இஸ்லாமிற்கு சொம்பு தூக்கிக் கொண்டே தனது நாட்டை மதசார்பற்ற நாடாக மாற்றப் பாடுபடுபவர் என்று கூறிக்கொள்ளும் ஒரு வங்காளப் பெண்மணிக்கு நான் எழுதிய பதில் இது. இதை என் சுதந்திர சிந்தனையுள்ள (Free thinking) வங்காள நண்பர்களுக்கும் அனுப்பி இருந்தேன். அதில் ஒருவர் இந்த பதிலை NFB ல் [News from Bangladesh] பதிவிட்டார்.

 

20 மே 2001

அன்புள்ள ஃபரிதா மஜீத் (Farida Majid),

நான் தூதரின் படங்களை எனது தளத்தில் பதிவிட்டேன். சுன்னிக்களைப் பொறுத்த வரையில் நான் இவ்வாறு செய்தது ஒரு அப்பட்டமான இறையவமதிப்பு. அந்த படங்களை வரைந்த ஈரானியர்கள் அதை அன்பினாலும், பக்தியினாலும் தான் செய்தார்கள் என்றேன். அதற்கு பதில் கூறும் விதமாக நீங்கள் “அந்த படங்களை வரைந்த பாரசீக  கலைஞர்கள் இறையவமதிப்பிற்காக அதை செய்யவில்லை என்பது உண்மைதான். சொல்லப் போனால் அந்த படங்களின் அழகு அந்த கலைஞர்களின் அப்பழுக்கற்ற பக்தியை பிரதிபலிக்கிறது. அதேசமயம் அலி சினா தனது கல்லாகிப் போன இதயத்தின் கீழ் எங்கேயோ மற்றுமொரு இளகிய மற்றும் மனிதத் தன்மையுள்ள ஒரு இதயத்தை மறைத்து வைத்திருக்கிறார் என்று காட்டும் விதமாக ஒன்றை சொல்லி இருப்பது இது தான் முதல் முறை.” என்று கனிவுடன் எழுதி இருக்கிறீர்கள்.

 

எனது இளகிய இதயத்தை கண்டு கொண்டதற்காக உங்களுக்கு நன்றி. எனக்கு ஒரே ஒரு இதயம் தான் உண்டு என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். நான் இஸ்லாமைப் பற்றி எழுதுவது நீங்கள் விரும்பும் படி இல்லை என்பதில் எனக்கு வருத்தம் தான். இருப்பினும், நீங்கள் நன்றாக கவனித்தீர்களானால், என் எழுத்துக்கள் எல்லாமே அன்பின் வெளிப்பாடே. அவற்றில் ஒரு துளி கூட கெட்ட எண்ணமோ உள்நோக்கமோ இல்லை. நான் தவறாகப் புரிந்து கொண்டவன் என்று வேண்டுமானால் நீங்கள் என் மீது குறை கூறலாம். அப்படியும் இருக்கலாம் என்று ஒத்துக் கொள்கிறேன். ஏனென்றால் மனிதர்கள் முற்றிலும் தவறாகப் புரிந்து கொண்டு அதே சமயம் தான் புரிந்து கொண்டதற்கு மிகவும் உண்மையாக இருக்கலாம். சொல்லப் போனால் பெரும்பான்மையான மக்கள் இந்த வகையைச் சார்ந்தவர்கள் தான். பெரும்பான்மையான மக்கள் தங்கள் திரிக்கப்பட்ட, தவறான வழியை மிகவும் தீவிரமாக நம்புகின்றனர். அவர்கள், தங்கள் உண்மையின் அடிப்படையில், மற்றவர்களுக்கு தூய மனசாட்சியுடன் தீங்கிளைப்பார்கள். நான் அவர்களில் ஒருவனில்லை என்பதற்கு என்ன உத்திரவாதம்? ஒன்றுமில்லை என்று எனக்குத் தெரியும். அதனால்தான் நான் மற்றவர்களுக்கு தீங்கு இழைப்பதில்லை. என்னுடைய வழியை நிர்பந்திப்பதற்காக நான் மற்றவரை கொல்வதையோ கொடுமைகளுக்கு உட்படுத்துவதையோ செய்வதில்லை. என்னை யாரேனும் இன்னும் சிறந்த வழிக்கு இட்டுச் செல்ல வாய்ப்பிருப்பதால் திறந்த மனதுடனேதான் இருக்கிறேன். இதையும் உண்மையாகவே சொல்கிறேன்.

எப்படியோ அப்படிப்பட்ட ஒருவர் இதுவரை என் கவனத்திற்கு வராததால், எனது வழியை விட சிறந்த வழி எனக்குத் தெரிய வில்லை. அப்படி வந்தவர்களும், விரைவிலேயே முயற்சியைக் கைவிட்டு ஓடிப்போனார்கள் அல்லது என்னை தூற்றுவதில் முடிந்தார்கள். அதில் சிலர் யார் சொல்வது உண்மை என்று தீர்மானிக்க ஒருவரை ஒருவர் சபித்துக் கொள்ளும் போட்டிக்கு அழைத்தார்கள். (இது தூதரின் பழக்கம் Q.3:61. எனக்கு மற்றவர்களை சபிப்பது பிடிக்காது.) எது எப்படியோ, நான் சொல்வது முட்டாள்தனம் என்று யாரேனும் நிரூபிக்க முடியுமானால், உடனே எனது நிலையை மாற்றிக் கொண்டு வாழ்க்கை முழுவதுமோ அல்லது அதையும் விட சிறந்த பாதையை வேறு யாரேனும் காட்டும் வரையோ அவரின் சீடனாக மாறுவதற்கு தயங்க மாட்டேன்.

உங்கள் ஈரானியப் பயணத்தைப் பற்றிய உங்கள் எழுத்து என்னை என் தாயகத்தின் மீது மிகவும் ஏக்கம் கொள்ளச் செய்தது. என் கண்களில் கண்ணீர் கோர்த்தது. இன்றைய நாட்களில் என் அன்பான தாயகம் 12 தலை டிராகனாலும் கொடூரமான காலித்தனம் செய்பர்வர்களாலும் பிணையக் கைதியாக்கப்பட்டு நோய் வாய்ப்பட்டு இருப்பதால் நான் மிகவும் கவலை கொண்டுள்ளேன். இந்த காலிகள் என் தாயகத்தின் மக்களை முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு கொன்றும் சித்ரவதை செய்தும் வருகிறார்கள். அதன் புகழ்வாய்ந்த காலம் போய் சனியன் பிடித்த காலம் வந்து 1400 வருடங்கள் ஆகி விட்டன.

ஈரானில் புரட்சிக்கு முன் எது தவறாக இருந்தது என்றும் புரட்சிக்குப் பின் எது தவறாகப் போனது என்றும் நீங்கள் கணித்திருப்பது சரியே. ஆனால் நீங்கள் ” பங்களாதேஷில் இன்றைய அரசியல் குழப்பத்தின் மத்தியில், இஸ்லாமை அவதூறு செய்வது ஒரு அபாயகரமான விளையாட்டு” என்று கூறி வங்காள சுதந்திர சிந்தனையாளர்களின் மீது குற்றம் சாட்டுவதை நான் எதிர்க்கிறேன். இஸ்லாமை செல்லுபடியான ஒரு மதமாக ஏற்றுக் கொள்வது என்பது அதன் முக்கிய அங்கமான வன்முறையையும் கண்ணை மூடிக்கொண்டு அங்கீகரிப்பதாகும் என்று நான் கருதுகிறேன். வன்முறை இஸ்லாமின் பிரிக்க முடியாத அங்கம் என்பது ஒரு அபிப்பிராயம் அல்ல. முழு குரானுமே வெறுப்பையும் இஸ்லாமை ஏற்காதவர்களை கொல்வதையும், சகியாமையும், மனங்களைக் கட்டுப்படுத்துவதையும், பெண்ணின வெறுப்பையும், பெண்களை தவறாக நடத்துவதையும், போர்களையும் தான் தூண்டுகின்றது என்பது தெளிவு. ஒரு பாரபட்சமில்லாத மனிதன் குரானின் வெறுப்பை உமிழும் வாசகங்களைப் படித்து விட்டு அந்த புத்தகத்தை “அமைதியின் புத்தகம்” என்று அழைப்பதற்கு வாய்ப்பே இல்லை. உங்களுக்கு ஏதேனும் ஒரு சந்தேகம் இருந்தால் இந்த கட்டுரையைப் படியுங்கள். இது வெறும் சாம்பிள் தான்.

