இஸ்லாம் தீவிர அரசியல் நோக்கம் கொண்ட மதம். அதன் இறுதி இலக்கு உலகையே ஆள்வதுதான். இஸ்லாமிய ஆட்சியில் எப்படிப்பட்ட அரசு இருக்கும்?

கட்டாயமாக அது மக்களாட்சியாக இருக்காது. மக்களாட்சியுடன் இஸ்லாம் ஒத்துப்போகாது. அமீர் தஹெறி (Amir Taheri) என்ற ஈரானிய எழுத்தாளர்/ பத்திரிக்கையாளர் இஸ்லாமும் மக்களாட்சியும் என்ற ஒரு விவாதத்தின்போது மக்களாட்சி என்ற வார்த்தையே முஸ்லிம்கள் பேசும் மொழிகளில் இல்லை என்றார். ஒரு நாகரீகத்தை புரிந்து கொள்வதற்கு அதன் வார்த்தைகளை புரிந்துகொள்ளவேண்டும் என்றும் ஒரு வார்த்தை அவர்களின் மொழியில் இல்லை என்றால் அவர்களின் மனங்களிலும் இல்லை என்றார்.

மக்களாட்சி என்றால் சமத்துவம். ஆனால் சமத்துவம் இஸ்லாமுக்கு ஒவ்வாது. இஸ்லாமில் முஸ்லிமல்லாதோர் முஸ்லிம்களுக்கு சமமானவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் அல்ல. முஸ்லிமல்லாதோர்கள் கூட தங்களுக்குள் அனைவரும் சமமானவர்கள் இல்லை. புத்தகத்தின் மக்கள் (யூதர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள்) அடங்கி இருந்து, பாதுகாப்பு வரியை (ஜிஸ்யா) செலுத்தினால், இரண்டாம் தர குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, இஸ்லாமிய நாடுகளில் வாழ அனுமதிக்கப் படுவார்கள். ஆனால், இயற்கை வழிபடுபவர்கள், சிலை வழிபடுபவர்கள், நாஸ்திகர்கள் போன்றோர் முழு மனிதர்களாகவே ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள். குரானின் கட்டளையின்படி சிலை வழிபடுபவர்கள் கண்ட இடங்களில் கொல்லப்படவேண்டும். (QQ9:5)

ஏப்ரல் 9 , 2002 பதிப்பில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சௌதி அரேபியாவில் இருக்கும் ரத்தப்பணம் என்ற கருத்தைப் பற்றி ஒரு கட்டுரையை பிரசூரித்திருந்தது. ஒருவர் கொல்லப்பட்டால் கொல்வதற்கு காரணமானவர் கொல்லப்பட்டவரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடாக பின்வருமாறு நிர்ணயிக்கப் பட்ட தொகையை ரத்தப்பணமாக கொடுக்க வேண்டும்.

 

கொல்லப்பட்டவர்            ரத்தப்பணத்தொகை (ரியால்கள் )

 • முஸ்லிம் ஆண்.                                    100,000
 • முஸ்லிம் பெண்.                                   50,000
 • கிறிஸ்துவ ஆண்.                                  50,000
 • கிறிஸ்துவ பெண்.                                 25,000
 • இந்து ஆண்                    6,666
 • இந்து பெண்                    3,333

இந்த படிநிலையில் ஒரு முஸ்லிம் ஆணின் உயிர் ஒரு இந்து பெண்ணின் உயிரைவிட 33 மடங்கு உயர்ந்தது. இந்த படிநிலை இஸ்லாமிய மனித உரிமைகளின் வரையறையின் படியும் குரான், ஷரியா (இஸ்லாமியச் சட்டம்) அடிப்படையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமில் சமத்துவம் என்ற கருத்தே இல்லாத போது, மக்களாட்சியைப் பற்றி எப்படி பேசமுடியும்?

சிலை வழிபடுபவர்களை ‘கண்ட இடங்களில் எல்லாம் கொள்வது’ எல்லா சமயங்களிலும் ஏற்புடையதாக இருந்ததில்லைதான். இந்தியாவின் மீது படை எடுத்த முஸ்லிம் படைகளுக்கு இந்தியர்கள் எல்லோரையும் கொள்வதால் என்ன பயன்? எல்லோரையும் கொன்றுவிட்டால் யாரை ஆள்வார்கள்? நடைமுறையில் இது சாத்தியம் இல்லாததால் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்திய குடிமக்களை சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. சொல்லப்போனால், முகமதைப் போன்ற இரக்கமற்ற ஆட்சியாளரை வேறு இஸ்லாமிய ஆட்சியாளர்களில் காண முடியாது. இறந்த குடிமக்களை விட உயிருடன் உள்ள குடிமக்கள் மேல் என்பதால் அவர்கள் ஆதாயம் இருந்தால் மட்டுமே கொன்றார்கள். எனவே முகமது சொன்னதைப்போல முழுமையான அழித்தொழிப்பு நிகழவில்லை. இருப்பினும் அவர்களின் சகிப்புத்தன்மை அரசாங்கக் கட்டாயத்திற்காக மட்டுமே. ஆனால் முகம்மதுவின் படுகொலைகள் சைக்கோ மனநோயின் விளைவாகும். அவன் தன்னை தூதுவராக ஏற்றுக்கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்க்காக முழு நகரங்களையும் படுகொலை செய்யத் தயங்கவில்லை.

புத்தகத்தின் மக்கள் என்றழைக்கப்பட்ட யூதர்களும், கிறிஸ்தவர்களும் சில நிபந்தனைக்குட்பட்ட உரிமைகளைக் கொண்டிருந்தனர். அவர்கள் ஜிஸ்யா வரி செலுத்தி பாதுகாப்பை பெற வேண்டியிருக்கிறது. அவர்கள் மதப்பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு, சிறுமைப் படுத்தப்படும் விதமாக நடத்தப்பட்டார்கள். எடுத்துக்காட்டாக, அவர்கள் ‘நஜிஸ்’ ( அசுத்தமான, தொட்டால் தீட்டாகும்) என்று கருதப்பட்டு, மழை நாட்களில் வெளியே செல்லக்கூடாது என்றும், அப்படிச் செய்தால் அவர்களின் தீட்டு அவ்வழியே செல்லும் முஸ்லிமை தீட்டாக்கி அவனை ‘நஜிஸ்’ ஆக்கி அவனின் தொழுகைப்பலன் இழக்கும் என்றும் கூறினார்கள்.

யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் சவாரி விலங்கிலிருந்து இறங்கி வழியில் செல்லும் முஸ்லிமுக்கு பணிவுடம் வணக்கம் சொல்லவேண்டும் என்றும், அவன் முன் அடங்கி நிற்க வேண்டும் என்றும் கட்டளை இடப்பட்டார்கள். அவர்கள் ‘திம்மிக்கள்’ (Dhimmis) என்று அழைக்கப்பட்டார்கள். திம்மிக்கள் தங்கள் வீடுகளை முஸ்லிம்களின் வீடுகளை விட உயரமாக கட்டக்கூடாது. அவர்கள் புதியதாக சர்ச்சையோ (Church) சினகாகையோ (Synagogue) கட்டக்கூடாது மற்றும் பழையவற்றை பராமரிக்க ஆட்சியாளடரிமிருந்து அனுமதி வாங்க வேண்டும். இன்றும் இச்சட்டம் கிட்டத்தட்ட எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் பின்பற்றப் படுகிறது.

