மக்கள் எனது பதிவுகளை படிப்பதற்குப் பதிலாக குரானைப் படிக்க வேண்டும் என்று இத்தளத்தின் பின்னூட்டப் பகுதியில் கூறிய ஒரு முஸ்லிமிடம் நீங்கள் குரானைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டேன். “ஆம் படித்திருக்கறேன். ஆரோக்கியமான மனதையும் பகுத்தறியும் திறனையும் கொண்ட யாரிடமும் உங்கள் பருப்பு வேகாது “ என்று பதிலளித்தார்.

நான் அந்த பெண்ணின் பதிலை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் குரானின் சில வாசகங்களை மேற்கோள் காட்டி அவைகளில் உள்ள ஆரோக்கியமான மனதையும் பகுத்தறிவையும் விளக்குமாறு முஸ்லிம்களைக் கேட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.

“அல்லா ஆதமுக்கு எல்லா தாவர விலங்குகளின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். பின் அவன் சரியாக மனப்பாடம் செய்துகொண்டானா என்று அவனை வானவர்கள் சோதித்துப் பார்த்தார்கள்” என்று குரான் சொல்கிறது. (Q 2:31)

இதுவரை உயிரியல் வல்லுனர்கள் 20,000 மீன் இனங்களையும் 6,000 ஊர்வனவற்றையும் 9,000 பறவைகளையும், 1,000 நீர்நிலவாழிகளையும் 15,000 பாலூட்டிகளையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இத்துடன் பெயர்வைக்கப் பட்ட பூச்சியினங்கள் ஒரு மில்லியன் இருக்கும். மேலும் ஒரு மில்லியன் பூச்சியினங்கள் கண்டுபிடிக்கப்படாமலும் பெயர்வைக்கப்படாமலும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த எண்ணிக்கையில் உள்ளினங்கள் அடங்காது. இதைவிட அதிக எண்ணிக்கையில் தாவரங்கள் உள்ளன.

இது இப்படி இருக்கும் போது, வாசகம் 2:31 ஆரோக்கியமான மனதையும் பகுத்தறிவையும் வெளிப்படுத்துவதாக இன்னும் உங்களால் கூறமுடியுமா?

குரான் வாசகங்கள் 2:55 -56, அல்லா மோசஸை மின்னலால் தாக்கினார் என்றும் பின்னர் மோசஸ் அல்லாவுக்கு நன்றி கூறவேன்றும் என்பதற்காக அவரை மீண்டும் உயிர்ப்பித்தார் என்றும் கூறுகின்றன.

“மூஸாவே! நாங்கள் அல்லாவைக் கண்கூடாக காணும்வரை உம்மீது நம்பிக்கை கொள்ளமாட்டோம்” என்று கூறினீர்கள். அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி தாக்கியது. நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.”

ஆரோக்கியமான மனதிற்கும் பகுத்தறியும் திறனுக்கும் உங்கள் வரையறை என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் இச்செயலைப் பார்க்கும் போது இது ஒரு தற்காதல் புரியும் மனநோயாளியின் (narcissistic personality disorder) செயலைப் போலத்தான் இருக்கிறது. நார்சிஸ்சிஸ்ட்டுகள் [narcissists] தான் மற்றவர்களின் மீதான தங்களின் முழு அதிகாரத்தையும் காட்டுவதற்காக மற்றவர்களை ஏளனப்படுத்தியும் துன்புறுத்தியும் பின்னர் கைதூக்கிவிட்டும் விளையாடுவார்கள். நான் கூறுவதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு கீழ உள்ள வீடியோ. இந்த அண்டத்தையே படைத்த கடவுள் இருக்கட்டும், எந்த ஆரோக்கியமான மனதையும் பகுத்தறியும் திறனையும் கொண்ட யாரும் இதுபோன்று நடந்துகொள்ள மாட்டார்கள். இது போன்ற கேவலமான நடத்தை மனநோயாளிகளுக்குத் தான் பொருந்தும்.

மோசஸின் காலத்தில் யூதர்களை அவர்கள் கடவுளின் வாசகங்களை நிராகரித்ததற்காகவும் இறைதூதர்களை அநியாயமாக கொன்றததற்காகவும் வறுமைக்குள்ளாக்கியும் இழிவுபடுத்தியும் அல்லா தண்டித்தார் என்று குரான் 2:61 கூறுகிறது.

