ஹலோ அலி

 

எனது முக்கியமான கேள்வி உளவியலைப் பற்றியது. குழந்தைகளைப் பற்றிய முஸ்லிம்களின் மனப்பான்மையைப் பற்றியும் அவர்கள் தங்கள் குழந்தைகளை தன்னளவில் முழு மனிதர்களாக எண்ணாமல் “பொருள்களைப்” போல நடத்துகிறார்கள் என்று எனக்குப் படுவதைப் பற்றியும் சமீபத்தில் கிண்டலடிக்கப் பட்டேன். குறிப்பாக காசாவிலும் (Gaza) வெஸ்ட் பேங்கிலும் (West bank) மற்ற இடங்களிலும் சிறிய குழைந்தைகள் யூதவெறுப்பை ஊட்டி வளர்க்கப்படுவதும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. அரபு / முஸ்லிம் குழந்தை வளர்ப்பு பற்றி சிறப்புப் பத்திரிக்கைகளில் (learned journals) கூட ஒன்றும் வருவதில்லை.

 

ஹமாஸ் (Hamas), பத்தாஹ் (Fatah) போன்ற சாவைக் கொண்டாடும் பயங்கரவாதக் குழுக்களுக்கு தங்கள் குழந்தைகளை அர்ப்பணிக்கும் அளவிற்கு பெற்றோர்களைத் தயார் செய்யும் விதமாக அரபு / முஸ்லிம் குழந்தை வளர்ப்பு முறையில் ஏதேனும் இருக்கிறதா? இது மனித சுபாவத்திற்கு எதிரானது. மனிதனின் உள்ளுணர்வு அரசியல் போட்டியில் சிறுசிறு வெற்றிகளுக்காக தங்கள் குழந்தைகளை சாகக் கொடுப்பதற்கு பதிலாக அவர்களைப் பாதுகாக்கவே செய்யும்.

 

அரபியர்கள் தங்கள் குழந்தைகளை வெறும் பொருள்களாக பார்க்கிறார்களா? அவர்களை குறைவாகத்தான் மதிக்கிறார்களா? நான் அப்படி இருக்கும் என்று நினைக்க வில்லை.

 

 

சிறுவர்களை கண்ணிவெடிகளின் மீது நடந்து உயிர்த்தியாகம் செய்யச் சொல்லும் பெரிய சுவரோவியம்

 

 

 

ஆம் தங்கள் குழந்தையை வேண்டுமென்றே சாகக்கொடுப்பது மனித சுபாவத்திற்கு எதிரானது தான். இந்த பிரச்சனை அரேபியர்களிடம் மட்டும் இல்லை. எல்லா முஸ்லிம்களும் இந்த அர்த்தமற்ற செயலில் ஈடுபடுகிறார்கள். இந்த மனப்பான்மை எல்லா கல்ட் (Cult = தனிநபர் வழிபாட்டு முறை ) களிலும் பொதுவானது. குயானாவில் (Guyana) ஜேம்ஸ் ஜோன்ஸ் (James Jones) என்பவனின் அமெரிக்க பின்பற்றிகள் சுமார் 900 பேர் தங்கள் குழந்தைகளுக்கு விஷத்தை குடிக்க வைத்து தாங்களும் குடித்து இறந்து போனது எப்படி மறக்க முடியும் ? அவர்கள் செய்தது மனித இயற்கைக்கு எதிரானது என்பது உண்மைதான்.

 

ஈரான் ஈராக் போரின்போது சிறுவர்கள் கண்ணிவெடிகள் வைக்கப்பட்ட நிலங்களின் மீது நடந்து பீரங்கிகளுக்கு வழி உருவாக்கி உயிர்த்தியாகம் செய்யத் தூண்டப்பட்டார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் திரும்பி வரமாட்டார்கள் என்று தெரிந்தே அனுப்பினார்கள். இதைப் புரிந்து கொள்ளவே முடியாது.