இஸ்லாமுக்கு மக்களாட்சி ஒவ்வாதது என்று சொல்வது இஸ்லாமை கேவலப்படுத்துவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் மாறாக பல முஸ்லிம்கள் மக்களால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சியை விட கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மேலானது என்று மனப்பூர்வமாக நம்புவதால் இதை ஒரு புகழ்ச்சியாகவே எடுத்துக் கொள்வார்கள் என்றும் தெஹ்ரி சொல்கிறார்.

பல இஸ்லாமிய இணையதளங்களில் காணப்படும் “The Political Framework of Islam” [இஸ்லாமின் அரசியல் கட்டமைப்பு] என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் அதன் ஆசிரியர் விளக்குகிறார். “மேற்க்கத்திய மக்களாட்சிகளில், மக்கள் தான் ஆட்சியாளர்கள்; இஸ்லாமியத்தில் அதிகாரம் அல்லாவினுடையது என்றும் மக்கள் அவனுடைய கலிபாக்கள் அல்லது பிரதிநிதிகள். தன் தூதுவரின் மூலம் அல்லாவால் கொடுக்கப் பட்ட சட்டங்கள் (ஷரியா) அரசியலமைப்புச் சட்டமாக கருதப்பட்டு அவைகளை மீறக்கூடாது.”

மக்களாட்சியை கேவலமாக பேசிய இஸ்லாமிய சிந்தனையாளர்கள் பலரை தஹெரி மேற்கோள் கட்டுகிறார்.

அயத்துல்லா கொமேனி மக்களாட்சியில் பெரும்பாலானவர்களின் வாக்கைப் பெற்றவர் அல்லாவின் அதிகாரத்தைப் பெறுவதால் அதை ‘ஒருவகையான விபச்சாரம்’ என்று கூறுகிறார்.

சஃபலிஸ்டுகளின் (Safalists) ஆசிரியர் என்று சொல்லப்படும் எகிப்தியரான சய்யத் குதுப் 1950-ல் ஒரு வருடம் அமெரிக்காவில் வாழ்ந்த போது “அமெரிக்கா கடவுளை மறந்த, கடவுளால் மறக்கப்பட்ட நாடு. தன்னைத்தானே ஆட்சி செய்துகொள்ளும் கர்வம் பிடித்த நாடு.” என்று எழுதுகிறார்.

இன்றைய இஸ்லாமிய இயக்கத்தின் முக்கிய மதக்கல்வியாளர்களில் ஒருவரான யூசுப் அல் அய்யரி ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். (இணையத்தில் கிடைக்கிறது). அதில் அவர் இஸ்லாமின் உண்மையான அபாயம் ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் பீரங்கிகளும் போர்விமானங்களும் அல்ல என்றும் மக்களாட்சி என்ற கருத்துதான் என்றும் எச்சரித்திருக்கிறார்.

இப்போது பிரபலமான மற்றொரு இஸ்லாமிய மதக்கல்வியாளர்களில் ஒருவரான மௌதூதி மனிதர்கள் எல்லோரும் கடவுளின் கட்டளைப் படி நடக்கும் எந்திர மனிதர்களாக இருக்கும் ஒரு சமூகத்திற்காக ஏங்குகிறார். கடவுள் மனிதர்களின் உயிரியல் செயல்களை மனிதனின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் வைத்திருக்கிறார் என்றும் நமது அரசியல் போன்ற மற்ற உயிரியலல்லாத செயல்களுக்கு கடவுள் விதிமுறைகளை வகுத்திருக்கிறான் என்றும் அவைகளை கண்டறிந்து என்றென்றுக்கும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அப்படிச் செய்தால் நம் சமூகங்கள் சீராக ‘ஆட்டோ-பைலட்’டில் செல்லும் என்றும் சொல்கிறார்.

மறைந்த மதக்கல்வியாளர் ஷேக் முகமது பின் இப்ராகிம் அல் ஜுபைர், சமூகங்களின் பிரச்சனைகளுக்கு மக்களாட்சியின் பரவல்தான் என்று மனப்பூர்வமாக நம்பினார். அவர் சொன்னார், ” இஸ்லாமிற்கு தகுதியுடைய ஒரே ஒரு லட்சியம் தான் இருக்கிறது. அது உலகை மக்களாட்சி என்ற சாபத்திலிருந்து காப்பதும், மனிதனுக்கு மனிதர்களால் போடப்பட்ட சட்டங்களால் தங்களை ஆண்டுகொள்ளமுடியாது என்று சொல்லிகொடுப்பதும் தான். மனிதன் கடவுளின் பாதையிலிருந்து வெகு தூரம் விலகிவிட்டான், நாம் அந்த பாதைக்கு திரும்ப வேண்டும் இல்லையேல் அழிவை எதிர் நோக்கவேண்டும்”

அப்படியென்றால் இஸ்லாமின் அரசு எப்படி இருக்கும்?

மக்களாட்சி என்றால் மக்களின் ஆட்சி. அது இஸ்லாமிற்கு ஏற்புடையதல்ல. குரான் மிகவும் தெளிவாக கூறுகிறது, “எல்லா அதிகாரமும் அல்லாவினுடையது” (2.165, 35:10, 35:13, 64:1). “அல்லாவினுடையதைத் தவிர நீதி இல்லை.” (la hukm illa li-llah) என்ற வாசகம் பல குரான் வரிகளிலிருந்து உருவாக்கப் பட்டது. இந்த அதிகாரம் ‘கிலாபாத் அல் அல்லா’ என்று அழைக்கப்படும் அவனின் பிரதிநிதிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

கலிபா சட்டம் இயற்ற முடியாது. குரானிலும் ‘சுன்னா’விலும் [ஹதீஸ் என்றழைக்கப் படும் புத்தகங்களில் உள்ள முகமதின் நடத்தை உதாரனங்களும் வாக்குகளும்] கொடுக்கப்பட்ட சட்டத்தை யூகித்து அதை பின்பற்றலாம். குரான் தெளிவற்ற புத்தகம் ஆகையால் அதன் வரிகள் பல்வேறுபட்ட யூகத்திற்கு வழிவகுக்கிறது. இதனால்தான் நாம் பல்வேறு இஸ்லாமிய குழுக்களையும் சட்டப் பிரிவுகளையும் பார்க்கமுடிகிறது. ஆனால் “பொதுவான விதி” என்னவென்றால், “எந்த இஸ்லாமிய அரசும் தன் மக்களை சட்டமியற்ற அனுமதிக்கும் அளவுக்கு ஜனநாயகமானது அல்ல” என்று தஹெறி கூறுகிறார்.

பொதுமக்கள் அவ்வம் (awwam) என்று அழைக்கப்படுகிறார்கள். அவ்வம்கள் விலங்குகள் போன்றவர்கள் என்று கூறும் ஒரு அரபிக் பழமொழி ஒன்று உண்டு (al-awwam kal anaam!).

