு வெடிப்பில் தாங்களும் அழிந்து போவதையே விரும்புகிறார்கள்.

பாலஸ்தீனர்கள் வீடற்றவர்கள் அல்ல. 60 வருடத்திற்குப் பிறகும் அவர்கள் அகதிகள் அல்ல. இந்த வருடங்களில் இஸ்ரேலிக்கள் தங்கள் நாட்டை வெறும் கட்டாந்தரையில் இருந்து கட்டி எழுப்பினார்கள். பாலஸ்தீனர்களும் இப்படி செய்திருக்க முடியும். ஆனால் அதன் தலைவர்கள் அமெரிக்காவிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அதை தங்கள் வங்கிகளில் போட்டுக் கொள்வதற்கும் இஸ்ரேலுடன் சண்டை போடுவதற்கும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

யூதர்கள் தங்கள் பரம்பரை நிலத்தில் இல்லாமல் வேறு எங்கு தங்கள் நாட்டை அமைப்பார்கள்? அவர்கள் எங்கே போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்களுக்கு அண்டார்டிகா ஓகேயா இல்லை செவ்வாய் கிரகமா?

யூதர்களுக்கு இஸ்ரேலின் மீதி வரலாற்று உரிமை இருக்கிறது. கிட்டத்தட்ட 3500 வருடங்களுக்கு அவர்களுக்கு அந்த நிலத்துடன் உள்ள உறவு பற்றி விரிவான வரலாறு இருக்கிறது. இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் பெத்லேஹம் போன்ற பல பழங்கால நகரங்களுக்கு இன்னும் ஹிப்ரூ பெயர்கள் தான் உள்ளது. மோசஸ் பற்றியும் இஸ்ரேலியர்களைப் பற்றியும் முகமது சொன்ன குரான் கதைகள் யூதர்கள் இஸ்லாமின் தோற்றத்திற்கு 2000 வருடங்களுக்கு முன்னரே அந்த நிலப்பகுதியை தாயகமாக கொண்டிருந்தார்கள் என்பதை நிரூபிக்கிறது.

உண்மை என்னவென்றால் யூதர்கள் இஸ்ரேலை எப்பொழுதும் முழுவதுமாக கைவிடவில்லை. பலர் ஆரம்பத்தில் இருந்தே அங்கேயே வாழ்கிறார்கள். ஆனால் அவர்களின் நிலம் ரோம பேரரசு, இஸ்லாமிய கலிபாக்கள், ஆட்டோமன் பேரரசு, போன்ற மற்றவர்களின் அதிகாரத்தின் கீழ் இருந்தது.

யூதர்களுக்கு இஸ்ரேல் திரும்பும் எண்ணம் இல்லை. ஐரோப்பாவில் நிகழ்ந்த மறுமலர்ச்சிக்குப் பிறகு கிருத்துவ நாடுகள் யூதர்களை ஏற்றுக்கொண்டன அவர்களும் சமூகத்தில் ஒருங்கினைந்தார்கள். ஜெர்மனியின் யூத அறிஞர்கள் ஜெர்மனியை தங்கள் புதிய சியன் (Zion) என்றார்கள்

எனினும் பல ஐரோப்பியர்களின் இதயங்களில் யூதர்களின் மீதான வெறுப்பு புகைந்தது. இவர்கள் யூதர்களை தீர்த்துக் கட்டுவதற்காக ஹிட்லரை ஆதரித்தார்கள்.

ஹோலோகாஸ்ட்டின் (holocaust) கொடூரங்கள் தெரியவந்ததற்க்குப் பிறகு யூதர்கள் தங்களுக்கு ஒரு சொந்த நாடு வேண்டும் என்பதில் தெளிவடைந்தார்கள். ஆரம்பத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக இருந்த ஐன்ஸ்டைன் கூட ஒத்துக்கொண்டார். அவர்களின் பரம்பரை நிலம் தான் இதற்கு ஏற்றது. நீங்கள் இதை கட்டுக்கதை என்று சொன்னால், முகமதை பொய்யன் என்கிறீர்கள். கடவுள் உறுதியளித்திருந்தார் என்பதற்காக அவர்களுக்கு இஸ்ரேல் வழங்கப்படவில்லை. அது அவர்களின் வரலாற்று தாயகம் என்பதால் தான் இது நடந்தது.