 

இதைப் புரிந்து கொள்வதற்கு நாம் முஸ்லிம்களின் மனதைப் புரிந்து கொள்ளவேண்டும். இந்த வாழ்க்கையே பலனற்றது என்ற எண்ணத்துடன் முஸ்லிம்கள் வளர்க்கப்படுகிறார்கள். இது வெறும் சோதனைக் களமே. உண்மையான வாழ்க்கை இறப்பிற்குப் பின் வரும் பரலோக வாழ்க்கை தான். எல்லா கல்ட்டுகளும் இதே பேத்தலைத் தான் போதிக்கின்றன. இங்கே வாழ்க்கை வேதனைகள் நிறைந்தது. அங்கே எல்லையற்ற இன்பமான வாழ்க்கை வாழலாம். இங்கே இருக்கும் வாழ்க்கை கவர்ச்சியுடன் இருக்கலாம் ஆனால் இந்த கவர்ச்சியில் மிகவும் ஈர்க்கப்பட்டுவிட்டால் அந்த வாழ்க்கையை இழந்து விடுவோம் என்பது தான் போதனை. சிலகால அற்ப வாழ்க்கைக்காக முடிவற்ற பரலோக வாழ்க்கையை இழப்பது அறிவீனம் என்று முஸ்லிம்கள் போதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

 

வாழ்வதல்ல இறப்பது தான் முஸ்லிம் வாழ்க்கையின் நோக்கம். எப்போதும் இறப்பைப்பற்றி சிந்திப்பவனே ஞானி என்று முகமது சொல்லி இருக்கிறான்.

 

தனக்கு பரலோகத்தில் இடம் கிடைக்குமா என்று ஒரு முஸ்லிமினால் உறுதியாக சொல்ல முடியாது. எவ்வளவு தான் முயன்றாலும் அவன் நரகத்தில் தள்ளப்படலாம். எந்த உத்திரவாதமும் இல்லை. அல்லா மிகவும் சலனமான புத்தியை உடையவர். நற்செயல்களை செய்பவரையும் நரகத்தில் தள்ளலாம். யாரும் அவருடைய முடிவை தட்டிக் கேட்க முடியாது. அவருக்கு சட்டம் ஏதும் இல்லை. அவர் வைத்த சட்டத்தையே அவர் மதிக்க மாட்டார். எல்லாம் அவர் இஷ்டம் தான்.

 

மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை நீண்ட தூரம் இடம் பெயரும் பறவைகளின் வாழ்க்கையோடு ஒப்பிடப் படுகிறது. அந்த பறவைகள் வழியில் தரை இறங்கி, உணவுண்டு, இளைப்பாறலாம். அங்கேயே தங்கி விட முடியாது. இந்த உலகத்தின் கவர்ச்சிகள், சபலங்கள், ஈர்ப்புகள் நமது ஆத்மாவை சிறைப் பிடித்துவிடும். சேறான சிறகுகளை வைத்து பறக்க முடியாது. அதனால் பறவையின் கடைசி இருப்பிடத்தை அடைய முடியாமல் போய்விடும்.

 

எவ்வளவுக்கெவ்வளவு இந்த உலகத்துடன் ஒட்டிக்கொண்டு இருக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு பரலோகத்தை அடையும் வாய்ப்பு குறையும். எல்லாமே ஒட்டுதல்களாகவும் சோதனைகளாகவும் அமையும். பணம், குடும்பம், குழந்தைகள் போன்ற எல்லாமே சோதனைகள் தான். வாழ்க்கையே ஒரு ஒட்டுதல்தான்.

 

பரலோகம் செல்வதற்கு ஒரே ஒரு உத்திரவாதம் தான் இருக்கிறது. அது எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து விட்டு உயிர்த்தியாகி (martyr) ஆவதுதான். தான் உயிர் விடுவதை உயிர்த்தியாகி உணரமாட்டான். வலியைக்கூட உணரமாட்டான். உறுதியாக ஏறும்புக்கடியை விட குறைவான வலியே இருக்கும். ஆனால் வெகுமதிக்கோ அளவே இல்லை.