ஆகையால், அமைதியை விரும்பும் உங்களைப் போன்ற அறிஞர்கள் இஸ்லாமை பின்பற்றிக்கொண்டு அதை மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்தால், உங்கள் பேச்சைக் கேட்பவர்கள், அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை உங்களிடமிருந்து அல்லாமல் குரானில் இருந்தே எடுத்துக் கொள்வார்கள். ஆகையால், அவர்கள் அந்த அறிவுரைகளை பின்பற்றி வன்முறைகளை நிகழ்த்தினால், நீங்கள் தான் குற்றவாளி, அவர்கள் அல்லர். அவர்களுக்கு நீங்கள் குரான் கடவுளின் வார்த்தை என்று சொல்லிவிட்டீர்கள். குரான் அவர்களுக்கு வெறுக்கவும் கொல்லவும் சொல்கிறது. இதன் பின்விளைவைப் புரிந்து கொள்ள நீங்கள் மூளையறுவைசிகிச்சை நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை. Who Feeds Fundamentalism [மத அடிப்படைவாதத்தை யார் வளர்க்கிறார்கள்] என்ற என் கட்டுரையில் இதைப் பற்றி எழுதி இருக்கிறேன். எனது கருத்தை நிரூபிக்கும் சிங்கப்பூரினுடைய Time Magazine னுடைய ஒரு ரிபோர்ட்டையும் மேற்கோள் காட்டி இருக்கிறேன். இந்த ரிபோர்ட்  வசதியான முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த நன்கு படித்த பெண் ஒருவர் பயங்கரவாதியாக மாறிய கதையைப் பற்றியது. பயங்கரவாதியாக மாறிய இந்த பெண் முகத்தை மூடாமல் ஆடை அணியும் பெண்களின் முகத்தில் சாயம் பூசுவதாகவும், தனது கணவனை வேறு  பெண்களையும் மணந்து கொள்ளுமாறு சொல்வதாகவும், தனது மகன்களை துப்பாக்கியை நேசிக்கும் தீவிரவாதிகளாக வளர்ப்பதாகவும் கூறப்படுகிறது. ஏன்? அவள் இஸ்லாமை ஏற்றுக்கொண்ட ஒரு மேற்கத்திய பெண்ணைப் பற்றி படித்தாளாம். அவ்வளவு தானாம். அதுவே அவளை பயங்கரவாதியாக மாறப் போதுமானதாக இருந்ததாம்.

 

அன்பு தோழியே, இஸ்லாம் கிருத்துவத்தைப் போன்றதோ ஸௌராஸ்ட்ரிய மதம் அல்லது மற்ற எந்த மதத்தையும் போன்றதோ அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இஸ்லாம் வெறுப்பை ஊட்டி வளர்க்கும் மதம். இஸ்லாமின் செய்தியே வெறுப்பு தான். அதன் சாரமும் வெறுப்பு தான். சடங்குகள் மற்றும் சமயக் கொள்கைகள் போன்ற இஸ்லாமில் உள்ள எல்லா விசயங்களும் அதன் கடைசி இலக்கான வெறுப்பை நோக்கி நம்மை இட்டுச் செல்வதற்கே பயன்படுகின்றன.

 

நீங்கள் இந்த உண்மையை மறுக்கும் வரைக்கும், உங்கள் கற்பனையில் மட்டுமே இருக்கும் அமைதியான இஸ்லாமை போற்றிப்பாடும் வரைக்கும் நமது நாடுகளில் அமைதிக்கும், மக்களாட்சிக்கும், நாகரீகத்திற்கும் மற்றும் வளர்ச்சிக்கும் தடையாக இருப்பது இஸ்லாம் தான் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது.

 

ஈரானின் அறிஞர்கள் முல்லாக்களை நம்பிய விதத்திலும்  புரட்சியை மத அடிப்படைவாதிகள் கைப்பற்ற அனுமதித்த விதத்திலும் தவறி விட்டார்கள் என்று நீங்கள் கூறியது மிகவும் சரி. ஆனால் இந்த அறிஞர்கள் நீங்கள் இப்போது செய்யும் அதே தவறைத் தான் அப்போது செய்தார்கள். இந்த அறிஞர்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவளித்தால், அவர்கள் ஆட்சியை கைப்பற்றியவுடன் நாட்டை மக்களாட்சியை நோக்கியும் சுதந்திரத்தை நோக்கியும் இட்டுச் செல்வார்கள் என்று நினைத்தார்கள். அவர்களுக்கு உண்மையிலேயே விஷயம் தெரிந்திருந்தால், இது ஒரு பகல் கனவு என்று அறிந்திருப்பார்கள். இஸ்லாமைப் பற்றி அறிந்த யாருமே இஸ்லாமுக்கும் மக்களாட்சிக்கும் தொடர்பே இல்லை என்று அறிந்திருப்பர். இஸ்லாமை பிரதிநிதித்துவமாக மாற்றுவது என்பது வட்டத்தை சதுரமாக மாற்றும் முயற்சியாகும். இஸ்லாமை சகிப்புத்தன்மையுள்ளதாக மாற்றுவதை விட எளிதில் கழுதைப்புலிகளை தாவரஉண்ணிகளாக மாற்றி விடலாம்.

 

இருந்துமிருந்தும், பல ஆண்டுகளாக மேற்குலகில் வாழ்ந்திருக்கும் நீங்கள், பல பட்டங்களைப் பெற்ற நீங்கள், உங்கள் நாட்டின் அறிஞர் களில் ஒருவராக இருக்கும் நீங்கள், வெறுப்பையும் படுகொலைகளையும் போதிக்கும் இஸ்லாமை ஆதரிப்பதன் மூலம் ஒரு அபாயகரமான விளையாட்டை விளையாடுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வில்லையே? நீங்கள் குறைவாகப் படித்த முஸ்லிமாக இருந்திருந்தால் உங்களை இதற்காக மன்னித்திருப்பேன். உங்களின் பட்டங்களுக்கும், பட்டயங்களுக்கும் மாறாக, இந்த விசயத்தில் உங்களின் அக்கறையின்மை எனக்குப் புரிய வில்லை.