இன்று இஸ்ரேலில் வசிக்கும் பாதிக்கும் மேற்ப்பட்ட யூதர்கள் ஏமன், ஈராக், ஈரான், போன்ற இஸ்லாமிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் தான். முஸ்லிம்கள் யூதர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறார்கள். இன்றும் கூட ஐரோப்பாவில் உள்ள யூதர்கள் தங்கள் உயிர்களுக்கு பயந்து தான் வாழ்கிறார்கள். ஆனால் இம்முறை அவர்களின் எதிரி முஸ்லிம் வந்தேறிகள்தான்.

இன்டர்நெட்டின் வழியாக தொடர்புகொள்ளும் சிலரைத் தவிர எனக்கு யூதர்களிடம் எந்த தொடர்பும் இல்லை. நான் எனது தாய் வழியில் முகமதின் சந்ததி. எனக்கு தெரிந்த வரையில் என்னுள் எந்த யூத ரத்தமும் ஓடவில்லை. ஆனால் இது கூட முற்றிலும் உண்மையில்லை. ஏனென்றால் முஸ்லிம் ஆண்களால் பல யூதப் பெண்கள் அடிமைப்படுத்தப் பட்டு முஸ்லிம் குழந்தைகளைப் பெற்றனர். முகமதுக்கு முன்னர் 2000 வருடங்களாக யூதர்கள் அரேபியர்களை மணம் புரிந்து கொண்டு முற்றிலும் அரபிக்களாக மாறி இருந்தார்கள். ஆகையால் ஒவ்வொரு அரபியிலும் யூத ரத்தம் இருக்கிறது. இதனால்தான் அரபியர்களின் யூதவெறி மேலும் முரண்நகையானது.

நான் தங்க விதியை பின்பற்றுகிறேன். இது முஸ்லிம்களுக்கு பரிச்சயமில்லாத ஒன்று. நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படி நாம் மற்றவர்களை நடத்துவதே.தங்க விதியின் கொள்கை.

நான் மற்றவர்களின் நிலையில் என்னை வைத்து நான் அவர்களாக பிறந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பேன். நான் அவர்களாக இருந்தால் எப்படி நடத்தப்பட விரும்புவேன்? அதனால் தான் நான் யூதர்களையும் அவர்களின் தாயக உரிமையையும் ஆதரிக்கிறேன்.

யூதர்களால் எங்கு வேண்டுமானாலும் வசிக்க முடியும். ஆயிரக்கணக்கான வருடங்களாக இரண்டாம் தர குடிமக்களாக வாழ்ந்ததன் மூலம் வாழ்க்கை கடினமானது என்று அறிந்திருக்கிறார்கள். சரியான முறையில் வேலை செய்ய வில்லை என்றால் பட்டினி கிடக்க வேண்டியது தான் என்று அறிந்து கொண்டார்கள். கடந்தகால மக்கள் இன்று உள்ளதை விட கொடூரமானவர்களாக இருந்தனர். எல்லோரும் முஸ்லிம்களைப் போல இருந்தனர். இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மையின் நிலை என்னவென்று நமக்குத் தெரியும். ஆகையால் யூதர்கள் அறிவியலையும், அறிவையும், வணிகத்தையும் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறினார்கள். அவர்களுக்கு எதிராக பாரபட்சம் இருந்த போதும், அவர்களின் திறமையின் காரணமாக, பெரும்பான்மை சமூகத்தினரை விட வசதியாக இருந்தனர். இந்த முன்னேற்றத்திலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. கையாலாகாதவர்கள் யூதர்களின் மீது பொறாமை கொண்டு தங்கள் வறுமைக்கு யூதர்களின் மீது பலி சுமத்தினர். யூதர்கள் உலகத்தை கைப்பற்ற விரும்புகின்றனர் என்றும், சியோனிச மூப்பர்கள் என்ற கதைகளையும் கட்டவிழ்த்து, யூதவெறியை பரப்பினர். வரலாற்றுப் பாடங்களை கருத்தில் கொள்ளும்போது, இவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சொந்த இடம் என்று சொல்லிக்கொள்ள ஒரு நாடு இருப்பது முக்கியம்.

