குரானில் மறைந்திருக்கும் உவமானப் பொருளைத்தான் தான் எடுத்துக்கொள்வதாக ஒரு முஸ்லிம் எழுதினார். நாம் நமது மூளையை நன்றாக கசக்கி புதிய முறைகளில் விளக்கம் கொண்டால், எதை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம். இப்படியாக, நாம் கிறிஸ்துமஸ்தாத்தாவையும், ஒற்றைக் கொம்புக்குதிரையையும் கூட நம்பி விடலாம்.
குரானின் முட்டாள்தனமான வரிகளுக்கு ரகசியமான அர்த்தத்தை கண்டுபிடிக்கும் வேலையினால் ரூமி அவர்கள் முஸ்லிம் உலகை அறிவொளியிலிருந்தும் வளர்ச்சியில் இருந்தும் தடை எழுப்பினார். முஸ்லிம்களுக்கு வறண்ட பாலையான இஸ்லாமில், கானல்நீரைத் தேடக் கற்றுக் கொடுத்தார்.
எந்த புத்தகத்திற்கும் அதன் தெளிவான அர்த்தத்தைத் தவிர மற்ற விளக்கங்கள் கொடுக்கக் கூடாது. குறிப்பாக அந்த புத்தகம் தான் ஒரு வழிகாட்டி என்று கூறிக்கொண்டால் அப்படிச் செய்யவே கூடாது. ஒரு வழிகாட்டும் நூல் தெளிவாகவும் வெவ்வேறு வழிகளில் புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை அளிக்காததாகவும் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அது ஒரு வழிகாட்டும் புத்தகமே அல்ல.
ஒரு கடவுளிடமிருந்து வந்ததாக கூறிக் கொள்ளும் நன்னெறி காட்டும் நூல் எல்லோராலும் புரிந்து கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். ஒரு புதிய இடத்தில் உங்களுக்கு வழி தெரியவில்லை என்றும் ஒருவரை வழி கேட்கிறீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம். ஒரு தெளிவான வழிகாட்டுதலைத் தானே எதிர்பார்ப்பீர்கள்? வெவ்வேறு திசைகளைக் காட்டினால் அந்த மனிதரை நம்புவீர்களா? அவனை ஒரு கிறுக்கன் என்று தானே எண்ணுவீர்கள்? கடவுளிடமிருந்து கிடைத்த ஒரு தெளிவான வழி காட்டுகிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு குழப்பமும் முரண்பாடுகளும் நிறைந்த, ஒரு மண்ணும் புரியாத வழிகாட்டலைக் கொடுக்கும் ஒரு நபரை ஏன் நாம் நம்பவேண்டும்?
இது போன்று கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி மனிதர்களை தவறாக வழி நடத்துவது கடவுளுக்கு அழகல்ல. ஆனால் அதைத்தான் அல்லா செய்வதாக முகமது சொல்கிறான். அவர் மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்றும் அவர் ஒரு பெரிய ஏமாற்றுப்பேர்வழி என்றும் சொல்கிறான் (Q.3:54; 8:30)
முஸ்லிம்கள் தங்களது மதப்புத்தகத்தை சரியாகப் புரிந்து கொள்ள மிகவும் மூளையை கசக்கி இருக்கிறார்கள். இந்த புத்தகம் மிகவும் சுவையற்றதும் பொருளற்றதும் மாகும். எனவே அதன் முட்டாள்தனமான வாசகங்களுக்கு ஏதேனும் உப்பு சப்பில்லாத அர்த்தம் கற்பித்துக்கொள்கிறார்கள். எடுத்துக்காட்டு. மிராஜ் [ முகமது ஒரு சிறகுடைய குதிரையில் ஏறி வானுலகம் சென்று வந்ததாக கூறிக்கொண்டது.] இன்றும் அன்றும் இது ஒரு முட்டாள்தனமான பேச்சு. இதைக் கேட்டு முகமதை பின்பற்றிய பலர் அவரை விட்டு விலகினர். முகமது இதை நம்பிக்கையற்றவர்களுக்கு ஒரு சோதனை என்றான். அவனின் கூற்றுப்படி மூடர்கள் மட்டுமே இந்த நம்பிக்கை சோதனையை வென்று முஸ்லிம்களாக முடியும். இந்த அண்டத்தைப் பற்றி ஒரு நல்ல அறிவு பெற்றிருக்கும் தற்காலத்தில், எந்த ஒரு பகுத்தறிவுள்ள மனிதனும் இது போன்ற உளறகளை நம்பமாட்டார்.