 

எனது வார்த்தையை மதித்து Who Feeds Fundamentalism என்ற எனது கட்டுரையை படிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். பிறகு “இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் வளர்ச்சிக்கும், தாலிபானின் கொடூரங்களுக்கும், ஈரானின் முல்லாக்களின் காட்டுமிராண்டித்தனங்களுக்கும், World Trade Center குண்டுவெடிப்பிற்கும், எகிப்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பேருந்தில் குண்டுவெடிப்பிற்கும் ஏன் உங்களை பொறுப்பாக்கக் கூடாது” என்று எனக்கு எழுதுங்கள். இந்த குற்றங்களைச் செய்த மூளைச்சலவை செய்யப்பட்ட அடிப்படைவாதிகளை நான் பொறுப்பாளிகளாக்க  மாட்டேன். அவர்கள் அப்பாவிகள். அவர்கள் மூளைச்சலவை செய்யப் பட்டவர்கள். அவர்களும் பாதிக்கப் பட்டவர்களே. அவர்களுடைய கொடூரங்களுக்கும், முட்டாள்தனங்களுக்கும், குற்றங்களுக்கும் உரிய பொறுப்பு உங்கள் மேல் தான் விழுகிறது. நீங்கள் தான் அவர்களுக்கு இஸ்லாம் சிறந்தது என்று கூறுகிறீர்கள். நீங்கள் தான் அந்த வெறுப்பை வளர்க்கும் புத்தகத்தை புனிதமானது என்று தூக்கிப் பிடிக்கிறீர்கள். நீங்கள் Ph.D பட்டம் பெற்று இருக்கிறீர்கள். நீங்கள் படித்த மதிப்பு மிக்க அறிஞர். படிக்காத தற்குறி முஸ்லிம்கள் உங்களை உயர்வாகப் பார்க்கிறார்கள். அவர்கள் உங்களையும் உங்கள் கருத்தையும் மதிக்கிறார்கள். நீங்கள் மேற்குலகிற்கு சென்று வந்திருக்கிறீர்கள், பட்டங்கள் வாங்கியிருக்கிறீர்கள் அதனால் உங்களுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைத் தெரிந்து தான் சொல்கிறீர்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். குரான் கடவுளின் புத்தகம் என்று நீங்கள் சொன்னால் அது சரியாகத் தான் இருக்கும். அது அறிவியல் பூர்வமானது என்று நீங்கள் சொன்னால் அவர்கள் நம்புகிறார்கள். அது ஒரு அதிசயம் என்றால், உங்கள் மதிப்பீட்டை கேள்வி இல்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த அப்பாவி மக்கள் தங்களுக்கு எது சரி எது தவறு என்று தெரிந்து கொள்ள உங்களை எதிர் நோக்குகிறார்கள். அவர்கள் உங்களிடமிருந்து அமோதிப்பைப் பெறுகிறார்கள். ஆனால் நீங்களோ அவர்களுக்கான கட்டளைகளை குரானிடம் இருந்து பெறும்படி கூறுகிறீர்கள். இஸ்லாமை ஏற்காதவர்களை வெறுக்கும்படியும், கொல்லும்படியும், அடக்கு முறைகளுக்கு உட்படுத்தும் படியும், அவர்களின் மனித உரிமைகளை மீறும்படியும், பெண்களை அடக்கி வைக்கும் படியும் போதிக்கும் பிற்ப்போக்கான காட்டுமிராண்டித் தனமான அதே குரானைப் படித்து தெரிந்து கொள்ளும்படி சொல்கிறீர்கள்.

 

அன்பு தோழியே, நீங்கள் உங்கள் பொறுப்பில் இருந்து கைகழுவிக் கொள்ள முடியாது. நான் உங்களை பொறுப்பாளியாக்குவது மிகைப்படுத்தப் பட்டதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கைகளால் செய்யப் பட்ட படுகொலைகளுக்கு நான் உண்மையிலேயே உங்களைத்தான் குற்றவாளியாக்குகிறேன். பயங்கரவாதத்திற்கு உங்கள் ஆதரவை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் அமைதி என்று வாய்ப் பந்தல் போட்டாலும், இஸ்லாமை தூக்கிப் பிடிப்பதன் மூலம், பயங்கரவாதத்தைத் தான் தூக்கிப் பிடிக்கிறீர்கள். வெறுப்பின் கொள்கையான இஸ்லாமுக்கு அளித்து வரும் உங்கள் ஆதரவை பின்வாங்கும் படி கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். அது இறந்து போகட்டும். நாம் எல்லோரும் சேர்ந்து அதை சாகடிப்போம். ஏனென்றால் இஸ்லாம் வாழ்ந்தால் மனித இனம் அழியும்.

 

இஸ்லாம் நாசிசத்தைப் போன்றது. இந்த இரு கொள்கைகளும் வெறுப்பை போதிக்கின்றன. ஒன்று இனத்தின் மேலாண்மையையும் மற்றொன்று மதத்தின் மேலாண்மையையும் போற்றுகிறது. சாரத்தில் அவைகள் இரண்டுமே ஒரே மாதிரியான அறிவுரைகளைக் கொண்டது. இரண்டுமே போரை முன்நிறுத்துகின்றன. இரண்டுமே பிரிவினையை அடிப்படையாகக் கொண்டவை. இவை இரண்டுமே தன்னை மட்டுமே உயர்வாக எண்ணி தன்னை மட்டுமே மதிக்கின்ற (narcissistic) எல்லா அதிகாரமும் தன்னிடமே இருக்க வேண்டும் என்ற வெறியுடன் இருக்கின்ற (megalomaniac) ஆரோக்கியமற்ற மனநிலையைக் கொண்ட இரு மனிதர்களின் மூளைகளில் உதித்தவை. வெறுப்புக் கொள்கையான நாசிசத்தை தூக்கிப் பிடித்து அதை “அன்பின் போதனை” என்று அழைக்கும் நாசி அறிஞரை எப்படி மதிப்பிடுவீர்கள்? நாசிசத்திற்கு ஆதரவாக இருந்து கொண்டு தனது நேரத்தையும் பணத்தையும் அதன் வளர்ச்சிக்காக ஈடுபடுத்தும் ஒரு பெண்மணியை நீங்கள் எப்படி வரையறுப்பீர்கள்? நாசிசம் உண்மையிலேயே ஒரு அமைதியை வளர்க்கும் கொள்கை என்று இந்த மனிதர் நம்பினாரா இல்லையா என்பது முக்கியமல்ல. நாசிசத்திற்கு அவர் ஆதரவாக இருந்தார் என்ற அந்த ஒரு விசயமே நாசிக்களால் செய்யப்பட்ட எல்லா குற்றங்களுக்கும் அவரையும் குற்றவாளியாக்குகிறது. அவர் யாரையும் கொன்றிருக்காமல் இருந்தாலும், யாருடைய இறப்பையும் விரும்பியில்லாமல் இருந்தாலும் அவர் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது. வெறுப்பையும் படுகொலைகளையும் போற்றும் கொள்கைக்கு அவர் ஆதரவாக இருக்கிறார் என்பதே போதும்.

தோழியே உங்களுக்கும் அவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நீங்கள் இஸ்லாமுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள். அதனால் முஸ்லிம்கள் தங்கள் மதப் புத்தகத்தினால் தூண்டப்பட்டு செய்யும் அனைத்து குற்றங்களுக்கும் நீங்களும் குற்றவாளியாகிறீர்கள். நீங்கள் அவர்களிடம் இஸ்லாம் நல்ல மதம் என்றும் குரான் கடவுளின் புத்தகம் என்றும் கூறுகிறீர்கள். ஆனால் குரான் அவர்களுக்கு இஸ்லாமை ஏற்காதவர்களை கொல்லும் படியும், முஸ்லிமல்லாதோரை தீட்டானவர்கள் (najis) என்றும் தங்கள் மனைவிகளை அடிக்கும் படியும், அவர்களை தரக் குறைவாக நடத்தும் படியும், அவர்கள் புத்தி குறைந்தவர்கள் என்றும், முஸ்லிமல்லாதோரின் மீது போர்தொடுக்கும் படியும், கிருத்துவர்களையும் யூதர்களையும் நண்பர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றும், எப்போதும் மற்றவர்களை வெறுக்கவும் அவர்களிடம் ஒட்டாமல் வாழவும் அவர்களின் மீது அவநம்பிக்கை கொள்ளவும் சொல்கிறது. உங்களை நீங்கள் எப்படி கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறீர்கள்? உங்கள் மனசாட்சி உறுத்த வில்லையா? மக்களை தவறாக வழி நடத்தி அவர்களை தொடர்ந்து அறியாமை இருளில் இருக்க வைப்பதற்காக உங்களின் மனம் குற்றஉணர்வு கொள்ள வில்லையா?

