இன்று, ஜூலை 16, 2011 ல், எனது நண்பரிடம் இருந்து ஒரு ஈமெயில் பெற்றேன். அதில் அவர்  Ayatollah Montazeri யுடன் நடந்த எனது விவாதத்தின் போது நான் கொடுத்திருந்த பதிலுக்கு இஸ்லாமிய அறிஞரான திரு.தபதபாயி [Mr. Mustafa Huseini Tabatabaie] என்பவர் மறுப்புரை எழுதி இருக்கிறார் என்று எழுதி இருந்தார். இந்த மறுப்புரை நான்கு வருடங்களுக்கு முன் கொடுக்கப் பட்டது. இருந்தாலும், அதை அவர் எனக்கு அனுப்பவில்லை. இப்போதுதான் முதல் முறையாக அதைப் பார்க்கிறேன்.

இஸ்லாமையும் முகமதுவையும் நான் மதிக்கவில்லை என்று திரு.தபதபாயி கடிந்து கொள்கிறார். அவனுக்கு பணியாவிட்டால் நான் கொல்லப்படவேண்டும் என்று நினைக்கும் ஒரு மனிதனுக்கு என்னிடத்தில் எந்த மரியாதையும் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். அவ்வாறு மதிப்பது முட்டாள் தனமானது. இப்படிப்பட்ட ஒரு கொடூர மனிதனை மதிப்பது என்பது அவனுடைய முட்டாள் தனமான பொய்யான கூற்றுகளுக்கு மதிப்பளிப்பதாகும். மனித இனத்தை பிரித்து வெறுப்பையும் வன்முறையையும் தூண்டி விடும் எந்த ஒரு கோட்பாட்டையும் நான் மதிப்பதில்லை என்பது எனது விதி. அதன் படி, நான் கம்யுநிசத்தையோ, நசிசத்தையோ, பாசிசத்தையோ, தக்கீ [Thuggee] மதத்தையோ மதிப்பதில்லை. நான் இஸ்லாமையும் அதே தட்டில் தான் வைக்கிறேன்.

 

சித்தாந்தங்களை மதிக்க வேண்டும் என்பது ஒரு தவறான வாதம் (fallacy). எல்லா சித்தாந்தங்களும், மக்களாட்சியைப் போன்ற நல்லவைகளும் கூட, விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும். சோதனைக்குத் தாங்காவிட்டால் அவைகள் கைவிடப் படவேண்டும். நம்பிக்கைகள் மதிக்கப் படத் தேவை இல்லை. மனித உரிமைகளும், மனித மாண்புகளும் தான் மதிக்கப்பட வேண்டும். நாம் தவறு என்று நினைப்பதைக் கூட நம்புவதற்கு மக்களுக்கு உள்ள உரிமையை நாம் மதிக்க வேண்டும். இருந்தாலும் எந்த நம்பிக்கையும் விமர்சனத்திற்கு அப்பாற்ப் பட்டதல்ல.

 

ஆயிஷாவுடன் மணம்.

ஆயிஷாவின் வயதைப் பொறுத்த வரையில், ஹதிதுகளுக்கு இடையே வேறுபாடு இருக்கிறது என்றும் முகமது ஆயிஷாவை மணந்த போது அவளுக்கு 17 லிருந்து 20 வயது இருக்கும் என்று காட்டும் ஹதிதுகளும் இருக்கின்றன என்றும் திரு.தபதபாயி சொல்கிறார். இது இன்றைய இஸ்லாமிய அறிஞர்கள் கூறும் ஒரு சொத்தையான வாதம். எடுத்துக் காட்டாக, ஆயிஷா ஒரு ஆரம்பகால முஸ்லிம் என்று இப்னு ஐஷக் எழுதியுள்ளதை அவர் மேற்கோள் காட்டுகிறார். ஆயிஷா கூட தனக்கு நினவு தெரிந்த நாளில் இருந்தே அவரின் பெற்றோர்கள் முஸ்லிம்களாக இருந்தனர் என்று கூறுகிறார். அதாவது அவர் பிறந்ததே முஸ்லிம் குடும்பத்தில் தான். முகமதுடன் மணமுடிக்கும் போது தனக்கு ஆறு வயது என்று ஆயிஷாவே கூறும் விளக்கமான ஹதிதுகள் டஜன் கணக்கில் உள்ளன. தனது அம்மா முகமதிடம் தன்னை அழைத்துச் செல்ல வந்த போது தான் ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருந்ததாகவும், தன்னுடன் தனது விளையாட்டு பொம்மைகளை வைத்திருந்ததாகவும், தனது தோழிகள் விளையாட வருவார்கள் என்றும் அவர்கள் அனைவரும் சேர்ந்து தங்கள் பொம்மைகளுடன் விளையாடுவார்கள் என்றும் முகமது அறைக்குள் வரும் போது தனது நண்பர்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள் என்றும், ஆனால் முகமது அவர்களை அழைத்து அவர்களுடன் விளையாடுவான் என்றும் ஆயிஷா அறிவித்து இருக்கிறார். 17 அல்லது 20 வயது பெண் பொம்மைகளுடன் விளையாடுவதில்லை. இஸ்லாமில் பொம்மைகளுடன் விளையாடுவது தடை செய்யப்பட்டது என்றும் ஆனால் ஆயிஷா பருவ வயதை அடையாதவள் என்பதற்காக  விதிவிலக்கு அளிக்கப்பட்டார் என்றும் அதே ஹதித் கூறுகிறது. முகமது தன் கனவில் கப்ரியேல் ஆயிஷாவை தனக்குக் காட்டியதாகவும், இது கடவுளின் சித்தம் என்றால் அது நடந்து தான் ஆக வேண்டும் என்று அபு பக்கரிடம் அவன் கூறியதாகவும் மற்றொரு ஹதித் உள்ளது. அபு பக்கர் முகமதுவை ஆயிஷாவுடன் உடலுறவு கொள்வதற்கு அவள் பருவம் அடையும் வரை காத்திருக்குமாறு கெஞ்சினார். ஆயிஷா இதை விட வயதானவள் என்று கூறும் வகையில் எந்த ஒரு நம்பிக்கையான ஹதிதும் இல்லை. இந்த புதுக்கதை விடுபவர்களின் ஒரே ஒரு ஆதாரம் ஆயிஷாவின் பத்து வயது மூத்த அக்காவான அஸ்மாவுக்கு, அவர் 692 ம் ஆண்டில் இறக்கும்போது வயது 100 என்று கூறிக் கொள்ளும் ஒரு ஹதித் தான். ஆகையால் ஆயிஷா 602 ம் ஆண்டில் பிறந்திருக்க வேண்டும் என்றும் அவருடை மணம் 618 ம் ஆண்டில் நடந்ததால் அந்த சமயத்தில் அவருக்கு 6 வயதல்ல 16 வயது இருந்திருக்க வேண்டும். அவர்களின் இருப்பதிலேயே பலமான வாதம் இது தான். ஆனால் இது மிகவும் பலவீனமானது. தொண்ணூறு வயது மக்கள் மற்றவர்களுக்கு நூறு வயதுடையவர்களாக காணப் படுவார்கள்.உண்மையில் அஸ்மா 90 வயதாக இருக்கும் போது மக்கள் அவரை 100 வயதுடையவராக நினைத்தார்கள். இது ஒரு அறியாமைத் தவறு. அவருடைய சரியான பிறந்த நாள் அவ்வளவு முக்கியமில்லை. ஆகையால் வரலாற்று ஆசிரியர்கள் அதைப் பற்றி ஆராய்ச்சி செய்யவில்லை. அவருடைய முதிர்ந்த வயதை வலியுறுத்துவதற்காக ஒரு முழு எண்ணைக் கொடுத்து விட்டார்கள்.

 

தபதபாயியோ மற்ற புதுக்கதை விடுபவர்களோ இந்த வாதத்தை வைத்து இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் குழந்தை திருமணங்களை தடை செய்ய முயற்சி செய்யவில்லை என்பதும் சுவாரஸ்ய மானது. குழந்தை மணம் இஸ்லாமிய நாடுகளில் மிகவும் பொதுவானதும் ஷரியாவின் ஒரு அங்கமும் ஆகும். இஸ்லாமிற்கு எதிராக வரும் குற்றச் சாட்டுகளை சமாளிக்க மட்டுமே இந்த வாதம் பயன் படுத்தப்படுகிறது. ஒரு பக்கத்தில் முகமது ஒரு பீடோபில் இல்லை என்று சொல்லிக் கொண்டும் மறு பக்கத்தில் முகமதுவைப் போல் தாங்களும் பீடோபில்களாக குழந்தைகளை மணந்து கொண்டும் இருக்கிறார்கள்.

 

இது இஸ்லாமின் “உண்மையை மறைத்தல்” என்று பொருள் படும் ‘தக்கியா (Taqiyah) விற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

 

முகமதிற்கு சொம்பு தூக்குவதற்காக தபதபாயி மற்றொரு தவறான வாதத்தில் (fallacy) ஈடுபடும் விதமாக வயதான மனிதர்களை மணந்த இளம் பெண்களைப் பற்றிய சில எடுத்துக் காட்டுகளை கொடுக்கிறார். ஆயிஷா முகமதை ஏன்  விரும்பி இருக்கக் கூடாது என்று கேட்கிறார்.

 

இந்த வாதத்தில் உள்ள தவறு என்ன வென்றால், நாம் முகமதுவுக்கும் ஆயிஷாவுக்கும் இடையே உள்ள வயது வித்தியாசத்தைப் பற்றிப் பேசவில்லை. இளம் பெண்கள் வயதானவர்களை அவர்களின் பணத்திற்காக மணப்பது வழக்கம் தான். ஆனால் ஆயிஷா வெறும் ஆறு வயதுப் பெண். இந்த வயதில் ஒரு பெண்ணால் முடிவு எடுக்க முடிந்ததெல்லாம் அவள் உடைகளின் வண்ணங்களை மட்டுமே. இந்த அளவுக்கு குறைந்த வயது பெண்ணுக்கு திருமணத்தைப் பற்றி முடிவெடுக்கும் முதிர்ச்சி இருக்காது. உண்மையில் முகமது அந்த பிற்பகலில் “தன்னுடம் படுத்தது” மிகவும் “அதிர்ச்சியளிக்கக் கூடியதாக” இருந்தது என்று ஆயிஷாவே கூறியுள்ளார். அந்த சிறுமி கலவியின்பம் பற்றி ஒன்றும் அறிந்திருக்க வில்லை. அந்த கிழவன் தனது அந்தரங்கத்தை ஏன் தொடுகிறான் என்று அவளுக்குத் தெரியவில்லை. இங்கே உள்ள பிரச்சனை குழந்தைக் கலவி (pedophilia), வயது வித்தியாசமல்ல.

 

14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இரு சம்மதிக்கும் மனிதர்கள் தங்கள் குடும்பத்தின் அனுமதியோடு மணந்து கொள்வதில் எனக்கு என்ன பிரச்சனை என்று தபதபாயி பிரமிக்கிறார். நான் மக்களின் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்கிறார்.

