திரு ஹாலந்த் சி டைலர் (Holland C. Tylor) இஸ்லாமுக்கு மதம் மாறியவர். அவர் மித இஸ்லாமை பரப்புபவர். அவர் முஸ்லிம்களிடம் முகமது ஒரு rahmatun lil alameen (இரு உலகிலும் கடவுளின் கருணை) என்றும் முஸ்லிம்கள் ஜிஹாதின் படையில் சேர்வதற்கு பதிலாக “அன்புப் படையில்” சேர வேண்டும் என்கிறார்.

இஸ்லாம் அடிப்படையிலேயே ஒரு தீய மதம் என்றும் முகமது ஒரு பயங்கரவாதக்குழுத் தலைவன் என்றும் கூறி டைலரிடம் சவால் விட்டேன். உண்மை இதுதான். அதை பொய்களால் மறைக்க முடியாது. நான் அவருடைய நூலைப் படித்தேன். அது பொய்களாலும் நயவஞ்சகங்களாலும் நிறைந்து இருக்கிறது. அவருடைய வாதங்களை நிரூபிக்குமாறு சவால் விட்டேன். அவருக்கு இரண்டு கேள்விகளை அனுப்பினேன். பதிலளிப்பதாக கூறினார். ஆனால் இதுவரை இல்லை. எனது நூலையும் அவருக்கு அனுப்பினேன். அவர் அதைப் படிக்கவில்லை. ஆகையால் எனது கேள்விகளை பதிவிட முடிவு செய்தேன். அவர் வசதிப்படி எப்போது வேண்டுமானாலும் பதில் அனுப்பட்டும் (எனக்கு நம்பிக்கை இல்லை). முதல் கேள்வி இங்கே இருக்கிறது. கீழே உள்ளது எனது இரண்டாவது கேள்வி.

 

கேள்வி 2

அன்புள்ள ஹாலந்த்

நீங்கள் தொகுத்துள்ள புத்தகத்தில், மித முஸ்லிமின் சிறந்த உதாரணம் என்று நீங்கள் புகழ்ந்து பாடும் காலம்சென்ற இந்தோனேசியா அதிபர் வாஹித் பல முறை “அமைதியான மக்கள்” (al-nafs al-muthmainnah), அதாவது இயற்கையிலேயே அமைதியான மக்கள் மற்றும் அவர்களுக்கு நேர்மாறாக “அதிருப்தியான மக்கள்” (al-nafs al-lawwâmah) அதாவது சமூகத்தில் குழப்பங்களுக்கும் சச்சரவுகளுக்கும் காரணமான சுயநலமே உருவான மக்கள் பற்றி எழுதிகிறார்.

 

வாஹிதின் கட்டுரையில் இருந்து நான் புரிந்து கொள்வது என்னவென்றால் அவர் அமைதியான மக்கள் மற்றவர்களின் மீது போர் தொடுக்கும் மக்களை விட சிறந்தவர்கள் என்று நம்புகிறார். ஆனால், முகமது வேறுமாதிரி நினைத்தான் என்று தெரிகிறது.

முஸ்லிம்களை இஸ்லாமில் நம்பிக்கையற்றவர்களின் மீது போர் தொடுக்கவும் அவர்களின் மனதில் கிலி ஏற்படுத்துமாறும் தூண்டக்கூடிய வாசகங்கள் பல குரானில் உள்ளன. எடுத்துக்காட்டாக,  “அவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாவின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்” (Q. 8:60).

முகமது தனது பின்பற்றிகளை அவர்களின் உடல்களாலும் பொருள்களாலும் ஜிஹாதில் ஈடுபடும்படி, அதாவது தாக்குதல்களில் கலந்து கொள்ளவும், அதற்கு பணவுதவி செய்யவும் தூண்டினான். “வீட்டில் அமர்ந்துகொண்டு காயம் படாமல் தப்பித்துக் கொள்ளும் முஸ்லிம்களும், தனது உடல் பொருள் இரண்டாலும் அல்லாவுக்காக போர் புரிபவர்களும் சமமல்ல. தனது உடலாலும் பொருளாலும் அல்லாவின் போரில் போராடுபவர்களுக்கு அல்லா அதிக அந்தஸ்தை கொடுத்துள்ளார். அல்லா எல்லோருக்கும் நல்லதே வாக்களித்துள்ளார் ஆனால் அவர் வீட்டில் அமர்ந்து இருப்பவர்களை விட போர்க்களத்தில் போராடுபவர்களுக்கு சிறப்பான பரிசைக் கொடுக்கிறார்.”(Q. 4:95) என்று சொன்னான்.

