இஸ்லாமில் “அன்ஃபால்” என்ற கருத்தை விளக்குவீர்களா? குரானில் ‘அன்ஃபால்’லுக்கென்றே ஒரு சுராவே (அத்தியாயமே) இருக்கின்றது. இந்த வார்த்தையை வரையறுங்கள்.

அன்ஃபால் என்றால் போரின்போது தோற்றவர்களிடம் இருந்து கொள்ளையடித்து அல்லது சூறையாடி பெறப்பட்ட பொருள்கள் என்று அர்த்தம் (غنایم.). ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பூர்வீக குடிகள் ஒன்றை ஒன்று அதிரடியாக தாக்கிக் கொண்டு, பொருள்களை சூரையாடிக்கொள்வது வழக்கம். மிகவும் காட்டுமிராண்டிக் குழுக்கள் தோற்றவர்களின் பெண்களையும் குழந்தைகளையும் கூட கைப்பற்றினார்கள். பொதுவாக இவர்கள் இருவருமே அடிமைப் படுத்தப்பட்டு விற்கப் பட்டார்கள். பெண்கள் வல்லுறவுக்கும் ஆளானார்கள்.

அரபியர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள். அதிரடித் தாக்குதல் செய்து கொள்ளையடித்தல் அவர்களுது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்தது. வருடத்தில் நான்கு மாதங்கள் தாக்குதல்களை தவிர்த்தனர். இந்த காலத்தில் தாக்குதல் ஒரு தெய்வக் குற்றமாக கருதப் பட்டது. இந்த மாதங்கள் புனித மாதங்களாக الْأَشْهُرُ الْحُرُمُ. அழைக்கப் பட்டன. இதைப் பற்றிய குறிப்பை குரானில் காணலாம் (Q 9:5). மற்ற மாதங்களில் ஒருவரை ஒருவர் தாக்கிகொல்வதற்கு எந்த தடையும் இல்லை. அத்து மீறி தாக்குபவர்களை தண்டிக்க ஒரு மைய அதிகாரம் இல்லை.

இஸ்லாமின் தூதன் மதீனாவுக்கு குடிபெயரும்போது அவனைப் பின்பற்றிச் சென்ற பெரும்பாலானவர்கள் அடிமைப்படுத்தப் பட்டவர்களோ அல்லது வேலையில்லாத இளைஞர்களோ தான். அவர்கள் வறுமையில் வாடினார்கள். தங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக முகமது அவர்களை அரபியர்களின் அதிரடிக்கொள்ளைப் பழக்கத்தை பின்பற்றி கொள்ளையடிக்க சொன்னான். கடவுளின் தூதனே அதிரடிக்கொள்ளையில் ஈடுபடுவதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளாத அளவிற்கு அரபியர்களின் அறநெறி அவ்வளவு தாழ்ந்து இருந்தது. மாறாக அவனின் வெற்றிகளுக்கு இறைவனின் துணையை காரணமாக்கினர்.

