அய்யா,

ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகமும் குர்ஆன் தவறாதத்தன்மை உடையதாக உள்ளது என்று நம்புகிறது. என்னுடைய முஸ்லிம் நண்பன் ஒருவன் என்னை இஸ்லாமிற்கு அறிமுகப்படுத்தியபோது,  குர் ஆனின் தெய்வீக மூலத்திற்கு ஆதாரமாக இதை முன்வைக்கும் அளவுக்கு, இந்த நம்பிக்கை அவர்களின் மனநிலையில் வேரூன்றி இருக்கிறது. மற்ற புனித நூல்களைபோல் அல்லாமல், குர் ஆன் மாற்றம் செய்யப்படவில்லை என்பதால், அது கடவுளிடமிருந்து வந்திருக்க வேண்டும் என்று அவன் வாதிட்டான்.

குர் ஆன் சீர்கெட்டு போய்விட்டதா, இல்லையா என்பதை குறித்து பதில் அளிக்கவும்.

குர் ஆன் தவறாத தன்மை உள்ளதா அல்லது அது சீர்கெட்டு போய்விட்டதா, இல்லையா என்பவை இரண்டு வெவ்வேறு விஷயங்கள்.

முதல் கேள்வியை பொறுத்தவரை குர் ஆன் தவறாத தன்மை உடையது அல்ல என்பதே பதில். அதில் ஆயிரக்கணக்கான தவறுகளும், மடத்தனங்களும், முரண்பாடுகளும், பிழைகளும், சுத்த அறிவீனமும் அடங்கி உள்ளன. அது தர்க்க அறிவோடும், வரலாற்றோடும், அறிவியலோடும், பைபிளோடும், தனக்கு தானோடும் கூட முரண்படுகிறது. அதனுடைய ஆசிரியர் ஒரு எழுத படிக்க தெரியாத மனிதன் என்பதை காட்டும் இலக்கண பிழைகளும் கூட அதில் அடங்கியுள்ளன. இந்த புத்தகத்தைபோல ஒரு மடத்தனமான புத்தகத்தை நீங்கள் அரிதாகவே காணமுடியும்.  அதை இலக்கிய படைப்பு என்று நான் அழைக்க முடியாத அளவுக்கு அது மோசமாக எழுதப்பட்டுள்ளது.

மற்ற கேள்வியை பொறுத்தவரை, நமக்கு தெரியாது. நம்மிடம் உள்ள குர் ஆன் உத்மானால் தொகுக்கப்பட்ட ஒன்றே. முஸ்லிம்களுக்கிடையே இசையாமை என்பது இல்லாமல் இருப்பதற்காக குர் ஆனின் மற்ற எல்லா பிரதிகளையும்    (பாடபேதங்கள்/விருத்தாந்தங்கள்)  அவர் எரித்துவிட்டார். அவரால் தேர்ந்தெடுத்துக்கொள்ளப்பட்ட ஒன்றிலிருந்து மற்ற பிரதிகள்  வேறுபட்டு இருக்க வேண்டும் என்பது தெளிவு. மற்றபடி அவர் அவைகளை எரித்து இருக்கமாட்டார். மற்ற பிரதிகள் அல்லாமல், தன்னுடைய பிரதியே சரியான ஒன்று என்று அவர் எப்படி நிர்ணயித்தார்? உறுதியாக அறிந்துகொள்ள அவருக்கு எந்த வழியுமே இல்லை. அவர் பொறுக்கி எடுத்துக்கொண்டது சரியானதல்ல என்பது சாத்தியமானதே. எப்படியாயினும், மற்ற எல்லா பிரதிகளும் அழிக்கப்பட்டுவிட்டதால், நம்மிடம் உள்ளது நிஜமான ஒன்றுதானா என்று கூறுவது சாத்தியமில்லை.

ஹதீத்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை பாருங்களேன். ஒரே கதையை வெவ்வேறு மக்கள் வெவ்வேறு வழிகளில் அறிவித்துள்ளார்கள். விளக்கமான தகவல்களில் அவர்கள் மாறுபடுகிறார்கள்.  குர் ஆனின் வசனங்கள், அவைகள் மனப்பாடம் செய்யப்பட்டதால்,  ஒருவேளை அந்த அளவிற்கு இல்லையென்றாலும்,   இதைபோன்ற கதியையே அடைந்திருக்க கூடும்.

ஆனாலும், வித்தியாசத்தை தவிர்ப்பதற்கு, மற்ற பிரதிகளை உத்மான் எரிக்க வேண்டியிருந்ததால், இந்த புத்தகம் மாற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று  கொஞ்சம் பகுத்தறிவு சிந்தனையைக்கொண்டு நாம் அனுமானிக்கலாம். மேலும், தற்போதைய குர் ஆனின் பல வசனங்கள் முஹம்மது சொன்னது அல்ல என்பதும் சாத்தியமானதே. எரிக்கப்பட்டவைகள் மூல வசனங்களாக இருக்கலாம். பல வசனங்கள் என்றென்றைக்குமாக இழக்கப்பட்டிருக்கலாம். மூலத்தில் முகம்மதால் சொல்லப்படாத சில வசனங்களும் குர் ஆனில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதும் சாத்தியமானதே.

அலி சினா (நவம்பர் 20 , 2011)

மொழி பெயர்ப்பு : ஆனந்த சாகர்