சட்ட ‘நிபுணர்கள்’ தான் ஷரியாவை யூகித்து விளக்குவார்கலாம். அதை பொதுமக்கள் எல்லா புலன்களையும் மூடிக்கொண்டு பின்பற்றவேண்டுமாம். இந்த ஏற்பாடு ‘நிபுணத்துவ’ ஆட்சியாளருக்கு எல்லா அதிகாரத்தையும் வழங்கி அவனை பூமியில் வாழும் துணைக்கடவுளாக மாற்றி இருக்கிறது. அவனுக்கு எந்த எதிர்ப்பும் இருக்கமுடியாது. அவனை எதிர்ப்பதன் மூலம் கடவுளையே எதிர்ப்பவராவோம்.

மக்களாட்சியில் மக்களின் மத நம்பிக்கை முக்கியமற்றது. அவர்கள் எந்த மதத்தை பின்பற்றுபவர்களாகவும் இருக்கலாம். மத நம்பிக்கை இல்லாதவர்களாகவும் இருக்கலாம். இருப்பினும் அவர்கள் தங்களை மதச் சார்பற்ற முறையில் நிர்வகித்துக் கொள்ளலாம். இஸ்லாமில் அப்படியல்ல. அதில் கடவுள்தான் சட்டம் இயற்றியவர். யூதர்களும் கிறிஸ்துவர்களும் தங்கள் மதத்தையும் அரசாங்கத்தையும் பிரிப்பதில் வெற்றி கண்டுவிட்டார்கள். ஆனால் இஸ்லாமில் இது சாத்தியமே இல்லை. கிறிஸ்துவமதத்தில் புரிந்து கொல்லப்பட்ட சர்ச் என்ற அமைப்பு (நிறுவனம்) இஸ்லாமில் இல்லை. போப் போன்ற சிறப்புப் பதவிகள் இஸ்லாமில் இல்லை. முல்லாக்களும் இமாம்களும் குரான் பற்றியும் ஷரியா பற்றியும் அதிகம் தெரிந்த சாதாரண முஸ்லிம்கள் தான். இஸ்லாமிய வழிபாட்டுத் தளத்தில் இருந்து அரசியலை பிரிக்கமுடியாது. ஏனென்றால், ஒவ்வொரு முல்லாவும் ஷரியாவை தன் சொந்த வழியில் புரிந்துகொண்டு மக்களின் மீது திணிக்க முடியும். ஆனால் இஸ்லாமின் தெளிவான பாடங்களை மறுவரையறை செய்யமுடியாது.

தற்போது, முஸ்லிம்களுக்கு கலிபா இல்லை. அப்படி இருந்தாலும், அவரால் குரானை மீறி இஸ்லாமையும் அரசியலையும் பிரிக்கமுடியாது.

இஸ்லாமின் முக்கிய இலக்கு இந்த உலகின் அதிகாரத்தை அதன் உண்மையான சொந்தக்காரரான அல்லாவுக்கு கொடுப்பதுதான். உலகில் உள்ள வேறு எந்த அதிகாரமும் இதை மாற்றமுடியாது. இஸ்லாம் அதை அடைவதற்கு தடையாக இருப்பது அதன் இருப்பையே மறுப்பதாகும். அது இறைவனையே மறுப்பதற்கு சமமாகும். இஸ்லாமின் வரையறையே எல்லா நாட்டையும் தன் அதிகாரத்திற்குள் கொண்டுவரத்துடிக்கும் ஆட்சி வெறியாகும்.

அது எல்லா திசையிலும் முன்னேறிச் சென்று , மற்றவர்களை தோற்கடித்து, உலகின் அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும். இல்லாவிட்டால் அதன் இருப்புக்கே அர்த்தம் இல்லை.

மக்களாட்சிகள் பன்முகம் வாய்ந்தவை. மக்கள் வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மதத்தை மட்டுமல்ல மற்றவர்களின் மதத்தையும் விமர்சிக்க முடியும். இஸ்லாம் அதை பொறுத்துக்கொள்ளாது. இஸ்லாமை விமர்சிக்கும் ஒருவர் கொலை, மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனையை எதிர்கொள்வார். இஸ்லாம் மட்டுமே உண்மை என்று முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். உண்மையை ஏற்றுக்கொள்ளாதது கடவுளையே ஏற்றுக்கொள்ளாததைப் போன்றது. பூமியில் உள்ள கடவுளின் பிரதிநிதியை கேள்வி கேட்பது கடவுளையே கேள்வி கேட்பதைப் போன்றது.

மே 27 , 1999 ல் இரானின் ஆளும் முல்லாக்களில் ஒருவரான ரப்சன்ஜானி “அரசின் இஸ்லாமிய தன்மையும் அதன் அடிப்படை தூணான ‘வேலாயத்-தே ஃபகிஹ்’ஹும் (ஷியாக்களின் கலிபா) பாதிக்கப்பட்டால் வேறு எதுவும் மீதி இருக்காது.” என்று கூறினார், அதே நாளில், ஈரானின் ‘சீர்திருத்தவாத’ அதிபர் என்று சொல்லப்படும், கத்தமி, “சமூகத்திலிருந்து மதத்தையும் முல்லாக்களையும் பிரித்தால் அது நமது அழிவுக்கு இட்டுச் செல்லும்” என்று கொம் (Qom) என்ற நகரில் கூறினார். இந்த கத்தமி, ஜூலை 5 , 1998 ல், “‘வேலாயத்-தே ஃபகிஹ்’ தான் அரசின் அச்சும் தூணும் ஆகும். ‘வேலாயத்-தே ஃபகிஹ்’ தான் நமது அரசின் இருப்புக்கான காரணம். அதனால், அதை எதிர்ப்பது அரசின் ஆதாரத்தையும் தூணையும் எதிர்ப்பதாகும். எந்த அரசும் தனக்கெதிரான தாக்குதலை சகித்துக்கொள்ளாது.” என்று கூறினார். [ஈரான் ஜமீன் நியூஸ் ஏஜென்சி]

ஷியாக்களின் கலிபாவான ‘வேலாயத்-தே ஃபகிஹ்’ முறை பற்றி Iran-bulletin.org இவ்வாறு சொல்கிறது. ” ‘வேலாயத்-தே ஃபகிஹ்’ என்ற கருத்தின் படி நம்மில் யாருக்கும் நல்லது எது கெட்டது எது என்று சொல்ல முடியாது. முல்லாக்களின் அதிகார அமைப்பு நம்முடைய அறியாமையை சமாளிக்கவே அமைக்கப் பட்டிருக்கிறது. உச்ச நிலை முல்லா தான் நமது பாதுகாவலன் (qayyem), நாம் எல்லோரும் செம்மறி ஆடுகள். நாம் இடையனை பின்பற்ற வில்லை என்றால் வழி தெரியாமல் தொலைந்து போய்விடுவோம். எல்லா உரிமைகளும் ‘வேலாயத்-தே ஃபகிஹ்’க்கே உள்ளது. நமக்கு நம் கடமைகளை மட்டும்தான் செய்யவேண்டும். இன்னும் எளிமையாக சொல்லவேண்டுமென்றால், ‘வேலாயத்-தே ஃபகிஹ்’ என்பது நமது அறியாமையையும் உரிமைகளின்மையையும் ஒத்துக்கொள்வதும், முல்லா ஆட்சியாளனின் எல்லாம் அறிந்த, எல்லாம் வல்ல நிலையை ஏற்றுக்கொள்வதும் ஆகும்.