இந்த வாசகம் போர்தொடுத்தலைப் பற்றித்தான் பேசுகிறது என்பதைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. இங்கே முகமது தபுக் (Tabuk) தாக்குதலில் கலந்து கொள்ளாத மக்களை, அதாவது அமைதியான மக்களை, கடிந்து கொள்கிறான். அது ஒரு வறண்ட கோடை காலம். சில முஸ்லிம்கள் தங்கள் வீடுகளை விட்டுவிட்டு தாக்குதலுக்கு போக தயங்கினார்கள். அவர்கள் யூதர்களிடம் இருந்து பிடிங்கிக்கொண்ட தோட்டங்களின் நிழல் தரும் மரங்களின் அடியில் நேரத்தைக் கழிக்க விரும்பினார்களே ஒழிய சிரியாவின் மீது தாக்குதல் செய்ய விரும்பவில்லை. இந்த வாசகத்தை சொன்ன பிறகும் கூட சிலர் சாக்குப்போக்குச் சொல்லிக் கொண்டு தாக்குதலுக்குப் போகவில்லை. அவ்வாறு போகாதவர்களில் ஒருவர் கவிஞரான ஹசன் இப்ன் தபித் (Hasaan ibn Thabit).

முகமது திரும்பி வந்தபோது அவன் தன் பின்பற்றிகளை தாக்குதலில் கலந்து கொள்ளாதவர்களை விலக்கி வைக்குமாறு கட்டளை இட்டான். அவர்களிடம் யாரும் பேசவில்லை. அவர்களின் மனைவிகள் கூட அவர்களை விட்டு விலக நேரிட்டது. மதீனா வாசிகளால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு நாற்பது நாட்களாக இருந்த பிறகு ஹசன் முகமதிடம் சென்று மிகவும் கெஞ்சி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அப்போது முகமது முஸ்லிம்கள் அவர்களிடம் பேச அனுமதித்து வேறு ஒரு வாசகத்தை வெளியிட்டான். மதீனாவில் முகமது வைத்ததுதான் சட்டம் என்றாகி இருந்தது.

இந்த கதை எப்படி திரிக்கப் பட்டுள்ளது என்று உங்களால் காண முடிகிறதா? முகமது அவனின் பின்பற்றிகளுக்கு அபாயமற்ற சுகவாழ்வின் கவர்ச்சியில் மயங்கி  தாக்குதலில் கலந்து கொள்ளாமல் ஒளிந்து கொள்ளவேண்டாம் என்கிறான். ஒருவரது ‘nafs’ க்கு எதிராக போர் தொடுத்தல் என்பது இந்த விதத்தில்தான். இன்று வாஹித் போன்றோர் சொல்லும் விதத்தில் அல்ல.

வாஹித் சொல்கிறார், “தூதர் முகமது, அவர்களின் பத்ரு (Badr) தாக்குதலின் வெற்றிக்குப் பிறகு தனது சகாக்களிடம் “Raja‘nâ min jihâd al-ashghar ilâ jihâd al-akbar” (நாம் சிறிய ஜிஹாதில் இருந்து பெரிய ஜிஹாதுக்கு வந்திருக்கிறோம்) என்று சொன்னார்”. இந்த பெரிய ஜிஹாது நமது ‘nafs’ க்கு எதிராக நடத்தும் போர் என்று கூறப்படுகிறது. இந்த பெரிய ஜிஹாதிற்கான கட்டளை பத்ரு போருக்குப் பின் இடப்பட்டது என்று கூறும் அளவுக்கு வாஹிதின் இஸ்லாமிய அறிவு மிகவும் குறைவாக உள்ளது. இந்த கதை ஒரு கட்டுக்கதை. ஆனால் முகமது இக்கட்டளையை பத்ரு தாக்குதலுக்குப் பிறகு அல்ல தபுக் தாக்குதலுக்குப் பிறகு இட்டான் என்று கூறப்படுகிறது.

நம்பகமானவை என்று கருதப்படும் ஆறு ஹதித் தொகுப்புகள் உள்ளன. அவைகள். Sahih Bukhari, Sahih Muslim, Sunan Abu Dawud, Sunan ibn Majah, Sunan at-Tirmidhi, Sunan an-Nasai. இதைப் பற்றிய கதை எந்த தொகுப்பில் எங்கே உள்ளது என்று உங்களால் சுட்டிக் காட்டமுடியுமா? உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறேன். அது ஒன்றிலுமே இல்லை.