 

என்னை பிரமிக்க வைப்பது என்னவென்றால் ஒரு ஆறு வயது சிறுமி திருமணத்திற்கு சம்மதிக்கும் அளவுக்கு முதிர்ச்சி அடைந்தவள் என்று திரு.தபதபாயி நினைப்பது தான். ஆயிஷாவின் பெற்றோர்கள் சம்மதித்து விட்டார்கள் என்றால் போதுமா. அவர்கள் மூளை சலவை செய்யப்பட்ட மத வெறியால் குருடாக்கப் பட்ட மனிதர்கள். இந்த வீடியோ வை பாருங்கள். http://www.youtube.com/watch?v=6oyHM7aZ1Ws. கொமேனி தனது பின்பற்றிகள் ஒருவரிடம் அவரின் ஐந்து வயது மகளுடன் உறவுகொள்ள விருப்பம் தெரிவிப்பதையும் அந்த மதியீணன் அதற்க்கு ஒத்துக் கொண்டதையும் தான் பார்த்ததாக ஒரு மனிதன் கூறுகிறார். புத்தி இழந்த பின்பற்றியின் ஒப்புதல் கொமேனியின் குற்றச் செயலை நியாயப்படுத்துமா? அபு பக்கர் ஒரு பின்பற்றி. அவன் தன் பகுத்தறிவை இழந்தவன். முகமது சொன்ன எல்லா மதியீனத்தையும் அவன் நம்பினான். குருட்டு நம்பிக்கை மனிதர்களை இப்படித்தான் மாற்றும். நம்முடைய சொந்த காலத்தில் நாம் David Koresh, James Jones போன்ற பல தனிநபர் வழிபாட்டை (Cult) உருவாக்கியவர்களைப் பார்த்து இருக்கிறோம். இவர்கள் தங்கள் பின்பற்றிகளை அவர்களின் மகள்களுடனும் மனைவிகளுடனும் கலவி செய்வதை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தினர். அந்த ஆண்களும் ஏற்றுக் கொண்டனர். இந்த கல்ட் (Cult) தலைவர்கள் தங்கள் பின்பற்றிகளின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்துகிறார்கள். இந்த அமைப்பு மிகவும் சிக்கலானது. இதைப் புரிந்து கொள்வதற்கு Understanding Muhammad and Muslims என்ற நூலைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

ஒரு சிறுமியுடன் கலவி கொள்வது நெறிபிறழ்ந்த ஒன்று. இதில் திரு.தபதபாயி அவர்களுக்கு எந்த இடத்தில் புரியவில்லை?

 

பீடோபிலியா குற்றச்சாட்டு முகமதுக்கு பொருந்தாது ஏனென்றால் பீடோபில்கள் கட்டாயமாக சிறுமிகளிடமே ஈர்ப்பு உடையவர்கள் என்றும் ஆனால் முகமதின் பல மனைவிகள் சிறுமிகள் இல்லை என்றும் தபதபாயி கூறிகிறார்.

 

இது ஒரு தவறான வாதம். கொலைகுற்றமோ கொள்ளைக்குற்றமோ சாட்டப்படுவதற்கு ஒருவன் ஒரு தொடர் கொலைகாரனாகவோ தொடர் கொள்ளைக்காரனாகவோ இருக்க வேண்டிய அவசிய மில்லை. பீடோபில்லாக இல்லாத ஒருவன் சிறுமிகளால் கலவி ரீதியில் ஈர்க்கப் படமாட்டான். அம்மணமான சிறுமிகளைப் பார்த்தால் எனக்குள் தோன்றும் ஒரே உணர்வு தந்தையின் பரிவு தான். 12 வயது வரைக்கும் உள்ள சிறுமிகளை என்னால் காமக் கண் கொண்டு பார்க்க முடியாது. ஒரு வயது வந்த மனிதன் சிறுவர் சிறுமிகளை கண்டு காமக் கிளர்ச்சி அடைந்தால் அவன், தன் இச்சையை செயல் படுத்த முயற்சி செய்யாவிட்டாலும், ஒரு பீடோபில் தான்.

 

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு ஆணுக்கு மற்றொரு ஆணின் மீது காம இச்சை வருமா? அவர் ஒரு ஓரினச் சேர்க்கையாளராக (homosexual) இருந்தால் ஒழிய அது சாத்தியமில்லை. ஒரே பாலினத்திடம் உங்களுக்கு கவர்ச்சி இருந்தால், அதை செயல் படுத்தாவிட்டாலும், நீங்கள் ஓரினச் சேர்க்கையாளர் தான். முகமது குழந்தைகளின் மீது உள்ள தனது காம இச்சையை செயல் படுத்தினான்.

 

முகமதுக்கும் கதீஜாவுக்கும் இடையேயான திருமணமானது சக சார்பினால் (codependency) நிகழ்ந்தது. இருவரும் மண அளவில் ஆரோக்கியமானவர்கள் அல்லர். அவர்களுக்கு சில மனநோய்கள் இருந்தன. இதைப் பற்றி என் நூலில் எழுதியுள்ளேன். அவர்களின் திருமணம் ஒரு ஆரோக்கியமற்ற சக சார்பின் (Symbiosis) அடையாளம், முதிர்ந்த காதல் அல்ல. முகமதுக்கு கதீஜா ஒரு sugar mommy [தன்னை விட இளையவன் தன்னை காதலிப்பதாக நினைத்துக் கொண்டு அவனை மணக்கும் வயதான செல்வம் மிகுந்த பெண்மணி]

 

முகமதின் மற்ற எல்லா மனைவிகளும் கூட அவன் மணக்கும் போது பதின்ம (teenage) வயது பெண்கள் தான். அவர்களில் சிலர் முகமது அவர்களின் கணவர்களை கொன்றதால் விதவை ஆக்கப் பட்டவர்கள். சௌதாவைப் பொறுத்த மட்டில், முகமது அவளை மணக்கும் போது அவள் ஒரு வயதான பெண் இல்லை.

 

அவருக்கு என்ன வயது இருக்கும்? எந்த குறிப்பும் இல்லை. சௌதா ஹிஜ்ரா [முகமது மக்காவில் இருந்து மதீனாவுக்கு குடி பெயர்ந்தது] ஆண்டு 54ல் முவவியா (Muaviyah) ஆட்சியில் இறந்தார் என்று இப்னு சாத் (Ibn Sa’d) எழுதுகிறார் [Tabaqat V.8, page 56] கதீஜா இறந்து சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு முகமது சௌதாவை மணக்கிறான். அதாவது ஹிஜ்ராவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன். ஆகையால் சௌதா முகமதை மணந்து 57 வருடத்திற்கு பிறகு இறந்தார். ஒரு சராசரி மனிதரின் வயது என்ன? சௌதா ஒரு பெரிய உருவம் கொண்ட பெண். குண்டானவர்கள் அதிக நாட்கள் வாழ்வதில்லை. ஆனால் அவர் என்பது ஆண்டுகள் வரை வாழ்ந்ததாக வைத்துக் கொள்ளலாம். 80-57=23. அதாவது 50 வயது முகமது சௌதாவை மணக்கும் போது அவருக்கு வயது 23. சௌதாவின் முதல் கணவன் இறந்த போது அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் இது சரியாகத் தான் இருக்கும். சௌதா தொண்ணூறு வயதில் இறந்திருந்தாலும், அவருக்கு முகமதை மணந்த போது 33 வயதிற்கு மேல் இருக்காது. அதாவது அவரின் வயது முகமதின் வயதில் பாதி தான். ஆனால் அவள் அவனின் மற்ற மனைவிகளை விட வயதானவள். மற்ற மனைவிகள் முகமதை விட 36 முதல் 34 ஆண்டுகள் இளையவர்கள். அதனால்தான் முகமது சௌதாவுடன் படுக்காமல் அவளுக்கு தலாக் தலாக் தலாக் [மணவிலக்கு] சொல்ல நினைத்தான். [Tabaqat V. 8 p. 53-54]

 

திரு தபதபாயி யின் மற்றொரு வாதம் என்னவென்றால் முகமதின் திருமணங்கள் எல்லாம் அரசியல் காரனங்களுக்காகவும் உறவினர்களுடன் நட்பு பேணுவதற்காகவும் என்பது தான். சந்தேகத்தின் பலனை அவருக்குக் கொடுத்து அவரின் வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம். நன்னெறிப் படி இது சரியா? முகமது தனது அரசியல் சதுரங்கத்தில் பெண்களை சிப்பாய்களாக நடத்தி இருக்கிறான் என்பதைத்தான் இது நிறுவுகிறது. தனது கணவன் தன்னை தனது சொந்த மதிப்பிற்காக விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல், கணவனின் அரசியல் பேராசைகளுக்காக தன்னை பயன்படுத்திக் கொள்வதற்காக திருமணம் செய்து இருக்கிறான் என்று தெரிந்தால் அந்த பெண்ணுக்கு ஏற்படும் அவமானத்தைப் புரிந்து கொள்ள நாம் ஒரு மனோதத்துவ நிபுணராக இருக்கத் தேவை இல்லை.

 

முகமதின் திருமணங்கள் எல்லாமே அரசியல் காரணங்களுக்காக என்று எல்லா முஸ்லிம்களுமே கண்ணை மூடிக்கொண்டு ஒப்பிப்பார்கள். இது முகமது மற்றவர்களை தன் சொந்த லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பவாதி என்பதற்கு ஒரு பலமான ஆதாரம் என்பதை அவர்கள் உணர்வதில்லை என்பது என்னை பிரமிக்க வைக்கிறது.

