பஸ்ஸாம் ஜவடி [Bassam Zawadi] எனது கட்டுரைகள் பலவற்றிற்கு தொடர்ச்சியான பல மறுப்புரைகளை எழுதி இருக்கிறார். அவைகள் ஒரு சாரமும் அற்றவை என்பதால் கண்டு கொள்ளவில்லை. எனினும், முஸ்லிமாக இருந்து என் நூலைப் படித்து இஸ்லாமைத் துறந்த அமீர் அந்த மறுப்புரைகளுக்கு பதில் கொடுக்குமாறு வற்புறுத்திக் கொண்டு இருந்தார். சரி என்று உறுதி அளித்திருந்தேன். எனக்கு நிறைய வேலைகள் இருந்த போதிலும் அவர் என்னை விடவில்லை. எப்படியோ உறுதியளித்தது உறுதியளித்ததுதான். கீழே கொடுக்கப்பட்ட பதிவு பஸ்ஸாமினுடைய மறுப்புரைக்கு என்னுடைய இரண்டாவது பதில். என்னுடைய கட்டுரைகளுக்கு இன்னும் கொஞ்சம் விஷயம் தெரிந்த மனிதர்கள் மறுப்புரை எழுதினால் நன்றாக இருக்கும்.

இங்கே அலி சீனாவுக்கு பிரச்சனை தூதரிடத்திலே இல்லை மாறாக ஆயிஷாவிடம் தான். இந்த குற்றச்சாட்டே ஒரு நொண்டி என்பதற்கான காரணங்கள் பின்வருமாறு.

1) அந்த காலத்தில், சிறிய வயது சிறுமி மணந்து கொள்வது மிகவும் பொதுவானது. நமக்கு இது தெரியும், ஏனென்றால், ஆயிஷா தூதரை மணப்பதற்கு முன் வேறொருவருக்கு நிச்சயம் செய்யப் பட்டிருந்தார்.

 

எந்த காலத்திலும் ஒரு கிழவன் சிறுமிகளை மணப்பது “மிகவும் பொதுவானது” அல்ல. அந்த காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, சில சமயங்களில் தவழும் வயதில் கூட, நிச்சயம் செய்வது வழக்கம். மிகவும் சமீப காலத்தில் கூட (70 வருடத்திற்கு முன்) ஈரானின் சில கிராமங்களில் இவ்வாறு செய்யப்பட்டது. காந்தியும் அவர் மனைவியும் அவர்களின் திருமணத்தின் போது முறையே 10 மற்றும் 9 வயதுடையவர்களாக இருந்தனர். நாம் விவாதிப்பது இதைப் பற்றி அல்ல. ஒரு கிழவன் ஒரு சிறுமியிடம் கலவி இன்பம் பெறுவதைப் பற்றித்தான் நாம் பேசுகிறோம். அதாவது சிறுமிகளின் மேல் உள்ள காமயிச்சையான பீடோபிளியாவைப் (pedophilia) பற்றி பேசுகிறோம். சிறுவர் சிறுமியர் காதல் கொள்வது இயல்பு. அவர்கள் தங்கள் வயதுள்ள மற்ற ஒருவரை காதலிப்பார்கள். ஆனால் ஐம்பது வயதுள்ள மனிதன் ஆறு வயதுள்ள சிறுமியைக் காதலிப்பது பொதுவானதல்ல.

 

2) இன்று ஆயிஷாவுக்கு எது நல்லது எது கேட்டது என்று சொல்வதற்கு நாம் யார்? ஆயிஷா தனது வாழ்நாள் முழுக்க தூதருக்கே மனைவியாக இருந்தார். அவருக்கு தூதரை விவாகரத்து செய்ய வாய்ப்பு தரப்பட்ட போது கூட அப்படிச் செய்யவில்லை. இதிலிருந்து அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர் என்று தானே தெரிகிறது.

 

ஒரு ஆறு வயது சிறுமி தனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் நிலையில் இருப்பதில்லை. ஆயிஷாவின் கேசில் அவருடைய மூளையற்ற பெற்றோர்களே இந்த அவமானகரமான நம்பிக்கை துரோகத்திற்கு அமோதித்திருப்பதால் அனேகமாக இப்படி செய்வது இயல்பானது தான் என்று அவர் நினைத்திருக்கலாம்.