 

நான் ஏதும் தவறாக சொல்லிவிட்டேனா? இஸ்லாம் மேலே சொல்லப் பட்டதைப் போன்றதில்லையா? அப்படியென்றால் எனக்கு நிரூபியுங்கள். இஸ்லாம் உண்மையிலேயே அன்பை போதிக்கிறது என்றும், முழு மனித இனத்தின் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் போதிக்கிறது என்றும், ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமையை போதிக்கிறது என்றும், அது ஒரு அமைதியை போதிக்கும் மதம் என்றும் உங்களால் நிரூபிக்க முடிந்தால் நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால் எல்லா ஆதாரங்களும் அதற்க்கு எதிராக இருந்தால் தயவு செய்து உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொண்டு அதைப் பற்றி பொய் பேச ஆரம்பித்து விடாதீர்கள்.

 

இஸ்லாம் ஒரு சமாதானத்தின், அன்பின் மற்றும் மனித இனத்தின் ஒற்றுமையின் மதம் என்று உங்களால் நிரூபிக்க முடிந்தால், நான் ” Islam-bashing ” ஐ (உங்கள் வார்த்தையில்) கைவிட்டு,  முஸ்லிமாக மாறி இஸ்லாமிய கொள்கைக்காக பாடுபடுவேன் என்று இவ்விடத்தில் உறுதி அளிக்கிறேன். அதேபோன்று நான் இஸ்லாமானது நீங்கள் நினைப்பதைப் போன்றதல்ல என்று நிரூபித்தால் நீங்கள் அதை விட்டு விலகுவேன் என்று நேர்மையாக ஒரு உறுதிமொழியை கொடுக்க முடியுமா? பிற்ப்போக்குத்தனத்திற்கும், குழுச் சண்டைகளுக்கும், கருத்துரிமையற்றமைக்கும் இஸ்லாம் தான் காரணம் என்று நான் நிரூபித்தால் அதை விட்டு விலகுவீர்களா? இஸ்லாம் ஒரு வெறுப்பின், சகியாமையின் மற்றும் போரின் மதம் என்பதற்கு ஆதாரங்கள் கொடுத்தால், தொடர்ந்து உங்களை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வீர்களா? இது ஒரு சவால். ஏற்றுக்கொள்வீர்களா? முகமதின் கூற்றுக்களை நியாயத்துடனும் திறந்த மனதுடனும் பரிசீலிக்க தயாரா?

 

நாம் வாழ்வது ஒரே ஒரு முறை தான். இந்த விலைமதிப்பற்ற வாய்ப்பை கானல் நீரை தேடி அலைவதில் வீணடிக்க வேண்டாம். கடவுளின், வானகத்தின், அண்டத்தின் (உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு வார்த்தையின் ) கருணையால், நாம் இருவருக்கும் பல மனிதர்களில் தாக்கம் ஏற்படுத்தும் வாய்ப்பைப் பெற்று இருக்கிறோம். இந்த வாய்ப்பில் பொறுப்பும் உள்ளது. நம்மைப் போன்ற மக்கள் தான் இவ்வுலகை கட்டி அமைத்து மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறார்கள். உங்களால் இந்த பொறுப்பில் அலட்சியமாக இருக்க முடியுமா? நமது குழந்தைப் பருவத்தில் நமக்கு உண்மையென்று போதிக்கப் பட்டதை, நாமும் நம்பி ஏற்றுக் கொண்டதை, அது பொய்யாகக் கூட இருக்கலாம் என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டாமா? வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாம் மேலும் அடி எடுத்து வைக்கும் முன்னர் எதை நோக்கிப் பயணித்துக் கொண்டு இருக்கிறோம் என்று பார்க்க வேண்டும். நாம் கண்ணை மூடிக்கொண்டு படு பாதாளத்தை நோக்கி நடந்து கொண்டு இருக்கலாம். கணக்கிடமுடியாத அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கலாம். ஒரு கணம் நின்று மேலும் ஒரு அடி வைக்கும் முன்னர் நன்கு யோசித்துப் பார்ப்போம்.

 

உங்கள் “இளகிய இதயம் கொண்ட” தோழன்.

அலி சினா

 

26 மே 2001

அன்புள்ள சகோதரன் அலி சினாவே

 

நேராக எனக்கே பதில் எழுதியுள்ளீர்கள் என்பதைப் பற்றி எனக்கு மிக்க மகிழ்ச்சி. நமது இதயங்களில் உள்ள அன்பைப் பற்றி நீங்கள் எழுதியுள்ளீர்கள் என்பதிலும் எனக்கு மகிழ்ச்சி. அன்பில்லாமல் பொதுவான மனித இனத்தின் மீதோ, நாம் வாழும் உலகத்தின் மீதோ, சமூகநீதியின் மீதோ எந்த ஒரு உண்மையான ஈடுபாடும் இருக்க முடியாது.

 

இன்று, மிகவும் நலிவடைந்துள்ள என் தந்தைக்காக என் இதயம் மிகவும் கவலை கொண்டுள்ளது. நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு பங்களாதேஷ் திரும்ப வேண்டி இருக்கலாம். என்ஜினீயரான எனது அப்பா தன் வாழ்நாள் முழுக்க தன்னை ஒரு “விஞ்ஞான பூர்வமான மனிதன்” என்றே அழைத்துக் கொண்டார் என்பதையும் உங்களுக்கு தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். அவர் தனது இரு பெண்களையும் எந்த மதக் கல்வியும் இல்லாமல் வளர்த்தார். நான் மதத்தைப் பின்பற்றும் முஸ்லிம் இல்லை. ஆனால் என் அப்பாவைப் போல் நான் ஒரு நாஸ்தீகரும் இல்லை.

 

ஆகையால், நீங்கள் விடும் சவாலை ஏற்க முடியாதவளாக இருக்கிறேன் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சரியாகச் சொல்லவேண்டுமானால் நான் இஸ்லாமுக்கு ஆதரவாளராகவோ போற்றிப் பாடுபவராகவோ இல்லை. அவ்வாறு தொடர்ச்சியாக செய்பவர்கள் இருக்கிறார்கள். ஒரு கற்றறிந்த மனிதராக எனது கடமை பகுத்தறிந்து சிந்திப்பதுதான். அதாவது, சரியான கேள்விகளைக் கேட்டு என்னால் ஆன வரை தகுந்த பதில்களை பெறுவதுதான்.

 

எனது பன் கலாச்சார வளர்ப்பினாலும், என் சொந்த உலகளாவிய பயணங்களாலும், எல்லா நிலையில் இருந்து வரும் எல்லாவித மக்களையும், அவர்களின் மதங்கள் உட்பட, மதிக்கக் கற்றிருக்கிறேன். மதம் என்பது ஒரு கலாச்சார அடையாளம். இந்த கலாச்சார அடையாளத்தை உருவாக்க ஏராளமான சிந்தனைகளும், உணர்வுகளும், கற்பனைகளும் பயன்பட்டிருக்கிறது. அதனால்தான் நான் அரசியல், வரலாறு, இலக்கியம் இவைகளுடன் மதத்தையும் கற்றறிய விரும்புகிறேன். நான் இந்த மனித குலத்தின் அங்கத்தினர் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானால் எனக்கு எந்த மதத்தையும் அவமதிக்க உரிமையில்லை. ஒரே ஒரு மதத்தை மட்டும் தனிமைப் படுத்தி அதை அவமதிப்பது என்பது சரியான செயல் மட்டும் இல்லை, அது நாகரீகமான ஒன்றும் இல்லை. ஒரு மதத்தின் பெயரால் குற்றங்கள் செய்யப்படும்போது, நான் கண்ணை மூடிக்கொண்டு மதத்தை குறைகூறுவதற்கு பதிலாக, அந்த குற்றத்தின் மற்றும் குற்றவாளிகளின் பின்புலத்தில் உள்ள அரசியல், வரலாறு மற்றும் சமூக காரணங்களை ஆராய்வேன். அது போன்ற பகுப்பாய்விற்கு அறிவு தேவை. அதுவும் ஏராளமான அறிவு தேவை. இன்றைய சிக்கலான உலகில் ஒவ்வொரு நிகழ்வும் உலகளாவிய தொடர்பைக் கொண்டது. ஆகையால் சமூகத்திற்கு பயனுள்ள ஆழ்ந்த பகுப்பாய்வை செய்வதற்கு அளவான அல்லது பாரபட்சமான அறிவைக் கொண்டிருப்பது போதுமானதல்ல. ஒரு மதத்தை தூற்றுவது அப்படிப்பட்ட அநாகரீகத்தை செய்பவர்களின் அடிப்படை அறியாமையையே காட்டுகிறது.