 

எப்படி இருப்பினும், அவன் தனது காமப்பசிக்காகவும் இவ்வளவையும் செய்தான் என்பது உறுதி. ஜரீர் இப்னு அப்துல்லா என்ற பெயருடைய முஸ்லிமை முகமது “உங்களுக்கு நிக்கா ஆகிவிட்டதா?” என்று கேட்டான். அவரும் ஆம் என்று பதில் அளித்தார். முகமது “சிறுமியையா பருவமடைந்த பெண்ணையா ?” என்று தொடர்ந்தான். அவர் தான் ஒரு பருவமடைந்த பெண்ணை மணந்ததாக கூறினார். அதற்கு முகமது “ஏன் சிறுமியை மணக்க வில்லை? அப்படி செய்திருந்தால் நீங்கள் ஒருவரை ஒருவர் [குறிகளை] தடவிக்கொண்டு விளையாடி சுகம் பெற்றிருக்கலாமே? என்று சொன்னான். [Bukhari Volume 3, Book 34, Number 310]

 

 

சௌதா கவர்ச்சியாய் இல்லாததால் தான் முகமது அவருக்கு மணவிலக்கு அளிக்கத் துடித்தான் என்று இப்னு சாத் (Ibn Sa’d) தெளிவாக எழுதி இருக்கிறார். அவள் தன்னை விவாகரத்து செய்ய வேண்டாம் என்றும் கெஞ்சி முகமது அவருடன் படுக்க வேண்டிய முறை நாளை ஆயிஷாவுடன் படுக்க விட்டுக் கொடுப்பதாக கேட்டுக் கொண்டதால்தான் அவன் விவாகரத்து எண்ணத்தை கைவிட்டான். சௌதா முகமதின் மனைவி என்ற தகுதியை பெயருக்காகவும் பணத்திற்காகவும் தக்க வைத்துக்கொள்ள விரும்பினார். அவருக்கு மறுமணத்திற்கான வாய்ப்பு குறைவே. விவாகரத்து செய்யப்பட்டிருந்தால் அவர் வறுமையில் வாட வேண்டி இருந்திருக்கும். முகமதின் மனைவியாக தொடர்வது மிகவும் லாபகரமானதாக இருந்தது. ஒவ்வொரு அதிரடிக் கொள்ளையின் போதும், முகமதின் மனைவிகள் தங்கள் பங்காக கொள்ளைப்பொருள்களையும் அடிமைப்படுத்தப்பட்டவர்களையும் பெற்றார்கள். ஓமர் கலிபாவாக இருந்த போது சௌதாவுக்கு ஒரு சாக்கு நிறைய காசுகளை அனுப்பினான் (அனேகமாக பாரசீகத்திலும் எகிப்திலும் அடித்த கொள்ளையாக இருக்கும்). அது என்ன? என்று சௌதா கேட்டார்.  அவர்கள் காசுகள் என்றார்கள். “சுபஹானல்லா பேரீச்சம்பழ சாக்கிலே பணம் அனுப்புகிறார்களே?” என்று வியந்தார் அவர்.

 

முகமதின் வழிப்பறிக் கொள்ளைகள்.

முகமதின் வழிப்பறிக் கொள்ளைகளை வழிப்பறிக் கொள்ளைகள் என்று கூறுவது அநாகரீகம் என்று திரு.தபதபாயி என் மீது குற்றம் சாட்டுகிறார். முகமதின் குற்றச் செயல்களைக் குறிக்க மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார். பிறகு முஸ்லிம்கள் அரைத்து அரைத்து புளித்துப் போன மாவையே அரைக்கிறார்.

 

முகமதுவும் அவனின் சீடர்களும் மெக்காவில் கொடுமைப்படுத்தப் பட்டார்கள் என்றும் அவர்களின் உடைமைகள் பறிக்கப்பட்டன என்றும் கூறுகிறார். ஆகையால் அவர்கள் மெக்கா வணிகர்களின் கேரவான்களை (Caravan = சரக்கு ஏற்றிச் செல்லும் ஒட்டக அணிவரிசை) தாக்கி தங்கள் இழந்த உடமைகளை திரும்பப் பெற்றார்கள். நான் என் நூலில் முஸ்லிம்கள் சொல்லிக்கொள்ளும் கொடுமைகளுக்குட்படுத்துதல் (persecution) என்பது ஒரு கட்டுக்கதை என்று விளக்கியுள்ளேன். குறைஷிக்கள் (Quraish) கோபமடைந்தது முகமது ஒற்றைக்கடவுளை போதித்ததால் அல்ல (யூதர்களும், கிருத்துவர்களும் சபியன்களும் கூட ஒற்றைக்கடவுள் வழிபடுபவர்கள் தான்.) மாறாக அவன் ஒவ்வொரு சூழ்நிலையிலும் குறைஷிக்களின் கடவுள்களை கேவலப்படுத்தியதால் தான் என்று  இப்னு ஐசக்கும் தபரியும் தெளிவாக எழுதியுள்ளனர். முகமது வேண்டுமென்றே அவர்களை கோபமூட்டினான். அவனுடைய நோக்கம் பிரிவினை விதைப்பது தான். பிரிவினையினால் மட்டுமே அவன் தன சீடர்களை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அவர்கள் தங்கள் குடும்பங்களை வெறுத்தால் மட்டுமே, இவனை பூஜிப்பார்கள்.

 

குறைஷிக்களின் மூப்பர்கள் ஒன்று கூடி, “நாம் இவனின் தொல்லையைப் போல் வேறெதையும் இதுவரை எதிர்கொண்டதே இல்லை. அவன் நமது வழியை முட்டாள்தனமானது என்கிறான், நமது முன்னோர்களை அவமதிக்கிறான், நமது மதத்தை ஏளனப்படுத்துகிறான், ஊரைப் பிரித்து நம் கடவுள்களை கேவலப் படுத்துகிறான்” என்று கூறினார்கள் என்று இப்னு ஐசாக் விவரிக்கிறார். அந்த சமயத்தில் முகமது காபாவில் நுழைந்து சுற்றி வருகிறான். ஒரு மூப்பர் அவனை அழைத்து ஊரை பிரிப்பதை நிறுத்து என்று கூறுகிறார். முகமது நிற்கிறான். அவனது முகம் கோபத்தில் சிவக்கிறது. “குரைஷிக்களே நான் சொல்வதை கேட்பீர்களா? என் உயிரை தன் கையில் கொண்டுள்ளவனின் மூலம் நான் உங்களுக்கு அழிவைக் கொண்டுவருகிறேன்.” என்று கத்தினான். [Sira p. 131]

 

பஹாஈக்கள் இஸ்லாமை அவமதிக்கவில்லை. அவர்கள் யாரையும் கொல்லவேண்டும் என்று அறிவிக்கவில்லை. இருந்தாலும், முஸ்லிம்கள் அவர்களை அவர்களின் தோற்றத்தில் இருந்தே ஈவு இரக்கம் இல்லாமல் கொடுமைக்கு உட்படுத்திக் கொண்டும் படுகொலைகள் புரிந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் திரு.தபதபாயி முஸ்லிம்கள் மெக்காவில் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்ற கட்டுக்கதையைக் கூறத் துணிகிறார். இவர் ஈரானில் நடக்கும் பஹாஈகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எந்த கண்டனமும் தெரிவிக்க மாட்டார்.

 

மெக்காவில் முஸ்லிம்களுக்கு எதிராக எந்த கொடுமைகளும் நிகழவில்லை. ஏமாற்றுப் பேர்வழி என்று தாங்கள் நம்பிய மனிதனால் தங்கள் மக்கள் தவறான வழியில் நடத்தப் படுவதையும் அவ்வாறு மாற்றப்பட்டு ஊர் பிளவு படுவதையும் விரும்பாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாத்தனர். இது கொடுமைக்குட்படுத்துதல் அல்ல தங்கள் சொந்தங்களைப் பாதுகாத்தல். பிலால் அடிக்கப்பட்டது முஸ்லிமாக மாறியதற்கு அல்ல மாறாக அவர் தன்னை அடிமைப்படுத்தி வைத்திருப்பவனின் மதத்தை அவமதித்தற்காகத் தான். உமைய்யா பிலாலை அபு பக்கர் வாங்கிக் கொள்ள முன்வந்த போது விற்று விட்டான். இதில் இருந்து அவன் பிலால் முஸ்லிமாக மாறியுள்ளதைப் பற்றி கவலைப் படவில்லை என்று தெரிகிறது. ஆனால் அவன் தன்னால் அடிமைப்படுத்தப்பட்ட ஒருவன் தனது கடவுள்களை அவமதிக்க விரும்பவில்லை. நியாயம்தானே.

 

மெக்காவில் முஸ்லிம்கள் கொடுமைகளுக்கு உட்படுத்தப் பட்டார்கள் என்று கூறிக்கொள்ளப் படுவது வெறும் கட்டுக்கதை என்று என் நூலில் விளக்கியுள்ளேன். மெக்காவில் முகமதுக்கு எந்த அபாயமும் இல்லை என்பதற்கு ஒரு ஆதாரம் அவனுடைய பெரியப்பா அப்பாஸ் அகபாவில் பேசிய பேச்சு தான். யாத்ரிபில் [Yathrib=மதீனாவின் பழைய பெயர் ] இருந்து புதிதாக இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர்கள் மெக்காவிற்கு வந்து முகமதிடன் தங்கள் பணிவை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்க வந்த போது அப்பாஸ் எழுந்து நின்று அவர்களிடம், ” கஸ்ரஜ் மக்களே, முகமதுக்கு எங்களிடையில் எந்த நிலை என்று உங்களுக்குத் தெரியும். நாங்கள் அவனை எங்கள் சொந்த மக்களிடமிருந்து பாதுகாத்து வைத்துள்ளோம். அவன் தனது மக்களிடையே மதிப்புடனும், பாதுகாப்புடனும் வாழ்கிறான். ஆனால் அவன் உங்களுடன் இனைந்து உங்களிடத்திற்கு வருகிறான். உங்களால் அவனை அவனுடைய எதிரிகளிடமிருந்து பாதுக்காக முடியும் என்று நினைத்தால் அதற்கான பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அவன் உங்களிடம் வந்த பிறகு அவனை கைவிட்டு காட்டிக்கொடுப்பதாக இருந்தால், இப்போதே அவனை விட்டுவிட்டு போய் விடுங்கள். அவன் இங்கேயே பாதுகாப்பாகத் தான் இருக்கிறான். ” என்று கூறினார். [Sira p. 203] இந்த பேச்சு குரான் 8:30 ல் சொல்லப்பட்ட நம்பிக்கையற்றவர்கள் [இஸ்லாமை ஏற்காதவர்கள்] முகமதை கைது செய்யவோ, கொலை செய்யவோ, நாடு கடத்தவோ சதி செய்கிறார்கள் என்ற கூற்று பொய்யானது என்று காட்டுகிறது. இந்த இரண்டு முரண்பட்ட கூற்றுகளை எப்படி புரிந்து கொள்வது? முகமதுக்கு உண்மை ஒரு பொருட்டே இல்லை. அவனுக்கு எந்த சமயத்தில் எது தேவையோ அதைச் சொன்னான்.

 

முஸ்லிம்கள் விரும்பிச் சொல்லும் மற்றொரு கட்டுக்கதை முகமது அமீன் என்று அழைக்கப்பட்டது அவன் மெக்காவினரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தான் என்பதால்தான் என்பதுதான். மக்கள் தங்கள் உடமைகளை முகமதிடம் நம்பி ஒப்படைத்தனர் என்று திரு.தபதபாயி கூறுகிறார். ஏன்? முகமது அடகுக்கடை ஏதும் வைத்திருந்தானா? வங்கியை நடத்தினானா? பெட்டக வசதி செய்து தந்திருந்தானா? மக்கள் ஏன் தங்கள் உடமைகளை அவனிடம் நம்பி விட்டுச் சென்றார்கள்?

 

1.4 பில்லியன் முஸ்லிம்கள், 14 நூற்றாண்டுகளாக இதே அறிவீனத்தைத் தான் ஒப்பித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் கூடவா ஏன் என்று யோசிக்கவில்லை? மெக்காவினர் முகமதுவை நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் என்று நினைத்திருந்தால் ஏன் அவனை பொய்யன், மஜ்னூன், பைத்தியம் என்றெல்லாம் அழைக்க வேண்டும்?