பதினான்காம் நூற்றாண்டு ஹன்பலி வல்லுநர் Ibn al-Qayyim al-Jawziya  இந்த ஹதிதின் நம்பகத்தன்மையை மறுத்து அதை ஒரு “கட்டுக்கதை” என்கிறார். [காண்க Douglas E. Streusand, “What Does Jihad Mean?Middle East Quarterly 4, no. 3 (1997).]

பேச்சுக்காக நீங்கள் கூறிக் கொள்வதைப் போல பெரிய ஜிஹாத் என்பதற்கு நம்முடைய ‘nafs’ க்கு எதிராக போராடுதல் என்றே எடுத்துக் கொள்வோம். முகமது சிறிய ஜிஹாதையும் வலியுறுத்தி இருக்கிறான். அதாவது இஸ்லாமை ஏற்காதவர்களைத் தாக்கி அவர்களின் ரத்தத்தை சிந்த வைப்பதையும் வலியுறுத்தி இருக்கிறான். பெரிய ஜிஹாத் என்பது ஒரு பொய். அது உண்மையாகவே இருந்தாலும் கூட, அது ஒரு ஏமாற்று வேலை தான். எல்லா கொடூரர்களும் ஏதேனும் நல்லவற்றை சொல்லத்தான் செய்வார்கள். ஹிட்லரின் நூலிலும் கூட சில நல்ல வரிகளைக் காணலாம். அப்படியென்றால் ஹிட்லரின் ஈவு இரக்கமற்ற திட்டங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட முடியுமா?

கட்டுக்கதையான பெரிய ஜிஹாதைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவேண்டாம். அதை உண்மை என்றே வைத்துக் கொள்ளலாம். நீங்கள் இதை மட்டும் விளக்குங்கள். ஒரு இறை தூதர் அதுவும் உங்கள் வார்த்தைகளில் ‘rahmatan lil-‘âlamîn (இரு உலகுக்குமான கருணை) ஏன் தனது மதத்தைப் பரப்ப வன்முறையையும் பயங்கரவாதத்தையும் வலியுறுத்து வேண்டும்? அவனுடைய போதனையான ‘கித்ல்’ (சண்டையிடுதல்) ஐ பின்பற்றும் முஸ்லிம்களை எப்படி நீங்கள் தீவிரவாதிகள் என்று கேவல  படுத்தமுடியும்? அவர்கள் செய்ததெல்லாம் உங்களைப் போன்றோ வாஹிதைப் போன்றோ இல்லாமல் அவர்களின் தூதருக்கு நம்பிக்கையான பின்பற்றிகளாக இருப்பது தானே.?

அமைதியான மற்றும் அதிருப்தியான மக்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். ஆனாலும், முகமதின் போதனைகளைப் பின்பற்றும் போது முஸ்லிம்கள் அதிருப்தியானவர்களாக (al-naf al-lawwâmah) மாறி விடுகிறார்கள்.  வேறு எந்த மதத்திலும் அதன் மக்களின் மீது இந்த அளவுக்கு எதிர்மறை விளைவுகள் இல்லை. ஒரு நல்ல கிறிஸ்தவரோ அல்லது ஒரு நல்ல இந்துவோ பெரும்பாலும் ஒரு நல்ல மனிதராகவே இருப்பார். ஒரு நல்ல முஸ்லிமோ அவன் 4:95 வாசகத்தின் படி வாழ வேண்டுமென்றால் கண்டிப்பாக ஒரு பயங்கரவாதியாகத்தான் இருக்க முடியும்.

இஸ்லாம் அமைதியையும் சகிப்புத்தன்மையையும் போதிக்கின்ற மதம் தான் என்று மற்றவர்களை நினைக்க வைக்கின்ற முஸ்லிம்களால் பரவலாக மேற்கோள் காட்டப்படுகின்ற பல ஹதிதுகள் உள்ளன. ஆனாலும், அவையெல்லாம் நம்பகத்தன்மை அற்றவைகள் என்றும் கட்டுக்கதைகள் என்றும் ஹபிதுல்லா (Shaykh Suhayb Hasan Hafidhullaah) கூறுகிறார். http://www.sunnahonline.com/ilm/sunnah/0008.htm

“எடுத்துக்காட்டாக கீழே சில பொதுவாக மேற்கோள் காட்டப்படும் ஹதிதுகள் உள்ளன. உண்மையிலேயே அவைகளின் நம்பகத்தன்மையின் தரம் பலதரப் பட்டது” என்று ஹபிதுல்லா எழுதுகிறார்.

அல்லாவின் தொண்ணூற்று ஒன்பது பெயர்களைப் பற்றிய ஹதித்.