இந்த தண்டனையின் அநீதி ஒருபக்கம் இருக்கட்டும். இதில் பிரச்சனை என்னவென்றால் யூதர்களுக்கு அனுப்பப் பட்ட முதல் தூதரே மோசஸ் தான். அப்படியிருக்க அவர்கள் செய்யாத குற்றத்திற்காக எப்படி தண்டிக்க முடியும்?

இதுதான் ஆரோக்கியமான மனதும் பகுத்தறிவுமா?

குரான் 41:11 சொல்கிறது, “பிறகு அவர் வானத்தைப் பார்த்தார் அது புகையாக இருந்தது; ஆகவே அவர் அதற்கும் பூமிக்கும், இருவரும் நெருங்குங்கள், விருப்பத்துடனேயோ வேண்டாவெறுப்பாகவோ” என்று கூறினார். அவையிரண்டும் நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம் என்று கூறின.”

அண்டமும் பூமியும் ஒன்றை ஒன்று பிரிந்து இருக்கவில்லை என்று ஆறாம் வகுப்பு மாணவனுக்குக் கூடத் தெரியும். இந்த பரந்த அண்டத்தில் பூமியானது ஒரு சிறிய துகள் மட்டுமே. ஆகையால் அண்டமும் பூமியும் ஒன்றை ஒன்று நெருங்குவதும் அல்லது ஒன்றை ஒன்று பிரிந்து இருப்பதும் சுத்தப் பைத்தியக் காரத்தனம். பூமி அண்டத்தினுள்ளே இருக்கிறது. அது அண்டத்தில் இருந்து தனியாக பிரிந்திருக்க முடியாது. இது கூட இருக்கட்டும். நான் சொல்ல வருவது என்னவென்றால், பூமியும், அண்டத்தின் பகுதிகளான அனைத்துக்  கோள்களும், நட்சத்திரங்களும் உயிரற்ற பொருள்கள். அவைகள் ஈர்ப்புவிசையின் மூலம் நகர்கின்றன. கட்டளைகளுக்கு கட்டுப்படுவதற்காகவோ அல்லது அவைகளை மீறுவதற்கோ அவைகளுக்கென்று ஒரு மனம் இல்லை அவைகள் பாறைகள். பாறைகளால்  சிந்திக்கவோ, பேசவோ, என்ன செய்வதென்று முடிவெடுக்கவோ முடியுமா? குரானின் 2: 74 ன் படி முடியும். அது “இன்னும், அல்லாவின் மீதுள்ள அச்சத்தால் விழக்கூடிய பாறைகளும் உண்டு” என்று சொல்கிறது. இவையெல்லாம் குழந்தைகளுக்கு கூறும் கதைகளைப் போலல்லவா இருக்கின்றன. இவற்றில் பகுத்தறிவோ ஆரோக்கியமான மனதோ எங்கே இருக்கின்றன?

யூதர்கள் ஓய்வுநாளை (shabbath ) அவமதிக்க வேண்டாம் என்று கூறப் பட்டதாகவும், அப்படி செய்யப்பட்டபோது, மக்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் பொருட்டு அல்லா அவர்களை மனிதக்குரங்குகளாக மாறும்படி சபித்து அவர்களை வெறுப்புக்கும் சிறுமைக்கும் ஆளாக்கினார் என்றும் குரான் வாசகங்கள் 2:65-66 கூறிக்கொள்கின்றன.

இந்த கதை குரானில் மூன்று முறை வருகிறது. இதைக் கேட்கும் போது பகுத்தறிவோ ஆரோக்கியமான மனதோ நினைவுக்கு வருகிறதா? அல்லா எதையும் செய்ய வல்லவர். கேலிக்குரியதைக் கூடத்தான். இருக்கட்டும். எனது கேள்வி என்ன வென்றால், இந்த தண்டனை குற்றத்தின் அளவைவிட அதிகமாகத் தெரியவில்லையா? ஓய்வுநாளில் வேலை செய்வது அவ்வளவு பெரிய குற்றமா? அப்படித்தான் என்றால், அதை ஏன் முகமதின் வழியாக உறுதிப்படுத்தவில்லை? முகமதின் வழியாக் அல்லா கல்லெறிரிந்து கொல்லும் சட்டத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார் ஆனால் ஓய்வுநாளில் வேலைசெய்வதற்கு உள்ள தடையை உறுதிசெய்ய மறந்து விட்டாரா?