முஸ்லிம்கள் தங்கள் தூதுவரை விட புத்தியுடையவர்களாக இருந்தனர். அவர்களால் இந்த அபத்தத்தை நம்ப முடியவில்லை. அதேசமயம் அவர்களால் இதை எதிர்த்து கேள்வி கேட்க முடியவில்லை. அதனால், அவர்கள் குரானுக்கு மறைமுக அர்த்தம் இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். ஹதித்துகளை கண்டுபிடிப்பதில் மன்னர்களான ஷியாக்கள் ஒரு ஹதித்தை கொண்டுவந்தார்கள். அதன்படி, முகமது குரானுக்கு மறைந்த உட்பொருள் இருப்பதாகவும், இந்த உட்பொருள் இன்னும் ஆழமான உட்பொருளை மறைத்திருப்பதாகவும், (இப்படியே 7 நிலைகள் இருப்பதாகவும்) சொன்னான்.
இந்த பார்வையை சூபிக்களும் பகிர்ந்து கொள்கிறார்கள். இஸ்மாயிலிகள் கூட குரானுக்கு batin என்ற மறைந்த உட்பொருளும், zahir என்ற வெளிப்படையான வெளிப்பொருளும் இருப்பதாக நம்புகிறார்கள்.
அவர்கள் கொடுக்கும் விளக்கங்கள் அர்த்தமில்லாதவைகளாகவும் தாறுமாறாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, “(சொல்): காஃபிர்களே! நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.(Q 109: 1-2)” என்ற வரிகளில் காஃபிர் என்பதற்கு தனிமனிதன் என்று எடுத்துக்கொள்ளலாம் என்றும் பரலோக விலைமாதுக்கள் என்பதற்கு ‘புனித காட்சிகள்’ என்று எடுத்துக்கொள்ளலாம் என்றும் சொல்கிறார்கள்.
Ayn-al-Qudat Hamadani என்பவர் தனது நூலான Tamheedat ல் “அது அல்லா மூட்டிய நெருப்பாகும், அது இதயங்களின் மேல் எழும்பும்.” (104/6-7), என்றதை “புனித அன்பின் தீவிரம்” என்று பொருள் கொள்கிறார்.
இந்த பொருளில் உள்ள முட்டாள் தனத்தைப் பார்க்க நாம் செய்யவேண்டியதெல்லாம் இந்த சிறிய சுராவை படிப்பதுதான். இந்த சுராவில் முகமது தனது எதிரியை (chief Walid ibn Mughira என்று சொல்லப்படுகிறது.) கேவலப் படுத்துகிறான். அவன் “ பொருளைச் சேகரித்து கொண்டே இருக்கின்றான் (செல்வமே சாசுவதமென எண்ணி); தன் பொருள் தன்னை என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்; அப்படியல்ல, நிச்சயமாக அவன் நசுக்கும் பேரழிவில் எறியப்படுவான். நசுக்கும் பேரழிவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அது அல்லா மூட்டிய நெருப்பாகும், அது இதயங்களின் மேல் எழும்பும்”
எந்த விதத்தில் Hamadani இந்த நெருப்பை “புனித அன்பின் தீவிரம்” என்று விளங்கிக் கொண்டார் என்று எனக்குப் புரியவில்லை. இதுபோன்ற விளக்கங்கள் மிகவும் ஏளனத்திற்குரியவை என்று புரிந்து கொள்வது மிகவும் கடினமல்ல. முகமது இந்த பரலோக விலைமாதுக்களைப் பற்றி நன்றாகவே வர்ணித்து இருக்கிறான். குரானிலிருந்து இந்த விலைமாதுக்கள் உயர்ந்த முலைகள் (கெட்டியான முலைகள்), கறுப்புக் கண்கள், மிகவும் வெண்மையான தோல், இவ்வாறு மற்றும் பல கொண்டிருந்தனர் என்று நாம் அறியலாம்.
குரானுக்கு எப்படி விளக்கம் கொடுத்தாலும், சரியாக வராது. சில சமயங்களில் பச்சை முட்டாள்தனமாக இருக்கும். நான் Youtube ல் ஒரு உயர்நிலை பாகிஸ்தானிய முல்லா (அஹமதி/ காதியானி என்று நினைக்கிறேன்) குரானில் வரும் ஜின்கள் பாக்டீரியாக்கள் தான் என்று கூறுவதைப் பார்த்தேன். ஒரு ஹதிதில் முகமது ‘பின்புறத்தை’ [மலம் கழித்தபிறகு] எலும்பால் துடைத்துக்கொள்ளக் கூடாது ஏனென்றால் அது ஜின்களின் உணவு என்று கூறியதைத்தான் ஆதாரமாக சொன்னார். அதாவது, பாக்டீரியாக்கள் தான் எலும்பின்மீதுள்ள இறைச்சியை தின்னும், அதனால், குரானில் சொல்லப்பட்ட ஜின்கள் பாக்டீரியாக்கள் தான் என்றார். இந்த பெரிய படிப்பு படித்த முல்லா, முகமது மற்ற இடங்களில் ஜின்களின் நகரத்திற்கு சென்றதாகவும், ஒரு இரவை அங்கே ஜின்களுடன் கழித்ததாகவும் அவர்களை இஸ்லாமுக்கு மாற்றியதாகவும் சொல்லிக்கொள்கிறான் என்பதை மறந்து விட்டார். முகமது பாக்டீரியாவாக மாறி இந்த அற்புதத்தை செய்தானா?