 

இந்த வாய்ப்பைத்தான் எந்த முஸ்லிமும் தவற விரும்பவில்லை. தன்னையே வெடித்துக் கொள்வது என்பது மனித சுபாவத்திற்கு எதிரானதில்லையா? இதற்கு முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே ஒரு பொருளாக பார்க்கிறார்கள் என்று பொருள் இல்லை. அவர்களின் நம்பிக்கை தான் இதற்குக் காரணம். உயிர்த்தியாகம் இவ்வளவு சிறந்ததென்றால் தங்கள் குழந்தைகளுக்கு அதை மறுப்பானேன்.

 

முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை இழக்கிறோம் என்று நினைக்கவில்லை. அவர்கள் தங்கள் குழந்தைகளின் முடிவற்ற பரலோக வாழ்க்கையை உறுதி செய்கிறார்கள். அவர்களால் தங்கள் வாரிசுகளுக்குக் கொடுக்க முடிந்த அரிய பரிசு இதுதான். இவ்வுலகில் அவர்களுக்கு ஒரு சரியான வாழ்க்கையை உறுதி செய்ய முடியாத இயலாமையை பெற்றோர்கள் அறிவார்கள். ஆனால் அவர்கள் உயிர்த்தியாகியானால் அவர்களின் பரலோக வாழ்க்கை “உறுதி” என்று பெற்றோர்களுக்கு தெரியும்.

 

முஸ்லிம்கள் உயிர்த்தியாகத்தைப் பற்றி எப்போதும் பேசுகிறார்கள். அதை புகழ்கிறார்கள். அதை இருப்பதிலேயே சிறந்த செயலாகவும், ஒருவர் அடைய முடிகின்ற இருப்பதிலேயே மிக உயர்ந்த நிலையாகவும் கருதுகிறார்கள். நன்றாக படித்து, அறிவியலில் நிபுணத்துவம் பெற்று அடுத்த ஐன்ஸ்டீனாக வருவதை விட முஸ்லிம் சிறுவர்களுக்கு உயிர்த்தியாகியாக மாறுவதே கவர்ச்சியானது. ஐன்ஸ்டீனாக வருவதற்கு மிகவும் கடின உழைப்பும், புத்தி கூர்மையும் வேண்டும். அந்த நிலையை அடைவதற்கு வாய்ப்புகளும் குறைவு. உயிர்த்தியாகியாக மாறுவதற்கு ஒரே ஒரு துணிகரச் செயல் செய்தாலே போதும். காலத்திற்கும் கவலைப்படத் தேவை இல்லை.

 

உயிர்த்தியாகத்தைக் கொண்டாடும் பெரிய சுவரோவியங்கள்.

 

 

 

உயிர்த்தியாகம் புகழுக்கான நெடுஞ்சாலை. உயிர்த்தியாகிகளின் பெயர்கள் சாலைகளுக்கு வைக்கப்படும். அவர்கள் உலகமெங்கும் புகழையும் மரியாதையும் பெறுவார்கள். முஸ்லிம்களுக்கு சுய மதிப்பு குறைவு. முஸ்லிம் உலகில் நாம் காணும் அராஜகங்கள் அவர்களின் சுத்தமாக காய்ந்து விட்ட சுய மதிப்பின் வெளிப்பாடே. ஒரே நாளில் நாயகர்களாகவும் பிரபலங்களாகவும் மாறுவார்கள் என்ற உறுதிமொழி அவர்களுக்கு தந்தால் அதற்காக தங்கள் உயிரையும் விடுவார்கள்.