ஈரானின் உச்ச முல்லாவாகவும், ‘வேலாயத்-தே ஃபகிஹ்’ ஆகவும் உள்ள, காமேனி, தனது அதிகாரத்தைப் பற்றி வெளிப்படையாக இவ்வாறு சொல்கிறார், “தலைவர் என்பவன் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் எல்லாம் தீர்ப்பவன். அவனின் அதிகாரம் மக்களுக்காக உண்மையை வெளிக்கொணரவும் எதிரிகளின் சதிகளை அம்பலப்படுத்தவும் செய்கிறது. [Iran-bulletin.org]

இஸ்லாமிய நாடுகளில் மதம்தான் முதன்மையானது. சட்டத்திற்கான மூலம் கடவுள் மட்டுமே. காலத்தில் அழியக்கூடிய ஆட்சியாளர்கள் கடவுள் இட்ட கட்டளைப்படி இஸ்லாமின் சட்டத்தை அமல் படுத்த மட்டுமே முடியும்.

“Essential Features of the Islamic Political System” [இஸ்லாமிய அரசியல் அமைப்பின் முக்கிய குணங்கள்] என்று தலைப்பிட்ட பின்வரும் கட்டுரை கிலாபத் அமைப்பை முஸ்லிம்கள் புரிந்து கொண்டுள்ளதைப்போல விளக்குகிறது.

“இஸ்லாமிய அரசியல் அமைப்பு மூன்று அம்சங்களைக் கொண்டுள்ளது: தவ்ஹித் (அல்லாவின் ஒருமைத்துவம்), ரிசலத் (அல்லாவின் தூது), கிலாபத் (அல்லாவின் பிரதிநிதியாட்சி).

தவ்ஹித் என்றால் அல்லா மட்டுமே உலகையும் அதன் எல்லா உயிர்களையும் உயிரற்றவைகளையும் படைத்தவர், காப்பவர். இந்த உலகின் எல்லா அதிகாரமும் அவருடையதே. அவருக்கு மட்டுமே எதையும் அனுமதிப்பதற்கும் தடை செய்வதற்கும் உரிமையுண்டு. வழிபாடும் வணக்கமும் அவருக்கே சாரும், இவைகளை வேறு யாருடனும் அவர் பகிர்ந்துகொள்வதில்லை. எல்லா வடிவிலான உயிர்களும், நமது உறுப்புகளும், புலன்களும், நம் வாழ்க்கையின் மீது நமக்குள்ள கட்டுபாடுகள், பொருள்கள், இவை எவையுமே நம்மால் நம் சொந்த உரிமையால் படைக்கப்பட்டதோ பெறப்பட்டதோ இல்லை. அவை எல்லாம் நமக்காக அல்லாவினால் அருளப்பட்டது. அதனால் நாம் நமது வாழ்க்கையின் நோக்கத்தையோ நமது உரிமைகளின் எல்லைகளையோ தீர்மானிக்கின்ற உரிமை நமக்கோ மற்றவர்களுக்கோ இல்லை. இந்த உரிமை நம்மை படைத்து, நமக்கு உள்ளத்தையும் உடலையும் தந்து, நமது பயன்பாட்டிற்கான பொருள்களையும் படைத்த கடவுளுடையது மட்டுமே.

இந்த அல்லாவின் ஒருமைத்துவம் , தனியாகவும் குழுவாகவும் மனிதர்களுக்கு உள்ள சட்ட மற்றும் அரசியல் சுதந்திரத்திற்கு எதிரானது. எந்த ஒரு தனி மனிதனும், குடும்பமும், குழுவும், இனமும் தங்களை அல்லாவுக்கு மேலாக கருதிக்கொள்ளக்கூடாது. அல்லா மட்டுமே ஆட்சியாளர் அவருடைய கட்டளைகளே சட்டம்.

நாம் அல்லாவிடமிருந்து சட்டத்தைப் பெரும் விதம்தான் ரிசலத். இந்த மூலத்திலிருந்து நமக்கு கிடைத்தவை இரண்டு. அல்லாவின் சட்டங்கள் அடங்கிய புத்தகம் மற்றும் தூதுவரின் தன்னுடைய வார்த்தைகளாலும் செயல்களாலும் புத்தகத்திற்குக் கொடுத்த விளக்கம். இந்த தூதுவர், புத்தகத்தின் எண்ணத்திற்கேற்ப சட்டங்களை அமல் படுத்தியும், தேவையான இடங்களில் விளக்கங்களை கொடுத்தும் ஒரு முன்மாதிரி இஸ்லாமிய வாழ்க்கையை தானே வாழ்ந்து காட்டியிருக்கிறார். இந்த இரு விசயங்களின் கூட்டுதான் ஷரியா.

கிலாபத் என்றால் என்னவென்று பார்ப்போம். அரபிக் அகராதியில் இதன் பொருள் ‘பிரதிநிதித்துவம்’. இஸ்லாமில் கலிபா பூமியில் உள்ள அல்லாவின் பிரதிநிதி. அவரின் துணை ஆட்சியாளர். அதாவது, அல்லா அவருக்கு கொடுத்த அதிகாரத்தின் மூலம், அந்த அதிகாரத்திற்கு உட்பட்டு, இவ்வுலகத்தை அவர் ஆட்சி செய்யவேண்டும்.

இது போன்ற அரசியல் அமைப்பைக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு நாடு அல்லாவின் அதிகாரத்தின் கீழ் உள்ள ஒரு மனித பிரதிநிதியின் ஆட்சியாக அமையும். இந்த பிரதிநிதி அல்லாவின் எண்ணங்களுக்குக் கட்டுப்பட்டு அவர் கொடுத்த எல்லைகளுக்குள்ளும் அவர்கொடுத்த அனுமதிகள் மற்றும் தடைகளை பின்பற்றியும் பணியாற்றவேண்டும்.

இந்த விளக்கத்திலிருந்து, இஸ்லாமிய முறைப்படியான அரசாங்கம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல உயிருள்ள மற்றும் உயிரற்ற எல்லா பொருள்களுக்கும் பொருந்தும் என்பது தெளிவு. இதில் முஸ்லிமல்லாதோறும் அடங்குவர். ஒரு இஸ்லாமிய நாட்டில் எல்லோரும் இஸ்லாமிய கட்டளைகளின் படியே வாழவேண்டும்.

‘கிலாபத்’ அல்லது ‘வேலாயத்-தே ஃபகிஹ்’ பாசிசத்திலிருந்து மாறுபட்டதல்ல. கொலம்பியா என்சைக்ளோபீடியா பாசிசத்தை “தேசத்தை அளவுக்கு மீறி பெருமைப் படுத்துகின்ற மற்றும் குடிமக்கள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் கட்டுப்படுத்துகின்ற ஒரு எதேச்சதிகார அரசியல் அமைப்பு” என வரையறுக்கிறது.

பாசிச தத்துவத்தின் குணங்கள்.

