பின்வரும் குறிப்புகளோடு இஸ்லாமிய வலைதளங்கள் இந்த படத்தை காட்சிப்படுத்துகின்றன :

“அரபி மொழியில் அல்லாஹ்வுடைய

ஏகத்துவத்தையும் முஹம்மது(ஸல்) அவர்களின் நபித்துவத்தையும் உறுதிபடுத்துகின்ற இஸ்லாமிய சமய கோட்பாட்டின் அறிவிப்பு வடிவில், பாறையில் வரிசையாக அமைந்துள்ள மரங்களின் கிளைகள்.”

அது கூறுகிறது :
“லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” அல்லாஹ்வைத் தவிர தெய்வம் இல்லை முஹம்மது(ஸல்) அல்லாஹ்வுடைய தூதர்.

ஜெர்மனியில் உழவு செய்யப்படுகின்ற ஒரு சிறிய விவசாய துண்டு நிலத்தில் இந்த காட்சி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அற்புத காட்சியை பார்க்கும் பல ஜெர்மானியர்கள் இஸ்லாத்தை தழுவி இருப்பதாகவும் மேலும் மக்கள் இந்த அற்புத இடத்தை விஜயம் செய்து பார்க்க வருவதிலிருந்து தடுப்பதற்காக பண்ணையின் அந்த பகுதியை சுற்றிலும் இரும்பு கம்பி வேலியை ஜெர்மன் அரசு போட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த வலை தளங்களில் ஒன்று கூட இந்த இடத்தின் முகவரியை கொடுக்கவில்லை. வேறு கோணத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த மரங்களின் எந்த படமும் இல்லை. அது ஏனென்றால், இது கித்தான் துணியில் எண்ணெய் அடிப்படையில் வரையப்பட்ட ஓவியமாகும். மேல் வலது பக்க மூலையில் கவனம் செலுத்துங்கள்; கித்தான் துணியின் சுருக்கங்களைகூட நீங்கள் காணமுடியும். இது ஒழுங்காக விரித்து வைக்கப்படவில்லை. ஆனால் இது முழுமையான படம் அல்ல.

முழு அளவிலான படம் இதுதான். இங்கே இடது பக்கத்தில், முஹம்மது ரசூலுல்லாஹ்(முஹம்மது கடவுளுடைய தூதர்) என்று வாசிக்கின்ற மரங்களின் இன்னொரு வரிசை உள்ளது. அரபியில் இந்த வாக்கியமானது மிகவும் விளக்கமாயுள்ளது, படிப்பவரை போலியானதோ என்று சந்தேகப்பட வைக்கிறது. ஒருவேளை, அதனால்தான் என்னவோ, பெரும்பாலான இஸ்லாமிய தளங்கள் படத்தின் வலது பக்கத்தோடு தங்களைத்தாங்களே திருப்திப் படுத்திக்கொள்கின்றன.

இந்த வகையில் மக்களுக்கு செய்தியை அனுப்புவது கடவுளுக்கு மதியீனமாக இல்லையா, விசேஷமாக, எங்கே மக்களால் அரபியை படிக்க முடியாதோ, மேலும் எங்கே அதை காணுவதிலிருந்து மக்களை தடை செய்யும் அதிகாரிகள் உள்ளனரோ அங்கே அந்த ஜெர்மனியில் உள்ள ஒரு வயல் காட்டில்? நைஜீரியா அழகி போட்டியில் பங்கேற்பவர்களில் ஒருவரை முஹம்மது மணந்திருப்பார் என்று ஒரு நிருபர் சொல்வது போன்ற about அற்ப விஷயங்களுக்காக 200 பேர் வரை கொல்லுகின்ற வன்முறைக்கு முஸ்லிம்கள் தயாராகவே உள்ளனர். இந்த அற்புதத்தை அவர்கள் காணுவதிலிருந்து அவர்களை தடுப்பதற்கு ஜெர்மன் அதிகாரிகள் முயற்சித்தால் அவர்கள் உண்மையாகவே அமைதியாக இருப்பார்களா? இந்த இடத்தின் முகவரி என்ன? அது முஸ்லிம்களுக்கு ஒரு பொருட்டல்ல. அவர்கள் அற்புதத்தை காண விரும்புகிறார்கள். எதுவாக இருந்தாலும் போதும், இதைப்போன்ற ஒரு ஓவியமும் கூட.

 

Ali Sina

மொழி பெயர்ப்பு : ஆனந்த சாகர்