 

அமீன் என்றால் டிரஸ்ட்டி (Trustee) என்று பொருள். அது மற்றவர்களின் சார்பாக வாங்கல் விற்றலில் ஈடுபடுபவருக்கு கொடுக்கப்படும் பெயர். ஒருவர் தன் தொழிலின் காரணமாக பள்ளியின் அல்லது நகரத்தின் டிரஸ்ட்டியாக இருக்கலாம். அமீன் என்ற பதம் எல்லா விதமான தொழிலும் பயன்படுத்தப் படுகிறது. சில எடுத்துக்காட்டுகள்: Amin El-Makataba நூலகத்தின் டிரஸ்ட்டி Amin El-Shortaa காவல் துரையின் டிரஸ்ட்டி மற்றும் Majlass El-Omnaa டிரஸ்ட்டிகளின் கவுன்சில். முகமதின் மகளான ஜைனாபின் கணவன் அபுல் ஆஸ் ஒரு வியாபாரி என்பதால் அமீன் என்ற அழைக்கப் பட்டான். அவன் வேறு வழியில்லாமல் போகும் வரை இஸ்லாமை ஏற்கவில்லை. அவர் இஸ்லாமுக்கு மாறாவிட்டால் அவரை கைவிடும்படி ஜைனாபை கட்டளை இட்டான் முகமது.

 

முகமது ஒருமுறை கதீஜாவுக்காக டிரஸ்ட்டி (Amin) யாக இருந்தான். அம்முறை கதீஜா சார்பாகக சரக்கை டாமஸ்கஸ் எடுத்துச் சென்று விற்றான். அவனை மெக்காவினர் நம்பிக்கையானவன் என்று நினைத்திருந்தால் அவன் கடவுளிடம் இருந்து ஒரு செய்தியை பெற்றதாகக் கூறிய போது கேலி செய்திருக்க மாட்டார்கள். முகமதே குரானில் ஒப்புக்கொண்டுள்ளபடி அவனை நன்கு அறிந்தவர்கள் அவனை பொய்யன் என்றும் கிறுக்கன் என்றும் தான் அழைத்தார்கள். (Q 15:6) இந்த குற்றச் சாட்டை அல்லாவே மறுப்பதாக “ஆகையால் நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர்; பைத்தியக்காரருமல்லர்.” (Q52: 29) என்று கூறினான்.

 

முஸ்லிம்களை பாதிக்கப் பட்டவர்களாகவும், கொடுமைகளுக்கு உட்படுத்தப் பட்டவர்களாகவும் குரான் பல இடங்களில் கூறிக்கொள்கிறது. ஆனால் இஸ்லாமின் வரலாறு அந்த கூற்றுக்களை உறுதி செய்யவில்லை. நடுநிலையான வரலாற்று ஆதாரங்கள் நம்மிடையே இல்லை. நம்மிடம் இருப்பதெல்லாம் குரானின் கூற்றுக்களை மறுக்கும் இஸ்லாமிய நூல்கள் தான்.

 

திரு.தபதபாயி குரானை ஏதோ கடவுளின் வார்த்தையாகவும் எல்லோரும் அதை நம்பவேண்டும் என்ற நிலையில் அதை மேற்கோள் காட்டுகிறார். முஸ்லிம்களுக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். நான் அதை கடவுளின் வார்த்தையாக பார்க்க வில்லை. அந்த புத்தகம் ஒரு மனம் பிறழ்ந்த மனிதனின் பிரமைகள். எனது கூற்று ஆரம்பகால முஸ்லிம்களின் அறிவுப்புகளை ஆதாரமாகக் கொண்டது. கொடுமைகளுக்கு உட்படுத்துதல் என்று கூற்று வெறும் கட்டுக்கதை தான் என்பது என் முடிவு.

 

 

 

 

மெக்காவில் முஸ்லிம்கள் கொடுமைகளுக்கு உட்படுத்தப் பட்டார்கள் என்ற பொய்யை உண்மையாக ஏற்றுக்கொண்டு திரு.தபதபாயி கேரவான்களைத் தாக்கி அதன் பொருள்களைக் கொள்ளையடிப்பதை நியாயப் படுத்துகிறார். இன்னும் 7 ஆம் நூற்றாண்டு மனிதனைப் போல சிந்திக்கும் 21 ஆம் நூற்றாண்டில் வாழும் மனிதனின் இந்த நியாயம் மிகவும் பிரமிப்பானது.

 

மெக்காவினர் முஸ்லிம்களை கொடுமைப்படுத்தி மெக்காவில் இருந்து துரத்தி விட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அது உண்மை அல்ல. ஆனாலும் ஒரு விவாதத்திற்காக இதை ஏற்றுக் கொள்வோம். அது அந்த நகரத்தில் இருந்து வரும் கேரவான்களை தாக்கி கொள்ளை யடிக்க உரிமை கொடுக்குமா? நான் ஒரு நகரத்தின் சிலரால் கொடுமைக்கு உள்ளாகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக அந்த நகரத்தில் உள்ள யாரை வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாமா? இது கேனத்தனமாது. ஆனால் இதுவும் கூட நயவஞ்சகம் தான். பநி கைனுகாவின் (Bani Qainuqa) யூதர்கள் முஸ்லிம்களை கொடுமைப் படுத்தினார்களா? முகமது ஏன் அவர்களின் கோட்டையை முற்றுகை இட்டு, அவர்களை நாடு கடத்தி, அவர்களின் உடமைகளை கொள்ளையடித்தான்? அவன் இதையே தான் ஒவ்வொரு இடங்களிலும் செய்தான். முகமது தனது வாழ்க்கையின் முதல் ஐந்து வருடங்களில் ஹவஜின் (Hawazin) மக்களிடம் வளர்ந்தான். பிறகு அவர்களின் மீது அதிரடித் தாக்குதல் செய்து அவர்களைக் கொன்று அவர்களின் உடமைகளைக் கொள்ளையடித்தான். அவர்களின் குற்றம்தான் என்ன?

 

தாரிக் தபரியின் (Tarikh Tabari) நூல் எல்லா பெர்சியன் பேசும் மக்களுக்கும் கிடைக்கக் கூடியது. இணையத்தில் இருந்து அதை டவுன்லோட் செய்து கொள்ளலாம். முகமது செய்த குற்றங்களைப் பற்றிய குறிப்புகள் பாகம் 3, 4 மற்றும் 5 ல் உள்ளது. இந்த நூலைப் படிக்கும் கடுகளவேனும் மனிதாபிமானம் (பெர்சிய மொழியில் ensaniyyat) உள்ள எந்த பெர்சியனும் தன்னை அதற்கு மேலும் ஒரு முஸ்லிம் என்று அழைத்துக் கொள்ளமுடியாது.

 

முஸ்லிம்கள் மெக்காவில் கொடுமைப்படுத்தப் படவில்லை என்றும் முகமது தான் முஸ்லிம்களை மெக்காவை விட்டு வெளியேறச் சொன்னான் என்றும் நான் கூறியதை திரு.தபதபாயி அநியாயம் என்று குற்றம் சாட்டுகிறார். நான் எனது கூற்றை முஸ்லிம் வரலாற்றாளர்கள் என்ன எழுதி இருக்கிறார்களோ அதை ஆதாரமாகக் கொண்டே உருவாக்கினேன். முகமதின் பொய்ப் பிரசாரங்களை நம்பி அல்ல.

 

சில முஸ்லிம்கள் அபிசினியாவிற்கு [இன்றைய எத்தியோப்பியா] ஓடிப் போனபோது, அவர்களின் பெற்றோர்கள் அந்த நாட்டு அரசனான நெகுஸ் இடம் அவர்களை திரும்ப மெக்காவிற்கு அனுப்பும் படி வேண்டிக் கொள்வதற்காக அமரையும் (Amr ibn ‘As)  அப்துல்லாவையும் (Abdulah ibn Abu Rabi’) அனுப்பினார்கள். முஸ்லிம்கள் இதை மதம் மாறியவர்களை கொல்லவோ அல்லது தீங்கிளைக்கவோ செய்த மெக்காவினரின் சதித்திட்டமாக காட்ட விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் வரலாற்றுப் புத்தகங்கள் அப்படி சொல்லவில்லை. மெக்காவினர் தங்கள் மகன்களை திரும்பப் பெற விரும்பினார்கள். ஓடிப்போனவர்களில் இருவர், Sahm மற்றும் Sa’id, அமரின் மகன்கள். மொத்தத்தில் அவருடைய குடும்பத்தில் இருந்து 14 பேர் அபிசினியாவிற்கு [அப்பொழுது அது ஒரு கிருத்துவ நாடு] போய் இருந்தார்கள். ஓடிப்போனவர்களில் அப்துல்லாவின் மகன் Ma’mar ம் இருந்தான். அரசனை சந்திக்கும் முன் இந்த இருவரும் பேசிக்கொண்டார்கள். அமர் “அவர்கள் அனைவரையும் காலி செய்யும் அளவிற்கு நாளை அரசனிடம் ஒன்றைச் சொல்வேன்” என்று சொன்னார். அப்துல்லா அப்படி செய்யவேண்டாம் என்று அவரிடம் கெஞ்சினார். “அவர்கள் நமக்கு எதிராக திரும்பி இருந்தாலும், அவர்கள் நம் உறவு தான்” என்று சொன்னார். அமர் என்ன சொல்ல விரும்பினார்? அவர் முகமது இயேசு கடவுளின் குழந்தை அல்ல என்றும் ஒரு அடிமைப் படுத்தப் பட்டவன் என்றும் கூறுகிறான் என்று [கிருத்துவ நாட்டு] அரசனிடம் கூறவிருந்தார்.

 

இந்த மக்கள் முஸ்லிம்களை கொடுமைப்படுத்தினார்கள் என்று கூற முடியுமா? அபிசினியாவிற்கு கிளம்பும் முன், அபு தாலிப் (Abu Talib) அமரையும் அப்துல்லாவையும்  அழைத்து தனது இரு மகன்களும் (Ja’far & Amr) கூட, ஓடிப்போய் விட்டார்கள் என்று கூறினார். அவர் தான் எழுதிய ஒரு கவிதையை அரசனிடம் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார். அந்த கவிதையில் அவர் அரசனை தங்கள் குழந்தைகளை கருணையுடன் நடத்தும்படி வேண்டிக்கொண்டார். பிறகு அவர், “மிகவும் தீவிர எதிரிகள் பெரும்பாலும் மிகவும் நெருங்கிய உறவுகள் தான்” என்று கூறினார். இந்த மற்றும் என் நூலில் உள்ள மேலும் பல ஆதாரங்களுக்கும் மாறாக மெக்காவினர் முஸ்லிம்களை கொடுமைப் படுத்தினர் என்று நம்மை நம்பவைக்க முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர். முஸ்லிம்களுக்கு உண்மை என்று ஒன்றும் இல்லை. அவர்களுக்கு பொய் பிரச்சாரம் மட்டுமே முக்கியம்.

