ஹலோ மிஸ்டர் சினா,

பின்வரும் மூன்று புள்ளிகளைப் பற்றி உங்கள் கருத்தைத் தெரிவிப்பீர்களா? ஹதித் பதிவுகளில் இருந்தும் குரானின் வாசகங்களில் இருந்தும் பெண்கள் பல முறைகளில் இழிவு படுத்தப்படுகிறார்கள் என்பது தெளிவு. ஆனால் முஸ்லிம்கள் பின்வரும் மூன்று ஹதித்களை காட்டி இஸ்லாம் பெண்களை உயர்வு படுத்துகிறது என்று தொடர்ந்து சாதிக்கிறார்கள்.

1. அபு ஹுரைரா (ரலி)அறிவித்தார். அல்லாவின் தூதர் (ஸல்):” ஒரு (இஸ்லாமை) நம்புகின்ற ஆண் ஒரு (இஸ்லாமை) நம்புகின்ற பெண்ணை வெறுக்கக் கூடாது. அவனுக்கு சில குணங்களைப் பிடிக்காவிட்டால், வேறு குணங்களால் திருப்தி அடைவான்.” என்று கூறினார்

2. இப்னு உமர் (ரலி)அறிவித்தார். அல்லாவின் தூதர் (ஸல்):” எச்சரிக்கை, உங்களில் எல்லோரும் ஆட்டிடையர்கள் தான். தங்கள் தங்கள் மந்தைக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். கலிப் மக்களின் காவலாளி. தனது குடிமக்களைப் பற்றி கேட்கப்படுவார் (எப்படி அவர்களின் விவகாரங்களை நடத்தினாய் என்று). ஒரு ஆண் தனது குடும்ப அங்கத்தினரின் காவலாளி. குடும்பத்தைப் பற்றி கேட்கப் படுவான் (எப்படி அவர்களின் நன்னிலையை கவனித்துக் கொண்டாய் என்று). ஒருபெண்தனதுகணவனின்வீட்டிற்கும்அவனின்குழைந்தைகளுக்கும்காவலாளி.அவர்களைப்பற்றிகேட்கப்படுவாள்(எப்படிவீட்டையும்குழந்தைகளையும்பார்த்துக்கொண்டாய்என்று). (இதை எழுதியவரிடம் இருந்து ஒரு குறிப்பு: இங்கே கவனியுங்கள். தூதுவருக்கு (ஸல்) பெண்களின் மீது நம்பிக்கை இல்லை என்றால், அவர் வீட்டிற்கு காவலாளி என்று சொல்லி இருக்கமாட்டார்!). ஒரு அடிமைப்படுத்தப்பட்டவர் தனது உரிமையாளனின் பொருள்களுக்கு காவலாளி. அவற்றைப் பற்றி கேட்கப் படுவான் (எப்படி தன் நம்பிக்கையில் விடப்பட்ட பொருள்களை காத்தாய் என்று). எச்சரிக்கை, உங்களில் எல்லோரும் காவலாளிகள் தான். தங்கள் தங்கள் நம்பிக்கையில் விடப்பட்டவைகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும்.” என்று கூறினார்.

3. சலீம் தனது தந்தையரிடமிருந்து (அப்துல்லா பி, உமர் ) அறிவிக்கிறார். அல்லாவின் தூதர் (ஸல்):” பெண்கள் மசூதிக்குச் செல்ல அனுமதி கேட்கும் பொது, அவர்களை தடை செய்யாதீர்கள்” என்று கூறினார்.

1.

முதல் ஹதித்தை நான் படித்ததில்லை. அதை கண்டுபிடிக்கவும் முடியவில்லை. இருப்பினும், பெண்களை வெறுக்காதே என்று சொல்வது சம உரிமை கொடுப்பதற்கு சமமல்ல. இந்த ஹதித் ஆண்கள் தங்கள் மேலான நிலையிலிருந்து பெண்களுக்காக இறங்கி வரவேண்டும் (condescend) என்கிறது

அப்துல் பஹா ஏசுவைப் பற்றியதாக கூறும் ஒரு கதை இருக்கிறது. ஒரு நாள், ஏசு தனது சீடர்களுடன் போய்க்கொண்டிருக்கும் பொது ஒரு இறந்த நாயைப் பார்த்தனர். எல்லோரும் அருவருப்பு கொண்டனர். ஆனால் ஏசு அதன் வெண்மையான பற்களை பார்க்கச் சொன்னார்.

மோசமான விசயங்களில் கூட நல்லவற்றைத் தேடவேண்டும் என்பது தான் இந்த கதையின் நீதி. இந்த ஹதித்தின் நீதியும் அதே தான். இது பெண்களுக்கு சம உரிமை கொடுக்கவில்லை. இது ஆண்களை தாங்கள் மேலானவர்கள் என்று கருதும் படியும் பெண்களின் குறைகளை பெரிது படுத்த வேண்டாம் என்றும் சொல்கிறது.