 

அலி சினா, உங்கள் தாயகத்தைப் பற்றிய உங்கள் வலி எனக்கு புரிகிறது. அதனால்தான் என் ஈரான் பயணத்தின் இனிமையான நினைவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இந்த இருண்ட காலம் மறையும் என்றும் விரைவில் மற்றொரு விடியல் வரும் என்று நம்புகிறேன்.

 

அந்த Kermanshahi பாடலைப் பொறுத்தவரையில், ஆப்கனி மக்கள் அதை நன்கு அறிவார்கள். இதற்கு காரணம் அனேகமாக Kermanshah ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகில் இருப்பதால்லாக இருக்கலாம்.

 

என் நாடு நலமடைய வேண்டும் என்று வாழ்த்துங்கள். ஈரானியர்களைப் போல, உலகில் எல்லா இடங்களிலுமுள்ள பொது மக்களைப் போல, வங்காள முஸ்லிம்களும் மதசார்பற்ற மக்கள் தான். குறிப்பாக எங்கள் நாடு தொள்ளாயிரம் ஆண்டுகளாக பன்மத நாடாக இருந்திருக்கிறது. இஸ்லாமிஸ்ட்டுகளின் சாக்கடை அரசியல் எங்கள் நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை சீரழித்துக் கொண்டு இருக்கிறது. இந்த இஸ்லாமிஸ்ட்டுகளின் சாக்கடை அரசியல் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத உழலவாதிகலான, கையாலாகாத அரசியல்வாதிகளைப் பார்க்கும் போது என் மனம் நோகிறது.

 

தங்கள் உண்மையுள்ள

ஃபரிதா மஜீத்

 

27 மே 2001

அன்புள்ள சகோதரி ஃபரிதா,

 

நான் இஸ்லாமை கடுமையாக தாக்குவதற்கு நீங்கள் கோபம் கொள்ளவில்லை என்பதாலும், அதையும் மீறி என்னை சகோதரனாக ஏற்றுக் கொண்டதாலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

 

உங்கள் அன்புத் தந்தையின் நலிவுற்ற நிலையைக் கேட்டு என் மனம் வருந்துகிறது. அவர் விரைவில் குணமடைவார் என்றும் நீங்கள் உங்கள் மன அமைதியை திரும்பப் பெறுவீர்கள் என்றும் நம்புகிறேன். உங்கள் தந்தை ஒரு சுதந்திர சிந்தனையாளர் என்று அறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. எனது குடும்பம் மதபக்தியுள்ள ஒன்று. நான் ஆத்தீகனாகவே வளர்க்கப் பட்டேன். சொல்லப் போனால், எங்கள் சொந்தத்திலேயே (மச்சான்கள் மற்றும் ஒன்றுவிட்ட மச்சான்களிலேயே) மிகவும் பக்தியுள்ளவன் நான் தான். உயர் நிலைப் பள்ளியின் முதல் வருடத்தில் நான் எப்போதும் மதத்தைப் பற்றியே பேசிக்கொண்டு இருந்ததால், அக்கூன்ட் அலி (முல்லா அலி) என்று அழைக்கப் பட்டேன். ஆனால் எனது இஸ்லாம் உண்மையான இஸ்லாமில்லை. எனது மனதில் நானாகவே இஸ்லாம் எப்படி இருக்கவேண்டும் என்று என்று நினைத்தேனோ அப்படி கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் என் தாத்தா ஒரு விதத்தில் சுதந்திர சிந்தனையாளர். அவர் ஒரு தத்துவஞானி. அவரை நான் பார்த்தே இருக்காவிட்டாலும், அவர் நடந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இது அவருடைய பந்தத்தை அணையாமல் காத்து நான் சுமந்து செல்வதைப் போன்றது. அதை வைத்து பல மக்களுக்கு வெளிச்சத்தை கொடுப்பேன் என்று நம்புகிறேன்.

 

நீங்கள் மதத்தை அனுசரிக்கும் முஸ்லிமில்லை என்றாலும் உங்கள் தந்தையைப் போல் ஒரு நாஸ்தீகரும் இல்லை என்று சொல்லி இருக்கிறீர்கள்.

 

சரியாகச் சொல்லப் போனால், நானும் கூட ஒரு நாஸ்தீகன் இல்லை என்று சொல்லிக் கொள்கிறேன். நான் ஆத்திகனும் கூட இல்லை தான். அதாவது இந்த அண்டத்தைப் பற்றிய என் பார்வை அது முற்றிலும் பொருள்களால் மட்டுமே ஆனது (materialistic) என்பதல்ல. எல்லாவற்றையும் ஊடுருவி இருக்கும் ஒரு ஆற்றலை நம்புகிறேன். நான் அந்த ஆற்றலை ‘ஒற்றை நெறி’ (Single Principle) என்று அழைக்கிறேன்.

 

என் சவாலைப் பொறுத்தவரையில், உண்மையில் அதை வறட்டு மோதலுக்கான தொனியில் விடவில்லை. ஒரு விவாதத்தில், அதிகம் கற்றுக்கொள்பவர் தான் வெற்றி பெற்றவர் என்ற  மனநிலையில் தான் நான் என் விவாதங்களை தொடங்குகிறேன்.

 

“ஒரு கற்றறிந்த மனிதராக எனது கடமை பகுத்தறிந்து சிந்திப்பதுதான். அதாவது, சரியான கேள்விகளைக் கேட்டு என்னால் ஆன வரை தகுந்த பதில்களை பெறுவதுதான்” என்று எழுதி இருக்கிறீர்கள்.

 

அதற்காக நான் உங்களுக்கு தலை வணங்குகிறேன். ஒரு மாணவனாக எனது நோக்கமும் இதுதான். நீங்கள் இஸ்லாமின் ஆதரவாளராக இருக்க விரும்பவில்லை என்றால், எனக்கு புரிகிறது. ஆனால் மேலே காட்டப்பட்ட உயர்ந்த எண்ணங்களுக்காக, சரியான கேள்விகளைக் கேட்டு சிறந்த பதில்களைக் கண்டறிய வேண்டிய கடமை நம் இருவருக்கும் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

 

என் அபிப்பிராயம் என்னவென்றால், நமது நாடுகளில் வாடிக்கையான பிற்போக்குத்தனத்திற்கும், மனிதஉரிமை மீறல்களுக்கும் காரணம் இஸ்லாம் தானா என்ற கேள்வியை எழுப்புவது மிகவும் முக்கியம். இந்த கேள்வியைத்தான் நாம் இதுவரை கேட்க வாய்ப்பே இல்லாமல் இருந்தது. இப்போதுதான் நம்மால் முடியுமே. உயிருக்கு பயப்படத் தேவை இல்லையே. முதல் முறையாக இப்போதாவது இந்த கேள்வியை நம்மை நாமே கேட்டுக் கொள்வது அவசியம்: இஸ்லாம் உண்மைதானா? அது நம் மக்களுக்கு அறிவிலும், நெறியிலும், ஞானத்திலும், விஞ்ஞானத்திலும், அரசியலிலும், கலாசாரத்திலும் மற்றும் பொருளாதாரத்திலும் வளர்ச்சி அடைய உதவுகிறதா? நமது நாடுகளில் நடக்கும் போராட்டங்களுக்கும், போர்களுக்கும், அமைதியின்மைக்கும் இஸ்லாம் தான் குற்றவாளியா? பெரிய இந்தியாவை மூன்று பகை நாடுகளாகப் பிரித்து லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் படுகொலைகளுக்கு காரணமாக இருந்தது இஸ்லாமா? இஸ்லாமிய நாடுகளிலும், காஷ்மீரிலும், பிலிப்பைன்சிலும், பாலஸ்தீனத்திலும் நடக்கின்ற குழப்பங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும், பாகிஸ்தானில் நடக்கும் கௌரவக் கொலைகளுக்கும், ஸௌதி அரேபியாவில் நடக்கும் காட்டுமிராண்டித்தனங்களுக்கும் இஸ்லாம் தான் காரணமா?