பூர்வீக குடிகள் பலம் பொருந்தியவர்களின் செயல்களே நீதி என்று நினைத்தனர். இது போன்ற ஆதிகால எண்ணத்தை குழந்தைகளிலும் பார்க்கலாம். அப்பொழுது எனக்கு 10 வயதிருக்கும். ஈரானின் ஒரு சிறு நகரில் வாழ்ந்து வந்தோம். ஒருநாள் எங்கள் ஆசிரியர் எங்களை நீச்சல் குளத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறினார். நாங்கள் மிகவும் உற்சாகத்துடன் அந்நாளை எதிர்பார்த்து இருந்தோம். அந்த நாள் வந்தபோது, நாங்கள் அனைவரும் ஷார்ட்ஸ் மற்றும் துண்டுகளைக் கொண்டு வந்திருந்தோம். எங்கள் வகுப்பில் சில பஹாயீ அல்லது யூத மாணவர்கள் இருந்தனர். அவர்கள் வரமுடியாது என்று ஆசிரியர் சொன்னார். அவர்கள் நஜிஸ் என்றும் ஆகையால் முஸ்லிம்கள் குளிக்கும் அதே குளத்தில் அவர்களும் குளிக்க முடியாது என்றும் அவர் சொன்னார். அந்த சிறுவர்களின் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் என்னால் மறக்கவே முடியாது. அது அப்பட்டமான அநீதி. ஆனால் ஒரு பத்து வயது சிறுவனாக என்னால் அப்படி உணர முடியவில்லை. நான் வருத்தப்பட்டேன் ஆனால் முஸ்லிம்களாக இல்லாதது அந்த சிறுவர்களின் தவறு என்று எண்ணினேன். எனது அறக்கண் அவ்வளவு தெளிவாக பார்க்கும் விதத்தில் வளர்ந்திருக்கவில்லை. நான் பாதிக்கப் பட்டவர்களின் மீது குறை கண்டேன். உங்களைப் போன்றே சிந்திக்கும் சமூகத்தில், நீங்கள் மற்றவர்களால் அமோதிக்கப் பட்டு உங்கள் கிறுக்கு எண்ணங்களும் உறுதிப் பட்டுப் போகும். நாம் பரிணமிக்க வேண்டுமானால் நமது சிந்தனைகள் கேள்விக்கு உட்பட வேண்டும். இப்படித்தான் பரிணாமம் நடக்கிறது. நலிந்தது அழியும் பலம் வாய்ந்தது தழைக்கும். உயிரிகள் சோதனைக்கு உட்படாத போது அவற்றில் பரிணாமம் ஏற்படுவதில்லை. இவ்வுலகில் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளாக சிறிதும் மாற்றம் இல்லாமல் இருக்கும் உயிரினங்களும் இருக்கின்றன. அது ஏனென்றால், அவற்றிற்கு எந்த சவால்களும் எழுந்ததில்லை. அதனால் அவற்றில் எந்த மாற்றத்திற்கும் அவசியமும் இல்லை. ஒரு கருத்து சோதனைக்கு உட்படாத போது அதில் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. இஸ்லாமின் சோகக்கதையும் இது தான்.

முகமது வணிகர்களின் சரக்குகளை ஏற்றிச் செல்லும் ஒட்டக அணிகளையோ அரபிக்களின் கிராமங்களையோ தாக்கி, ஆயத்தமற்ற மக்களைக் கொன்ற போதோ, அவர்களுடைய் உடைமைகளை கொள்ளையடித்த போதோ, அவர்களின் பெண்களையும் குழந்தைகளையும் அடிமைப்படுத்திய போதோ , அவனின் தொண்டர்கள் மட்டுமல்ல, மற்ற அரபிக்களும் இதில் எந்த பெரிய தவறையும் காணவில்லை. எவ்வளவுக்கு எவ்வளவு அவனுடைய அதிரடி தாக்குதல்களில் (அவன் அந்த தாக்குதல்களை ghazwa என்று அழைத்தான்) வெற்றிகள் கிடைத்ததோ அவ்வளவுக்கு அவ்வளவு பிரபலம் ஆனான். அவனின் பலம் மேலும் வளரவளர அவனின் எதிரிகள் கூட அவனுடன் இணைந்தார்கள். Khalid ibn Walid ம் Amro ibn Aas ம் இஸ்லாமுக்கு எதிரானவர்கள் என்றும் முஸ்லிம்களை எதிர்த்து போரிட்டார்கள் என்றும் தபரி [முகமதின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்] கூறுகிறார். அவர்கள் முகமது பலமடைவதைப் பார்த்து மதம் மாறினார்கள். இஸ்லாமிற்கு மாறியவர்கள் பணக்காரர்களாக மாறுவதை அரபியர்கள் கண்டார்கள். அவர்களுடைய் வருமானம் முழுக்க கொள்ளையில் இருந்து வந்தது. ஆனால் அது கடவுளால் அனுமதிக்கப் பட்ட கொள்ளை. அரபியர்களின் போதிய அளவு பரினமிக்காக மனங்களுக்கு கடவுள் முகமதுக்குப் பின்னால் உள்ளார் என்பதற்கு இது ஒரு அடையாளம்.

முஸ்லிம்களின் அறக்கண் முகமது காலத்தில் இருந்து வளரவே இல்லை. அரபிக்களின் ஆதி கால எண்ணமான பலம் தான் உண்மை என்ற கருத்து, அரேபியர்களைவிட அதிக நாகரீகம் அடைந்திருந்த ஈரான் மற்றும் இந்திய உபகண்டம் உட்பட, எல்லா முஸ்லிம் நாடுகளுக்கும் பரவியது. இப்பொழுது நாங்களும் அவர்களைப் போல – காட்டு மிராண்டிகளாக மாறிவிட்டோம். எங்களின் நீதிப் பார்வை மங்கி விட்டது. எங்களின் சிந்தனைகளும் இஸ்லாமின் கைங்கர்யத்தால் காட்டு மிராண்டிகளாகவே இருந்து விட்ட அரபியர்களுடையதைப் போன்று வளர்ச்சி குன்றியதாக மங்கிவிட்டது.