 

நாம் ஆயிஷாவைப் பற்றிக் கூட கவலைப்படவில்லை. அவர் இறந்து விட்டார். நமது கவலை எல்லாம் இன்றும் முகமதின் வழிகாட்டலைப் பின்பற்றி கொடுமைகளுக்கு உட்படுத்தப்படும் மில்லியன் கணக்கான இளம் சிறுமிகளைப் பற்றியது தான்.

ஆயிஷாவுக்கு முகமதை விவாகரத்து செய்யும் வாய்ப்பு தரப்பட்டது என்று கூறுவது மதியீனமான வாதம். அவனை மணவிலக்கு செய்துவிட்டு எங்கு போவது? மதீனா முழுக்க முகமதின் கொல்லைப்புரமானது. முஸ்லிம்கள் எல்லோரும் கல்ட்டிஸ்ட்டுகளாக (Cultist) இருந்தார்கள். ஊரே அச்சம் சூழ்ந்த நிலையில் இருந்தது. முகமதை விவாகரத்து செய்துவிட்டு எப்படி இயல்பு வாழ்க்கை வாழ முடியும்? எப்படியோ, குழந்தைப்பருவத்தில் இருந்தே மூளைச்சலவை செய்யப்பட்ட ஆயிஷாவுக்கு இது பொருந்தாது. தங்கள் ஊர்கள் அழிக்கப்பட்டு தங்கள் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகு அடிமைப்படுத்தப்பட்ட சபியா (Safiyah), ரெஹானா (Rayhanah), ஜுவரியா (Juwariyah) போன்றோர்களுக்கு இது பொருந்தலாம். ஆனால் அவர்கள் கூட எங்கே போவார்கள்?

 

கல்ட்டிஸ்ட்டுகள்  (Cultists) மிகவும் கேவலமான செயல்களையும் செய்வார்கள். பல கல்ட்டிஸ்ட்டுகள் தங்கள் அன்பான கல்ட் தலைவருக்கு தங்கள் மனைவியையோ மகளையோ கூட கூட்டிக் கொடுப்பார்கள். இதற்கு அவர்கள் அதை தங்கள் மனசாட்சிக்கு தெரிந்தே செய்கிறார்கள் என்று பொருளல்ல. கல்ட்டிஸ்ட்டுகள் தங்கள் மனசாட்சியைக் கொன்று விட்டவர்கள். அவர்களை பொறுப்பான மனிதர்களாக கருத முடியாது.

 

3) தூதருடன் ஆயிஷாவின் திருமணத்திற்கு யாரும் ஆட்சேபிக்க வில்லை. சொல்லப் போனால் எல்லோருக்குமே மகிழ்ச்சிதான். இதில் பிரச்சனையுள்ள ஒரே ஒரு மனிதர் அலி சினாவும் அவரின் கூட்டமும் தான் போலிருக்கிறது.

 

ஒரு கல்ட் சூழ்நிலையில் அதன் தலைவர் செய்யும் எந்த ஒரு அருவருப்பான செயல்களுக்கும் யாரும் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள். கல்ட்டிஸ்ட்டுகளின் மூளைகள் மழுங்கிவிடுகின்றன. சிறிதளவேனும் மூளை வேலை செய்பவர்கள் கேள்வி கேட்பதற்கு துணியமாட்டார்கள். இந்த இயல்பை நான் பல நவீனகால கல்ட்டுகளின் எடுத்துக்காட்டுகளுடன் Understanding Muhammad என்ற எனது நூலில் விளக்கமாக எழுதியுள்ளேன்.

 

4) ஆயிஷாவின் பெற்றோர்களே இந்த கல்யாணத்தை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் தங்கள் பெண் தூதரை மணந்து கொள்வது நல்லது என்றே நினைத்தார்கள். உண்மையிலேயே அவர்கள் செய்தது சரிதான். ஏனென்றால், அதனால் தான் ஆயிஷா ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞராக வந்தார்.

 

David Koresh ன் பின்பற்றிகள் உடலுறவை தவிர்க்கும்படி சொல்லப்பட்டிருந்த போது அவர்கள் தங்கள் மனைவிகளை அவனுடன் படுக்க சம்மதித்தார்கள். கல்ட்டிஸ்ட்டுகள் படு முட்டாள்தனங்களை செய்வார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றிய நிதானம் கூட அவர்களிடம் இருக்காது.

