அலி சினா பிறப்பிலேயே முஸ்லிமல்லாதவனாகவோ அல்லது ஷியா/ அஹ்மதி பிரிவில் பிறந்து பின்னர் சியோனிசத்திற்கு ஆதரவான கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறிய ஒருவனாகவோ இருக்கவேண்டும். அவன் ஒரு பொய்யன், தன்னையே ஏமாற்றிக்கொள்பவன். இஸ்லாமின் கடைசி தூதரின் வெற்றியைப் பார்த்து பொறாமையினால் மனம் பொறுக்காமல் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருப்பவன். இஸ்லாமையும் முஸ்லிம்களையும் 9/11 லிருந்து 25 வருடத்திற்குள் இவ்வுலகத்திலிருந்து அழித்துவிடுவதற்காக நியமிக்கப்பட்டவன். அன்றிலிருந்து இந்த முட்டாள் அவனால் முடிந்தவரை முயற்சி செய்து கொண்டிருக்கிறான். என்ன சாதிக்கிறான் என்று பார்ப்போம்.

ஷியா பண்ணிரெண்டுகள் பிரிவு முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்தவன் நான். ஷியாக்கள் முஸ்லிம்களே இல்லை என்கிறீர்கள் நீங்கள். சுன்னிக்களே முஸ்லிம்கள் இல்லை என்கிறீர்கள் ஷியாக்கள். இதுதான் இஸ்லாமின் இயற்கை. முகமது தனது தொண்டர்கள் 73 பிரிவுகளாக பிரிவார்கள் என்று சொன்னான். இதில் ஒன்றைத் தவிர மற்ற எல்லோருமே நரகத்திற்கு செல்வார்கள் என்றான். ஆனால் அவன் சரியான பிரிவின் குணங்களை தெளிவாக்கவில்லை. இதன் விளைவாக முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கான பிரிவுகளாக பிரிந்து உள்ளனர். ஒவ்வொரு பிரிவும் தாங்கள் தான் சரியான பிரிவு என்றும் மற்றவர்கள் எல்லோரும் வழிதவறியவர்கள் என்றும் நரகத்திற்கு போவார்கள் என்றும் எண்ணுகிறார்கள். அவன் வேண்டுமென்றே அவர்களுக்கிடையில் பிரிவினைக்கான விதையை விதைத்ததைப் போல இருக்கிறது. ஆகையால், முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதோரைக் கொன்றும் அடிபணியவும் செய்தவுடன், அவர்கள் வெறிநாய்களைப் போல தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள். இதை இன்று ஈராக்கிலும் பாகிஸ்தானிலும் பார்க்கலாம். என்னே மதம்!

நான் ஒரு சியோனிஸ்ட் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். சியோனிஸ்ட் என்றால் யூதர்களுக்கு தாய் நாட்டிற்கான உரிமையுள்ளது என்று எண்ணுபவர். இதை நான் ஆமோதிக்கிறேன். அதனால் தான் நான் ஒரு சியோனிஸ்ட். எந்த ஒரு நேர்மையான மனிதனும் சியோனிஸ்ட்டாகத்தான் இருக்க வேண்டும். அகமதிநிஜாத், ஹிட்லர், போன்ற குற்றவாளிகளும் வெறுப்பை பரப்புகிறவர்களும், நியோ நாஜிக்கள் மற்றும் முஸ்லிம்களும்தான் சியோனிசத்திற்கு எதிரானவர்கள். நான் அந்த குழுவில் இடம் பெற முற்றிலும் விரும்பவில்லை.

நான் ஒரு பொய்யனா? ஏமாற்றுப் பேர்வழியா? இதை உலகத்திற்கே வெளிச்சம் போட்டுக்காட்ட இதோ உங்களுக்கு ஒரு வாய்ப்பு. எனது நூலை படித்துவிட்டு அதற்கு பதில் எழுதுங்கள்.

 

உயிருடன் எரிக்கப்பட்ட ஒரு பாகிஸ்தானியப் பெண்.