 

இது போன்ற கதைகள் பல தபரியிலும், இப்னு ஐஷகிலும், தபகத்திலும், இருக்கின்றன. முஸ்லிம்கள் முகமது குரானில் சொன்ன ஒவ்வொரு பேத்தல்களையும் கடவுளின் வார்த்தையாக எடுத்துக்கொள்ளாமல் அந்த புத்தகத்தை ஆரம்பகால முஸ்லிம் வரலாற்றாளர்கள் எழுதிய இஸ்லாமிய வரலாற்றின் அடிப்படையில் படித்தால் அவர்கள் முகமதின் மலை போன்ற பொய்களை தாங்களாகவே கண்டுகொள்வார்கள்.

 

முசாப் (Mus’ab ibn Umair) என்ற நன்கு உடுத்திய மெக்காவின் இளைஞனைப் பற்றி இப்னு சயத் எழுதி இருக்கிறார். அவனின் பெற்றோர்கள் அவனை மிகவும் நேசித்தார்கள். அவனுடைய தாய் குனாஸ் (Khunaas) ஒரு வசதியான மற்றும் செல்வாக்கு மிக்க பெண். அவர் அவனுக்கு சிறந்த உடைகளையும் விலை உயர்ந்த வாசனை திரவியங்களையும், பகட்டான காலணிகளையும் வாங்கித் தந்தார். முசாப் மெக்காவின் முதல் மதம்மாறிகளில் ஒருவன். அவன் தனது மாற்றத்தை ரகசியமாக வைத்திருந்தான். குனாஸ் அதைப் பற்றி அறிந்த போது நொடிந்து போனார். அவனை வீட்டினுள் பூட்டி வைத்தார். முகமது தன் பின்பற்றிகளை அபிசினியாவிற்கு ஓடிப்போகும்படி கட்டளை இட்டபோது ஓடியவர்களுள் அவனும் ஒருவன். முஸ்லிம்கள் உட்படுத்தப்பட்ட “கொடுமைகள்” இதுதான். அவர்கள் திரும்பி வந்தவுடன், அவனின் தாய் அவனை முகமதை விட்டு விலகுமாறு கெஞ்சினார். ஆனால் அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அவனுக்கு பணம் கொடுப்பதை நிறுத்திக் கொண்டார். முசாப் பணிய வில்லை. அவன் கிழிந்த உடைகளை அணிந்து கொண்டு தனது நம்பிக்கையில் நிலையாக இருந்தான். முகமது அவனை மதீனாவுக்கு மதப்பரப்பியாக அனுப்பினான். அவன் வெற்றிகரமாக எழுபது பேரை மதம் மாற்றினான். அந்த எழுபது பேர்தான் அகபாவில் முகமதை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தவர்கள்.

 

முசாப் மெக்காவிற்கு திரும்பி வந்தபோது அவன் தனது அம்மாவை பார்க்கச் செல்லவில்லை. அவர் தன் மகன் ஊருக்கு வந்திருக்கிறான் என்று கேள்விபட்டபோது, மிகவும் ஏமாற்றம் அடைந்தார். தனது தாயிடம் இவ்வளவு நன்றி கெட்டவனாக இருக்கிறாயே என்று கேட்டு செய்தி அனுப்பினார். நான் வசிக்கும் ஊருக்கு வந்திருக்கிறாய் ஆனால் என்னைப் பார்க்க வரவில்லையே என்று கேட்டு அனுப்பினார். அவன் தான் தூதரைப் பார்க்காமல் யாரையும் பார்க்க செல்லமாட்டேன் என்று பதில் அனுப்பினான். அவன் தன்னை பார்க்க வந்தபோது, அவர் அவனை தன்னுடனேயே தங்கிவிடும்படி கெஞ்சினார். மிகவும் வற்புறுத்த வேண்டாம் என்றும் அப்படி இல்லையென்றால் அவரைக் கொல்லவும் வேண்டி வரலாம் என்றும் கூறினான். இதைக்கேட்டு அழுது கொண்டே விடையளித்தார் தாய். அவன் தன் தாயிடம் தங்கள் நன்மைக்குத் தான் சொல்கிறேன் என்றும், அல்லாவைத்தவிர வேறு எந்த அல்லாவும் இல்லை என்றும் முகமது அவரின் தூதன் என்றும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டான். அவர் நட்சத்திரங்கள் மின்னும் வரை தன் நம்பிக்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றும் அவன் வேண்டுமானால் எதை வேண்டுமானாலும் நம்பிக்கொள்ளலாம் என்றும் கூறிவிட்டார். முசாப் அவரை விட்டு கிளம்பி விரைவிலேயே மதீனாவில் குடி புகுந்தான். முகமதின் அதிரடி தாக்குதல்களிலும் வழிப்பறிக் கொள்ளைகளிலும் கலந்து கொண்டான். உஹுத் போரின்போது கொல்லப் பட்டான். அவனின் தாயாரும் அங்கே இருந்தார். தனது மகனின் உடலை தன் கைகளில் ஏந்திக்கொண்டு கதறினார். [Tabaqat V. III p. 100-102] இதுதான் பெர்சிக்யூஷனா?

 

இதைத்தான் முஸ்லிம்கள் பெர்சிக்யூஷன் என்று சொல்கிறார்கள். வெறுப்பையும் பிரிவினையையும் விதைத்து ஊரைப் பிரிக்கும் ஒரு மனிதனின் பின்னால் தங்கள் கீழ்படியாத குழந்தைகள் செல்வதை தடுக்க மனமொடிந்த பெற்றோர்கள் முயன்றனர். இது பெர்சிக்யூஷன் அல்ல. தாய் தந்தைப் பாசம். என் குழந்தை ஒரு கல்ட்டில் சேர்வதில் இருந்து தடுக்க என்னால் இயன்றவற்றைச் செய்வேன். முஸ்லிம்கள் தங்கள் இஸ்லாமிய நாடுகளில் உள்ள சிறு பான்மையினருக்குச் செய்யும் கொடுமைகள் தான் பெர்சிக்யூஷன்.

 

நான் எப்போதும் சொல்வதைப் போல நாம் முஸ்லிம்களின் பதங்களை புரிந்து கொள்ளவேண்டும். நாம் பயன்படுத்தும் அதே வார்த்தை முஸ்லிம்கள் பயன்படுத்தும் போது அதன் பொருள் முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இருக்கும். உதாரணத்திற்கு பெர்சிக்யூஷன் என்றால் ஒருவரை அவரின் நம்பிக்கைக்காகவோ இனத்திற்காகவோ கொடுமைப் படுத்துவதாகும். இஸ்லாமில் இந்த வார்த்தைக்கு முற்றிலும் வேறுபட்ட பொருள் இருக்கிறது. முஸ்லிம்கள் முகமது செய்ததைப் போல மற்றவர்களை அவர்களின் மாற்று நம்பிக்கைக்காக சிறைபிடிக்கவோ, சித்தரவதை செய்யவோ, படுகொலை செய்யவோ உரிமை இருக்கிறது என்று எண்ணுகிறார்கள். அவர்களுக்கு இது பெர்சிக்யூஷன் ஆகாது.  ஆனால் யாரேனும் இஸ்லாமை மறுத்தால் அவர்கள் முஸ்லிம்களை கொடுமைப் படுத்துபவர்களாவர். நான் இஸ்லாமை குற்றம் சொல்பவன். இந்த வழிபாட்டு முறையைப்பற்றி எழுதி அதனுடைய பொய்களை அம்பலப் படுத்துகிறேன். நான் எந்த முஸ்லிமுக்கும் தீங்கிளைத்தது இல்லை. மற்றவர்களையும் அப்படி செய்யுமாறு கூறியது கிடையாது. இருந்தாலும், முஸ்லிம்களின் பார்வையில், நான் ஒரு அத்து மீறியவன் (oppressor). முஸ்லிம்கள் இப்படித்தான் அத்து மீறுதலையும் (oppression) கொடுமைகளுக்கு உட்படுத்துதலையும் (persecution) புரிந்து கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமை குறை கூறும் மனிதன் அத்து மீறியவன். இப்படியாக, தங்கள் குழந்தைகள் ஒரு கிறுக்கனின் பின்னால் செல்வதை தடுக்க விரும்பிய மெக்காவினர் அத்து மீறியவர்கள். ஆனால் அவர்களைக் கொன்ற முஸ்லிம்கள் செய்ததோ அவர்களின் மதத்தின் முக்கிய சடங்கான ஜிஹாத்.

 

முதலில் ரத்தம் சிந்த வைத்தவர்கள் முஸ்லிம்கள் தான். Sa’d bin Abu Waqqas என்பவன் ஒரு ஒட்டக தாடை எலும்பை எடுத்து தங்கள் குழுவின் தொழுகையை “மரியாதையில்லாமல் தொந்தரவு செய்த” ஒரு உள்ளூர் முஸ்லிமல்லாதவனை தாக்கினான் என்று இப்னு ஐசக் (Sira p. 166) சொல்கிறார். “இதுதான் இஸ்லாமால் சிந்த வைக்கப் பட்ட முதல் ரத்தம்”.

 

குரானில் இஸ்லாமை ஏற்காதவர்களை கொல்லும் படியும் வெட்டும் படியும் கட்டளையிடும் வாசகங்களை மட்டும் நான் மேற்கோள் காட்டுவதாகவும் முஸ்லிம்களை பாதிக்கப்பட்டவர்களாக காட்டும் வாசகங்களை நான் கண்டு கொள்வதில்லை என்றும் திரு.தபதபாயி என் மீது குற்றம் சாட்டுகிறார். இந்த வாதம் தவறானது. எனக்கு முகமது ஒரு பொய்யன் என்று தெரியும். ஒரு பொய்யன் தான் குற்றமற்றவன் என்று என்ன கூறுகிறானோ அது அவ்வளவு முக்கியமானது அல்ல. அவன் ஒப்புதல் வார்த்தைகள் தான் முக்கியம். ஒரு குற்றவாளி தான் நிரபராதி என்று எதை எதையோ சொன்னாலும் அதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அவன் தனது குற்ற்றத்தை நிரூபிக்கும் விதமாக ஒரு வார்த்தை சொன்னாலும் போதும்.