பாலஸ்தீனர்கள் என்ன ஆவார்கள் என்று கேட்கிறீர்களா? நியாயமான கேள்விதான். ஆனால் பாலஸ்தீனர்கள் யார்? அவர்கள் பகுதி எகிப்தியர்கள் பகுதி ஜோர்டானியர்கள். அவர்கள் இஸ்ரேலின் மக்களல்ல. அவர்களில் பெரும்பாலானவர்கள் நேற்றைய வந்தேறிகள். பாலஸ்தீனம் என்பது ஒரு பிராந்தியம். நீங்கள் உங்கள் நாட்டை இஸ்ரேலிகள் பிடுங்கிக் கொண்டார்கள் என்று சொல்வதற்கு பாலஸ்தீனம் என்ற ஒரு நாடு இருந்ததே இல்லை. மேலும் பாலஸ்தீனர்களுக்கு அவர்களுக்கென்று ஒரு நாடு அமைத்து அமைதியாக வாழ அவர்களுக்கு போதுமான நிலம் இருக்கிறது.

பாலஸ்தீனர்களுக்கு யூதர்களை சகித்துக் கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த இடத்திற்கே போய்விடலாம். உண்மையில் அதையும் செய்தார்கள். ஆனால் ஜோர்டானுக்குப் போன பிறகு அங்கிருந்த அரசன் ஹுசைனையே கவிழ்க்கப் பார்த்தார்கள். விடுவார்களா? அரசன் அவர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து மற்றவர்களை நாட்டைவிட்டே துரத்திவிட்டார். உங்களால் யாருடனும் அமைதியாக வாழமுடியாது. உங்கள் சொந்தங்களுடன் கூட. நீங்கள் ஆயுதம் ஏந்தி திரிபவர்கள், இன்னும் பச்சையாக சொல்லவேண்டுமானால் காட்டுமிராண்டிகள்.

பாலஸ்தீனர்கள் தங்கள் வன்முறையையும் இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்பையும் கைவிட்டால், அவர்கள் இஸ்ரேலில் முழு குடியுரிமையுடன் வாழமுடியும். இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனர்கள் நன்றாக நடத்தப் படுகிறார்கள். மீதி பேரும் வன்முறையை கைவிட்டால் சிக்கல் தீர்ந்து விடும். ஆனால் உங்களுக்கு அமைதி தேவையில்லை. இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்ததற்காக அப்பாவி அன்வர் சதத் (Anwar Sadat) படுகொலை செய்யப்பட்டார். இஸ்ரேலுடன் அமைதியை வேண்டும் எந்த அரசியல்வாதியும் அந்த இடத்திலேயே படுகொலை செய்யப்படுவார்.

மத்திய கிழக்கில் நடைபெறும் போர் நாட்டிற்காக அல்ல. மத நம்பிக்கைக்காக. அதற்கு மூலம் குரானிலும், முஸ்லிம்கள் யூதர்களையோ கிருத்துவர்களையோ நண்பர்களாகவோ ஆட்சியாளர்களாகவோ (awlia) ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற முகமதின் கட்டளையிலும் இருக்கிறது.

கனடாவில், சில வருடங்களுக்கு முன், நெருங்கிய நண்பர்களாக இருந்த ஒரு இஸ்ரேலியையும் பாலஸ்தீனரையும் சந்தித்தேன். ஒருநாள் அவர்களிடம் விளையாட்டாக “நீங்கள் ஒரு வித்தியாசமான ஜோடி. நீங்கள் சண்டையல்லவா போட்டுக் கொள்ளவேண்டும்?” என்று கேட்டேன். அவர்கள் சிரித்துக்கொண்டே “நாங்கள் மதத்தை பின்பற்றுவதில்லை” என்றார்கள். அது ஒரு அற்புதமான பதில். அமாம் இந்த பகைமையும் போரும் மதத்தினால் தான். ஒருவரை ஒருவர் சகித்துக் கொள்ளாத இரு கடவுள்களால் வந்தது. மோபைட்டுகளுக்கும் அரேபியர்களுக்கும் கடவுளான ஹுபல் (Hubal) என்ற சந்திரக் கடவுளுக்கும், யூதர்களின் கடவுளான எஹ்வே (Yahweh) க்கும் எப்பொழுதுமே ஆகாது.