நான் யாராலும் நியமிக்கப்பட்டவனல்ல. நான் யாராலும் எதற்கும் நியமிக்கப்படும் அளவுக்கு முக்கியமானவன் இல்லை. நான் இஸ்லாமை ஒழிப்பதற்கு முடிவெடுத்தது எனது சொந்த விருப்பத்தில் தான். நான் 1994 ல் குரானைப் படித்து இஸ்லாமை ஒரு மோசடி என்று உணர்ந்தேன். இதை எனக்கு நானே ஒத்துக்கொள்ள சில வருடங்கள் ஆனது. Understanding Muhammad என்ற புத்தகம் எனக்கு கிடைத்திருந்தால் இது விரைவில் நடந்திருக்கும். ஆனால் நான் அலி தஷ்தி (Ali Dashti) எழுதிய The 23 Years: Prophetic Career என்ற புத்தகத்தைப் படித்தேன். இது எனக்கு மிகவும் உதவியது.

இருப்பினும், இஸ்லாமை ஒழிப்பதற்காக என்னை நியமித்தது ஒரு பாகிஸ்தானிய பெண் ஆகும். நான் அவரை அவர் இறந்தபிறகு தான் சந்தித்தேன். அவரைப் பற்றிய ஒரு விவரணப்படத்தை தொலைக்காட்சியில் கண்டேன். 16 வயதான அவரை 35 வயதான அவரின் கணவனால் உயிருடன் எரிக்கப்பட்டார். அவரை எரித்ததற்க்கான காரணம் அவரின் நெருங்கிய உறவினரும் பால்ய நண்பரும் ஆன ஒரு ஆண் அவரைப் பார்க்க வந்தது தான். அவர்கள் இருவரும் ஒன்றாக விளையாடி ஒன்றாக வளர்ந்தவர்கள். இந்த சந்திப்பைப் பற்றி அறிந்த கணவன் தன் ‘மானம்’ போய்விட்டதாக எண்ணி, அதை காப்பாற்றுவதற்க்காக அவளை எரிப்பதுதான் சிறந்த வழி என்று நினைத்தான்.

நான் அந்த பெண்ணை மருத்துவமனை படுக்கையில் கிடக்கப் பார்த்தேன். அவருடை முழு உடலும் எரிந்து இருந்தது. அவரால் பேச முடியவில்லை. ஒரு அடிபட்ட விலங்கைப்போல வலியில் துடித்துக் கொண்டிருந்தார். அந்த நொடியில் அவர் என்னைத்தான் அழைக்கிறார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் என்னை ஏதேனும் செய்யும்படி கெஞ்சினார். இது போன்று மற்றவர்களுக்கு நேராத படி பார்த்துக்கொள்ளுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு அவர் இறந்து விட்டார். நான் அவருக்கு வாக்குக் கொடுத்தேன். அவருடைய இறப்பு வீணாகப்போகாத படி நான் பார்த்துக் கொள்வேன் என்று அவருக்கு உறுதி அளித்தேன். அவர் கொடுமைக்காரக் கணவனால் கொல்லப்படவில்லை. அவர் இஸ்லாமால் கொல்லப் பட்டிருக்கிறார். அவரின் கணவனும் கூட இஸ்லாமால் பாதிக்கப்பட்டவன் தான். முழு பாகிஸ்தானும் மற்றும் இஸ்லாமிய உலகமே இஸ்லாமால் பாதிக்கப்பட்டவர்கள் தான். நான் யாரால் நியமிக்கப்பட்டேன் என்று இப்பொழுது உங்களுக்கு தெரியும். இறப்பிற்குபின் ஒரு வாழ்க்கையிருந்தால் அந்தப் பெண்ணை அவ்வுலகில் சந்திக்க விரும்புகிறேன் . அவரைக் கட்டித் தழுவி, “என் கண்ணே, நீ என்னிடம் கெஞ்சியதைக் கேட்டேன். என்னால் முடிந்ததைச் செய்தேன். இப்போது உனக்கு மகிழ்ச்சி தானே?” என்று கேட்பேன்.

-Ali Sina.

மொழிபெயர்ப்பு: Ali Sina’s Tamil Fan