2.

இரண்டாவது ஹதித் முஸ்லிம் 20: 4496 ல் இருக்கிறது. இது ஒவ்வொரு பிரிவினரின் பொறுப்புகளை வரையறுக்கிறது. இந்த ஹதித் குரானின் “நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை பாதுகாத்துக் கொள்வார்கள்”என்று கூறும் 4:34 வாசகத்தை உறுதிப்படுத்துகிறது.

ஒரு அடிமைப்படுத்தப்பட்டவர் எப்படி தன் எஜமானின் பொருள்களுக்கு காவலாளியோ அதேபோல பெண்களும் தங்கள் கணவர்களுக்குச் சொந்தமானவற்றைவைகளின் காவலாளிகள். இந்த ஹதித் நாய்கள் தங்கள் எஜமானனின் பொருள்களுக்கு காவலாளி என்றும் சேர்த்துச் சொல்லி இருக்கலாம். இந்த ஹதிதின் நோக்கம் மாறியிருக்காது.

இந்த முஸ்லிம் ஆதரவாளர் பெண்களின் உரிமைகளை அது இல்லாத ஒரு ஹதிதில் தேடுகிறார். இந்த ஹதித் உரிமைகளைப் பற்றியது அல்ல, கடமைகளைப் பற்றியது. எப்படி ஒரு நாய்க்கு தான் பாதுகாக்கும் பொருள்களின் மீது எந்த உரிமையும் இல்லையோ அதேபோல ஒரு அடிமைப்படுத்தப்பட்டவருக்கு தனது பொறுப்பில் உள்ள பொருள்களின் மீது எந்த உரிமையும் இல்லை. ஒரு பெண்ணுக்கு தனது கணவனின் பொருள்களை பாதுகாக்கும் பொறுப்பு இருக்கிறது, ஆனால் அவற்றின் மீது அவருக்கு எந்த உரிமையும் இல்லை. அவருக்கு இருக்கும் ஒரே ஒரு உரிமை பெண்தட்சணை தான். அதுவும் அவர் மணவிலக்கு பெறும்போது தான் கிடைக்கும். தனது குழந்தைகளின் மீது கூட ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு எந்த உரிமையும் இல்லை.

3.

இந்த ஹதித் பெண்ணின் மீது ஆணின் அதிகாரத்தை நிறுவுகிறது. இது பெண்ணுக்கான அனுமதி அவரின் கணவனிடம் இருக்கிறது என்கிறது. அவர் தனக்கான முடிவுகளை தானே எடுக்க முடியாது.

தங்கள் மனைவிகள் மசூதிக்கு செல்ல விரும்பும்போது அனுமதி கொடுக்கும்படி முகமது ஆண்களுக்குக் கூறினான் என்று இந்த முஸ்லிம் ஆதரவாளர் பீற்றிக்கொள்கிறார். இதுவா விடுதலை? மனைவி ஒரு நண்பரையோ, ஒரு உறவினரையோ பார்க்கச் செல்லவேண்டும் என்றாலோ தனது நண்பர்களுடன் கடைவீதிக்குச் செல்லவோ அல்லது நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக சிறிது நேரம் களிக்கலாம் என்றோ நினைத்தால்? ஒரு பெண் தனது முடிவுகளை தானே எடுக்க கூடாது, அவருக்கு ஒரு காவலாளி வேண்டும், எல்லா பெரியவர்களும் செய்ய உரிமையுள்ளவைகளை செய்ய பெண்கள் அனுமதி கேட்கவேண்டும் என்ற இந்த ஒரு விசயமே இஸ்லாம் பெண்ணை வெறுக்கும் மதம் என்பதை தெளிவாக நிறுவுகிறது. பெண்கள் எந்த மயிருக்கு மற்றவர்களின் அனுமதி கேட்கவேண்டும்?

மேற்கண்ட ஹதித்துகளிருந்து ஆண்-பெண் சமத்துவத்தையோ பெண்களுக்குள்ள ஏதேனும் உரிமைகளையோ யூகிக்க முடியாது. சொல்லப்போனால் அவைகள் எதிர்மறையைத்தான் உறுதி செய்கிறது. பல குரான் வாசகங்களும் ஹதிதுகளும் பெண்களுக்கு இஸ்லாமில் உரிமைகள் என்று பெரிதாக ஒன்றும் இல்லை என்று தெள்ளத்தெளிவாகக் காட்டுகின்றன. அவர்களின் உரிமைகள் அடிமைப்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளைப் போன்றதே.

-Ali Sina.

மொழிபெயர்ப்பு:Ali Sina’s Tamil Fan