சில மாதங்களுக்கு முன்னாள் இஸ்லாமை துறந்த ஒரு பெண் அஸ்மா. இந்த தளத்தில் பதிவிடப்பட்ட ஒரு கதைக்கு சொந்தக்காரரான ஷகிலாவினால் உதவப்பட்டவர் அவர். அவர் சில நாட்களுக்கு முன்னர் குரானில் நான் கவனிக்காக ஒரு முரண்பாட்டை எனக்கு சுட்டிக்காட்டி எழுதியிருந்தார்.

இஸ்லாமில் வட்டி (ribah) தடை செய்யப்பட்டிருந்த போதும், குரானின் 2:245 வாசகத்தில் அல்லா முஸ்லிம்களுக்கு வட்டி வழங்குவதாக உறுதி கூறியிருப்பதாக அந்த பெண் சொன்னார். அல்லா முஸ்லிம்களை முகமதின் தாக்குதல்களுக்கு பணவுதவி செய்யுமாறும் அதற்கு கைமாறாக, அவர்கள் இறந்த பிறகு ஒரு பெரிய வட்டியுடன் திருப்பி அளிப்பதாகவும் கேட்டுக் கொள்கிறார். அல்லா மட்டும் எப்படி வட்டி கொடுக்கலாம், முஸ்லிம்களுக்கு  மட்டும் ஏன் அனுமதிக்கப் படவில்லை என்று அந்த பெண் அறிய விரும்பினார். அஸ்மா சரியாக புரிந்து கொள்ளவில்லை. இஸ்லாமில் வட்டி தடைசெய்யப் பட்டது பட்டதுதான். இங்கே அல்லாவும் அவரின் தூதனும் செய்வது நயவஞ்சக வேலை (taqiyyah). முகமதுக்கும் அவனது கட்டுக்கதையான அல்லாவுக்கும் தனது உடலையும் பொருளையும் ஈந்த மூடர்களுக்கு பட்டை நாமம் தான். கடவுளுக்கு எதற்கு இந்த மூடர்களின் பணம் தேவை. அவருக்கு எதற்கு தூதர்களும், அவர்களின் படைகளும். கடவுளின் எதிரிகளை கவனிக்க அவரின் சக்தியே போதாதா?

மோசஸின் காலத்திலாவது, அல்லா அவருக்கு வேண்டாதவர்களை தானாகவே தண்டித்தார். அவர் முகமதை அனுப்பிய பிறகு அந்த சக்தியை இழந்து விட்டாரா? தூதரின் தாக்குதல்களை ஏன் நம்ப இருக்கவேண்டும்? முஸ்லிம்கள் இடமிருந்து ஏன் கடன் வாங்க வேண்டும்?

குரான் அது தெளிவாக அனுப்பப்பட்டது என்றும் (Q. 2:99; 5:15 -16; 10:15; 6:55; 45:25; 41:53; 35:40; 26:195; 24:1; 17:12; 2:256), எல்லாவற்றையும் அடங்கிய முழுமையான புத்தகம் என்றும் (Q. 6:38; 16:89; 17:89; 18:54), எளிதாக புரிந்து கொள்ள முடிவது என்றும் (44:58 , 54:22 , 54:32, 54:40) பல வகைப்பட்ட எடுத்துக்காட்டுகளுடன் கூடியது என்றும் (Q.39:27; 30:58) அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் (Q 2:2;  11:1),  விரிவாக விளக்கப்பட்டது என்றும் (Q. 6:114), மாற்றப்பட முடியாதது என்றும் என்றும் (Q 6:115; 15:41), தனக்குத் தானே விளக்கம் கொடுக்கக் கூடியது என்றும் (Q. 2:185) எந்த முரண்பாடும் கொண்டதில்லை என்றும் (Q 4:82), கூறிக்கொண்டாலும் அதனது வாசகம் 3:7 “அல்லாதான் இப்புத்தகத்தை உனக்கு வெளிப்படுத்தினார். இதில் தீர்மானமான வசனங்களும் இருக்கின்றன. அவைதான் இப்புத்தகத்தின் அடிப்படை. மற்றவை உருவகங்களே. எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவும் தங்கள் சொந்த விளக்கம் கொடுத்துக்கொள்வதற்கும் உருவாக வசனங்களைப் பின்பற்றுகின்றனர். ஆனால் அல்லாவையும் மற்றும் ஞானத்தில் வேரூன்றியவர்களையும் தவிர வேறு எவரும் அவைகளின் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள்.” என்று சொல்கிறது. இந்த வாசகம் குரான் எளிதாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள முடியும் என்று கூறிக்கொள்ளும் மேலே காட்டப்பட்ட எல்லா வாசகங்களுடனும் முரண்படுகிறது.