புகழ்பெற்ற பாரசீக வரலாற்று ஆசிரியர் தபரி (Mohammad ibn Jarir Tabari) முகமதின் குற்றங்களை விளக்கமாக எடுத்துரைக்கிறார். அவனுடைய துரோகங்களையும், கொள்ளைகளையும், வல்லுறவுகளையும், ஆள்வைத்து செய்த படுகொலைகளையும் (assassinations) கூட்டுக் கொலைகளையும், படிப்பவர்களுக்கு வாந்தி வரும் அளவிற்கு விளக்கமாக எழுதியுள்ளார். இருந்தாலும் இந்த மெத்தப்படித்த மேதையால் கூட இந்த அளவிற்கு தீய்மையே உருவமான ஒரு மனிதன் எப்படி கடவுளின் தூதனாக இருக்க முடியும் என்று சிந்திக்க முடியவில்லை.

மற்றுமொரு உலகின் அதி சிறந்த மேதாவி ரூமி (Jalaleddin Rumi). இவருடைய எல்லா புலமைகளுக்கும் மாறாக, இவராலும் தூதன் என்று சொல்லப் படுபவன் ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரன் தான் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஒய்வுநாள் விதியை மீறியதற்காக கடவுள் யூதர்களை பன்றிகளாகவும் குரங்குகளாகவும் மாற்றிவிட்டார் என்று முகமது சொன்ன பேத்தலைக்கூட இந்த மனிதன் நம்பிவிட்டார்.

மதம் மக்களை இப்படித்தான் மாற்றும். மதநம்பிக்கை கொள்ளும்போது புத்தியுள்ள மனிதர்கள் கூட தங்கள் பகுத்தறிவை துறந்து விடுகிறார்கள். வோல்டேர் கூறியதைப் போல, மக்கள் முட்டாள்தனங்களை நம்பும்போது கொடூரங்களையும் செய்வார்கள்.

எந்த ஒரு ஆரோக்ய மனநிலையுள்ள மனிதனாலும், ஒருவரின் வீட்டின் மீது அதிரடித் தாக்குதல் செய்வதோ, அவரைக் கொல்வதோ, அவனுடைய உடைமைகளைக் கொள்ளை அடிப்பதோ, தவறு என்று சொல்ல முடியும். இதைப் புரிந்துகொள்ள பெரிய ஞானம் ஒன்றும் தேவை இல்லை. இருந்தாலும், ஆச்சரியப்படும் வகையில் 1.5 பில்லியன் முஸ்லிம்கள், இதில் பலர் படித்தவர்கள், இதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.

இந்த கொள்ளையை எப்படி பகிர்ந்து கொள்வது என்பதற்கு ஒரு முழு அத்தியாயத்தையே (சுரா) எழுதியிருக்கிறான். சுரா அன்ஃபல், ‘பாத்ர்’ (Badr) போரின் பிறகு எழுதப்பட்டது. அது இவ்வாறு ஆரம்பிக்கிறது, يَسْأَلُونَكَ عَنْ الْأَنْفَالِ قُلْ الْأَنْفَالُ لِلَّهِ وَالرَّسُولِ “உங்களை கொள்ளையைப் பற்றி [எப்படி பிரித்துக்கொள்வது என்று] கேட்கிறார்கள். கொள்ளை அல்லாவுக்கும் அவரின் தூதருக்கும் சொந்தமானது” இங்கே முகமது இவ்வுலகை படைத்தவரை தனது கொள்ளையில் பங்காளியாக்குகிறான். ஒரு பூனையின் மூளை அளவுக்கு மூளை இருப்பவன் கூட அரேபியர்களிடம் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட பொருளினால் கடவுளுக்கு என்ன பயன் என்று எண்ணுவான். எல்லாமே முகமதுக்குத் தான். பிறகு ஏன் கடவுளின் பெயரைக் கெடுக்க வேண்டும்? அந்த வாசகத்தின் உண்மையான பொருள், திருடப்பட்ட பொருள்கள் எல்லாமே எனக்குத்தான் சொந்தமானது என்பது தான். முகமதுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றினான். அவன் உண்மையிலேயே கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருந்தால் கடவுள் சொன்னதாக சொல்லி அவ்வளவு பொய்கள் சொல்லியிருக்க மாட்டான்.

