வீடுகள் அழிவுக்குள்ளான சில பூமி அதிர்ச்சிகள் மற்றும் இயற்கை பேரழிவுகளில், சில சமயம் ஒரு சில மசூதிகள் இன்னும் நின்றபடியே இருந்தன. எண்ணற்ற முஸ்லிம் வலைதளங்கள் அவைகள் அல்லாவின் அற்புதங்கள் என்று உரிமைகோரி இந்த படங்களை பிரதி எடுத்து காட்டிருகின்றன.

துருக்கியில் மற்ற கட்டிடங்கள் அழிவுக்குள்ளான ஒரு பூமி அதிர்ச்சிக்கு பிறகு நின்றபடியே இருக்கும் ஒரு மசூதி.

இந்த மசூதிகள் அழியாமல் இருப்பதற்கு அற்புதம் ஒன்றும் காரணமல்ல. இது ஏனெனில் அவைகள் நல்ல முறையில் கட்டபட்டடுதான். பொதுவாகவே, மக்கள் தங்களுடைய வழிபாட்டு தளங்களை கட்டும்போது அதிக அன்பும் முயற்சியும் செலுத்துகின்றனர். இது ஒரு பிரத்தியேகமான இடம். அவர்கள் ஏமாற்றவோ அல்லது சிக்கனம் செய்யவோ விழைவதில்லை. விளைவாக, மசூதிகள், சர்ச்சுக்கள் மற்றும் கோயில்கள் ஆகியவை சாதாரண வீடுகளைவிட அதிகம் நீடித்து இருக்கின்றன.
ஆனபோதிலும், பின்வரும் படங்கள் காட்டுகின்றபடி, இந்த கட்டிடங்கள்கூட வலுவான பூமி அதிர்ச்சிகளில் அழிக்கபடுகின்றன.
மசூதிகளை தான் பாதுகாத்தபோது அல்லாஹ்வினால் இந்த வாழ்விடங்களை அழிக்கப்பட்டன என்று யூகிக்கும்பட்சத்தில், அது அல்லாஹ்வை தீவிரவாதியாக ஆக்கதா? புத்திசுவாதீனமுள்ள ஒரு கடவுள் அப்பாவியான மக்களுக்கு இப்படிப்பட்ட காரியத்தை செய்து, குழந்தைகள் உள்பட இத்தனை உயிர்களை ஏன் அழிக்கவேண்டும்?.

போலியான அற்புதங்களை அல்லாஹ்வுக்கு ஏற்றிகூறும் தங்களுடைய ஆர்வத்தில் முஸ்லிம்கள் அவரை மேலும் குற்றவாளியாக்குகின்றனர், அவரை இரக்கமற்ற தீவிரவாதியக்குகின்றனர்.

உண்மை எதுவெனில், எந்த இயற்கை பேரழிவுக்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பேரழிவுகள், அவைகளுடைய பெயர் எதுவாயினும், “கடவுளுடைய செயல்கள் அல்ல”. அவைகள் இயற்கையின் செயல்பாடுகள். அன்னை பூமியானவள் தன்னுடைய சொந்த வாழ்க்கையை வாழ்கிறாள். அவள் நம்முடைய இருப்பை பற்றி ஒன்றும் அறியாதவள். நாம் அவளுடைய வழியில் நின்றால் நாம் துன்பதிற்குள்ளாகிறோம். பூமி அதிர்ச்சிகளை ஒருவரும் அனுப்புவதும் இல்லை, நம்மை நாமே தவிர வேறு யாரும் காப்பாற்றவும் முடியாது.
மசூதிகளும் அழிவுக்குள்ளாகின்றன.

2007 இல் இந்தோனேசியா, சுமத்ராவில் உள்ள சொலோக் என்ற இடத்தில், பூமி அதிர்ச்சியினால் அழிக்கப்பட்ட பாதுர்ரஹ்மான் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் ஒரு முஸ்லிம்.

செப்டம்பர் 2 , 2009 அன்று மேற்கு ஜாவாவில் உள்ள சிசாட் கிராமத்தில் சக்திவாய்ந்த பூமி அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட ஒரு மசூதியின் முன்பு திரளும் குடியிருப்போர்.

2006 பூமி அதிர்ச்சியில் பாகிஸ்தானில் உள்ள பாலகொட் மசூதி முழுவதுமாக அழிக்கப்பட்டது.

முசாபார்பாத், பாகிஸ்தான் - அக்டோபர் 28 : பாகிஸ்தான் கட்டுபாட்டில் உள்ள காஷ்மீர், முசாபார்பாதில் பூமி அதிர்ச்சியினால் அழிவுக்குள்ளான ஜஆமா ஹமான் வலி மசூதியில் வெள்ளிகிழமை தொழுகையின்போது தொழுகை புரியும் பாகிஸ்தானியர்கள்.
முசாபார்பாத், பாகிஸ்தான் – அக்டோபர் 28 : பாகிஸ்தான் கட்டுபாட்டில் உள்ள காஷ்மீர், முசாபார்பாதில் பூமி அதிர்ச்சியினால் அழிவுக்குள்ளான ஜஆமா ஹமான் வலி மசூதியில் வெள்ளிகிழமை தொழுகையின்போது தொழுகை புரியும் பாகிஸ்தானியர்கள்.

1948 பூமி அதிர்ச்சியில் அழிக்கப்பட்ட அனவு மசூதி.

பூமி அதிர்ச்சியினால் எப்படி தன்னுடைய மசூதி அழிக்கப்பட்டது என்பதை காட்டும் பலுசிஸ்தானில் உள்ள மசூதியின் இமாம். அந்த நேரத்தில் அதிகாலை 3 : 30 மணிக்கு தொழுகை புரிவதற்காக நான் தயாராகிக் கொண்டிருந்தேன். மிகச் சரியாக அந்த நேரத்தில் எல்லாமே நடுங்க ஆரம்பித்தது, மசூதியின் சுவர் கீழே விழுவதை கேட்டேன்.


மார்ச் 30 , 2005 அன்று, இந்தோனேசியா, நியாஸ் என்ற இடத்தில் மீட்பு நடவடிக்கைகளின்போது, அழிவுக்குள்ளான மசூதி ஒன்றின் இடிபாடுகளுக்கு முன்பு தங்களை சுத்த படுத்திக்கொள்ளும் இடம் பெயரசெய்ய பட்டுள்ள ஒரு குடும்பம். மார்ச் 28 அன்று, சுமத்ராவின் தென் கிழக்கு ஆசிய பகுதியில், தகவலின்படி 2 நிமிடங்கள் நீடித்த ரிச்டர் அளவுகோலில் 8.5 என்று பதிவான ஒரு பூகம்பம் தாக்கியது. சுமத்ரா கடற்கரையை ஒட்டியுள்ள நியாஸ் தீவு, மதிப்பீட்டின்படி இரண்டாயிரம் மக்கள் என்ற மரண எண்ணிக்கையுடன், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.


பூமி அதிர்சியில் அழிக்கப்பட்ட பாகிஸ்தானில் உள்ள ஒரு மசூதி.


மேற்கு சுமத்ரா, இந்தோனேசியா.


முசாபாராபாத், பாகிஸ்தானில் பூகம்பத்தால் அழிக்கப்பட்ட ஒரு மசூதி.

மொழி பெயர்ப்பு : ஆனந்த சாகர்