 

இந்த மனிதன் கொமேனி தனது தீவிர பின்பற்றி ஒருவனை அவனின் ஐந்து வயது மகளுடன் கலவி கொள்வதற்கு விடும்படி கேட்டதைத் தான் பார்த்ததாக கூறுகிறார். அந்த மனிதனும் ஒத்துக் கொண்டான். அந்த சிறுமி இரவு முழுக்க கதறினாள், அழுதாள். தகப்பன் அதை எல்லாம் கேட்டுக் கொண்டு புன்முறுவல் கொண்டான். அந்த முட்டாள் தகப்பன் ஒத்துக் கொண்டான் என்பதற்காக கொமேனி செய்தது சரியாகி விடுமா? கல்ட்டிஸ்ட்டுகளின் மனநிலையை புரிந்து கொள்ள என் நூலைப் படிக்க வேண்டும். அப்போதுதான் இஸ்லாமை புரிந்து கொள்ளலாம்.

 

ஆயிஷா ஒன்றும் அறிஞர் கிடையாது. அவர் முகமது செய்தவைகளையும் சொன்னவைகளையும் நினைவுபடுத்தி கூறினார். இதனால் அவர் அறிஞராகிவிட முடியுமா? வேடிக்கை என்னவென்றால், எல்லா முஸ்லிம் அறிஞர்களும் இந்த வகை தான். அவர்கள் எல்லோருமே குரானையும் ஹதிதுகளையும் வலுக்கட்டாயமாக மனப்பாடம் செய்து கொண்ட, ஆனால் எதையும் புரிந்து கொள்ளாத கிளிப்பிள்ளைகள் தான். இவர்கள் இயல்பான மனிதர்களுக்கு இருக்கும் பகுத்தறிவு அற்றவர்கள். அந்த குப்பைகள் ஒன்றையுமே நான் மனப்பாடம் செய்ததில்லை. ஆனால் என்னால் எல்லா முஸ்லிம் ஸ்காலர்களையும் தோற்கடிக்க முடியும். ஏனென்றால், நான் இஸ்லாமை புரிந்து கொண்டுள்ளேன். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். நீங்கள் இஸ்லாமைப் புரிந்து கொண்டால் எல்லா முஸ்லிம் ஸ்காலர்களின் தாடியிலும் மண் ஒட்ட வைக்கலாம். எனது நூலைப் படித்தால் உங்களுக்கு இஸ்லாம் புரியும்.

 

5) “pedophile” என்ற வார்த்தையின் வரையறையை பார்த்தால், பீடோபில்கள் “குறைந்த சுயமதிப்பைக் கொண்டுள்ளார்கள். எல்லோரும் இல்லாவிட்டாலும், பெரும்பாலான சிறுமிக்காமுகர்கள் [pedophiles] வயது வந்தவர்களிடமோ, தங்கள் வயதுள்ளவர்களிடமோ, தங்களை விட வயது அதிக மாக உள்ளவர்களிடமோ, இயல்பான பாலுறவு கொள்ள முடியாதவர்களாக உள்ளார்கள். அவர்கள் பெரியவர்களிடம் உறவு கொள்ளவேண்டிய வாய்ப்புக்காக பயப்படுகிறார்கள். ஆகையால் தான் சிறுமிகளை நாடுகிறார்கள். இதை குணப்படுத்துவதாக இருந்தால் அந்த மக்களுக்கு தங்கள் சுய மதிப்பை அதிகரிக்கச் செய்யவேண்டும்.” என்பதைக் காண்பீர்கள். (ஆதாரம்). தூதர் இது போன்ற நிலையில் இல்லை. ஏனென்றால், ஆயிஷாவை தவிர மற்ற மனைவிகள் எல்லோருமே பெரியவர்கள் தான். குறிப்பாக ஸௌதாவும் கதீஜாவும் அவரை விட வயதானவர்கள்.

 

முகமதுக்கு மிகவும் குறைந்த சுயமதிப்பு தான் இருந்தது. அதனால் தான் அவன் நார்சிசத்தைப் [Narcissism = சுயத்தை மட்டும் இருப்பதிலேயே உயர்வாக எண்ணுவது] பெற்றான். நார்சிசம் தனது குறைந்த சுயமதிப்பை மறைப்பதற்காக போட்டுக் கொள்ளும் வேடம் தான். எனது நூலில் இதைப் பற்றி விளக்கமாக எழுதி உள்ளேன்.