 

ஒரு கட்டத்தில் முகமது மெக்காவினரை அழித்து விடுவதாக மிரட்டியபோது, முகமதினால் கேவலமாக அபு ஜால் [Abu Jahl = அஞ்ஞானத்தின் தந்தை] என்று அழைக்கப்பட்ட, அபுல் ஹகம் [Abul Hakam =ஞானத்தின் தந்தை], முகமதிடம் சென்று கோபத்துடன் அவனின் முட்டாள்தனத்தை நிறுத்தும் படிக் கேட்டார். முகமதுவின் பெரியப்பா ஹம்சா (Hamza) இதைக் கேள்விப்பட்டபோது, அவன் அபுல் ஹகம் காபாவில் அமர்ந்திருந்த பொது அவரிடம் சென்று அவரை தனது வில்லினால் ஓங்கி அடித்தான். [Sira 185] . அந்த நாள் வரைக்கும் மெக்காவில் எந்த முஸ்லிமும் துன்புறுத்தப் படவில்லை. எல்லா அடிகளும், துன்புறுத்தல்களும் முஸ்லிம்கள் தான் செய்தார்களா? இதைப் புரிந்து கொள்ள இன்று ஐரோப்பாவில் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். ஐரோப்பாவில் யார் யாரை கொடுமைகளுக்கு உட்படுத்துகிறார்கள்? முஸ்லிம்கள் தான் ஐரோப்பியப் பெண்களை வல்லுறவு செய்கின்றனர், தாக்குகின்றனர், கேவலப் படுத்துகின்றனர். அதே சமயத்தில் அவர்கள் தான் தாங்கள் பாதிக்கப் பட்டவர்கள் என்று கூச்சல் போடுகிறார்கள். இஸ்லாமின் தோற்றத்தில் இருந்தே முஸ்லிம்களுக்கு இதுதான் வழக்கமான பழக்கமாக [modus operandi] இருந்து வருகிறது.

 

திரு.தபதபாயி வாசகம் 6:108 ஐ மேற்கோள் காட்டுகிறார். இதில் முகமது, ” அவர்கள் தவறாக அறியாமையினால் அல்லாவை கேவலப்படுத்தாமல் இருப்பதற்காக அவர்களின் கடவுள்களை கேவலப்படுத்தாமல் இருங்கள்” என்று சொல்கிறான். இதை வைத்து முகமது முஸ்லிம்களை இஸ்லாமை ஏற்காதவர்களின் நம்பிக்கையை கேவலப்படுத்தாமல் இருக்கச் சொல்லியிருக்கிறான் என்று நம்மை நம்பச் சொல்கிறார்.

 

முகமதின் வார்த்தைகளை வைத்து அவனை நம்புவது மிகவும் மடத்தனமானது. எந்த மனிதனின் வார்த்தைகளுடன் செயல்களும் உயர்ந்திருக்கிறதோ அந்த மனிதனே உயர்ந்த மனிதன் என்பது கண்பூசியசின் நன்மொழி. இந்த வாக்கின் படி முகமது ஒரு கீழ்த்தரமான மனிதன். அவன் சொன்ன வாசகங்கள் பல மேலோட்டமாகப் பார்த்தல் உயர்ந்ததாகத் தோன்றினாலும் அவன் செய்த செயல்கள் மிகவும் கீழ்த்தரமானவை. மெக்காவினருக்கு புனிதமான காபாவை தாக்கி அதில் இருந்த சிலைகளை உடைத்துப் போட்டு அந்த இடத்தை அவமதித்த அந்த செயல் ஒன்று மட்டுமே அவன் 6:108 ல் போதித்த நெறிப்படி அவனே வாழவில்லை என்பதற்கு ஆதாரம்.

 

 

அவன் மற்றவர்களின் நம்பிக்கைகளை மட்டும் அவமதிக்கவில்லை. மற்றவர்களின் சுதந்திரத்தையும் மற்றவர்களின் உயிர்களையும் கூட அவன் மதிக்க வில்லை. மெக்காவை தாக்கி கைப்பற்றியவுடன் அங்குள்ள இஸ்லாமில் நம்பிக்கையில்லாதோருக்கு இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவோ அல்லது கொல்லப்படவோ இறுதிக்கெடு விதித்தான்.

 

புனித மாதங்கள் கழிந்து விட்டால் சிலை வழிபாட்டாளர்களை கண்ட இடங்களில் வெட்டுங்கள், சிறை பிடியுங்கள்; முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் தன் தவறுக்கு மனம் வருந்தி, தொழுகையை கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருவார்களானால் [சுருக்கமாக இஸ்லாமை ஏற்றுக்கொள்வார்களானால்] அவர்களை விட்டுவிடுங்கள்” (Q 9:5)

 

முகமது இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாதவர்களை கொடூரமான முறையில் அவர்களின் சொந்த நகரங்களில் இருந்து விரட்டிய கதையை இப்னு ஐஷகில் ப.920-923 ல் படிக்கலாம்.

 

புத்தகத்தையுடைய மக்களும் கூட விதி விலக்கல்ல. “நான் யூதர்களையும் கிருத்துவர்களையும் அராபிய தீபகற்பத்தில் இருந்து விரட்டப் போகிறேன். முஸ்லிம்கள் தவிர வேறு யாரையும் விடமாட்டேன்.” (Sahih Muslim 4366)

 

முகமதின் சாவிற்குப் பிறகு பெரும்பாலான அரபியர்கள் இஸ்லாமை துறந்தார்கள் என்று தபரி கூறுகிறார். அபு பக்கர் அவர்களை தாக்கச்செய்தான், நெருப்பில் எரிக்க வைத்தான், கல்லால் அடித்துக் கொல்லச் செய்தான், மலை முகடுகளில் இருந்து வீசச் செய்தான், கிணறுகளில் கொட்டச் செய்தான். [Tabari v. 4, p. 1392]. இஸ்லாமை துறந்தவர்களின் மீது தொடுக்கப்பட்ட இர்திதாத் (Irtidad = apostasy = மதத்தை துறத்தல்) என்று அவர்களின் பெயராலே அழைக்கப்பட்ட போரில் லட்சக்கணக்கான துறந்தவர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். இதுதான் இஸ்லாமியர்களுக்கு மற்ற மக்களின் மீதும் அவர்களின் நம்பிக்கைகளின் மீதும் உள்ள மரியாதை!

 

இஸ்லாம் பொய்யே உருவான ஒரு வாழ்க்கை முறை. இதில் உள்ள எல்லாமே பொய்தான், வஞ்சகம் தான். இஸ்லாமில் இருந்து அதன் பொய்களையெல்லாம் நீக்கிவிட்டுப் பார்த்தால் மீதி இருப்பது ஒரு வக்கிர மனிதனும் அவனை பின்பற்றி கடவுளின் பெயரால் ஈவு இரக்கமற்ற கொடூரங்களைப் புரிந்த மனிதத் தன்மையற்ற கொள்ளைக் கூட்டமுமே.

 

திரு.தபதபாயி மற்றவர்களின் நம்பிக்கையை அவமதிப்பதற்கும் முகமது காபாவை களங்கப் படுத்தியதற்கும் வேறுபாடு இருக்கிறது என்கிறார். அரபியர்களுக்கு அவர்களின் சிலைகள் பயனற்றது என்று வேறு எவ்வாறு புரிய வைப்பது என்று கேட்கிறார்.

 

அல்லா ஒரு கட்டுக்கதை என்று நான் நம்புகிறேன். அதை நம்புவது பயனற்றது மட்டுமல்ல அபாயகரமானதும் கூட. அரபியர்களின் சிலைகளை குறைந்த பட்சம் கண்ணால் பார்க்கலாம், அல்லா என்பது ஒரு ஆரோக்கியமற்ற மனநிலை கொண்டவனின் கற்பனையில் உதித்தது. எனக்கு கடவுள்களில் நம்பிக்கை இல்லை. ஆனால் நான் இங்கே கடவுள் நம்பிக்கைக்கு எதிராக வாதிக்க வில்லை. நான் மற்றவர்களின் நம்பிக்கை உரிமையை மதிக்கிறேன். நான் சொல்ல வருவது என்னவென்றால் முகமது கற்ப்பித்த கடவுள் உலகம் முழுவதற்குமான கடவுள் அல்ல. அது பைபிளின் கடவுள் கூட அல்ல. அல்லா என்பது ஹுபல் என்ற சந்திரக் கடவுளின் பொதுப் பெயர். எனக்கு மசூதிகளை தரைமட்டமாக்கி (எனக்கு படை பலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்) அல்லாவின் பெயரை அழித்துவிட உரிமை இருக்கிறதா? இதைத்தான் முகமது காபாவுக்கு செய்தான். இதைத்தான்  முஸ்லிம்கள் எண்ணற்ற மற்ற மத வழிபாட்டு மையங்களுக்கு செய்தார்கள்.

 

முகமது தான் சொல்வதுதான் சரியென்றும் மற்றவர்கள் வழி தவறியவர்கள் என்றும் நினைப்பதால் மட்டும் அவனுக்கு மற்றவர்களின் வழிபாட்டுத் மையங்களை கைப்பற்றி அழிக்கும் உரிமை கிடைத்துவிடாது. இது எந்த ஒரு நியாயமான மனிதருக்கும் தெரியும். ஆனால் இது முஸ்லிம்களுக்கு புரிவதில்லை. முஸ்லிம்கள் ஆரம்பத்தில் இருந்தே மற்ற மத கட்டிடங்களை தாக்கி அழித்து அவைகள் இருந்த இடங்களின் மீது தங்கள் மசூதிகளை கட்டி வருவது சரியே என்று நினைக்கின்றனர். முகமது செய்ததும் முஸ்லிம்கள் ஆயிரம் வருடங்களாக செய்து வருவதும் மிகவும் தீய்மையானது என்று அவர்களுக்கு புரியவில்லை. அவர்களின் வழி தான் சரி என்று நினைப்பதால், அவர்களின் எல்லா குற்றங்களும் நியாயமே என்று நினைக்கிறார்கள்.

 

“அல்லாவின் பாதையில் போரிடுவதற்காக தங்கள் வீடுகளைத் துறந்து வெளியேறும் வரை அவர்களிலிருந்து [இஸ்லாமை துறந்தவர்கள்] எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; அவர்கள் [தங்கள் இஸ்லாமை ஏற்காத உறவினர்களிடம்] திரும்பிச் சென்றால், அவர்களை எங்கு கண்டாலும் பிடித்துக் கொல்லுங்கள்; அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.” என்ற வாசகம் 4:89 ஐ மேற்கோள் காட்டும்போது நான் உண்மையை திரித்துக் கூறுவதாக திரு.தபதபாயி என் மீது குற்றம் சாட்டுகிறார்.

 

அவர் அதற்கடுத்து வரும் “உங்களுடன் நட்புடன் உள்ள கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது உங்களுடனோ தங்களுடைய கூட்டதாருடனோ போர் புரிய மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும் (சிறைப்பிடிக்காதீர்கள், கொல்லாதீர்கள்); ஏனெனில் அல்லா நாடியிருந்தால் அவர்களுக்கு உங்களை விட பலம் கொடுத்திருப்பார்; அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர் புரிந்திருப்பார்கள்; எனவே அவர்கள் உங்களின் விசயத்தில் தலையிடாமல் விலகி உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானமாக இருக்க விரும்பினால் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்.” என்ற வாசகத்தை ஏன் மேற்கோள் காட்டவில்லை என்று கேட்கிறார்.