பாசிசம் தனது துவக்க காலத்திலேனும் பலவகைப்பட்ட மக்களுக்கும் பிடிக்கும் அளவுக்கு சந்தர்ப்பவாதியாகவும் தன் தத்துவத்திற்கு எதிராகவும் இருக்க நேர்கிறது. இருப்பினும், சில குணங்கள் அதற்கு மிகவும் அடிப்படையானவை. முதன்மையானதும் மிகவும் முக்க்கியமானதுமான அம்சம் நாட்டை அளவுக்கு மீறிபெருமைப் படுத்துவதும் தனி மனிதர்கள் அரசிற்கு முழுமையாக கீழ்படிவது எதிர்பார்க்கப் படுவதுவும்தான். நாடு என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு உருவமாகவும் குடிமக்கள் தங்கள் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் தன்னை அதில் ஒரு பாகமாக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்றும் கருதப் படுகிறது. இந்த “முழுமையான நாடு” தனது ஆட்சியில் நிபந்தனை அற்றதாகவும் குடிமக்களை நடத்துவதிலும் கட்டுப்படுத்துவதிலும் சட்டங்களால் கட்டுப்படுத்தப் படாமலும் இருக்கிறது.

இதன் இரண்டாவது முக்கிய தத்துவம் சோசியல் டார்வினிஸம் (social Darwinism) ஆகும். சூழ்நிலைக்கு மிகவும் ஏற்ற இனம்தான் தழைத்தோங்கும் (Survival of the fittest) என்பதையும் வாழ்விற்காக முயற்சி அவசியம் என்பதையும் பாசிஸ்ட்டுகள், ஒரு உயிரியாகக் கருதும் நாட்டிற்கே, சுமத்துகிறார்கள். அமைதியான மெத்தனமான நாடுகள் மற்ற வேகமான நாடுகளுக்கு முன்னாள் அழிவது உறுதி என்று பாசிஸ்ட்டுகள் கருதுவதால், பாசிஸ்ட் நாடுகள் ஆதிக்க உணர்வுடனும், ராணுவப் போட்டியுடனும் காணப்படுகின்றன. இயற்கையாக இவைகள் மற்ற நாடுகளை அடக்கி தங்கள் எல்லைகளை விரிவு படுத்திக்கொள்ள விரும்புகின்றன. மற்றொரு அம்சம் கற்பிதமான உன்னதத்திற்கு (Elitism) கொடுக்கப்படும் மதிப்பு. பொதுமக்கள் பங்கெடுக்கும் ஆட்சியை வெறுத்து அதிலிருந்து விடுபடவும் தற்பொழுதிருக்கும் சமூக அமைப்பை மாற்றி அமைக்கவும் ஒரு எதேச்சாதிகார தலைவரின் தேவை இருக்கும். இந்த தலைவர் நாட்டின் மிக உயர்ந்த எதிர்பார்ப்பின் வடிவமாக பார்க்கப்படுவார். தலைவர் தன்னை ஒரு நாயகராகவும் அற்புத மனிதராகவும் பார்த்துக்கொள்வது Friedrich Nietzsche, Thomas Carlyle, Richard Wagner போன்ற மனிதர்களின் கற்பனாவாதத்திலிருந்து (Romanticism) பெறப்பட்டது. இது பகுத்தறிவுக்கு எதிராகவும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத கற்பனை உலகத்தை அமைக்கும் வெறிக்கு ஆதரவாகவும் இருக்கிறது”

இதை இஸ்லாமுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இஸ்லாம் ஒரு பச்சை சந்தர்ப்பவாதி. இது மிகவும் நயவஞ்சகமானது. இது போரையே கொள்கையாகக் கொண்டிருப்பதற்கு மாறாக தன்னை சமாதானத்தின் மதம் என்று சொல்லிக்கொள்கிறது. தான் எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. பெண்களை அடிமைப் படுத்துகிறது, முகமது பெண்களை வெறுப்பவர்களிலேயே மிகவும் மோசமான வகை மனிதன். இருப்பினும் இதன் ஆதரவாளர்கள் இதை பெண்ணுரிமை புரட்சி என காட்டிக்கொள்கிறார்கள். குரான் ஒரு முட்டாள்தனமான உளறல்களின் நூல். இருப்பினும் அதை ஒரு அறிவியல் உண்மைகள் அடங்கிய அற்புதம் என்று கூவுகிறார்கள். அது அறிவையும் தொழில்நுட்பத்தையும் எதிர்க்கிறது. ஆனால் கற்றலை ஆதரிக்கும் மதம் என்று சாதிக்கிறார்கள். முகமது “அறிவை சீனாவில் இருந்தாலும் தேடிச் செல்லுங்கள்” என்று சொன்னதாக கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் குரானுக்கு எதிரானது என்று உணரப்படும் எந்த ஒரு உண்மையும் (knowledge) ஷைத்தானின் படைப்பாக பார்க்கப்பட்டு அழிக்கப்படுகிறது.

எகிப்திலிருந்த அலெக்ஸாண்ட்ரியா நகரத்தில் இருந்த அரச நூலகம் ஒரு காலத்தில் உலகிலேயே மிகப் பெரியதாக இருந்தது. அது கிமு மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 2 -ம் டாலமி ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் செழிப்பான காலத்தில் 400,000 முதல் 700,000 வரையிலான புத்தகச் சுருள்கள் (Scrools) வைத்திருந்தது. கிபி 640-ல் முஸ்லிம்கள் இந்நகரை கைப்பற்றினர். “உலகின் எல்லா அறிவையும் கொண்ட ஒரு பிரம்மாண்டமான நூலகம்” இருப்பதை அறிந்த படைத்தலைவன் கலிபா ஓமரிடம் என்ன செய்வதென்று கேட்டான். நூலகத்தின் தொகுப்பைப் பற்றி ஓமர் “அவைகள் ஒன்று குரானுக்கு மாறுபட்டு இருக்கும் அதனால் கடவுள் மறுப்பாகும் (heresy) அல்லது குரானுக்கு ஒத்துப்போகும் அதனால் தேவைக்கதிகமானவைகளாகும்” என்று சொன்னதாக மேற்கோள் காட்டப்படுகிறது. அதனால் முன்னெச்சரிகையாக இருப்பதற்காக நூலகத்தை அழிக்கவும் நூல்களை எரிக்கவும் கட்டளை இட்டார்.

இப்படித்தான் முஸ்லிம்கள் இஸ்லாமுக்கு ஒரு பரவலான கவர்ச்சியை ஏற்படுத்த அதைப்பற்றி ஒரு போலியான பிம்பத்தை உருவாக்க தலைகீழாக நடக்கிறார்கள்.

இஸ்லாமிய அரசியலின் மிக முக்கிய அம்சம் இஸ்லாமிய அரசை அதீதமாக போற்றுவதும் தனிமனிதர் தேசத்திற்கு முழுமையாக கீழ்படிதலும் தான்.