 

முகமதினால் தனது வயதில் உள்ள பெண்களுடன் இயல்பான பாலுறவை வைத்துக்கொள்ள முடியாது. கதீஜா அவனுக்கு சுகர் மம்மி [sugar mommy ] போன்றவர். அதாவது அவர் அவனுக்கு தேவையான எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் தாய். அந்த பெண்மணிக்கும் அவருக்கென்று சில மனநிலை கோளாறுகள் இருந்தன. அதாவது, சக சார்பு (co-dependency) அல்லது தலைகீழ் நார்சிசத்தினால் (inverted narcissism) அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரின் இறப்பிற்கு பிறகு, முகமது தனக்கு முறையான வயதுள்ள பெண்களை மணக்க வில்லை. ஸௌதாவுக்கு  குறைந்த பட்சம் அவனுடைய வயதில் பாதி தான் இருக்கும். அவருக்குப் பிறகு முகமது பதின்ம வயது (teenagers) பெண்களை சேகரிக்க ஆரம்பித்து விட்டான்.

 

6) தூதர் உண்மையிலேயே ஒரு சிறுமிக்காமுகனாக இருந்திருந்தால், ஏன் ஆறு வயதாக இருந்த ஆயிஷாவை மணந்த உடனே கலவி கொண்டு திருமணத்தை ‘பூரணமாக்கவில்லை’? “துடிப்பை அடக்க முடியாமை. பெரும்பாலான சிறுமிக்காமுகர்கள் தங்கள் சிறுமிகளின் மீதிலான காம இச்சையை கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருக்கின்றனர். அவர்களால் சிறுமிகளை அனுபவிக்க வேண்டிய துடிப்பை அடக்கவே முடியாது. அவர்கள் obsessive-compulsive மனநிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறார்கள். இதற்கும் சிகிச்சை என்பது காமயிச்சையை கட்டுப்படுத்துவது மற்றும் திசை திருப்புவது போன்ற முயற்சிகள் தான்.” என்று மேலே காட்டப் பட்ட ஆதாரம் கூறுகிறது. இவ்வாறாக, தூதர் சிறுமிக்காமுகனாக இருந்திருந்தால், அவருக்கு தனது இச்சையை அடக்க முடியாமல் இருந்திருக்க வேண்டும். மாறாக, தூதர் ஆயிஷாவை மணமுடித்த பிறகு அவருடன் படுக்க [திருமணத்தை பூரணமாக்க] மூன்று வருடம் காத்திருந்தார்.

 

முகமது ஆயிஷாவுடனான ‘நிக்காவை’ உடனே ‘பூரணமாக்க’ விரும்பினான். அவனை சிறிது காத்திருக்கும் படி அபு பக்கர் கெஞ்சிக்கொண்டான். முகமது தனது முட்டாள் தொண்டனின் நம்பிக்கையை கெடுக்க விரும்பவில்லை எனவே காத்திருக்க ஒத்துக் கொண்டான்.

 

முகமது ஒரு சிறுமிக்காமுகன் மட்டும் இல்லை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவன் இறைவனின் தூதராகவும் காட்டிக்கொள்ள விரும்பினான். ஆகையால் கொஞ்சமேனும் ஒழுங்காக காட்டிக் கொள்ள வேண்டி இருந்தது. அவன் ஜெளன்னை (Jaun) தாக்கி அந்த ஊரின் மக்களை படுகொலை செய்தபிறகு என்ன செய்தான்? அவனிடம் ஒரு சிறுமியும் அவள் தாதியும் கொண்டுவரப் படுகிறார்கள். அந்த சிறுமியிடம் தன்னை அவனுக்கு கொடுத்து விடும்படி கேட்கிறான். அந்தச் சிறுமி ஒரு இளவரசி தன்னை ஒரு சாதாரண மனிதனுக்கு கொடுக்க முடியுமா என்று கேட்கிறாள். முகமது அவளை அடிக்க கையை ஓங்குகிறான். ஆனால் அவள் “கடவுளே காப்பாற்றுங்கள்” என்று கத்துகிறாள். முகமது நிறுத்திக்கொண்டான். ஏனென்றால் தனது சீடர்கள் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அவன் தனது மிருக இச்சைக்கும், தூதர் என்ற ஏமாற்று வேலைக்கும் இடையே ஒரு சமநிலையை காண வேண்டி இருந்தது. புனித தோற்றத்தை உருவாக்க வேண்டியிருந்தது.