 

இந்த எல்லா கேள்விகளுக்கும் இல்லை என்ற பதிலாகக் கூட இருக்கலாம். விசாரணைகளுக்குப் பிறகு இஸ்லாம் குற்றமற்றதாகக் கூட நிரூபிக்கப் படலாம். ஆனால் விசாரணை செய்யாவிட்டால் நமக்கு தெரியாமலே போய்விடும். இஸ்லாம் குற்றமற்றது என்று உங்களுக்கு உறுதியாக தெரிந்தால், அதில் சந்தேகம் உள்ளவர்களுக்கு விளங்க வைப்பதில் உங்களுக்கு என்ன கெடுதல் ஆகப் போகிறது. குறைகான்பவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர்களின் சந்தேகத்தைப் போக்கலாமே? அவர்களை ஏன் தாக்க வேண்டும்? அவர்களைப் பற்றி மோசமாகப் பேசுவானேன்? அவர்களை சிறைப் பிடித்து, கொல்லுவானேன்?

 

நீங்கள் மதத்தை குறை கூறுவதற்கு இந்த உரிமையும் இல்லை என்றும் “ஒரே ஒரு மதத்தை மட்டும் தனிமைப் படுத்தி அதை அவமதிப்பது என்பது சரியான செயல் மட்டும் இல்லை, அது நாகரீகமான ஒன்றும் இல்லை.” என்றும் எழுதி இருக்கிறீர்கள். நான் இதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். யாரும் மற்ற மதங்களை அவமதிப்பதோ, அவற்றைப் பின்பற்றுபவர்களை கேவலப் படுத்துவதோ, அவர்களின் மதங்களை கைவிடும்படி கட்டாயப் படுத்தவோ கூடாது. இது போன்ற செயல் மிகவும் அநாகரீகமானதும், முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாததும், தண்டிக்கப்படக் கூடியதுமாகும். இதே காரணத்திற்காகத் தான் நான் இஸ்லாமை அழிக்க விரும்புகிறேன். இஸ்லாம் மற்றவர்களின் மதங்களை அவமதிக்கிறது. முகமதுவே குரைஷிக்களின் மதத்தை எந்த அளவுக்கு கேவலப் படுத்தினான் என்றால், அவர்கள் முகமதின் பெரியப்பா அபு தாலிபிடம் சென்று கீழ்க்கண்டவாறு முறையிட்டார்கள்.

 

“உங்கள் சகோதரனின் மகனானவன் எங்கள் கடவுள்களைப் பற்றி அவமரியாதையாக பேசி இருக்கிறான், எங்களை முட்டாள்கள் என்று ஏசி இருக்கிறான். எங்கள் முன்னோர்கள் எல்லாம் தவறான வழியில் சென்றவர்கள் என்றும் கூறி இருக்கிறான். எங்கள் எதிரியை நீங்களே தண்டித்து எங்களுக்கு நியாயம் செய்யுங்கள், இல்லையேல், (எங்களின் நிலையில் தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதால்) நாங்களே பார்த்துக் கொள்ளும் விதமாக அவனை விட்டு விடுங்கள்” [Muir, v. 2, p. 162]

 

முகமது அத்தோடு நிறுத்தவில்லை. அவன் மெக்காவை தாக்கி அதன் கடவுள்களை அழித்து பெரும் தெய்வ அவமதிப்பைச் செய்தான். தாலிபான்கள் கூட தங்கள் தூதரின் வழிகாட்டலைப் பின்பற்றியே பாமியானில் இருந்த புத்தர் சிலைகளை அழித்தார்கள். என்னிடம் குரானின் வாசகங்களின் ஒரு தொகுப்பு உள்ளது. அந்த வாசகங்களில் சிலவற்றைப் படித்துப் பாருங்கள். நீங்கள் பின்பற்றும் மென்மையான நெறிகளை முகமது எப்படி மீறினான் என்றும் அந்த போதனைகளைப் பின்பற்றும் முஸ்லிம்கள் எப்படி மற்றவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுபவர்களில் முதன்மையாக இருக்கிறார்கள் என்றும் பார்ப்பீர்கள். சுதந்திர சிந்தனையாளர்களான நாங்கள் இஸ்லாமை கேவலப் படுத்துவதில்லை. வங்காளத்தின் சுதந்திர சிந்தனையாளர்களின் இஸ்லாமைப் பற்றிய அருமையான கட்டுரைகளை படித்து இருக்கிறேன். அதில் சிலவற்றை எனது தளத்தில் பதிந்து அதற்கு மதிப்பு கூட்டி இருக்கிறேன். அந்த எல்லா கட்டுரைகளும் நல்ல புலமையுடனும், அறிவான வாதத்துடனும் எழுதப்பட்டவை. ஒரு கட்டுரையிலும் கூட அதன் ஆசிரியர் இஸ்லாமையோ அதன் தூதரையோ அவமதிப்பாக எழுத வில்லை. இதற்கு மாறாக முகமது எல்லோரையும் கேவலப் படுத்தினான். அவன் அவர்களை சபிக்கவும், தாக்கவும், கொல்லவும், நாடு கடத்தவும், அடிமைப் படுத்தவும் செய்தான். அவர்கள் நரகத்திற்கு போவார்கள் என்று சொன்னான். அவன் அவதூறாகப் பேசியது மட்டுமில்லை. தனது மதத்தை ஏற்காதவர்களை கொடுமைகளுக்கு உட்படுத்தினான். முஸ்லிம்களும் அதைத்தான் செய்கிறார்கள். ஆப்கானிஸ்தானத்தில் இந்துக்கள் ஒரு அடையாளபடுத்தும் பட்டயத்தை அணியவேண்டும் என்ற தாலிபானின் ஆணை இஸ்லாமுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆரம்பத்தில் இருந்தே இஸ்லாமிய நாடுகளில் வாழும் திம்மிக்கள் [இஸ்லாமிய நாடுகளில் இரண்டாம் தர குடிமக்களாக வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மற்ற மதத்தினரைக் குறிக்கும் அவமதிப்பான அரபுச் சொல்] தங்களை அடையாள படுத்தும் விதமாக இருக்கவேண்டும். ஏனென்றால் மழைநாட்களில் தங்கள் மேலிருந்து நீர்த்துளி முஸ்லிம்களின் மீது பட்டு அவர்களை தீட்டுப்படுத்தி விடக்கூடாது.

 

இதுபோன்ற கொடுமைகளையும் அவமதிப்புகளையும் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இஸ்லாம் பாகுபாட்டினையும், வெறுப்பினையும் போதிக்கிறது. மற்ற மத மக்களை கேவலப்படுத்துகிறது. மனிதாபிமானத்தை மதமாகக் கொண்டவர்கள் இதற்க்கு முடிவு கட்டவேண்டும். மற்றவர்களின் மதங்களை கேவலப்படுத்துவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், நீங்கள் எங்கள் பக்கம் நின்று அதுபோன்ற கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டும்.

 

நீங்கள் “ஒரு மதத்தின் பெயரால் குற்றங்கள் செய்யப்படும்போது, நான் கண்ணை மூடிக்கொண்டு மதத்தை குறைகூறுவதற்கு பதிலாக, அந்த குற்றத்தின் மற்றும் குற்றவாளிகளின் பின்புலத்தில் உள்ள அரசியல், வரலாறு மற்றும் சமூக காரணங்களை ஆராய்வேன்.” என்று எழுதி இருக்கிறீர்கள்.