 

இதுதான் முகமதின் நயவஞ்சக வேலை. இஸ்லாம் மற்றும் குரானின் வரலாற்றைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் மட்டுமே இந்த வஞ்சகத்தை இனம் காண முடியும். மேலோட்டமாக பார்க்கும் போது, உங்களை எதிர்த்து போராடாதவர்களை எதிர்த்து போராட வேண்டாம் என்று முகமது சொல்வதாக தெரியும். உண்மையில், இஸ்லாமிற்கு எதிராக பேசி முகமதின் அருவருப்பான மார்க்கத்தின் வளர்ச்சிக்கு அடி பணிய மறுத்த எல்லோரையும் கொல்லப்படவேண்டிய பகைவனாகவே அவன் கருதினான். இஸ்லாமைக் குறைகூறுகின்ற அல்லது அதை ஏற்க மறுக்கின்ற யாரும் பகைவர்கள் தான். இஸ்லாமுக்கு அடி பணியுங்கள் இல்லையேல் நீங்கள் எங்கள் எதிரி. கைபரின் யூதர்கள் முஸ்லிம்களை தாக்கினார்களா? முகமதின் போர்கள் எல்லாம் கஸ்வா (ghazwa) என்றும் சரிய (saria) என்றும் அழைக்கப் படுகின்றன. இந்த வார்த்தைகளுக்கு அதிரடித் தாக்குதல், மறைந்திருந்து தாக்குதல், தீடீர் தாக்குதல் என்று பொருள். திடீர்தாகுதல்கள் தான் முஸ்லிம்களின் வழக்கம். முகமதின் போர்கள் தற்காப்பிற்க்கானவை என்றால் அவைகள் ஏன் கஸ்வா என்று அழைக்கப் படுகின்றன? இஸ்லாமைப் பற்றி உங்களுக்கு நன்கு தெரியாவிட்டால் முஸ்லிம்கள் வைக்கும் பொறியில் எளிதில் மாட்டிக் கொள்வீர்கள். தபரியின் கணக்குப் படி முகமது 78 கஸ்வா க்களுக்கு காரணமாக இருந்தான். இவைகளில் சில கஸ்வா கவிஞர்களை படுகொலை செய்வதற்காக செய்யப் பட்ட சிறிய தாக்குதல்களும், சில கஸ்வா பெரிய நகரங்களின் மீது தொடுக்கப்பட்டு ஆயிரக்கணக்கான உயிர்களை பலியிட்ட பெரிய அளவிலான தாக்குதல்களும் ஆகும். இரண்டே இரண்டு தடவைகள் மட்டும் மெக்காவினர் திருப்பித் தாக்கினர். ஒன்று ஓஹுத் (Ohud) ல் நடந்தது. மற்றொன்று சண்டையே போடாமல் பின்வாங்கிய அகழிப் போர். மற்ற எல்லா சமயங்களிலும் முகமது தான் போரைத் தொடுத்தவன்.

 

இஸ்லாமின் மீது போர் தொடுக்காதவர்கள் மேல் போர்தொடுப்பதை இஸ்லாம் தடை செய்கிறது என்பதை சொல்லாததன் மூலம் நான் மக்களை தவறாக வழி நடத்துவதற்காக என்னை அறியாதவன் அல்லது துரோகி (ஏமாற்றுக்காரன்) என்று திரு.தபதபாயி சொல்கிறார். இது உண்மை இல்லை. பாரசீகர்கள் ஆகிய நாங்கள் அரபியர்களைத் தாக்கினோமா? எகிப்தியர்களோ ஸ்பாநியர்களோ இஸ்லாமை தாக்கினார்களா? இங்கே யார் ஏமாற்றுவது? இஸ்லாமை ஏற்காதவர்கள் முகமதினால் எதிரியாக பார்க்கப் பட்டார்கள். ஆகவே அவர்களின் மீது போர் தொடுப்பது கட்டாயமானது. மேலே காட்டப்பட்ட வாசகம் 9:5 ன் பொருள் என்ன? அந்த வாசகத்திற்கும் தற்காப்புக்கும் சம்பந்தமே இல்லை.

 

இயேசு தங்கள் சீடர்களிடம் அவர்களின் மேலங்கியையும் முதுகுப்பையையும் விற்று கத்திகள் வாங்கும்படி சொன்னதாக உள்ள லூகாஸ் 22:36 வாசகத்தைக் காட்டி முகமதின் கொடூரங்களை நியாயப் படுத்தப் பார்க்கிறார் திரு.தபதபாயி.இந்த மதிப்பிற்குரிய இஸ்லாமிய அறிஞரின் பார்வையில் இந்த வாசகம் இயேசுவை முகமதுவைப் போன்ற ஒரு போர் வெறியனாகவும் கூட்டுக் கொலைகாரனாகவும் காட்டுகிறது. இது உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், ஒரு அநீதி மற்றொன்றை நியாப்படுத்துமா?

 

நான் கிருத்துவ மதத்திற்கு சொம்பு துக்குபவன் அல்ல. இருந்தாலும். நான் நியாயத்திற்கு துணை நிற்பவன். திரு.தபதபாயி லூகாஸ் 22 ஐ இன்னும் கொஞ்சம் மேல படித்திருந்தால் ஏசுவுக்கு தேவைப்பட்டதெல்லாம் தன் சீடர்கள் ரோமன் வீரர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில வாட்களே என்பதை தெரிந்து கொண்டிருந்திருப்பார். 38 வது வாசகத்தில் அவரின் சீடர்கள் இரண்டு வாட்கள் வைத்திருப்பதாக சொன்னபோது, இயேசு “அது போதும்” என்று கூறுகிறார். அவர் இரண்டு வாட்களுடன் போரைத் தொடங்க திட்டமிடவில்லை என்பது தெளிவு. வீரர்கள் தன்னைப் பிடிப்பதற்காக வந்து கொண்டிருக்கிறார்கள் என்று இயேசு அறிந்த போது இது நடந்தது. சில மணிநேரத்திற்குப் பிறகு, வீரர்கள் வந்தார்கள். அவர்களுக்கு சீடர்கள் தேவை இல்லை. அவரின் சீடர்கள் “ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா” என்று கேட்டார்கள். அவர்களில் ஒருவர் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதை வெட்டி விட்டான். அப்பொழுது இயேசு இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார். [Lucas 22 49-51]

 

இயேசு தனது சீடர்களை பட்டயத்தை தன்னைப் பிடிக்க வந்த வீரர்களுக்கு எதிராக பயன்படுத்துவதை தடை செய்து காயத்தையும் சரி செய்தார். ஒருவரால் எப்படி இந்த நிகழ்ச்சியை முகமதின் தாகுதல்களோடும் படுகொலைகளோடும் ஒப்பிடமுடியும் ?

 

மெக்காவினர் தொடர்ந்து மதீனாவில் இருந்த முஸ்லிம்களைத் தாக்கி கொள்ளையடித்தார்கள் என்றும் அதனால் தான் “போர் தொடுப்போருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது, ஏனென்றால் அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லா பேராற்றலுடையவர்.” என்ற வாசகம் 22:39 வெளிக் காட்டப்பட்டது என்றும் திரு.தபதபாயி கூறிக்கொள்கிறார்.

 

இதைத்தான் வரலாற்றை புரட்டுவது என்பது. நக்லாவில் (Nakhla) வெற்றி காணும் வரை, முஸ்லிம்கள் செய்த தூண்டப்படாத தாக்குதல்கள் பலவற்றைப் பற்றி தபரி நமக்கு எழுதி விட்டுச் சென்றிருக்கிறார். இந்த தாக்குதலில் ஒரு மெக்காவினர் கொல்லப் பட்டார். இதைத் தான் “இஸ்லாமின் முதல் கொலை” என்று எல்லா வரலாற்று ஆசிரியர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். காயமடைந்த முதல் மனிதனும் முஸ்லிமல்லாதோர் தான் கொல்லப்பட்ட முதல் மனிதனும் முஸ்லிமல்லாதோர் தான். நக்லாவிற்குப் பிறகு முகமது சில சிறு தாக்குதல்களை தொடுத்தான். அவனுக்கு பெரிய வெற்றி கிடைத்தது பத்ரில் (Badr) தான். இந்த தாக்குதலில் அவனுடைய துடிப்பான இளம் வயது கொள்ளையர்கள் தங்கள் சொந்த உறவுப் பையன்களை தாக்கத் தயங்கிய “வழுக்கைத தலையுடன் கூடிய வயதானவர்களை” கொன்று குவித்தார்கள். இந்த வெற்றிக்குப் பிறகு முகமது மிகவும் துணிந்து விட்டான். பநி கைனுகா (Bani Qainuqa) வை தாக்கிக் கொள்ளை அடித்தான். Abu Afak, Asma bit Marwan, Ka’b ibn Ashraf என்ற மூவரை ஆளனுப்பிக் கொன்றான். மெக்காவினருக்கு டாமஸ்கஸ் செல்லும் பாதை அபாயகரமானதாக மாறியது. அதனால் அவர்கள் ஈராக்கிற்கு சென்றார்கள். இந்த பாதை மிகவும் நீளமானதும் நீர் கிடைப்பது அரிதானதும் ஆகும். அப்போதும் அவர்களைக் கொள்ளை அடிக்க முகமது Zeid ibn Haritha வை அனுப்பினான். Zeid அவர்களின் கேரவானை கொள்ளை அடித்தான் ஆனால் Abu Sufyan நும் அவரின் ஆட்களும் தப்பிவிட்டார்கள். அப்பொழுது தான் Abu Sufyan மதீனாவிற்கு வடக்கில் ஒரு சிறிய தாக்குதலைத் தொடுத்து சில அன்சாரிகளைக் கொன்று, சில பேரீச்ச மரங்களை வெட்டினார். அவர் முகமதின் ஆடுகளைச் சிலவற்றை திருடிக் கொண்டார். ஆனால் மறந்து விடாதீர்கள். முகமது மதீனாவுக்கு குடி பெயர்ந்த போது அவனிடம் ஆடுகள் இல்லை. அந்த எல்லா ஆடுகளும் மற்றவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப் பட்டவைகள் தான்.