இஸ்ரேலில் உள்ள எல்லா யூதர்களும் இஸ்லாமுக்கு மாற முடிவு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பிரச்சனை ஒரே நாளில் தீர்ந்து விடும். அவர்கள் முஸ்லிம் சகோதரர்களாகி எல்லோரும் காலத்திற்கும் அமைதியாக வாழ்வார்கள். முஸ்லிம்கள் தங்களுக்குள் முழு அமைதியுடன் வாழ்பவர்கள் என்று தான் எல்லோருக்கும் தெரியுமே. கொஞ்சம் நீங்களும் பாருங்களேன்.

 

சக பாலஸ்தீனரை தெருக்கொலை (Lynch) செய்யும் பாலஸ்தீனக்கும்பல்

சக பாலஸ்தீனரை தெருக்கொலை (Lynch) செய்யும் பாலஸ்தீனக்கும்பல்

சக பாலஸ்தீனரை தெருக்கொலை (Lynch) செய்யும் பாலஸ்தீனக்கும்பல்

பாலஸ்தீன சிறுவர்கள் சிறந்த முஸ்லிம்களாக வளர்வதற்கான பாடம் கற்கிறார்கள்

 

ஒகோ! இதுதான் நடைமுறையோ!. குறைந்த பட்சம் பெயரளவில் எல்லா முஸ்லிம்களும் சகோதரர்கள்தான். தங்களுக்குள் ஒருவரை ஒருவர் கொன்றுகொன்டாலும் அது ஒகே. ஆயிரக்கணக்கான சக முஸ்லிம்களைக் கொன்றதற்காக சதாம் ஹுசைனையோ ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களைக் கொன்றதற்காக ஜோர்டான் மன்னர் ஹுசைனையோ எந்த முஸ்லிமும் கண்டித்ததாக தெரியவில்லை. இவைகளெல்லாம் குடும்பத்தகராறு. ஆனால் முஸ்லிமல்லாதோரால் ஒரு முஸ்லிம் செத்தால் கூட தீர்ந்தது. முஸ்லிம் உலகமே பழிவாங்கக் கிளம்பிவிடும்.

இதைவிட நல்ல மாற்று பாலஸ்தீனியர்கள் இஸ்லாமையும் அதன் கூடவே வரும் வெறுப்பையும் விட்டு விலகுவது தான். இது வன்முறை சுழற்சிக்கு முடிவு கட்டும். பிராந்தியத்தில் உள்ள எல்லோருமே மகிழ்ச்சியாக வாழலாம்.

ஆனால் உண்மை என்னாவது? எல்லோரும் உண்மையான வழியில் அல்லவா செல்லவேண்டும்? அங்கேதான் நாங்கள் வருகிறோம். அதனால் தான் நாங்கள் முஸ்லிம்களை மிரட்டுவதையும், கெட்டவார்த்தைகளில் திட்டுவதையும், வன்முறையையும் கைவிட்டு, விவாதத்திற்கு அழைக்கிறோம். உங்கள் பக்கம் உண்மை இருந்தால் அதை உலகத்திற்கே தெரியும்படி தெளிவாக விளக்கவும் எங்கள் கேள்விகளுக்கு பதில் கொடுக்கவும் செய்யுங்கள். உங்களிடம் உண்மை இல்லை என்றால், இவ்வளவு வெறுப்புக்கும் வன்முறைக்கும் காரணமான ஒரு தவறான நம்பிக்கையை கட்டிக் கொண்டு அழுவதில் என்ன பயன்?

2) இஸ்ரேலிக்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறார்களா, யாருடன்? உண்மைதான், 1990 லிருந்து அப்பாசுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எங்களுக்கு என்ன பயன்? மேலும் நிலங்கள் பறிக்கப் படுகின்றன, மேலும் மக்கள் கொல்லவும் கைது செய்யப்படவும் படுகின்றனர்.

நீங்கள் பார்ப்பது பாலஸ்தீனர்களின் தாக்குதல்களுக்கு பதிலடிதான். ஹமாசும் ஹெஸ்பொல்லாவும் இஸ்ரேலி நகரங்களின் மீது தொடர்ந்து குண்டுகள் போட்டுக் கொண்டிருக்கின்றனவே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்? மத்திய கிழக்கின் எல்லா போர்களும் அரபியர்களால் ஆரம்பிக்கப் பட்டது என்ற உண்மை ஏன் உங்கள் கண்களில் பட மாட்டேன் என்கிறது? இஸ்ரேலிக்கள் அரபியர்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வெற்றிபெற்றார்கள்.