பல இஸ்லாமிய இணைய தளங்களில் கிடைக்கின்ற (Google search) “Jihad: The Forgotten Obligation“ என்ற தலைப்பிட்ட கட்டுரையில் இவ்வாறு எழுதப் பட்டிருக்கிறது. இப்னு உமர் அறிவித்தார்: நபி கூறினார், “எனது வருமானம் ஈட்டியின் நிழலில் இருக்கிறது. யாரொருவன் எனது கட்டளைகளுக்கு பணிய மறுக்கிறானோ அவன் அவமதிக்கப் படுவான்”(Bukhari, p.408, vol.1). ஈட்டியின் சிறப்பை இந்த ஹதித் கூறுகிறது. தூதரின் வருமானமும் பொருள்களும் ஈட்டியில் (ஜிஹாத்) இருந்து வருகிறது என்றும் நாம் அறிகிறோம். அதனால்தான் ஹதித்களை தொகுத்தவர்கள் (Muhaditheen) போர்க்கொள்ளை தான் இருப்பதிலேயே சிறந்த சம்பாத்தியம் என்று கூறி இருக்கிறார்கள். இந்த ஹதித் மூலம் கொள்ளைப் பொருள் இந்த உம்மாவுக்கு [உலக முஸ்லிம் சமூகம் ] கடவுளால் அனுமதிக்கப்பட்டது ஆனது. குறிப்பு: இந்த ஹதிதில் உள்ள “காபிர்களுக்கு அவமானம்” என்ற பதம் ஜிஸ்யாவைக் (இஸ்லாமிய நாடுகளில் -திம்மிக்களான, அதாவது அடங்கி வாழவேண்டிய இரண்டாம் தர குடிமக்களான, முஸ்லிமல்லாதோருக்கான – ஒரு வரி) குறிக்கும். (Fath ul Bari, p.116, vol.2)”

முஸ்லிம்களின் சிறிதும் அறநெறியற்ற தன்மையை உங்களால் உணரமுடிகிறதா? முகமது போர்க் கொள்ளையினால் சம்பாதித்தான் என்று ஒரு ஹதித் சொல்கிறது. அதன் விளைவாக இஸ்லாமிய அறிஞர்களும் ஹதித் தொகுப்பாளர்களும் போர்க் கொள்ளை அனுமதிக்கப்பட்டது என்றும் இருப்பதிலேயே சிறந்த வருமானம் கொள்ளையடிப்பது தான் என்றும் முடிவு செய்கிறார்கள். இன்று, முஸ்லிம்கள் இந்த ஜிஹாத் கடமை மறக்கப்பட்டு விட்டது என்றும், மறுபடியும் முஸ்லிமல்லாதோரை கொள்ளை அடிப்பதன் மூலமும், அவர்களிடமிருந்து ஜிஸ்யா வரி பிடுங்குவதின் மூலமும் தங்கள் வருமானத்தை சம்பாதிக்க வேண்டும் என்றும் புலம்புகிறார்கள்.

இப்படித்தான் மாஃபியா நடந்து கொள்கிறது. சொல்லப் போனால் , மாஃபியா தோன்றியதே இஸ்லாமினால் தான். முஸ்லிம்கள் சிசிலி (Sicily) யையும், மால்ட்டா (Malta) வையும் 902 ல் கைப்பற்றினார்கள். 1061 ல் நார்மன்களின் (Norman) வெற்றி வரை அந்த தீவுகளை ஆண்டார்கள். தென் இத்தாலியில், முஸ்லிம்கள் உள்ளூர் மக்களிடம் “பாதுகாப்பிற்காக” பணத்தைப் பிடுங்கிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை உள்ளூர் ரௌடிகள் பிடித்துக் கொண்டார்கள். இந்த தொடர்பை புரிந்து கொண்டால், மாபியாக்கள் எப்படி தங்கள் குற்றங்களை தங்கள் மத நம்பிக்கையுடன் சமாதானம் ஆக்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