“மறைந்திருந்த பொக்கிஷமாக இருந்த நான் அறியப்பட விரும்பினேன். ஆகையால் மனித இனத்தை உருவாக்கி அவர்களுக்கு என்னை தெரியப் படுத்தினேன். அவர்கள் என்னை அங்கீகரித்தார்கள்.” என்று அல்லா கூறுகிறார்.

அல்லா படைப்பை முடித்த போது, அவர் அவரின் இருக்கையின் மேலே உள்ள தனது புத்தகத்தில்  “உறுதியாகவே எனது கருணை எனது கோபத்தை வெல்லும்” என்று எழுதினார்.

“எனது பரலோகமோ அல்லது எனது பூலோகமோ என்னை உள்ளடக்க முடியாது, ஆனால் என்னை நம்புகின்ற பக்தரின் இதயம் என்னை உள்ளடக்க முடியும்” என்று அல்லா சொல்கிறார்.

“தன்னையே அறிபவர் தன் கடவுளை அறிவார்”

“தனது தாய்நாட்டுப் பற்று நம்பிக்கையின் ஒரு பகுதி”

“நான் உங்களிடத்தில் சிலவற்றை விட்டுச் செல்கிறேன். அதை நீங்கள் பின்பற்றினால், வழிதவறமாட்டீர்கள்: அவை அல்லாவின் புத்தகம், என் குடும்பம், எனது வீட்டின் உறுப்பினர்கள்.”

“நான் ஞானத்தின் நகரம், அலி அதன் வாயிற்காவலன்.”

மஹதி (வழி தவறாதவர்), தஜ்ஜல் (அந்தி கிறிஸ்து), மேரியின் மகனான இயேசு கிறிஸ்து ஆகியோரின் வருகைகளைப் பற்றிய தீர்க்க தரிசனம்.

“பரலோகம் தாய்மார்களின் காலடியில் உள்ளது.”

“ஞானத்தைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை.”

“சீனாவுக்கு செல்லவேண்டுமானாலும் ஞானத்தைத் தேடு”

“உயிர்த்தியாகியின் ரத்தத்தை விட அறிஞரின் மை புனிதமானது.”

“நாம் சிறிய ஜிஹாதில் இருந்து பெரிய ஜிஹாதிற்கு திரும்பி இருக்கிறோம் (அதாவது, நம் மனதில் உள்ள தீய்மைகளுக்கு எதிரான போருக்கு திரும்பி இருக்கிறோம்)”

இந்த ஹதிதுகள் பொதுவாக பாரசீகர்களால் இட்டுக்கட்டப்பட்டவை. அவைகளில் பெரும்பாலானவை ரூமியினால் (Jalalidin Rumi) அவருடைய மத்னவி என்ற நூலில் அவிழ்த்துவிடப்பட்டவை. அவர் ஒரு கவிஞர். அவருடைய கற்பனைகளை உண்மைகளாக பாவித்துக் கொள்ளக்கூடாது. கவனித்தீர்களா, பாரசீகர்களாகிய எங்களால் முகமதின் போதனைகளை ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் இஸ்லாமுக்காக இழந்து எங்களை தாக்கியவர்களைப் போலவே காட்டுமிராண்டிகளாக மாறுவதற்கு முன்னர், நாங்கள் சிறந்த நாகரீகமுள்ள மனிதர்களாக இருந்தோம். ஹிஜாசில் வாழ்ந்த அரபியர்களுக்கு முகமதின் போதனைகளைப்பற்றி பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. அவர்களிடம் இருந்த வீரப்பெருந்தன்மையை (chivalry) இழந்தார்கள். அனால் அவர்களிடம் மேலும் இழப்பதற்கு ஒரு பண்பாடோ நாகரீகமோ இல்லை. அவர்கள் நீதிநெறிமுறை (Morality) யற்று இருந்தனர். அனேகமாக அவர்கள் இன்று இருப்பதை விட சிறந்த நிலையில் இருந்தனர். அவர்களுக்கு இஸ்லாமின் பைத்தியக்காரத்தனத்தை முழுமையாக விழுங்கிவிட எளிதாக இருந்தது. முகமது போதித்த வடிவிலான இஸ்லாம் இது போன்ற வளர்ச்சியடையாத மக்களிடையே மட்டுமே வரவேற்கப்பட்டிருக்கும். அவர்களுக்கு இஸ்லாமின் போதனைகள் ஏற்புடையதே. பாரசீகர்களுக்கு இஸ்லாம் கசப்பாக இருந்தது. இஸ்லாமின் மீது தேன் தடவி இனிப்பாக்கும் பணியை ரூமி செய்தார். இஸ்லாமை இனிப்பாக்க அவர் கதைகளையும்,  முல்லாக்கள் பல ஹதிதுகளையும் அவிழ்த்து விட்டனர். இஸ்லாமுக்கு முட்டுக் கொடுப்பதற்காக பொய்கூறுதல் அனுமதிக்கப் [ஹலால்] பட்டது. இதில் சில பாரசீகர்களின் ஆர்வக்கோளாறுக்கு அளவேயில்லை. எந்த அளவுக்கு என்றால் மிகவும் கொடியவனான அலியைக் (Ali ibn Abu Talib) கூட தெய்வமாக்கி விட்டார்கள். இந்த அலியின் கொடூரம் முகமதின் கொடூரத்தை எட்டிபிடிக்கக் கூடியது.