 

பீடோபில்கள் தங்களைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும். அவர்கள் பார்க்கும் எல்லா சிறுமிகளின் மீதும் பாய்வதில்லை. தாங்கள் பிடிபடாமல் இருக்க தகுந்த நேரத்திற்காக காத்திருப்பார்கள். எப்போது தாக்குவது பாதுகாப்பானது என்று எல்லா ஊனுண்ணிகளுக்கும் தெரியும். முகமது மூன்று வருடங்களை காத்திருந்தது அபு பக்கரை சமாதானம் செய்யத்தானே ஒழிய அவனுக்கு சுய கட்டுப்பாடு இருந்ததனால் அல்ல.

 

இது போன்ற ஈனத்தனமான குற்றத்தைக் கூட நியாயப்படுத்துவதற்காக முட்டாள்தனமான சாக்குகளைக் கூற வேண்டிய அளவுக்கு ஒருவன் பகுத்தறிவை இழக்கிறான் என்பதைக் காணும் போது மலைப்பாக இருக்கிறது. குருட்டு நம்பிக்கையினால் கல்ட்டிஸ்ட்டுகள் இப்படித்தான் மாறி விடுகிறார்கள். பாவம் Zawadi யும் ஒரு கல்ட்டிஸ்ட்டு தான். என்னுடைய நூலைப் படித்தால் அவர் கூட இஸ்லாமை விட்டு விலகலாம்.

 

முகமதுக்கு Obsessive Compulsive Disorder என்ற மனநோய் இருக்கத்தான் செய்தது. எனது நூலில் இந்த தலைப்பிற்கு மட்டும் ஒரு அத்தியாயத்தையே ஒதுக்கி இருக்கிறேன்.

 

7) ஆயிஷா முகமதினால் “பலாத்காரம்” செய்யப்பட்டிருந்தால் அவர் அவனுடன் தொடர்ந்து வாழ்ந்திருப்பார் என்று நேர்மையாக கூறமுடியுமா? ஆயிஷா மிகவும் புத்திசாலி என்பதையும், நல்ல பேச்சாளி என்பதையும், ஏதேனும் தவறு நடப்பதைக் கண்டால் உடனே தனது கருத்தை தெரிவிப்பார் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். தூதரால் அவர் எந்த விதத்திலோ, வடிவத்திலோ, “பலாத்தகாரம்” செய்யப்பட்டிருந்தால், அவர் அவனுடன் தொடர்ந்து மனைவியாக வாழ்ந்திருப்பாரா!

 

ஒரு சிறுமியிடம் சில்மிஷம் செய்வதே பலாத்காரம் தான். இதை வேறு எந்த வார்த்தையிலும் அழைக்க முடியாது. அந்த சிறுமிக்குத் தான் பலாத்காரம் செய்யப்படுகிறோம் என்று அறியும் பக்குவம் இல்லாவிட்டால் அங்கே பலாத்காரம் நடக்க வில்லை என்று பொருள் இல்லை. கடத்தப்பட்டு அடைக்கப்பட்டு பல வருடங்களாக பலாத்தகாரம் செய்யப்பட்ட சிறுமிகள் கூட அதற்கு பழக்கப்பட்டு அந்த நிலையில் இருந்து தப்பிக்க வாய்ப்பிருந்த கட்டத்திலும் கூட அதற்கு முயலாத கேஸ்கள் பல இருக்கின்றன. Elizabeth Smart டினுடைய கேஸ் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

 

அவள் கடத்தப்பட்டு தினமும் வல்லுறவுக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். ஆனால் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட போது அவள் தன்னை காப்பாற்றுவதற்கு காவல்துறையிடம் ஒத்துழைக்காமல் தான் வேறு யாரோ என்று கூறினால். இந்த அதிசயத்தைப் புரிந்து கொள்ள எனது நூலின் புதிய பதிப்பின் Psychology of Fear [பயத்தின் உளவியல்] என்ற அத்தியாயத்தைப் படிக்க வேண்டும்.