முரண் நகை என்னவென்றால், இஸ்லாமில் திருடுவது தடை செய்யப் பட்ட, முதல் குற்றத்திற்கே கையை வெட்டும் தண்டனையைக் கொண்ட, பிறகு செய்யும் ஒவ்வொரு திருட்டிற்கும் அடுத்தடுத்த கையையும் காலையும் வெட்டக் கூடிய தண்டனையை உடைய குற்றம். ஆனால் அதுவெல்லாம் ஒரு முஸ்லிம் இடமிருந்து திருடும் போதுதான். முஸ்லிமல்லாதோரிடம் இருந்து திருடினால், எந்த தண்டனையும் இல்லை. சொல்லப் போனால், முஸ்லிமல்லாதோரிடம் செய்யப்படும் திருட்டு முறைப்படுத்தப்பட்டு ஊக்கப்படுத்தப்படும் ஒன்று.

கைபர் அதிரடித்தாக்குதல் முடிந்து சிறுது காலத்திற்குள் தொடுக்கப் பட்ட, Wadi al Qura மீதான அதிரடித்தாக்குதலின் போது ஒரு குருட்டு அம்பு முகமதுக்காக பணிபுரிந்த ஒரு அடிமைப்படுத்தப் பட்டவரை தாக்கிக் கொன்று விட்டது. முஸ்லிம்கள் அவரைச் சுற்றித் திரண்டு அவனை பரலோகம் செல்லப் போவதற்காக வாழ்த்தினார்கள். முகமது “இல்லவே இல்லை. அவனது மேலங்கி (Cloak) இப்போதே நரகத்தில் எரிந்து கொண்டிருக்கிறது. இவன் முஸ்லிம்களின் கொள்ளையில் இருந்து பங்கு பிரிக்கும் முன்னரே இந்த மேலங்கியை திருடி இருக்கிறான்” என்று சொன்னான். இதைக் கேட்ட மற்றொரு முஸ்லிம் முன்வந்து, “அல்லாவின் தூதரே, எனக்கு காலணிகள் இல்லை. இந்த ஜோடியை நான் கொன்ற மனிதனிடத்தில் இருந்து எடுத்தேன்” என்று கூறினான். முகமது அவனிடத்தில் “உனக்கு அது போன்ற இரண்டு ஜோடி நெருப்பு செருப்புகள் தைக்கப்படும்” என்றான். பிறகு அவன் அல்லா கட்டளை இட்டபடி கொள்ளையடிக்கப் பட்டதை எல்லாம் ஒரு குவியலாக்கி பிரிக்கப் பட வேண்டும் என்று விளக்கினான். ஐந்தில் ஒரு பங்கு அல்லாவுக்கும் அவர் தூதருக்கும் (எனக்கு மட்டுமே) மீதி மற்ற கொள்ளையர்களுக்கு.

உங்களால் இதில் உள்ள முரணைக் காண முடிகிறதா? அந்த இரண்டு முஸ்லிம்கள் கொள்ளையில் இருந்து மேலங்கியையும் செருப்பையும் எடுத்ததற்காக நரகம் செல்வார்கள். ஆனால், கொள்ளையடிப்பது அனுமதிக்கப்பட்டதும் சிறந்த வருமானமும் ஆகும். அதே ‘அன்ஃபால்’ சுராவில் முகமது, فَكُلُوا مِمَّا غَنِمْتُمْ حَلَلًا طَيِّبًا “நீங்கள் பெற்ற போர்க்கொள்ளையை அனுபவியுங்கள், அது அனுமதிக்கப்பட்டதும் தூயதுமாகும்”(Q. 8.69) என்று சொல்கிறான். சில முஸ்லிம்களுக்கு அவ்வாறு செய்வதில் உடன்பாடு இல்லை என்பதையும் அவர்களின் மனம் அதற்கு இடமளிக்க வில்லை என்பதையும் இந்த வாசகம் காட்டுகிறது. அவர்கள் தங்கள் மனசாட்சியை சாந்தப்படுத்தவே இந்த வாசகத்தை முகமது வெளியிட்டான். கடவுளே சொன்ன பிறகு மனசாட்சியாவது மண்ணாங்கட்டியாவது! கடவுளே முஸ்லிமல்லாதோரை கொல்வதும் அவர்களிடம் இருந்து திருடுவதும் ஹலால் என்றால், யார் மறுத்துப் பேசமுடியும்?