ஷியா முஸ்லிம்களின் நூல்களைப் பார்க்காமல் இந்த ஹதிதுகளுக்கு உங்களால் ஆதாரம் காட்டமுடியுமா? முடியாது. ஏனென்றால் அவையெல்லாமே பொய்கள். பொய்யினுள்ளே உள்ள மற்றொரு பொய்தான்   ஷியா பிரிவு இஸ்லாம்.

இணையத்தில் மிகவும் பரவலான மற்றும் முஸ்லிம்கள் கொண்டாட்டத்துடன் மேற்கோள்காட்டும் ஒரு கதை இருக்கிறது. அந்தக்கதை முகமது ஒரு யூதரின் வீடு வழியே போவது வழக்கம் என்றும் அப்படி போகும்போது அவன் மீது அந்த யூதர் குப்பை எறிவது வழக்கம் என்றும் சொல்கிறது. அப்படியிருக்க, அந்த யூதர் சில நாட்கள் வெளியே வரவில்லை. முகமது அந்த யூதருக்கு என்ன ஆயிற்று என்று விசாரித்தானாம். அவர் உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறார் என்று அறிந்து உள்ளே சென்று நலம் விசாரித்தானாம்.

இஸ்லாமின் வரலாற்றை அறிந்த எவருக்கும் இது போன்ற கதைக்கு வாய்ப்பே இல்லை என்று அறியமுடியும். மெக்காவில் யூதர்கள் இருக்கவில்லை. மதீனாவில் முகமதுக்கு யூதர்களின் பகுதிக்கு செல்ல வேலையே இல்லை. அவன் கூபா (Quba) மசூதியில் வாழ்ந்துவந்தான். யூதர்கள் மதீனாவுக்கு வெளியே அவர்களின் அரணிடப்பட்ட பகுதியில் வசித்து வந்தார்கள். அவர்கள் முகமதைப் பற்றி அச்சம் கொண்டிருந்தார்கள்.

இப்ன் ஐசக் இவ்வாறு எழுதுகிறார்.

“உங்கள் கையில் மாட்டுகின்ற யூதர்களைக் கொல்லுங்கள் என்று தூதர் சொன்னார். அதன்படி முஹையிசா அவனுடன் வணிக தொடர்பு கொண்டிருந்த யூத வணிகரான இப்ன் சுனைனாவின் மீது பாய்ந்து அவரைக் கொன்றுவிட்டான். முஹையிசாவின் அண்ணனான ஹுவைசா அப்போது முஸ்லிமாக இருக்கவில்லை. முஹையிசா யூதரைக் கொன்றதைக் கேள்விப்பட்ட ஹுவைசா “கடவுளின் எதிரியே, அவரின் உப்பைத் தின்று கொழுத்துவிட்டு அவரையே கொன்றுவிட்டாயே” என்று சொல்லிக்கொண்டு அவனை அடித்தான். அதற்கு முஹையிசா “எனக்குக் கட்டளை இட்டவர் உன்னைக் கொல்லச் சொல்லியிருந்தாலும், உன் தலையை வெட்டியிருப்பேன்” என்றான். “அடக் கடவுளே, முகமது என்னைக் கொல்லச் சொல்லி இருந்தால், என்னை கொன்றிருப்பாயா?” என்று கேட்டார் அவர். “ஆமாம், அவர் உன் தலையை வெட்டச் சொல்லியிருந்தால், வெட்டியிருப்பேன்” என்று பதிலளித்தான். “இந்த அளவுக்கு உன்னை மாற்றிய மதம் உண்மையிலேயே ஒரு அதிசயம் தான்” என்று வியந்து அவரும் முஸ்லிம் ஆகிவிட்டார். . [Sira p. 369]