யாருக்கும் புரியாத உவமானக்கதைகளை (parables) அவிழ்த்துவிடுவதால் என்ன பயன்? சிக்கலான விசயங்களைப் எளிதில் புரியவைப்பதற்காகவே உவமானக் கதைகள் பயன்படுகின்றன. புரியமுடியாமல் செய்வதற்காக அல்ல. இந்த வாசகத்தில் உள்ள ஆரோக்கியமான மனமும் பகுத்தறிவும் தான் என்ன?

இதோ ஆரோக்கியமான மனதையும் பகுத்தறிவையும் கொண்ட ஒரு வாசகம். குரானின் 2:230 ஒரு ஆண் தனது மனைவியை மணவிலக்கு செய்வதாக மூன்று முறை சொல்லிவிட்டால் அந்தப் பெண் மற்றொருவரை மணந்து அவருடன் ஒரு நாளேனும் உடலுறவு கொண்டு அவர் அந்த பெண்ணுக்கு  மணவிலக்கு கொடுக்கும்பட்சத்தில் அவர்கள் இருவரும் மறுமணம் புரிந்து கொள்வதில் எந்த குற்றமுமில்லை என்கிறது.

அருமை! நீங்கள் கோபத்தின் உச்சத்தில் உங்கள் பீவியிடம் ‘தலாக்’ [உன்னை தள்ளிவைக்கிறேன்] என்ற வார்த்தையை மூன்று முறை கத்திவிட்டீர்கள் என்றால் அவ்வளவுதான். உங்கள் மனைவி வேறு ஒருவனை நிக்கா செய்து அவனுடன் ஒரு நாளேனும் படுத்து அவனால் உவக்கப்பட்டு பிறகு அவன் அவளை மணவிலக்கு செய்தால் உங்கள் குழந்தைகளின் தாயை மறுமணம் செய்து வீட்டிற்கு கூட்டி வந்து [இஸ்லாமிய] சட்ட சிக்கல் இல்லாமல் கணவன் மனைவியாக வாழலாம்.

இது ஆரோக்கியமான மனதுக்கும் பகுத்தறிவுக்கும் அப்பாற்ப்பட்டது. இது அதிமேதாவித்தனமானது. எழாம் நூற்றாண்டு படிப்பறிவில்லா அரேபியன் ஒருவனுக்கு எப்படி இவ்வளவு ஞானம் கிடைத்தது?

சரி சரி, ஒரேயடியாக தாக்க வேண்டாம். குரானில் சில முத்துக்களும் இருக்கத்தான் செய்கிறது. எடுத்துக்காட்டாக வாசகம் 3:34 ஐப் பார்ப்போம். அது அல்லாவை “மிகவும் கைதேர்ந்த ஏமாற்றுப்பேர்வழி” (waAllahu khayru almakireen) என்கிறது. இதில் யாருக்கு சந்தேகம் இருக்கமுடியும்? இவ்விடத்தில் தான் குரானும் பைபிளும் ஒத்துப்போகின்றன. பைபிளின் வெளிப்படுத்தின விசேசம் என்ற பகுதியில் வாசகம் 12:9 சாத்தான் தான் உலகின் கைதேர்ந்த ஏமாற்றுப்பேர்வழி என்கிறது.