இப்படித்தான் முஸ்லிம்கள் தங்கள் மனசாட்சியையும் கொன்றார்கள். கடவுள் ஒரு விசயத்தை முடிவு செய்ததற்குப் பிறகு பக்தனின் மனசாட்சிக்கு என்ன வேலை? அவன் தனது மனசாட்சியையே கொன்று விடுவான். கடவுளுக்குத் தான் எல்லாம் தெரியும். மனிதர்கள் மறு பேச்சு பேசலாமா. அதிர்ஷ்ட வசமாக, மற்ற மதங்களில் மற்ற மதத்தினரைப் பற்றி இந்த அளவுக்கு ஷைத்தானின் வாசகங்கள் இல்லை. ஆனால் இஸ்லாமில் இவைகள் ஏராளமாக இருக்கின்றன. இதன் விளைவாக முஸ்லிம்கள் கொள்ளைக்காரர்களாகவும் குற்றமே வடிவானவர்களாகவும் மாறிவிட்டார்கள். உலகிலேயே மிகவும் தீய நெறியைக் கொண்டவர்களாகவும் துரோகிகளாகவும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். தீய செயல்களில் முஸ்லிம்களுக்கு இணை முஸ்லிம்கள் தான். எந்த ஒரு மனசாட்சியும் இல்லாமல் முஸ்லிம்களின் அளவுக்கு யாராலும் தீய செயல்களை செய்ய முடியாது. எல்லா மனிதர்களும் சில தீய செயல்களை செய்வார்கள் ஆனால் அவர்கள் அதனால் மனம் கலங்கி கடவுளிடம் மன்னிப்பு கோருவார்கள். ஆனால் முஸ்லிம்கள் கொடூரமான செயல்களைச் செய்து விட்டு, தொழுகை வரிசையில் நின்று, வாய்ப்பிற்காக கடவுளுக்கு நன்றி கூறுவார்கள். அவர்கள் அதற்காக வெகுமதியை எதிர்பார்க்கிறார்கள். ஈரானின் [இஸ்லாமிய கலாச்சார துணைப் படையினரான] பஸ்ஜிக்கள் (Basji) [இஸ்லாமிய ஆட்சியை எதிர்த்த] இளம்பெண்களைக் கொல்வதற்கு முன் வல்லுறவு கொள்வார்கள். அது ஏனென்றால், அவர்கள் இது போன்ற ‘பக்தி மிக்க’ செயல்களுக்காக அல்லா வெகுமதி கொடுப்பார் என்று நம்பினார்கள். இஸ்லாம் மனிதர்களைப் பேய்களாக்குகிறது.

இஸ்லாம் கொள்ளையர்களின் மதம். கொள்ளையர்கள் மட்டும் இல்லை, பீடோபில்கள் (pedophile = சிறுமிகளுடன் வல்லுறவு கொள்பவன்), வல்லுறவு ரசிகர்கள், பணத்திற்காக படுகொலை செய்பவர்கள், கொலைகாரர்கள் மற்றும் கொடுங்கோலர்கள் இஸ்லாமில் தங்கள் கொடூரங்களுக்கு நியாயம் கற்பித்திருப்பதை காண்கிறார்கள். ஒரே ஒரு தடை, தங்கள் சொந்த குழுவிற்குள் வாலை சுருட்டிக் கொண்டு இருக்கவேண்டும் என்பது தான். எல்லா தாதா கும்பல்களிலும் இதே சட்டம் தான். நீங்கள் ஒரு மாஃபியாவில் உறுப்பினரா உங்கள் தலைவரிடமே கை வைக்கிறீர்களா, தீர்ந்தீர்கள். ஆனால் அவர்கள் திருட்டிற்கு எதிரானவர்கள் என்று பொருள் இல்லை. அது தான் அவர்கள் பிழைப்பே. நீங்கள் ஒரு கொள்ளைக் கூட்டத்தில் உறுப்பினரா உங்கள் கும்பலில் மட்டும் கைவரிசை காட்டக் கூடாது.