முகமது தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவில்லை அவனேதான் அதிரடிப்போர் தொடுத்தவன். ஆனால் அவனின் செயல்களை நியாயப்படுத்த அவனின் எல்லா அதிரடித் தாக்குதல்களும் எதிர்த்தாக்குதல்கள் தான் என்று முஸ்லிம்கள் சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் சொல்வது (சரியல்ல) சரியென்றே வைத்துக்கொள்வோம். முஸ்லிம்கள் மட்டும் எதிர்தாக்குதல் செய்யலாம். மற்றவர்கள் செய்யக்கூடாதா?

இதைத்தான் தங்க விதியை நன்கு புரிந்து கொள்ளாமை என்று கூறுகிறேன். மற்றவர்களின் மீது எல்லாவகையான அராஜகங்களையும் செய்வது கடவுள் கொடுத்த உரிமை என்று முஸ்லிம்கள் எண்ணுகிறார்கள். அதே சமயம் தாக்கப்பட்டவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்தால் அவர்கள் எல்லை மீறியவர்கள் ஆகிறார்கள். எனது நூலில் விளக்கி இருப்பதைப் போல இது ஒரு மனநோய்.

பாலஸ்தீனர்கள் இஸ்ரேலி பொது மக்களை கொல்வது முஸ்லிம்களுக்கும் அவர்களின் கூட்டாளிகளான வெட்கமில்லாத, மூளையில்லாத, இடதுசாரிக்களுக்கும் முற்றிலும் ஏற்புடையது. ஆனால், இஸ்ரேலிக்கள் பாலஸ்தீன பயங்கரவாதிகளை கொன்றாலோ, சிறைபிடித்தாலோ, அவர்கள் எல்லை மீறியவர்கள்.

பாலஸ்தீனர்களும், இஸ்ரேலியர்களும் இருவேறு அளவுகோல்களால் அளக்கப் படுகிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இது முஸ்லிம்களுக்கு ஒரு இழிவு. ஆனால் இது புரியாத அளவிற்கு அவர்கள் மூளை மலுங்கியவர்களாக இருக்கின்றனர்.

நாம் விலங்குகளிடமிருந்து எதிர்பார்ப்பதற்கும் மனிதர்களிடமிருந்து எதிர்பார்ப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. நாம் மனிதர்களை வைக்கும் தரத்தில் விலங்குகளை வைப்பதில்லை. இது ஒன்று மட்டுமே உலக மக்கள் தங்கள் உள் மனதில் முஸ்லிம்களை முழுமையாக பரிணமித்த மனிதர்களாக எண்ணவில்லை என்று காட்டுகிறது. பொதுவாக முஸ்லிம்கள் காட்டுமிராண்டிகளைப் போல் நடந்து கொள்கிறார்கள். அவர்களிடம் அதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது. மற்றவர்களை வைக்கும் தராசில் முஸ்லிம்களை வைப்பதில்லை என்ற வகையில் உலகமே முஸ்லிம்கள் தாழ்வான மக்கள் என்றும் கொஞ்சம் விலங்குகளைப் போன்றவர்கள் என்றும் அவர்களிடமிருந்து மனித நடத்தையை எதிர்பார்ப்பது சரியல்ல என்றும் சூசகமாக ஏற்றுக்கொள்கிறது.

ஹமாசின் பயங்கரவாதிகள் இஸ்ரேலின் மக்கள் நிறைந்த நகரங்களின் மீது தொடர்ந்து குண்டுகளை போட்டுகொண்டிருப்பதை உலகம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இஸ்ரேல் இவர்களை திருப்பித் தாக்கும்போது தவறுதலாக ஏதேனும் ஒரு பாலஸ்தீன சிவிலியன் கொல்லப் பட்டால், இந்த சிவிலியன்கள் வீரத்தியாகிகளாக்குவதற்க்காக வேண்டுமென்றே தாக்குதல் நடக்கும் இடத்திற்கு மிக அருகே நிறுத்தப்பட்டிருந்தாலும், இஸ்ரேல் கண்டனத்திற்கு ஆளாகிறது.