 

ஒரு கற்றறிந்த மனிதராக நீங்கள் இந்த முறையானது விஞ்ஞான பூர்வமானதல்ல என்று அறிவீர்கள். மதத்தை மட்டும் விட்டுவிட்டு வேறு எதுவேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம் என்று எப்படி உங்களால் முடிவெடுக்க முடிந்தது? ஏன் மதத்தை இந்த சமன்பாட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை? அனேகமாக அதுதான் பிரச்சனையின் மூலகாரணமே. அனேகமாக மதம் தான் குற்றவாளியே தவிர, அரசியல், வரலாறு மற்றும் சமூக காரணங்கள் அல்ல. மதத்தை மட்டும் விட்டுவிடுவது அறிவு பூர்வமானதல்ல. நியாயமாக் இருக்க நினைத்தால் சந்தேக கேஸ்களில் மதத்தையும் சேர்த்து, முன்முடிவுகள் அற்ற பாரபட்சமில்லாத மனதுடனும், முடிவு எதுவாக இருப்பினும் ஏற்றுக்கொள்ளும் திறந்த மனதுடனும், உங்கள் விசாரணையைத் திரும்ப நடத்துங்கள். இஸ்லாமிய நாடுகளின் தொடக்கத்தில் இருந்தே உள்ள பிற்ப்போக்குத்தனத்திற்கு இஸ்லாம் தான் காரணமாக இருக்கக் கூடுமோ? முஸ்லிம் நாடுகளின் சமூக அரசியல் சூழல்கள் மீது இஸ்லாமுக்கு தாக்கம் இருக்கிறதா? இது போன்ற முக்கியமான ஆய்வில் இருந்து இஸ்லாமை எப்படி விடுவிக்க முடியும்?

 

நீங்கள் “அது போன்ற பகுப்பாய்விற்கு அறிவு தேவை. அதுவும் ஏராளமான அறிவு தேவை. இன்றைய சிக்கலான உலகில் ஒவ்வொரு நிகழ்வும் உலகளாவிய தொடர்பைக் கொண்டது. ஆகையால் சமூகத்திற்கு பயனுள்ள ஆழ்ந்த பகுப்பாய்வை செய்வதற்கு அளவான அல்லது பாரபட்சமான அறிவைக் கொண்டிருப்பது போதுமானது அல்ல.” என்று எழுதி இருக்கிறீர்கள்.

 

அதற்கு அறிவு வேண்டும் என்பது உண்மைதான். அறிவுதான் அறியாமை என்ற விஷத்திற்கான சிறந்த முறிவு. ஒரு மதம் உண்மையா அல்லது ஏமாற்றுவேலையா, அதனால் சமூகத்திற்கு பலனுண்டா என்பவற்றை உறுதிப் படுத்திக்கொள்ள, நமக்கு அறிவு அவசியம் என்றும் எவ்வளவுக்கு எவ்வளவு அதிக அறிவோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது என்றும் நான் உங்கள் கூற்றை ஒத்துக்கொள்கிறேன். இருந்தாலும் அதற்கு அவ்வளவு ஒன்றும் அறிவு தேவை இல்லை. மதங்கள் மிகவும் சிக்கலாக மாறிவிட்டன. மதங்களைப் பற்றி பல மக்கள் பலவிதமான விஷயங்களை எழுதி இருக்கிறார்கள். இந்த வேலையை மலைப்பாக்கும் விதமாக மதங்களைச் சுற்றி எண்ணற்ற பிரிவுகள், தத்துவங்கள், சிந்தனைகள், நிறுவனங்கள் தோற்றுவிக்கப் பட்டு இருக்கின்றன. இருந்தாலும் யாதார்த்தத்தில் அது அவ்வளவு கடினமல்ல. நாம் செய்யவேண்டியதெல்லாம் மதப் புத்தகங்களைப் படிக்க வேண்டியதுதான். திறந்த மனதுடனும், முன்முடிவுகள் அற்றும் பைபிளையோ குரானையோ யார் படித்தாலும், அவைகள் முழுக்க தவறுகள் இருக்கின்றன என்பதைக் காண முடியும். கடவுளின் உயர்வான குழுவின் [Exalted Assembly] உரையாடலை ஒட்டுக்கேட்ட ஜின்களை தாக்குவதற்காக ஏவப்பட்ட ஏவுகணைகள் தான் நட்சத்திரங்கள் என்று முகமது சொன்னதெல்லாம் பேத்தல் என்று புரிந்து கொள்ள நீங்கள் பெரிய விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எந்த பள்ளி மாணவனும் கண்டுபிடிக்க முடியும் அளவுக்கு குரான் அபத்தங்களால் நிறைந்தது. இத்தனை முஸ்லிம்களுக்கு இது தெரியாததற்கு காரணம் அவர்கள் அதைப் படிப்பதில்லை. அதைப் படித்தும் முஸ்லிமாக இருப்பவர்கள், அந்த அபத்தங்களைப் பார்க்க விரும்பவில்லை.

 

கடைசியில் பங்களாதேஷ் நலமடைய வேண்டும் என்று வாழ்த்துங்கள் என்று என்னைக் கேட்டுவிட்டு ” இஸ்லாமிஸ்ட்டுகளின் சாக்கடை அரசியல் எங்கள் நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை சீரழித்துக் கொண்டு இருக்கிறது ” என்று புலம்பி இருந்தீர்கள்.

 

என் முழு இதயத்துடனும் உங்கள் நாடு நலமடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதனால்தான் உங்களை என்னுடனும், உங்கள் நாட்டின் சுதந்திர சிந்தனையாளர்களுடனும் சேர்ந்து, உங்கள் நாட்டின் நலத்தைப் பாதிக்கின்ற முக்கியமான பிரச்சனைகளுக்கு விடை காணும் படி கெஞ்சுகிறேன். பங்களாதேஷின் மீதும், அதன் மக்களின் மீதும், கலாச்சாரத்தின் மீதும், கண்ணியத்தின் மீதும், உற்பத்தியின் மீதும், முன்னுரிமைகளின் மீதும், இஸ்லாமின் தாக்கத்தைப் பற்றி யோசித்து பாருங்கள். இஸ்லாம் மக்களை மேலும் நெறியுள்ளவர்களாக மாற்றுகிறதா? இஸ்லாம் நெறிமுறையானதா? இஸ்லாம் குடும்பத்தின் ஒற்றுமையை பேணிப் பாதுகாக்கிறதா? இஸ்லாம் ஆண் பெண் சமத்துவத்திற்கு ஆதரவாக இருக்கிறதா? இஸ்லாம் ஒரு நாட்டின் எல்லா குடி மக்களுக்கும் மத சார்பற்று சம உரிமைகள் அளித்து நாட்டின் ஒற்றுமையை வளர்க்கிறதா? இஸ்லாம் விஞ்ஞானத்தை வளர்க்கிறதா? அது மனித மனங்களையும் கலாசாரத்தையும் வளர்க்கிறதா? அது தத்துவங்களையும், கலைகளையும் வளர்க்கிறதா? இஸ்லாம் மக்களாட்சியையோ கருத்து சுதந்திரத்தையோ சிந்தனைச் சுதந்திரத்தையோ ஆதரிக்கிறதா? உங்கள் நாட்டில் இஸ்லாமின் தாக்கம் சாதகமானதாக இருந்துள்ளதா? இஸ்லாம் உண்மையிலேயே பங்களாதேஷுக்கு நன்மையை அளித்துள்ளதா? இந்த கேள்விகள் மிகவும் முக்கியமானவை. அவைகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். இந்த விவாதத்தை தொடங்கிப் பாருங்கள். உங்களின் கருத்துக்கு மாற்று கருத்துக்கள் உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள். அப்போதுதான் உங்களால் ஞானத்துடன் முடிவெடுக்க முடியும்.