 

அப்போது முஸ்லிம்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்பாடு செய்தால் பிரச்சனை முடிந்தது என்று எண்ணாதீர்கள். முஸ்லிம்கள் எவ்வளவுக்கெவ்வளவு சொகுசாக வாழ்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு குற்ற உணர்வு கொண்டவர்களாக மாறுவார்கள். வசதியான வாழ்க்கையை கடவுளுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள தடையாக அவர்கள் பார்க்கிறார்கள். இஸ்லாமின் கடவுள் முஸ்லிம்களை தங்கள் பக்தியை நிரூபிப்பதற்காக கஷ்டங்களை சகித்துக் கொள்ளச் சொல்கிறார். அவர் விரும்புகின்றவரை நன்கு சோதிக்க அவரின் மீது மேலும் மேலும் பேரிடர்களை ஏற்படுத்துவார். புரிகிறதா. அவருக்கு ஏழைகள் தான் பிடித்தவர்கள். மிதமிஞ்சிய வசதி முஸ்லிமை குற்ற உணர்ச்சி கொள்ளச் செய்து வசதிகளை எல்லாம் உதறி விட்டு உயிர்த்தியாகியாக மாறத் தூண்டும். பெரும்பாலான மனித வெடிகுண்டுகள் பணக்கார இளைஞர்கள் தான்.

 

முஸ்லிம்களை அவர்களின் ஜிஹாதில் இருந்து அகற்றுவதற்கான ஒரு வழி அவர்களை கொடிய வறுமையில் ஆழ்த்துவது தான். வறுமையில் இருக்கும் பொது ஜிஹாத் செய்யத் தேவையில்லை. அவர்கள் பொருள்களை வாங்காமல் தவிருங்கள். அவர்கள் பட்டினியில் வாடுவார்கள். முஸ்லிம்கள் பலம் கொண்டவர்களாகவும் அவர்களின் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் போதும் மட்டுமே ஜிஹாத் கட்டாயமானது. ஜிஹாதை முடிவுக்குக் கொண்டுவர மற்றொரு வழி இஸ்லாம் ஒரு பொய் என்று அவர்களுக்கு புரிய வைப்பது தான். இந்த வழியைத் தான் நான் விரும்புகிறேன்.

ஈரானின் ரத்தச் சிவப்பு நீரூற்றுகள் உயிர்த்தியாகத்தைக் கொண்டாடுகின்றன.

ஈரானின் ரத்தச் சிவப்பு நீரூற்றுகள் உயிர்த்தியாகத்தைக் கொண்டாடுகின்றன.

 

உயிர்த்தியாகம் என்பது ஒரு மனநிலை. அதை ஊடகங்களிலும், பள்ளிகளிலும், ஆசிரியர்களாலும், பெற்றோர்களாலும் போற்றிப் புகழப்படுகிறது. குரானிலேயே அதைப் பற்றி கூறப் பட்டிருப்பதால், அதனுடைய மேன்மையை மறுக்கவோ அதற்கு எதிராக பேசவோ யாராலும் முடியாது

 

ஈரானில், போரின் போது, ரத்தத்தையும் உயிர்த்தியாகத்தையும் குறிக்கும் சிவப்பு வண்ணம் ஊட்டப் பட்ட அலங்கார நீரூற்றுகள் இருந்தன. அனேகமாக அவைகள் இன்னும் இருக்கலாம்.

 

எனது கசின் (Cousin) ஒருவன் தான் இடுகாட்டிற்கு சென்று பறிக்கப்பட்ட குழிகளுக்குள் படுத்து தனது இறப்பையும் உயிர்த்தியாகத்தையும் கற்பனை செய்து கொள்வேன் என்று சொன்னான். அப்போது அவனுக்கு வயதுக்கு வரும் வயது தான். போரிலிருந்து நாள் தோறும் உடல்கள் வந்து கொண்டு இருந்ததால், இடு குழிகள் தயாராக வெட்டப்பட்டு இருந்தன.

 

ஒருவன் முஸ்லிம்களுக்கு இடையில் வளரவோ அல்லது முஸ்லிமாக வளரவோ செய்தால் தான் இந்த மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும். முஸ்லிம்களுக்கு உயிர்த்தியாகத்தை விட சிறந்ததென்று ஒன்று எதுவும் இல்லை. அதுதான் மனிதனால் எட்டமுடியும் மிக உயரிய நிலை.

 

இப்போது உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.