முகமது அபு அபக் (Abu Afak) என்ற 120 வயது கவிஞரையும், அஸ்மா (Asma bint Marwan) என்ற  5 குழந்தைகளின் தாயையும், காப் (Ka’b ibn Ashraf) என்ற பணி நடிர் (Bani Nadir) தலைவரையும் மற்றும் பலரையும் அவர்கள் முகமதின் வன்முறையை விமர்சித்து பாடல்கள் எழுதினார்கள் என்பதற்காகவே அவர்களைக் கொன்றொழிக்க ஆளனுப்பினான. இது இப்படியிருக்க எப்படி ஏதேனும் ஒரு யூதர் அவனின் மீது குப்பையை எறியமுடியும்? அப்படி நடந்திருந்தாலும், முகமது என்ன தனக்குக் கிடைத்த அவமதிப்பை மன்னிக்கும் குணமுடையவனா என்ன? முஸ்லிம்கள் தங்கள் சொந்த புத்தகங்களையே படிப்பதில்லை என்பது பரிதாபம். அப்படி படித்திருந்தால் அவர்கள் முஸ்லிம்களாக இருக்க மாட்டார்கள்.

முகமது மெக்காவில் இருந்த போது ஒக்பா என்ற மெக்காவாசி முகமதின் மீது அவன் தொழுது கொண்டிருந்த போது குப்பையை வீசினான். முகமது இதை மறக்க வில்லை. ஆண்டுகள் கழிந்து, பத்ரு தாக்குதலின் போது, ஒக்பா பிடிபட்டபோது அவரை சிரைச்சேதம் செய்யுமாறு அலியிடம் கட்டளை இட்டான். ஒக்பா “என் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள்?” என்று கெஞ்சிய போது, “நரகம்” என்று முகமது பதில் சொன்னான். அத்துடன், அலி அவரின் தலையை வெட்டி எறிந்தான். முகமது தன் கைகளை உயர்த்தி தனது இதயத்தைக் குளிர்வித்ததற்காக அல்லாவை புகழ்ந்தான்.

முகமதின் மீது குப்பை எறிந்த கதை ஒரு காப்பியடித்த கதை. இந்த கதையின் மூலம் பஹாயிக்களின் புத்தகத்தில் இருக்கிறது. இந்த கதை அப்துல் பஹாவுக்கு நடந்ததாக உள்ளது. அப்துல் பஹாவும் அவருடைய தந்தை பஹாயுல்லாவும் இன்றைய இஸ்ரேலின் ஒரு பகுதியான அக்காவுக்கு (Akka) நாடுகடத்தப் பட்டு இருந்தபோது, குப்பை எரிந்தது ஒரு அராபிய (முஸ்லிம்) பெண் தான். சில நாட்களாக குப்பையை எறிவதற்கு அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வராதபோது அப்துல் பஹா அவரைப்பற்றி விசாரித்தார். அந்த பெண் உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் கிடக்கிறார் என்று அறிந்தபோது, அவரை பரிவுடன் நலம் விசாரிக்கச் சென்றார். வெட்கமே இல்லாமல் முஸ்லிம்கள் அவர்களின் தூதனை புனிதனாகக்காட்ட எப்படி காப்பி அடிக்கிறார்கள் என்று பார்த்தீர்களா? கேவலம். அவர்கள் பஹாயுல்லாவையும், அப்துல் பஹாவையும் கேவலப்படுத்துகிறார்கள், பஹாயிக்களை படுகொலை செய்கிறார்கள். இருந்தாலும் அவர்களின் கதைகளைத் திருடி தங்கள் சொந்த கதைகளாக இட்டுக்கட்டிக் கொள்கிறார்கள். இந்த கதை அப்துல் பஹாவைப் பற்றிய வரலாற்றுடன் ஒத்துப்போகிறது. ஆனால் முகமதின் இயல்புடன் சிறிதும் ஒத்துப்போகவில்லை.

முகமதின் வாழ்க்கையில் நல்லதென்று ஒன்றுமேயில்லை. ஆம் ஒன்றுமேயில்லை. மற்ற இடத்தில் இருந்து காப்பியடிக்காத இந்த மனிதன் செய்ததாக ஒரு நல்ல செயலைக் காட்டுங்கள் பார்ப்போம். அவன் சொன்ன வாக்குகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். வார்த்தைகள் யாருக்கு வேண்டும். அவனுடைய செயல்களைக் காட்டுங்கள். தனது உயர்ந்த வாக்குகளைப் போன்றே உயர்ந்த செயல்களையும் செய்பவர்தான் மாமனிதர். வாக்குகளை மட்டும் உயர்ந்ததாக வைத்துக் கொண்டு கேவலமான வாழ்க்கை வாழ்பவன் கேவலமானவன்.