பாசிசத்தைப் போன்றே இஸ்லாமிய அரசும் ஒரு மாபெரும் உயிரியாகவும் தனிமனிதர்கள் அதன் அங்கங்களாகவும் பார்க்கப்படுகிறது. இஸ்லாமில் “சுதந்திரம்” என்பது அல்லாவுக்கும் அவரின் தூதுவருக்கும் கீழ்படிதலே. முஸ்லிம்கள் சமாதானம் என்று பொருள் உள்ளதாக பொய் சொல்லும் இஸ்லாம் என்ற வார்த்தையே கீழ்படிதல் என்ற பொருள் கொண்டது. இஸ்லாமிற்கும் இஸ்லாமிய நாட்டிற்கும் எது நல்லதோ அதுவே முஸ்லிம்களுக்கும் நல்லதாகும். இஸ்லாமிற்கும் இஸ்லாமிய நாட்டிற்கும் எது கெட்டதோ அதை முஸ்லிம்கள் தவிர்க்கவும் கெட்டதாக பார்க்கவும் வேண்டும். இஸ்லாமின் அதிகாரத்தை நிறுவுவது தான் உச்சநிலை நன்மையும் ஒவ்வொரு முஸ்லிமும் போராடவேண்டிய உச்சகட்ட இலக்கும் ஆகும்.

muslim-canada.org என்ற இஸ்லாமிய இணையதளம் இவ்வாறு சொல்கிறது: “ஒரு சமூகத்தின் உச்சகட்ட அமைப்பு நாடாகும். இஸ்லாம் உலகிற்கு ஒரு தேசியத்தின் உன்னதமான வடிவத்தை கொடுத்திருக்கிறது. ஆகையால், எப்படி ஒரு மதம் மனிதர்களின் வாழ்க்கையை வழி நடத்த வேண்டும் என்ற கேள்வி எப்படி வாழ்க்கை சமூகத்தின் உயரிய அமைப்புடன், அதாவது தேசத்துடன், சம்பந்தப்பட்டு இருக்கிறது என்ற கேள்வியுடன் சம்பந்தப்பட்டு இருக்கிறது”

இஸ்லாமின் மற்றொரு விதி இஸ்லாமின் அதிகாரத்தை பரப்ப ஜிஹாதின் (போரின்) அவசியம் ஆகும். “இஸ்லாம் சமாதானத்தின் மதம்” என்று கூறுதல் ஒரு அபாண்டமான கோஷம் ஆகும். இது இஸ்லாமின் “நய வஞ்சக விளையாட்டின்” ஒரு யுக்தி. இஸ்லாம் என்றால் சமாதானம் அல்ல. அது அமைதியை போதிக்கவில்லை. அது என்றும் அமைதியாக இருந்ததில்லை இருக்கப்போவதும் இல்லை. இஸ்லாம் ஆதிக்கவெறியுடன் கொண்ட போர்களால்தான் பரவியது. அது ஜிஹாதையும் உயிர்த்தியாகத்தையும் மிகவும் பெருமை வாய்ந்த செயல்களாக போற்றுகிறது. இஸ்லாமின் குணமே போரிடுவதும் ஆதிக்கத்தை பரப்புவதுவும் (imperialistic) தான்.

பாசிசம் கற்பனையான உன்னதத்தை போற்றக்கூடியது. இஸ்லாமும் அப்படித்தான். ‘கலிபா’ அல்லது ‘வேலாயத்-தே ஃபகிஹ்’ தான் பூமியின் உச்சநிலை அதிகாரமாகும். அவர்தான் எழுதப்பட்ட விதிகளை சரியாக புரிந்து கொள்ளமுடியும். அவர் வார்த்தைதான் எதிர்கேள்வியற்ற சட்டம் ஆகும். பார்ப்பதற்கு, கம்யுநிசத்தைப் போல, யார் வேண்டுமானாலும் கலிபாவாக வர முயற்சிக்கலாம். சுன்னிப் பிரிவில் கலிபா மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார். ஷியா பிரிவில் ‘வேலாயத்-தே ஃபகிஹ்’ ஆளும் முல்லாக்களின் “நிபுணர்களின் மன்றம்” என்று அழைக்கப்படும் ஒரு குழுவினால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.

ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப் படுகிறாரோ, அல்லது சர்வதிகார ஆட்சிகளில் இருப்பதைப் போல தெரிவு செய்யப் படுகிறாரோ, அவர் தன் வாழ்நாள் முழுதும் அதிகாரத்தில் இருப்பார். மற்ற எந்த மனித அதிகாரத்திற்கும் பணியமாட்டார்.

இஸ்லாமிற்கும் பாசிசத்திற்கும் மற்றொரு ஒற்றுமை அவைகளின் பகுத்தறிவை வெறுக்கும் தன்மையாகும். இஸ்லாமில் நம்பிக்கையும் கடவுளின் கட்டளைகளுக்கு கேள்வியில்லாமல் கீழ்படிதலும் வலியுறுத்தப் படுகிறது. பகுத்தறிவு தவறான தர்க்கம் என்று புறந்தள்ளப் படுகிறது. இதுவரையில் தோன்றிய மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞராக அறியப்படும் அபு ஹமித் அல்-கசலி (Abu Hamid Al-Ghazali, கிபி 1058 – 1111 ), தனது “தத்துவ ஞானிகளின் முரண்கள்” (Incoherence of the Philosophers) என்ற நூலில்  அரிஸ்டாட்டில், ப்ளாட்டோ, சாக்ரடீஸ் மற்றும் பல கிரேக்க சிந்தனையாளர்களை இறைநம்பிக்கையற்றவர்கள் என்றும் அவர்களின் முறையை பின்பற்றும் முஸ்லிம்களை இஸ்லாமை களங்கப் படுத்துபவர்கள் என்றும் கடுமையாக தாக்கினார். அவர் பண்டைய கிரேக்க அறிஞர்களை பின்பற்றிய அவிசென்னாவை பகுத்தறிவு வாதியாக இருப்பதற்காக தாக்கினார். நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் உறவிருக்க முடியாது என்று வலியுறித்தியதன் மூலமும், நம்பிக்கையை பகுத்தறிவிற்கு அடுத்த நிலையில் வைப்பதை பயனற்றது என்று கூறியும், கசலி அறிவற்ற நம்பிக்கைக்கு மதிப்பையும் முட்டாள்தனத்திற்கு பெருமையையும் கொடுத்தார்.

வில்லியம் மொங்கோமேரி வாட் (William Montgomery Watt) இவ்வாறு கூறுகிறார். “ஆரம்பகால இஸ்லாமிய சிந்தனையில் உண்மையான மதத்தின் மாறாத்தன்மையும், அரபு மற்றும் முஸ்லிம்களுக்கே உரித்தான அறிவின் தன்மையைப் பற்றிய ஒரு தனித்துவம் வாய்ந்த எண்ணமும், நிறைந்திருந்தது. வாழ்க்கையை நடத்துவதற்கு முக்கியமான அறிவு – அதாவது எல்லாவிதத்திலும் முழுமைப் பெற்ற அறிவு – கடவுளின் வெளிப்படுத்திய வார்த்தைகளிலிருந்தும் தூதரின் மற்றும் மற்ற சிறப்பான மனிதர்களின் வாக்குகளில் இருந்தும் பெறப்படுகிறது. ஞானத்தைப் பற்றிய இதுபோன்ற எண்ணம் இருப்பதன் பின்விளைவாக வெளிப்படுத்தப் பட்ட வார்த்தைகளுக்கும் ஞானிகளின் வாக்குகளுக்கும் துல்லியமான விளக்கம் கொடுப்பதே அறிஞர்களின் வேலையாகப் போனது.” [The Formative Period of Islamic Thought, p.63]

இங்கே முக்கியமான ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். முஸ்லிம்கள் அறிவு என்ற வார்த்தையை பயன்படுத்துவது “வெளிப்படுத்தப்பட்ட” அறிவைத்தான் குறிக்கத்தான், நமது நவீன நாகரீகத்தைப் பெற்றெடுத்த மதச் சார்பற்ற அறிவியலறிவை அல்ல. அறிவியல் என்ற வார்த்தை அரபு மொழியில் இல்ம் (ilm) ஆகும். இந்த இல்மை கொண்டுள்ள மக்களுக்கு ‘உலமா’ (ulama – அலிம்’மின் பன்மை) என்று அழைக்கப் படுகிறார்கள். அலிம் என்றால் விஞ்ஞானி அல்ல மதஞானி என்று பொருள். இல்ம் என்றால் மத அறிவியல் ஆகும்.