 

இது போன்ற கட்டாயமான கேள்விகளைக் கேட்க நிறைய மக்கள் தயாராகவோ மனதளவில் பண்பட்ட நிலையிலோ இருப்பதில்லை. இந்த கேள்விகளுக்கு விடை காண்பது என்பது இதயத்தையே நொறுக்கும் விதத்தில் இருக்கலாம். உண்மை உங்களை விடுவிக்கும் ஆனால் அதை ஏற்றுக்கொள்வது கடினம். உங்களுக்கு உண்மையை எதிர்கொள்ள துணிவில்லாமல் இருந்தால், இந்த விவாதத்தை விட்டு விலகி இருங்கள். நீங்கள் பொத்திப்பொத்தி வளர்த்து வரும் பாரபட்சமான நம்பிக்கைகளை உடைத்தெறியக் கூடிய கேள்விகளைக் கேட்காதீர்கள். உங்கள் தலையை மணலில் புதைத்து வைத்துக் கொண்டு எல்லாம் நன்றாகத் தான் போகிறது என்று எண்ணிக் கொள்ளுங்கள். சுதந்திர சிந்தனை எல்லோராலும் முடியாது. அதற்கு நேர்மையின் பலம் வேண்டும். அதற்கு உண்மையின் மீது தீராப்பற்று வேண்டும். தான் நம்பியிருந்தவைகளுக்கு எதிரானதாக இருந்தாலும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தெளிவான மனம் வேண்டும், நீங்கள் இதற்கு தயாராக இல்லை என்றால் மற்றவர்களின் கட்டாயத்திற்கு பணிய வேண்டாம். ஆனால், தயவு செய்து அவ்வாறு துணிந்தவர்களுக்கு இடைஞ்சலாக இருக்காதீர்கள். உங்கள் நாட்டின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கும் இஸ்லாம் என்ற மிருகத்தை கொன்று ஒழிப்பதற்கு நெஞ்சுரத்துடன் திரண்டு உள்ள ஆண்களின் மற்றும் பெண்களின் வழியில் குறுக்கே நிற்காதீர்கள். அவர்களின் மீது குற்றம் சுமத்தி, கேவலப் படுத்தாதீர்கள். அவர்களுடைய அர்த்தமுள்ள கேள்விகளுக்கு உங்களால் பதில் கூறமுடியாவிட்டால், அவர்களின் நடத்தைக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள்.

 

உங்கள் நிலையை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். ஒன்று இஸ்லாமை நம்புகிறீர்கள் அல்லது அதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் மாசமாக இருக்கிறீர்கள் அல்லது மாசமாக இல்லை. நீங்கள் நடுவில் நின்றுகொண்டு நான் இஸ்லாமைப் பின்பற்றாத முஸ்லிம் என்று கூற முடியாது. பின்பற்றாத முஸ்லிம் என்று என்ன சொல்ல வருகிறீர்கள்? இஸ்லாம் கடவுளின் மதம் என்று நீங்கள் நம்பவில்லையா? அப்படி நம்பினால், அதைப் பின்பற்ற வேண்டியதுதானே? ஏன் பர்தா போட்டுக்கொள்ளவில்லை? ஏன் உங்கள் கணவனை வேறு மனைவிகளை வைத்துக் கொள்ள அனுமதிக்க வில்லை? ஏன் அவருக்கு பணிந்து நடந்து கொள்ளாமல், காபிர்களின் வழியான சமத்துவத்தை விரும்புகிறீர்கள்? அவர் உங்களை அடித்தால், அல்லா அவருக்கு அந்த உரிமையை கொடுத்து இருக்கிறார் என்பதற்கு மாறாக, ஏன் நீதி மன்றத்துக்கு போகிறீர்கள்? உங்களுக்குத்தான் புத்தி குறைவு என்று தெரியுமே (இப்படித்தான் முகமது சொல்லி இருக்கிறான்) ஏன் சம சம்பளம் கேட்கிறீர்கள்? இஸ்லாம் நல்லது என்றால் அதை ஏன் பின்பற்றவில்லை. அது உங்களுக்கு நல்லதில்லை என்றால் அதை மற்றவர்களுக்கு ஏன் பரிந்துரைக்கிறீர்கள்? நீங்கள் சகித்துகொள்ளாத ஷரியா சட்டத்தால் ஏன் பங்களாதேஷின் அப்பாவிக் கிராமப் பெண்கள் கொடுமைப் படுத்தப் படவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்களுக்கு இஸ்லாமை பிடிக்காத போது உங்கள் நாட்டின் படிப்பறிவு இல்லாத அநீதிகள் இழைக்கப்படும் பெண்களுக்கு இஸ்லாம் நல்லது என்று சொல்வது எவ்வளவு கேவலமான ரெட்டை வேடம். இது மிகவும் நெறியற்றது.

 

இந்த புனிதப் போரில் எங்களுடன் இனைந்து கொள்ள உங்களை மற்றுமொருமுறை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்களை எங்கள் அணியில் சேர்ப்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் இந்த பணியானது அந்த அளவுக்கு மிகவும் புனிதமானதும், அதன் பலனோ அந்த அளவுக்கு மிகவும் பெரியதும், அதன் எல்லையோ அந்த அளவுக்கு மிகவும் பரந்ததும், அதன் பணியாளர்களோ அந்த அளவுக்கு மிகவும் குறைவானவர்களாகவும், இருக்கின்றன. தயவுசெய்து வெளிச்சத்தின் அணியில் சேருங்கள். உங்கள் நாட்டின் சுதந்திர சிந்தனையாளர்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள். மாற்றுக் கருத்தை சகியாமை மற்றும் மத வெறுப்பு கலந்த இருளைப் போக்க போராடுங்கள். பங்களாதேஷின் பொது மக்களுக்கு தங்கள் முன்னோர்கள் ஒரு தவறை செய்துவிட்டார்கள் என்பதை அல்லது என்னும் சரியாக செல்ல வேணுமானால் கட்டாயப் படுத்தப் பட்டார்கள் என்பதை உணர உதவுங்கள். ஒரு ஹீரோயினாக இருங்கள். முன்னோடியாக இருங்கள். தீர்வின் பகுதியாக இருங்கள். எதிர்கால சந்ததிகள் உங்களை பெருமையுடன் நினைவு கூறட்டும். உங்களால் முடியாவிட்டால், உங்களுக்கு நேர்மைத்திறன் இல்லாவிட்டால், தயவுசெய்து ஹீரோ ஹீரோயின்களின் வழியில் நிற்காதீர்கள். தீர்வின் பகுதியாக இருக்காவிட்டால் குறைந்தபட்சம் தீங்கின் பகுதியாக இருக்காதீர்கள்.

 

நீங்கள் வளர்க்கப்பட்ட மதத்தில் இருந்து விலகுவது என்பது எளிதல்ல. மதம் ஒரு அடிமைப்படுத்தும் போதை. மறுப்பு, பேதலிப்பு, அவமானம், அதிர்ச்சி, குற்றுணர்ச்சி, குழப்பம் மற்றும் கோபம் போன்ற நிலைகளைக் கடப்பீர்கள். சில சமயங்களில் அந்த எல்லா உணர்வுகளும் ஒரு சேரவும் ஏற்படும். ஆனால் கடைசி நிலை மறுமலர்ச்சியும் சுதந்திரமும் ஆகும். முடிவு அற்புதமாக இருக்கும் ஆனால் சோதனை மிகவும் வலி மிகுந்ததாக இருக்கும். என்னை நம்புங்கள். இந்த சோதனையை கடந்து விட்டால், அப்போது தெரியும் அதன் மதிப்பு.

இதயம் கனிந்த வாழ்த்துக்களுடன்,

உங்கள் சகோதரன்.

அலி சினா.

Translation: Ali Sina’s Tamil Fan.