குரான் அதன் தெளிவான அர்த்தத்தைத் தவிர மற்ற எந்த விதத்திலும் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்கு ஒரு அருமையான பதில் குரானிலேயே இருக்கிறது. குரான் திரும்பத் திரும்ப “தெளிவான புத்தகம்” (5:15) “புரிந்துகொள்ள எளிதானது” (44:58 , 54:22 , 54:32, 54:40) “விரிவாக விளக்கப்பட்டுள்ளது” (6:114), “ தெளிவாக சொல்லப்பட்டது”, (5:16, 10:15) மற்றும் அதில் “சந்தேகமே அற்றது” (2:1)என்று தன்னைப்பற்றி சொல்லிகொள்கிறது. இந்த வரிகளிக்கும் புது விளக்கம் கொடுக்கப் போகிறீர்களா?
இது கடினம் தான் என்று எனக்குத் தெரியும். ஆனால் நேர்மை இருந்தால் நாம் இஸ்லாமை கைவிட்டு என்றைக்குமாக அதைப்பற்றிய கனவுகளை கலைக்கவேண்டும். குரானை வேறுவிதமாக புரிந்து கொள்வதும் இஸ்லாமுக்கு மறு உரு கொடுப்பதும் வீண்வேலை. நாம் உண்மையைத்தான் பற்றிக் கொள்ளவேண்டும். அது கடினமல்ல. பொய்களை தகர்ப்பதுதான் கடினம். ஆனால் ஒருமுறை அவைகள் தகர்ந்தவுடன், தகர்ந்தது தகர்ந்ததுதான். நீங்கள் விடுதலை பெறுவீர்கள். உங்களுக்கு வானமே எல்லை. குருட்டு நம்பிக்கையின் விலங்குகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக எண்ண முடிந்தது உண்மையிலேயே ஒரு புது பிறப்பாக அமையும்.
கடவுளிடமிருந்து வந்த நன்னெறிப் புத்தகத்தை வேறுவிதத்தில் புரிந்து கொள்ளவேண்டும் என்ற ஒரு எண்ணமே ஒரு தவறான தர்க்கம். ஒரு ஆசிரியர் பாடத்தை விளக்குவதில் அக்கறையில்லாமல் மாணவர்களின் விருப்பத்திற்கு புரிந்து கொள்ளும் படி விட்டுவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அவர் ஒரு நல்ல ஆசிரியர் என்று சொல்வீர்களா? அவருக்கு 73 மாணவர்கள் இருக்கிறார்கள் என்றும் ஒரே ஒரு மாணவர் மட்டும் தான் தேர்ச்சி அடைகிறார் என்றும் வைத்துக் கொள்வோம். ஆசிரியர் மேல்தான் தவறு என்ற சந்தேகம் உங்களுக்குள் வரவில்லையா?
எல்லாமறிந்த கடவுள் தனது வழிகாட்டலில் தெளிவாக இல்லை என்றும் தனது கட்டளைகளை மனிதர்களின் சுய புரிதலுக்கு விட்டு விட்டார் என்றும் நீங்கள் இங்கே சொல்கிறீர்கள். அவரின் சொந்த தூதரின் கூற்றுப் படி, அவனை பின்பற்றுபவர்கள் 73 பிரிவுகளாக பிரிவார்களாம், ஒரே ஒரு பிரிவைத் தவிர மற்ற எல்லோருமே நரகத்திற்கு செல்வார்களாம். கடவுளை நீங்கள் இப்படித்தான் புரிந்து கொண்டுள்ளீர்களா?
குரானுக்கு மேலோட்டமான அர்த்தம் கொடுக்காமல், நமது விருப்பத்திற்கேற்றவாறு வேறு விளக்கம் கொடுக்காமல் அது என்ன சொல்கிறது என்பதை நன்றாக கவனித்தால் நாம் உண்மையை குரானிலிருந்தே பெறலாம். அப்படித்தான், நான் குரானிலிருந்தேதான் பெற்றேன். அதற்குமுன் நான் இஸ்லாமை மறுக்கும் (raddiah) எந்த புத்தகத்தையும் படிக்க மறுத்தேன். ஆகையால் எனது கட்டுரைகளைப் படிக்கும் முஸ்லிம்களை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் அவர்கள் அடியேனை விட திறந்த மனமுடையவர்கள்.
தொடர்புடைய பதிவு The illusion of reforming islam
Ali Sina.
Translation: Ali Sina’s Tamil Fan.