 

வாசகம் 22:39 வெளிக்காட்டப் படுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னர் இருந்தே முஸ்லிம்கள் கொள்ளை யடித்துக் கொண்டு இருந்தார்கள். திரு.தபதபாயி மகாசி (Maghazi)  என்ற புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டுகிறார். Maghazi என்றால் ghazwa வின் பன்மை. அந்த புத்தகம் முகமதின் அதிரடி தாக்குதல்களைப் பற்றியது, தற்காப்புப் போர்களைப் பற்றியது அல்ல. அது அப்படியிருக்க முகமதின் போர்கள் எல்லாம் தற்காப்பிற்கே என்று திரு.தபதபாயி எப்படி சொல்கிறார்? பின்னர் ஏன் இந்த தற்காப்புப் போர்களின் புத்தகத்திற்கு Maghazi என்று பெயர்? பொய் பேசுவது முஸ்லிம்களுக்கு மிகவும் இயல்பானது. அதைப் பற்றி அவர்கள் சிந்திப்பது கூட இல்லை. இவ்வளவு புரட்டுகளுக்கும் ஏமாற்று வேலைகளுக்கும் மாறாக திரு.தபதபாயி என்னை “துரோகி” என்கிறார். நான் என் நாட்டை காட்டிக் கொடுத்தேனா? பார்சி படிக்கத் தெரிந்தவர்கள் திரு.தபதபாயி இஸ்லாமுக்கு முந்தைய ஈரானின் பெர்சிய மன்னர்களையும், ஈரானிய வரலாற்று எச்சங்களையும் (Heritage) அதன் கலாசாரத்தையும் கேவலப்படுத்தி எழுதி இருக்கிறார் என்பதைக் காண முடியும். இருந்த போதிலும், நான் துரோகி அவர் இல்லை. எங்கள் இருவரின் விசுவாசமும் வெவ்வேறானது.

 

முகமது அப்துல்லா (Abdullah ibn Jahsh) உட்பட எட்டு பேரை நக்லாவிற்கு குறைஷிக்களைப் பற்றி “தகவல் அறிந்து வருவதற்காக” அனுப்பினான் என்றும், அப்துல்லா அவர்களின் கேரவானை அனுமதியின்றி தன் சொந்த முடிவில் தாக்கினான் என்றும் திரு.தபதபாயி கூறுகிறார். இந்த கதையில் சொல்லப் படாத கதையும் இருக்கிறது. இதில் சொல்லப் படாத கதையைப் புரிந்து கொள்ள ஒருவர் உளவியலை நன்கு கற்ற துப்பறிவாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை. தன் சொந்த லாபத்திற்காக மற்றவர்களின் மனதை, அவர்கள் அறியாமலே, கையாளும் திறன் உள்ள நார்சிஸ்சிஸ்ட்டான முகமதினுடைய மூளையை இந்த கதை காட்டுகிறது.

 

அப்துல்லா இப்னு ஜஹ்ஷ் (Abdullah ibn Jahsh) முகமதின் மாமா பையன். ஜஹ்ஷ் அமீனாவின் [முகமதின் அம்மா] சகோதரன். முகமது அப்துல்லாவை அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த ஒரு குறிப்பிட்ட வேலைக்காக நக்லாவுக்கு அனுப்பினான். மற்ற ஆட்களுக்கு அவர்கள் எந்த வேலைக்காக போகிறார்கள் என்று சொல்லப் படவில்லை. முகமது அப்துல்லாவிடம் ஒரு மூடிய கடிதத்தை இரண்டு நாள் பயணம் முடியும் வரை திறக்க வேண்டாம் என்ற கட்டளையுடன் கொடுத்தான். இந்த தந்திரக்காரன் எப்படி மற்றவர்களின் மனங்களைக் வனைக்கிறான் என்று பாருங்கள். அந்த கடிதத்தை திறக்கும் பொது அதில் குரைஷிக்களைப் பற்றி தகவல் கொண்டு வரும் படி இருந்தது. அந்த வேலையில் பங்கு கொள்ள யாரும் கட்டாயப் படுத்தப்படக் கூடாது என்றும் அதில் இருந்தது. ஏன்? அரபியர்களின் புனித மதமான ரஜப் (Rajab) மாதம் அது. இந்த புனித மாதங்களின் பொது அரபியர்கள் ரத்தம் சிந்துவதில்லை. அதனால் தான் முகமது யாரையும் தங்கள் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப் படுத்த வேண்டாம் என்றான். வேவு பார்ப்பது தவறல்ல, ரத்தம் சிந்துவது ஆகாது. எழுதப் பட்டிருக்காவிட்டாலும் கூட, சொல்ல வேண்டிய கட்டளை தெளிவாக இருக்கிறது. முகமது என்ன விரும்பினான் என்று அப்துல்லாவுக்கு நன்றாகத் தெரியும். அவன் மற்றவர்களிடம் அவர்களுக்கு வீரத்தியாகிகளாக வேண்டுமென்றால் தன்னைப் பின்பற்றும் படி சொன்னான். எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். அவர்களில் இருவர் தங்கள் ஒட்டகங்களை தொலைத்துவிட்டதால் (ஒருவேளை வேண்டுமென்றே) அந்த வேலையில் பங்கு கொள்ளவில்லை. மற்ற ஆறுபேரும் நக்லாவிற்கு சென்றார்கள். அவர்கள் நான்கு பேர் கொண்ட ஒரு கேரவானை சந்தித்தார்கள். அவர்கள் புனிதப் பயணிகள் போல தங்கள் தலைகளை மொட்டை அடித்துக் கொண்டு அந்த கேரவானின் அமீனை ஏமாற்றினார்கள். அமீன்கள் சற்று கவனமில்லாமல் இருந்தபோது, கொள்ளையர்கள் அவர்களின் மீது அம்பை எய்தார்கள். அவர்கள் ஒருவரைக் கொன்று விட்டார்கள். இருவரை பிணயக் கைதிகளாக்கினார்கள். ஒருவர் தப்பித்து விட்டார்.

 

கொள்ளையடித்த பொருள்களையும், இரண்டு கைதிகளையும் மதீனாவுக்கு கொண்டுவந்தார்கள். முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இன்னும் புனித மாதங்களில் தாக்குவது ஆகாது. அவர்கள் முகமதிடம் கைதிகளையும் கொள்ளைப் பொருள்களையும் திருப்பி அனுப்புமாறு கேட்டார்கள். வஞ்சகமான தூதன் ஒரு திட்டம் போட்டான். அவன் அப்துல்லாவிடம் “நான் உன்னை புனித மாதங்களில் சண்டையிடும் படி சொல்லவே இல்லையே” என்று கடிந்து கொண்டான். இப்படி அவன் பழியை அப்துல்லாவின் மேல் போட்டான். பிறகு கொள்ளைப் பொருள்களை அல்லா முடிவெடுக்கும் வரை தன்னிடம் விட்டுச் செல்லுமாறு கூறினான். அடுத்த நாள் அவனின் அல்லா “புனிதமான மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாவின் பாதையில் குறுக்கே நிற்பதும், அவரை நிராகரிப்பதும், மசூதியின் புனிதத்தை நம்பாமல் இருப்பதும், அங்கு [மசூதியில்] உள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் அதைவிடப் பெருங் குற்றங்களாகும்;” [Q 2:217] என்ற வாசகத்தை வெளியிட்டான்.

 

இப்போது தெரிகிறதா ஏன் முகமது தன்னையும் முஸ்லிம்களையும் வஞ்சிக்கப் பட்டவர்களாக காட்டிக்கொள்ள வேண்டி இருந்தது என்று? மெக்காவினரை தாக்கிக் கொள்ளை அடிப்பதை நியாயப்படுத்தத்தான். இதைத்தான் இன்றும் முஸ்லிம்கள் தொடர்ந்து செய்கிறார்கள். எல்லா இடங்களிலும் தீங்கிளைப்பவர்கள் அவர்கள் தான் ஆனால் எப்பொழுதும் தாங்கள் தான் தீங்கிழைக்கப் பட்டோம் என்று கூக்குரல் இடுவார்கள். இடது சாரிகள் போன்ற புத்தி இல்லாத மக்கள் இந்த கூச்சலை நம்பி விடுகிறார்கள். இதற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு பாலஸ்தீனர்கள் பாதிக்கப் பட்டவர்களாகக் கூறிக் கொள்வது. அவர்கள் பாதிக்கப் படாதவர்கள். அவர்கள் தான் அத்து மீறு வந்து மற்றவர்களுக்கு தீங்கு செய்தவர்கள். அவர்கள் தான் யூதர்களின் நாட்டை பறித்தவர்கள். ஆனால் யூதர்களைக் கொல்வதற்கு காரணம் வேண்டி தாங்களை பாதிக்கப் பட்டவர்களாகக் கட்டிக் கொள்கிறார்கள். பிரச்சனை நிலத்தைப் பற்றியது அல்ல, யூத வெறுப்பைப் பற்றியது.

 

தங்கள் குழந்தைகளை முஸ்லிம்களாக மாற தடையாக இருப்பது கொலையை விட கொடூரமானதா? இதுதான் இஸ்லாமின் நீதி. இஸ்லாமுக்கு எதிராக எழுதுவது முஸ்லிம்கள் நம்மைக் கொல்வதைவிட மோசமானது. இந்த அடிப்படையில் தான் நான் உசாமா பின் லாடனை விட மோசமானவன். ஆயிரக்கணக்கான மக்களை கொல்வது இஸ்லாமுக்கு எதிராக கட்டுரைகள் எழுதுவதை விட மோசமானதல்ல. இஸ்லாமின் நீதியின் சுருக்கம் இதுதான். இதைக் குரானே சொல்கிறது என்பது தெளிவு.

 

தங்க விதி என்பது முஸ்லிம்கள் அறியாத ஒன்று. இது வருந்தத் தக்கது தான். ஆனால் அவர்களால் மற்றவர்களின் நிலையில் இருந்து தங்களைப் பார்த்துக் கொள்ள முடியாது. முஸ்லிம்கள் தங்கள் செயல்கள் மிகவும் கொடூரமானவை என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் தங்க விதி என்றால் என்னவென்று அறியமாட்டார்கள். தங்க விதியை புரிந்து கொள்ளும் முதிர்ச்சி தான் மனிதத்தன்மையையே வரையறுக்கிறது. விலங்குகளும், தங்கள் மனிதத்தன்மையை வளர்த்துக் கொள்ளாத மக்களும் (நாசிக்கள், பாசிஸ்டுகள், கம்யுனிஸ்டுகள், தக்கீக்கள், க்ரிமினல்கள், சைக்கோக்கள் மற்றும் முஸ்லிம்கள்) தங்க விதியை புரிந்து கொள்ள முடியாதவர்கள்.

 

திரு.தபதபாயி யின் மீதி இருக்கும் மறுப்புரைக்கு மற்றொரு நாளில் பதில் எழுதுவேன்.

 

பின்குறிப்பு.

நான் இந்த கட்டுரைக்கு திரு.தபதபாயியின் மறுப்புரை எழுதப்பட்ட இணையப் பக்கத்தில் ஒரு லிங்க்கை வைத்தேன். ஆனால் அவர் அதை அழித்து விட்டார். அவருடைய வாசகர்கள் இந்த கட்டுரையை பார்ப்பதை அவர் விரும்பவில்லை என்பது தெளிவு.

 

அவர் இந்த கட்டுரைக்குக் கீழே இரண்டு சிறிய பின்னூட்டங்களையும் எழுதி இருக்கிறார். ஏதேனும் பயனுள்ள கருத்தை சொல்வதற்கு பதிலாக என்னை தூற்றியதோடு சரி ஆளையே காணோம்.