இஸ்லாம் அறிவியல் ஞானத்தை பெறத் தூண்டுவதில்லை. இஸ்லாமிய மொழிகளில் அதற்கு ஒரு வார்த்தை கூட இல்லை. இஸ்லாம் மதத்தை கற்றுக்கொள்ள மட்டுமே தூண்டுகிறது. இதைத்தான் முகமது “அறிவைத் தேடுங்கள்” என்று சொல்லி இருக்கிறான். இஸ்லாமில் அறிவைத் தேடுவது என்றால் குரானையும் ஹதித்துகளையும் மனப்பாடம் செய்வதாகும்.

 

அதிகாரத்தின் கருவியாக இஸ்லாம்

 

குரானால் தூண்டப்பட்டு, முஸ்லிம் குழுக்கள் தங்களது அரசியல் நோக்கங்களை அடைய தங்களுக்கிடையே வன்முறையை பயன்படுத்துகின்றன. முதல் பிரிவு கரிஜியா (Kharijiyya). இந்த குழு இரண்டு விசயத்தை வலியுறித்தியது. முதலாவதாக, இஸ்லாமிய சமூகம் குரானை ஆதாரமாகக் கொண்டு இருக்கவேண்டும். இரண்டாவதாக, தனிநபர்களின் உரிமைகளுக்கு மேலாக இஸ்லாமிய அரசு இருக்க வேண்டும். குரானின் வாசகங்களால் (32.13, 76:29-31, 3:39, 3:159, 16:93, 2:6-7, 4:88, etc.) உந்தப்பட்டு, அவர்கள் கடவுளின் எண்ணம்தான் மனிதனின் எண்ணத்திற்கும் மேலானதாக இருக்க வேண்டும் என்றனர். இஸ்லாமிய சமூகம்தான் ஒரு அர்த்தமுள்ள மதிப்புகளை தாங்கியதாக இருக்கும் என்றனர். அதாவது, இஸ்லாமிய சமூகத்தின் அங்கமாக இல்லாவிட்டால் மனிதர்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை என்றனர். இந்த கருத்துக்கள் குரானை அடிப்படையாகக் கொண்டவை. அதனால் பின்னர், மற்ற முஸ்லிம்களாலும் ஏற்றுக்கொள்ளப் பட்டன. இப்படித்தான் பாசிசமும் ஒரு தனிநபருக்கும் தேசத்திற்கும் உள்ள உறவை வரையறுக்கிறது.

முத்தஜிலிக்கள் (Mutazilis) போன்ற பகுத்தறிவுவாத முஸ்லிம்கள் ‘வெளிப்பாட்டை’ விட பகுத்தறிவை முக்கியமாக வைத்தனர். அந்த குழுவும் தீவிரமானதுதான். ஆனால் அந்த குழு மற்ற தீவிர இஸ்லாமிய குழுக்களால் தாக்கப்பட்டு அழிந்து போயின. அல்-கசலி மற்றும் கவிஞர் ரூமி சார்ந்திருந்த குழுவான அஷரிய்ய என்ற குழுவால் அவர்கள் தாக்கப் பட்டார்கள். ரூமி பகுத்தறிவுவாதிகளை “கட்டை கால்களில்” நிற்பவர்கள் என்று ஏளனம் செய்தார்.

அஷரிய்ய குழுவினர் பகுத்தறிவின்மையை பெருமையாக கருதினர். குரானுக்கு கீழ்படிந்து நடந்தனர். அவர்கள் பகுத்தறிவுவாதிகளை மதத்தை கைவிட்டவர்கள் என்றும் கடவுளிடமிருந்தும் அவரின் வெளிப்பாட்டிலிருந்தும் விலகிச் செல்பவர்கள் என்றும் கருதினர். இப்படியாக பகுத்தறிவுவாதம் வன்முறையாலும் ஏளனத்தினாலும் அழிக்கப்பட்டது. பகுத்தறிவுவாதியான சக்கரியா ராசியின் நூல்கள் அழிக்கப்பட்டன. பகுத்தறிவுவாதிகள் மறைந்து வாழவேண்டி இருந்தது. அஷரிய்ய குழு வென்றது, ஏனென்றால் அதற்கு குரான் துணை இருந்தது.

நிபந்தனை இல்லாமல் ‘வெளிப்பாட்டின்’ அதிகாரத்தை ஏற்றுக்கொண்டதன் மூலமும், பகுத்தறிவின்மையை பெருமைப் படுத்தியதன் மூலமும், பகுத்தறிவுவாதம் முளையிலேயே கிள்ளப் பட்டது. 1000 வருடத்திற்கும் முன்னரே தோன்றி இருக்க வேண்டிய மறுமலர்ச்சி (Renaissance) தோன்றவில்லை. மனித நாகரீகத்திற்கு இம்மதவெறியர்கள் செய்த சேதம் நம்மால் அளவிடமுடியாது.

Is Rumi What We Think He Is? [ரூமி நாம் நினைப்பது போன்றவர் தானா? ] என்று தலைப்பிட்ட தனது கட்டுரையில் மஸ்சும் ப்ரைஸ் (Massoume Price) ஷாபி கத்கனி (Dr. Shaffiee Kadkani) என்பவரை மேற்கோள் காட்டுகிறார். “துரதிர்ஷ்டவசமாக அஷரிய்யக்களை நிபந்தனை இல்லாமல் ஏற்றுக்கொண்ட ரூமி போன்ற அறிஞர்களின் மற்றும் உரபாக்களின் (Urafa – மர்ம யோகிகள்.) வளர்ச்சியினால் கருத்துச் சுதந்திரத்திற்கு வாய்ப்பு இல்லாமல் போனது.” கடைசியில் அவர் “அஷரிய்யக்கள் இல்லாமல் இருந்திருந்தால் நம் வரலாறு வேறு விதத்தில் உருவாகி இருக்கும்” என்று முடிக்கிறார். [Creation and History, (Afarinesh va Tarikh, p.50)]