யாரொருவன் ஒரு மனிதனைக் கொள்கிறானோ அது மனித இனத்தையே அழிப்ப்தாக பொருள் என்று குரான் சொல்வதாக எல்லா முஸ்லிம்களும் கிளிப்பிள்ளைகள் போல திரும்பத்திரும்ப சொல்லிக்கொள்ளும் ஒரு கதையும் இருக்கிறது. அது முகமதின் போதனையில் இல்லை. அது குரானில் பலமுறை வலியுறுத்தப்படும் கித்ல் (தாக்குதல்) என்ற அவனுடைய போதனைக்கு எதிர்மாறானது. இந்த வாசகமானது முகமது தல்முட் (Talmud = யூதர்களின் புத்தகம்) டிலிருந்து கூறும் கதையின் ஒரு பகுதியே. அது அபெல் (Abel) மற்றும் கைன் (Qain) பற்றியது.  இந்த கதை பைபிளில் கூட இல்லை. ஆனால் இந்த தற்குறி தூதனுக்கு அதுவெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. இதை அல்லாவே கூறியதாகக் கதைவிட்டான்.

முஸ்லிம்கள் தங்கள் மதத்தை நல்லமுறையில் காட்டுவதற்காக மற்ற மதங்களில் இருந்து கதைகளை வெட்கமில்லாமல் காப்பி அடிக்கிறார்கள். இஸ்லாமைத் தூக்கிப்பிடிக்க உதவும் என்றால் எப்படிப்பட்டப் பொய்யும் கூறலாம். முகமதுக்கும் ஒரு நல்ல வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை. வஹித் கூறுகின்ற nafs al-lawwâmah  என்ற குணத்தின் உருவமேயானவன்தான் முகமது. அவன் ஒரு சமூக எதிரி (sociopath). அவன் அனேகமாக உலகில் வாழ்ந்த அதிகொடூர மனிதர்களின் முதன்மையானவனாக இருப்பான். இந்த வக்கிரக் கொடூரனை முஸ்லிம்கள் தங்கள் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டது வேடிக்கையாக இருக்கிறது. இன்று அவர்கள் வாழும் கேவலமான நிலையைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

நீங்கள் முகமதை Rahmatun lil alameem (எல்லா உலகங்களுக்கான கருணை) என்று கூறிக் கொண்டு அலைகிறீர்கள். இதுபோன்ற விகாரமான கூற்றுக்கு என்ன ஆதாரம் வைத்து இருக்கிறீர்கள்? உண்மை முக்கியமா இல்லை அது வெறும் மண்ணாங்கட்டியா? முகமது ஹிட்லரை விட கொடியவன். இன்னும் எத்தனைக் காலத்திற்கு தலையை மலக்குழியில் புதைத்துக் கொண்டு ஒன்றும் காணாதது போல இருப்பது. நீங்கள் இஸ்லாம் அமைதி என்றும் கருணை என்றும் மிதமானது என்றும் விற்கப் பார்க்கிறீர்கள். அவற்றிற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது? முஸ்லிம்கள் குரானை அலட்சியப் படுத்திவிட்டு உங்களின் பச்சைப் பொய்களை அவைகள் கேட்க நன்றாக இருக்கிறது என்பதற்காக ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?

Jihad: The Forgotten Obligation [ஜிஹாத்: ஒரு மறக்கப்பட்ட கடமை] என்ற தலைப்பிட்ட ஒரு கட்டுரையை பல இஸ்லாமிய இணைய தளங்களில் கூகிள் தேடல் மூலம் கண்டுபிடிக்கலாம்.