 

8 ) தூதரை மணந்து கொள்ளும்போது ஆயிஷாவுடன் பேசிய பெண்கள் ஆயிஷாவிற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தூதரை மணந்து கொள்ளும் போது, அவர்கள் அவரை புகழ்ந்தார்கள், அவளுக்காக அழவில்லை அல்லது அலி சினா சொல்வதைப் போல ஒரு “சிறுமிக்காமுகனை” மணந்து கொள்வதற்காக வருத்தப்படவில்லை.

 

இதுதான் கல்டிஸ்டுகளின் நடத்தை. ஜிம் ஜோன்சின் (Jim Jones) பின்பற்றிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்கள் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாங்களும் விஷம் அருந்தினார்கள். அப்படியென்றால் அவர்கள் செய்தது இயல்பான செயலா? ஜேம்ஸ்டவுனில் பதிவு செய்யப்பட்ட கொடூரமான கடைசி ஒலிநாடாவை கேளுங்கள். எல்லோருமே தற்கொலை செய்துகொள்ள மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். கொலைகளையும் உயிர்த்தியாகங்களையும் பெருமையாகப் பேசுகின்ற முஸ்லிம்களின் நடத்தை இந்த கல்டிஸ்ட் மனநிலையால் தான் உருவானது.

 

9) இஸ்லாமில் தான் விரும்பாத ஒவ்வொன்றிற்காகவும் கூச்சல் போட்ட இஸ்லாமை ஏற்காதவர்கள் கூட இந்த திருமணத்தை எதிர்க்க வில்லை. அரபுக் கலாச்சாரத்திலேயே சிறுமிகளை திருமணம் செய்வது வாடிக்கையான போது, அவர்கள் எப்படி குறை கூற முடியும்?

 

ஒரு 50 வயது கிழவன் ஒரு சிறுமியின் மீது காம இச்சை கொள்வது இயல்பானதல்ல. இது மனித மனவியலின் ஒரு பகுதி. இதற்கும் கலாச்சாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆரோக்கியமான மனிதர்களுக்கு சிறுமிகளின் மேல் பெற்றோர் பாசம் வருவதற்கு பதில் மோகம் கொள்வது என்பது முடியவே முடியாது. ஒரு வயதுவந்தவனுக்கு ஒரு சிறுமியின் மீது காம இச்சை ஏற்படுகிறதென்றால் அவன் ஆரோக்கியமான மனநிலையில் இல்லை. அவன் மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டும் அல்லது எந்த சிறுமிக்கும் தீங்கிழைக்கும் முன் தன்னைத் தானே சுட்டுக் கொள்ளவேண்டும்.

 

இந்த அளவுக்கு குறைந்த அறநெறிகளைக் கொண்ட அரபியர்கள் கூட தங்கள் கிழ வயதில் சிறுமிகளை மணந்து கொள்வதில்லை. ஒரு ஆரோக்கியமான மனதை உடைய மனிதனுக்கு ஒரு குழந்தையின் மீது காம உணர்வு கொள்வதில்லை. Zawadi க்கு இதில் எந்த இடத்தில் புரியவில்லை? பீடோபிலியா சட்டபூர்வமாக்கப் பட்டிருந்தாலும் பெரும்பாலான முஸ்லிம்கள் இதை அனுசரிப்பதில்லை. அது சட்டப்படி குற்றமில்லை. ஆனாலும் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை ஏனென்றால், அவர்கள் சிறுமிகளால் தூண்டப்படுவதில்லை. பீடோபிலியாவை சட்டபூர்வமாக்கியது முகமது தான்.

 

முகமதின் எதிரிகள் அவனை அதற்காக கண்டிக்கவில்லையா? Zawadi க்கு எப்படி தெரியும்? அவர்கள் எல்லோருமே அடக்கப்பட்டு அவர்களின் கண்டனங்களின் சுவடே இல்லாமல் அழிக்கப் பட்டுவிட்டன.

 

10) ஆயிஷா இன்று உயிருடன் இருந்திருந்தால், அவர் பலாத்காரம் செய்யப்பட்டவர் என்றும், அவர் கணவன் ஒரு “பீடோபில்” என்றும் கூறும் அலி சீனாவைப் போன்ற மக்களை ஆதரித்திருப்பார் என்று நேர்மையாக கூற முடியுமா?