ப்ரைஸ் இவ்வாறு எழுதுகிறார். “தனது நூல் மத்னவி-யில், ரூமி நாஸ்திகர்கள், இயற்கையாளர்கள், தத்துவஞானிகள் போன்ற எல்லா சிந்தனையாளர்களையும் தாக்குகிறார்…..இப்னு கல்தூன் என்பவர் ஆப்ரிக்கர்கள் தங்கள் புவி மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக கருப்பாக இருக்கிறார்கள் என்று கூறியபோது இந்த அஷரிய்யக்கள்தான் அறிவியல் உண்மையை மறுத்து கடவுள் அவர்களை அப்படி படைத்ததால்தான் அவர்கள் கருப்பாக இருக்கிறார்கள் என்று கூறினர். மருத்துவர்கள் மூளைக்கும் கைகளின் அசைவுக்கும் உள்ள தொடர்பை கண்டறிய முயற்சிக்கும் போது, இமாம் முகமது கசலி தான் அவர்களின் அறிவியல் ஆராய்ச்சியை ஏளனம் செய்து “கடவுள் கைகளை அசைக்க நினைப்பதால்தான் அவைகள் அசைகின்றன” என்று அறிவித்தார். (Alchemy of Happiness, Kimiyaya Saadat). இன்றும் தொடர்கின்ற வடஅமெரிக்காவில் கூட நம்மை அச்சுறுத்துகிற மக்களையும் அறிஞர்களையும் பகுத்தறிவுக் கருத்துகளை வெளியிடுவதற்கும் மதபுத்தகங்களில் உள்ளதற்கு மாற்றான அறிவியல் உண்மைகளை கண்டுபிடிப்பதற்கும் மதத் தலைவர்கள் இடையூறாக இருக்கும் கலாச்சாரம் (Inquisition) அஷரிய்யக்களால் திணிக்கப் பட்டதுதான்.”

The New Dictionary of Cultural Literacy, (Third Edition. 2002), “பொதுவாக, பாசிச அரசுகள் ஒரு சர்வாதிகாரியின் அதிகாரத்தில் இருக்கும். இவர் பொதுவாக கவர்ச்சியான தோற்றத்தையும், பகட்டான சீருடைகளையும் கொண்டிருப்பார். இவர் தனது தொண்டர்களை பிரமாண்டமான பேரணிகள் மூலமும், தேசியத்தைப் பற்றிய கூச்சலான கோஷங்களுடனும் ஒன்று திரட்டுவார். அன்னியர்களைப் பற்றியும் தங்களுக்குள் உள்ள ‘அசுத்த’ மான மக்களைப் (ஜெர்மனியின் யூதர்கள்) பற்றியும் சந்தேகத்தையும் வெறுப்பையும் வளர்ப்பார்.” என்று சொல்கிறது.

இஸ்லாமில் கலிபாக்கள் பகட்டான சீருடை அணிவதில்லை. மாறாக முகமதுவைப் போல, பொது இடத்தில் எளிமையாக காட்சிதர முயற்சி செய்வர். இஸ்லாமில் எளிமை என்பது ஒரு தோற்றமும் அடையாளமுமே ஆகும். எவ்வளவுக்கு எவ்வளவு எளிமையான உடையோ அவ்வளவுக்கு அவ்வளவு பக்தியானவராக தோன்றுவீர்கள். வெள்ளிக்கிழமை தொழுகையும் ஹஜ்ஜும் தொண்டர்களை பிரமிக்கவைக்கவும், ஒரு பெரிய குழுவின் அங்கமாக இருப்பதில் பெருமையடையவும், குடும்பமாக உணரவும், இஸ்லாம் பலம் வாய்ந்தது என்ற தங்களின் நம்பிக்கையை மறு உறுதிப்படுத்திக்கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட இஸ்லாமிய பாணியிலான பேரணிகள்தான்.

இந்த பேரணி முகமதுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை கீழ்க்கண்ட ஹதித்தில் அவன் என்ன சொன்னான் என்பதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

“நான் தொழுகையை ஆரம்பிக்கக் கட்டளை இட்டுவிட்டு ஒருவரை அதை நடத்தச் சொல்லிவிட்டு, நான் மற்ற சிலருடனும், விறகுகளுடனும் ஊருக்குள் சென்று யாரெல்லாம் கூட்டுத் தொழுகைக்கு வரவில்லையோ அவர்களின் வீடுகளை கொளுத்தவேண்டும் என்று நினைத்தேன்.” [Muslim4,1370; Bukhari1,11,626]

இஸ்லாமும் முஸ்லிம்களை முஸ்லிமல்லாதோரை வெறுக்கவும் சந்தேகிக்கவும் தூண்டுகிறது. முஸ்லிமல்லாதோர் அசுத்தமானவர்கள் (நஜிஸ்) (Q 9:28) என்று முகமது சொன்னான். யூதர்களை கடவுள் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றிவிட்டார் என்று கூறி முஸ்லிம்களின் மனதில் யூதர்களுக்கு எதிரான வெறுப்பை விதைத்தான்.(Q 2.65, 5.60, 7.166)

இவ்வாறாக, இஸ்லாமிய அரசானது ஒரு பாசிச அரசாகும் என்பது தெளிவு.

இதன் கொடூர குணங்களை கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்.

 • இறைவனின் பிரதிநிதியாக கூறிக்கொண்ட எல்லா அதிகாரமும் கொண்ட உச்சநிலை தலைவர் இருத்தல்.
 • மதபேதமின்றி எல்லா குடிமக்களின் மீதும் கடுமையான சமூக பொருளாதார கட்டுப்பாடுகள் விதித்தல் .
 • எதிர்ப்புகளை வன்முறையாலும், கருத்துச்சுதந்திர மறுப்பினாலும் அடக்குதல்.
 • முஸ்லிமல்லாதோரை நோக்கி அடாவடித்தனம் செய்தல்.
 • மத ‘அப்பார்தைட் (apartheid) / பாகுபாடு பேணுதல்
 • பகுத்தறிவை அவமதித்தல்
 • தனது அதிகாரத்தை போரின் மூலம் விரிவுபடுத்த (imperialistic) விரும்புதல்
 • அடக்குமுறை ஏவுதல்.
 • சர்வாதிகாரம் செய்தல்.
 • மனங்களையும் உடல்களையும் கட்டுக்குள் வைத்தல்.

பாசிசத்தைப் போன்றே இஸ்லாமும் தன்னம்பிக்கையும் அறிவாற்றலும் குறைந்த மக்களைத்தான் கவர்கிறது. இவ்விரு கோட்பாடுகளும் காரண காரியத்திற்கு அப்பாற்ப்பட்டது. அவைகள் பகுத்தறிவை அவமதிக்கின்றன, அதிகாரத்தை துதிப்பதையும் கீழ்படிதலையும் போற்றுகின்றன. பாசிஸ்டுகளைப் போல, முஸ்லிம்களும் கற்பனையான வெற்றியைக்கூட பெரிதாக பீற்றிக் கொள்பவர்கள். அவர்கள் அதிகாரத்திற்கும், பலத்திற்கும் அலைபவர்கள். எண்ணிக்கையில் உள்ள பலத்தையும், பைத்தியக்காரத்தனமான சவடால்களையும், தங்கள் உயிரை துச்சமாக மதிப்பதையும், அவர்களின் நோக்கத்திற்காக மற்றவர்களை கொல்லவும் தாங்களே சாகவும் தயாராக இருப்பதையும் பீற்றிகொள்பவர்கள்.

எனவே இஸ்லாம் ஒரு அரசியல், அரசியல் இஸ்லாம் ஒரு பாசிசம்.

Ali Sina.

Translation: Ali Sina’s Tamil Fan