ஜீவனம், ஈட்டியின் நிழலுக்கடியில்: இப்ன் உமர் அறிவிக்கிறார், தூதர் சொன்னார், “எனது ஜீவனம் எனது ஈட்டியின் நிழலில் தான் இருக்கிறது. யாரொருவன் என் கட்டளைகளை மீறுகிறானோ அவன் கேவலப் படுத்தப் படுவான்.” (புஹாரி ப. 408, பாகம். 1)  ஈட்டியின் பெருமையைப் பற்றி இந்த ஹதிதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம், தூதரின் ஜீவனமே ஈட்டியை (ஜிஹாத்) வைத்துத்தான் என்று நாம் அறிய முடிகிறது. அதனால்தான் முஹதித்தீன் [ஹதீதுகளை தொகுத்தவர்கள்] தாக்குதலில் கொள்ளையடிக்கப் பட்ட பொருள்கள்தான் ஆகச்சிறந்த வருமானம் என்று கூறியிருக்கிறார்கள். ஆகையால் உம்மாவுக்கு [முஸ்லிம் சமூகம்] கொள்ளையிட்ட பொருள்கள் அனுமதிக்கப்பட்டதே [ஹலால்] என்பது தெளிவு. குறிப்பு: இந்த ஹதிதில் உள்ள ‘குப்பார்களின் [Kuffar = இஸ்லாமை ஏற்காதவர்கள்] அவமதிப்பு’ என்ற பதத்தை கவனியுங்கள். அதன் பொருள் ஜிஸ்யா வரி (இஸ்லாமிய நாட்டில் முஸ்லிமல்லாதோர், அதாவது திம்மிக்கள் என்றழைக்கப்படும் இரண்டாம் தர குடிமக்கள், செலுத்த வேண்டிய வரி) (Fath ul Bari, p.116, vol.2)

இதுதான் உண்மையான இஸ்லாம், நீங்களும் வாஹிதும் செய்யும் ஏமாற்றுக்கதைகள் அல்ல. நான் வாஹிதின் நேர்மையை சந்தேகிக்க வில்லை. இஸ்லாமைப் பற்றிய அவரின் புரிதலைத்தான் கேள்விக்குட்படுத்துகிறேன். அருமை ஹாலந்த் அவர்களே, உங்களைப் பொறுத்தவரை, உண்மையை இப்பொழுது அறிவீர்கள். உண்மை மட்டுமே உலகத்தை விடுவிக்கும். ஒரு வக்கிரமனமுடையவனால் ஆரம்பிக்கப்பட்டு வன்முறையால் பரப்பப்பட்ட  ஒரு பயங்கரமான தனிநபர் வழிபாட்டு முறையை (Cult) உங்களால் வெறும் பொய்களை வைத்து அமைதி மற்றும் அன்பின் மதமாக மாற்றமுடியாது.  அப்படி உங்களால் முடிந்தால் கூட, ஏன்? உலகில் வாழ்ந்ததிலேயே தீயமனிதனால் நிறுவப்பட்ட மார்க்கத்தை ஏன் உயிருடன் வைத்துக்கொண்டு அவன் பெயரை பாடிக்கொண்டு இருக்க வேண்டும்?

இரண்டு பெரிய பணமுடிப்புகளால் நிதானம் இழந்து விடாதீர்கள். பணத்தாசை எவ்வளவு வலுவாக இருந்தாலும், இழப்பு அதைவிடப் பெரியது. நயவஞ்சகத்திற்கு துணை போகாதீர்கள். தீய்மையை பரப்ப வேண்டாம். எவ்வளவுதான் தேன் தடவினாலும் இஸ்லாம் ஒரு விஷம்தான். உங்களைப்போன்ற மோடிமஸ்தான்களை வரலாறு மன்னிக்காது. நயவஞ்சகர்கள் ஏளனத்திற்கு ஆளாவார்கள். உங்களுக்கு அக்கறையே இல்லையா? பணமுடிப்புகள் உங்கள் கண்களை குருடாக்கி விட்டனவா? ஹாலந்த், உங்களுக்கு பணம் தான் வேண்டுமா? பணம். பணம். பணம்.?

பணத்திற்காக உங்கள் இதையத்தை விற்று விடாதீர்கள் ஹாலந்த். உயிர்கள் விரயமாகின்றன. குற்றமற்றவர்கள் ரத்தம் சிந்துகிறார்கள். பில்லியனுக்கும் மேலான மக்கள் ஏழ்மையிலும், துயரத்திலும் வாழ்ந்து வருகிறார்கள். உங்கள் குறியெல்லாம் இரண்டு பணமுடிப்புகள் தானா? அவற்றை மறந்து விடுங்கள். மக்களின் ஏழ்மை மற்றும் துயரத்தையும் விட அவை ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. அவை ரத்தக்கறை பட்டவை. உண்மையின் பக்கம் வாருங்கள். இஸ்லாமை கைவிடுங்கள். அந்த மார்க்கம் வெறுப்பையும், வன்முறையையும் பயங்கரவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டது. உங்களால் அதை சில பொய்களை வைத்து மாற்ற முடியாது. உண்மை மட்டுமே மனித இனத்தை விடுவிக்கும்.

அன்புடன்.

அலி

Translation: Ali Sina’s Tamil Fan