 

அனேகமாக மாட்டார். இயல்பைப் பற்றிய புரிதலே இல்லாத அளவுக்கு பாதிப்புகளுக்குட்படுத்தப் பட்டவர் தான் ஆயிஷா. பெரும்பாலான முஸ்லிம்கள் தாங்கள் [இஸ்லாமினால்] அனுபவிக்கும் பாதிப்புகளை அறியாதவர்கள். இஸ்லாமை விட்டு விலகி, தாங்கள் அனுபவித்த பாதிப்புகளை உணர ஆரம்பிக்கும் போது தான், அவர்கள் முகமதை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். இது போன்று முன்னாள் கிருத்துவர்களுக்கோ, முன்னாள் யூதர்களுக்கோ, முன்னாள் இந்துவுக்கோ ஏற்படுவதில்லை. முன்னாள் முஸ்லிம்கள் மட்டுமே தாங்கள் அனுபவித்த கொடுமைகளை உணர்கிறார்கள். மற்ற மதத்தவர் தங்கள் மத நம்பிக்கையை அது ஒரு பொய் என்று மட்டும் கூறி கைவிடுகிறார்கள். முஸ்லிம்கள் பொய்யுக்கும் கூடுதலாக தாங்கள் உட்பட்ட தவறிழைப்புகளையும் உணர்கிறார்கள். மூளைசலவை செய்யப்பட்ட மக்கள் தாங்கள் உட்பட்ட தவறிழைப்புகளை உணர்வதில்லை.

 

கடைசியாக இந்த பகுதியை சில ஆயிஷாவின் அறிவிப்புகளைக் கொண்டு முடிவு செய்யலாம்:

Sahih Al-Bukhari

Volume 1, Book 6, Number 299:

“எங்களில் யாருக்கேனும் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் தூதர் எங்களை ‘தடவிக்’ கொள்ள விரும்பினால், மாதவிடாய் போகும் இடத்தை சுற்றி ‘இஸார்’ துணியைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிட்டுவிட்டு அவரை ‘தடவிக்’ கொள்வார்கள்” என ஆயிஷா அறிவித்தார். “தூதர்தங்களின்ஆசையைகட்டுப்படுத்திக்கொள்வதுபோலஉங்களால்யாராலும்முடியாது”என்றும்ஆயிஷாகூறினார்.

 

இந்த ஹதீதை என் நூலில் மேற்கோள் காட்டி அதை விளக்கி இருக்கிறேன். முகமது ஆண்மையற்றவன். அவன் தன் ஆசையை அடக்க வில்லை. அவனின் குறி எழவே எழாது. அவன் தன் காமயிச்சையை தனது மனைவிகளை தடவிக் கொள்வதன் மூலம் தீர்த்துக் கொண்டான்.

Sahih Muslim

Book 006, Number 2439:

ஆயிஷா அறிவித்தார், “தூதர் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள்! உங்களில்தம்(உடல்)ஆசையை அதிகம்கட்டுப்படுத்திக்கொள்பவராகஅவர்இருந்தார்!”

 

ஆகையால், ஆயிஷா அன்னையின் வார்த்தைகளின் படி, தூதருக்கு மக்களிலேயே அதிக மனக் கட்டுப்பாடு இருந்தது. இப்படியாக ஆயிஷாவே அலி சினா போன்ற, இஸ்லாம் எதிரிகளின் மற்றும் கிருத்துவ மிஷனரிகளின் கருத்துகளுக்கு மறுப்புரை தெரிவித்து விட்டார்.

 

ஆயிஷாவுக்கு அது எப்படி தெரியும்? அவருக்கு முகமதைத் தவிர வேறு ஏதேனும் ஆண்களுடன் அனுபவம் இருக்கிறதா? அது வேறு ஒரு கதை. அவருக்கு சப்வானுடன் (Safwan) கொஞ்சம் தொடர்பு இருந்தது. எது எப்படியோ, அவர் முகமதின் ஆண்மையின்மையைத் தான், “ஆசையை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்” என்று புரிந்து கொண்டார். அவன் தடவிக் கொள்வதால் மட்டுமே திருப்தி அடைந்தான். ஒரு ஹதித் அவன் “அவர்களின் தேனைக் குடித்தார்” என்று சொல்கிறது. அவனால் ‘வேலை’ செய்ய முடியாது. முகமதின் ஆண்மையின்மையைப் பற்றி என் நூலில் பல பக்கங்களுக்கு எழுதி இருக்கிறேன்.