முஸ்லிம்களுக்கு மனசாட்சியே இல்லை. ஜெயிப்பதற்காக எப்படிப்பட்ட குற்றத்தையும் செய்வார்கள். ஜெயிப்பதுதான் குறிக்கோள் என்றால், எல்லாவித கொடூரமான செயல்களையும் நியாயப் படுத்துவார்கள். போரில் கொல்லப்பட்டவர்கள் பரலோகத்திற்கு செல்வார்கள் என்று கருதப் படுவதால் அவர்களின் குழந்தைகள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை. இந்தப் போரில் அவர்களால் ராணுவ ரீதியாக வெல்லமுடியாது என்று அவர்களுக்குத் தெரியும். அதனால்தான், தங்கள் சொந்த குழந்தைகளையே கொல்லக் கொடுத்து, பாதிக்கப் பட்டவர்கள் என்ற பொய்ப்பிரச்சாரப் போரில் ஈடுபடுகிறார்கள். எவ்வளவு கேவலம்! இந்த அளவிற்கா தாழ்ந்து போவது?

இஸ்லாமின் தாக்கத்தினால் முஸ்லிம்கள் மனிதத் தன்மையற்றவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் மூளையற்ற கொல்லும் எந்திரங்களாக அல்லது ஜோம்பி (Zombie) க்களாக மாறும் வகையில் வெறி ஏற்றப்படுகிறார்கள். விலங்குகளின் வெறியுனர்வுடன் சேர்ந்து மனிதர்களுக்கான ஆறாவது அறிவும் இருப்பதனால் அவர்கள் மேலும் அபாயகரமானவர்கள்.

3) பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் கொன்று குவிக்கப்படும் முஸ்லிம்கள்: இது எப்போது ஆரம்பித்தது? திரு அலி சினா அவர்களே, நீங்கள்தான் அறிவுஜீவியாயிற்றே! நீங்களே கூறுங்கள். இதற்கு பதில் கொடுக்க முடிந்த 15 வயதில் எனக்கு ஒரு மகள் இருக்கிறாள்.

முகமது காலத்தில் இருந்தே முஸ்லிம்கள் தங்களுக்குள் கொன்றுகொண்டு இருக்கிறார்கள். முகமது ஒரு மசூதியை அதனுள் இருந்த மக்களுடன் சேர்த்து எரித்தான். ஏனென்றால் யாரோ அவனிடம் இந்த முஸ்லிம்கள் தங்கள் சொந்த இஸ்லாமை ஆரம்பித்திருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டனர். அந்த அப்பாவி முஸ்லிம்கள் தங்கள் மசூதியை “அருள்வதற்கு” இவனை வரவேற்று இருந்தார்கள். அதாவது அனேகமாக அவர்களுக்கு இஸ்லாமைப் பற்றி நன்றாகத் தெரியவில்லை போலிருக்கிறது. முகமது எதையும் விசாரிக்கவில்லை. அவன் ஆட்களை அனுப்பி மசூதியை வெளியில் இருந்து பூட்டச் செய்து உள்ளிருக்கும் மக்களோடு சேர்த்து எரிக்கச் செய்தான்.

அலி ஆயுதமேந்தாமல் எதிர்ப்பைத் தெரிவிக்க வந்த நான்காயிரம் கவரெஜ்களை படுகொலை செய்தான். அலியும் ஆயிஷாவும் போட்டிச் சண்டையில் ஈடுபட்டு எண்ணற்ற மக்களை உயிரிழக்கச் செய்தனர்.

முஸ்லிம்கள் ஒருவர ஒருவர் கொன்றுகொல்வது ஒன்றும் புதிதல்ல. முகமது அப்படித்தான் அதை நிறுவி இருக்கிறான். அவன் தனது தொண்டர்களிடம் அவர்கள் 72 பிரிவுகளாக உடைவார்கள் என்றும் ஒரே ஒரு பிரிவை தவிர மற்ற எல்லாமே நரகத்திற்குத்தான் போவார்கள் என்றும் கூறினான். அவன் தான் தோற்றிவித்த மதத்தை தெளிவாக விளக்கவில்லையாதலால், நூற்றுக் கணக்கான பிரிவுகள் தோன்றி, ஒவ்வொன்றும் மற்றவைகள் ‘இறை அவமதிப்பாளர்கள்’ என்றும் அதனால் வெறுக்கத் தக்கவர்கள் என்றும் கொல்லப் படவேண்டியவர்கள் என்றும் நினைக்கின்றது. என்னே பைத்தியக்காரத்தனம்! மனித இனத்தை அழிப்பதற்காக ஷைத்தானால் உருவாக்கப் பட்ட ஒரு அருமையான திட்டம்தான் முகமதுவோ?