முகமது போர்க் கொள்ளையில் இருந்து தனது பங்கை பிரிப்பதற்கு முன்னர் அதில் இருந்து திருடுவதை தடை செய்து இருந்தாலும், தனது தொண்டர்களின் பங்கை அவன் வெளிப்படையாக திருடி இருக்கிறான். கைபரை கைப்பற்றிய உடனே, அரேபியாவிலேயே வளமான பகுதியான ஃபடக் (Fadak) ன் மீது கண் வைத்தான் முகமது. அவ்வூரின் மக்கள் தங்களின் நிலையைப் புரிந்து கொண்டு சரணடைய முடிவு செய்தார்கள். முகமது இன்னும் கைபரில் இருக்கும் போதே, அவர்கள் ஒரு தூதுக்குழுவை அனுப்பி தங்களை உயிருடன் வேறு இடம் செல்ல அனுமதித்தால் சண்டையில்லாமல் தங்கள் நகரத்தை விட்டு விட்டு போய்விடுவதாகக் கூறினார்கள். முகமது ஒத்துக்கொண்டான். பிறகு அவன் அவர்களை அங்கேயே தங்கி தனது பண்ணையாட்களாக (Serfs) வேலைசெய்யும்படியும் விளைச்சலில் 50% தனக்கு கொடுக்கும் படியும் கட்டளை இட்டான். முஸ்லிம்கள் அதற்காக போரிடாததால் அவ்வூரை தனது சொந்த சொத்தாக அறிவித்தான். யூதர்கள் சண்டையில்லாமல் சரணடைந்ததே முகமதின் முஸ்லிம் படையினால் தான். இந்த படை இல்லாமல், அவர்கள் தனி மனிதனிடம் சரணடைந்து இருப்பார்களா? தானே போரில் சண்டையிட்டு தனது உயிரை பணயம் வைக்காமல், ஒவ்வொரு கொள்ளையிலும், 20% எடுத்துக் கொண்டான். ஆனால் ஃபடக் மற்றும் பநி நடிர் (Bani Nadir) ன் எல்லா சொத்துக்களையும் தனக்கே வைத்துக் கொண்டான். ஏனென்றால், அந்த ஊர் மக்கள் சண்டை இல்லாமல் சரணடைந்ததால். அவனுடைய தொண்டர்கள் இதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மூடர்கள் இல்லை. ஆனால் அவர்கள் அவனை கேள்வி கேட்க அஞ்சினார்கள். அவன் இஷ்டம் போல் செய்தான். யாரும் அவனை கேள்வி கேட்க துணியவில்லை. ஏனென்றால் அவனை கேள்வி கேட்பது கடவுளையே கேள்வி கேட்பது போலாகும். இதுதான் இன்றும் முஸ்லிம்களை இஸ்லாமைப் பற்றி கேள்விகேட்பதில் இருந்து தடுக்கிறது.

ஒவ்வொரு ஈரானியரும் ஃபடக் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இந்த சிறு நகரம் நம்முடைய நாட்டின் விதியில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. முகமதின் இறப்பிற்குப் பிறகு, அவனின் ஒரே மகளான பாத்திமா (Fathima) ஃபடக் தன் தந்தையின் தனிச் சொத்தென்றும் எனவே இப்போது அது தனது பங்கு என்றும் உரிமை கோரினாள். பாத்திமாவின் கணவன் அலி உட்பட எல்லோராலும் கலிபா வாக தேர்ந்தெடுக்கப் பட்ட அபு பக்கர் (Abu Bakr) தூதருக்கு தனிச் சொத்து இல்லை என்றும் அவருடைய உடைமைகள் எல்லாம் பொது கருவூலத்திற்கு சொந்தமானது என்றும் கூறினார். முகமதுக்கு, அபு பாக்கரின் மகள் ஆயிஷா (Aisha) மற்றும் ஓமரின் மகள் ஹப்சா (Hafsa) உட்பட, பல மனைவிகளும் இருந்தார்கள். சொத்து உறவினர்களுக்குள் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றால் இவர்களையும் வாரிசுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகையால், ஃபடக் முகமதின் தனிச் சொத்து என்றாலும் கூட, பாத்திமாவின் வேண்டுகோள் தவறானது. இதனால் தான் அலிக்கும் மற்ற கலிபாக்களுக்கும், ஒரு திருடப் பட்ட நிலத்திற்காக, சண்டை மூண்டது. இது தான் சுன்னி ஷியா பிரிவினையின் காரணம். ஈரானியர்களான நாம் இன்றும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.

-Ali Sina
Translation: Ali Sina’s Tamil Fan