இந்த விசயங்களை நீங்கள் உங்கள் 15 வயது மகளுக்கு சொல்லித் தரவில்லை என்று நான் அடித்துச் சொல்கிறேன். ஏனென்றால் உங்களுக்கே யாரும் சொல்லித் தரவில்லை.

4) இஸ்ரேல் மனித வெடிகுண்டுகளின் வீடுகளை மட்டும் பறித்து அழிக்கவில்லை. அது எல்லாபக்கத்தில் இருந்தும் திருடுகிறது. அது தன்னைப்போன்ற குற்றவாளி நாடுகள் உதவாமல் தன் சொந்த கால்களில் நிற்க முடியாத ஒரு திருட்டுப் பிச்சைக்கார நாடு. இஸ்ரேலுக்கு உதவுவது யார்? இது உங்களுக்கே தெரியும் திரு அலி அவர்களே.

இஸ்ரேல் 7.3 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாடு. டெஹ்ரான் மட்டுமே இதைவிட இருமடங்கு மக்கள்தொகையை கொண்டது. இதற்கும் மாறாக அரபியர்களின் எல்லா தாக்குதலையும் இஸ்ரேல் தாங்கியிருக்கிறது. இருந்தாலும் இந்த நாடு அறிவியலுக்காக மற்ற எந்த நாடுகளையும் விட அதிக நோபல் பரிசுகளைப் பெற்று இருக்கிறது. ஜென்மப் பகையுள்ள எதிரி நாடுகளால் சூழப்பட்டு தனது வருமானத்தில் முக்கிய பங்கை பாதுகாப்பிற்காக செலவிடவேண்டி இருப்பதற்கும் மாறாக, அவர்கள் உலகின் செல்வச் செழிப்பு வாய்ந்த நாடுகளில் ஒன்று. அவர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் உயிர்வாழவும், உண்பதற்கும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் முடிந்தவர்கள். ஆனால் அழிக்கப்பட முடியாது என்று எந்த நாடும் இல்லை. அணுகுண்டு தாக்குதலில் இஸ்ரேல் முற்றிலுமாக அழிக்கப்படலாம். அதனால் தான் அவர்கள் என்ன செய்யவேண்டுமோ அதை செய்யவேண்டி இருக்கிறது. இஸ்ரேலிக்களுக்கு வேறு போக்கிடம் இல்லை. இறுதிவரை போராடவேண்டியதுதான்.

ஏன் முட்டாள்தனமான காரியங்களை செய்யவேண்டும்? இவ்வளவு வெறுப்பிற்கு பதிலாக, ஏன் முஸ்லிம்கள் இஸ்லாம்தான் தங்கள் பிரச்சனைகளுக்கு காரணம் என்பதை உணர்ந்து, இந்த வெறுப்பின் மதத்தை விட்டு விலகி, இஸ்ரேலி நிபுணர்களை வரவழைத்து அராபிய பாலைவனங்களையும் சோலைவனங்களாக்கக் கூடாது? இதைவிட ஒரு நல்ல தீர்வும் இருக்கிறது. அதுதான் இந்த வெறுப்பை கைவிடுவது. ஆனால் முஸ்லிம்கள் அந்த ஏழாம் நூற்றாண்டின் வக்கிரமனிதனை தொங்கிக் கொண்டிருக்கும் வரை அது சாத்தியமில்லை.

இஸ்லாமிய நாடுகளில் இவ்வளவு சாவையும் வறுமையையும் பார்ப்பதற்கு பதிலாக செழிப்பை பார்ப்பதற்கு எனக்கு விருப்பம். இதற்கு முதல் படியாக முஸ்லிம்கள் தங்கள் இறுகிய இதயங்களைத் தளர்த்தி நாம் அனைவரும் மனிதர்கள் தான் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மதங்கள் மனிதர்களால் படைக்கப் பட்டவை. நாம் எல்லோரும் ஒரே மனித குடும்பத்தின் உறுப்பினர்கள். முஸ்லிம்கள் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் எழுப்பி இருக்கும் சுவர் கற்பனையானது. ரீகனின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், அந்த சுவற்றை கிழித்துப் போடுங்கள். மனித இனத்தின் ஒற்றுமைக்கான நேரம் வந்துவிட்டது.

To be continued.

Ali Sina.
Translation: Ali Sina’s Tamil Fan