யாரோ ஒருவர் ஒரு மின்னஞ்சல் அனுப்பி, ஆன்மிகம் என்று ஒன்று உண்டா என கேட்டார்? இதுபகுத்தறிவுடைமை,  மற்றும் அன்பு என்று ஒன்று உள்ளதா என்று கேட்பது போல் உள்ளது. நிச்சயமாக ஆன்மீகம் என்பது உண்மையானது. நீங்கள் அதை எப்படி வரையருக்கிறீர்கள் என்பதே கேள்விக்குள்ளாகிறது.

சொல்லிணக்கப்படி ஆன்மிகம் என்றால் ஆன்மாவை சார்ந்தது, மாற்றாக ஸ்தூல(Physical) தன்மையையோ அல்லது ஒரு பொருளையோ சார்ந்தது அல்ல.

ஒரு கிறிஸ்தவருக்கு ஆன்மிகம் என்றால், படைப்புக்கு வெளியே இருந்து இயேசு கிறிஸ்து என்னும் மனிதன் மூலமாக, அதாவது சூரியன் ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பது போல, தன்னை வெளிப்படுத்திய  கடவுளின் பால் நெருக்கமான தனிப்பட்ட உறவை வைத்துக்கொள்வது என்பதாகும்.

மதமற்ற, மதச்சார்பற்ற மக்கள், ஆன்மிகம் என்பது மனிதர்கள் பயன்படுத்தும் ஒரு மனிதம் சார்ந்த சொல் என்கிறார்கள். அவர்கள் மனித குணங்களான அன்பு, கருணை, சகிப்புத்தன்மை மன்னிப்பு, பொறுப்பு, மற்றவர்களிடம்அக்கறை கொள்தல் போன்ற நீதிநெறிகளை வலியுறுத்துகிறார்கள். அதாவது வாழ்வியல் நோக்கம் மற்றும் மனித  அனுபவம் என்பது நம் கண் முன்னால் தெரிகின்ற இந்த நிலையான பொருட்களால் ஆன உலகத்தை சார்ந்ததாக மட்டுமே இருக்கவேண்டுமே தவிர ஒரு அமானுட சக்தியையோ அல்லது தெய்வீக சக்தியையோ நம்பிக்கைவைத்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை.

எனவே ஆன்மிகம் என்பதன் அடிப்படை வரையறை என்னவென்றால் நம் கண் முன்னால் தெரிகின்ற இந்த நிலையான பொருட்களால் ஆன உலகத்தை அறிந்து கொள்ளும் ஒருவரின் கூர்ந்து அறியும் திறனின் தரமாகும். சாப்பிடுவது, அருந்துவது, உடல் வசதி, பாலுணர்வு போன்றவை உடலின் செயல்பாடுகளாகும். மாற்றாக அன்பு, அறம், நேர்மை, இரக்கம், கருணை போன்றவை ஆன்மாவின் துறைகளாகும். இந்த குணதிசயங்களை நம் அறிவினால் நேரடியாக உணரமுடியாது. ஆனால் அவைகளின் மிகவலிமைவாய்ந்த தாக்கங்களை, கூர்ந்து கவனிப்பதன் மூலம் நாம் முழுமையாக உணர்ந்துகொள்ள முடியும் .

பெரும்பாலான மக்களுக்கு ஆன்மிகம் என்பது வாழ்வியலை மையப்படுத்தியதாகும். இந்த வரையறை எல்லா மதத்தை சார்ந்த, மதசார்பற்ற பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ள பட்டுள்ளது.

இந்த அடிப்படை புரிதலின் படி நாம் கருதும் மனிதம் என்பது மற்ற அனைத்து படைப்புகளை காட்டிலும் ஏதோ ஒருவகையில் ஒருபொருளைவிட மேன்மை ஆனதுதான். பொருளற்ற, கண்ணுக்கு புலப்படாத அறிவுக்கு எட்டாத யதார்த்தம் ஒவ்வொரு உயிருள்ள பொருளிலும் உள்ளது என்று முன்னூகிக்கிறது. நம் அறிவினால் உணர்ந்து கொள்ள முடியாத மேலான ஏதோ ஒன்று நம்முள் உள்ளது. இருபது வருடங்களுக்கு முன் இருந்த நபர் இல்லை நாம் இப்போது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும், அணுவும் மாறிவிட்டது. ஆனாலும் நானும் நீங்களும் இன்னும் அதே ஆள் தான். நிலையான ஏதோ ஒன்று  நம்மில் உள்ளது. அதைத் தான் நாம் “நான்” என்று அழைக்கிறோம். இந்த “நான்” ன் தனி இயல்புகள் மாறுகின்றது.  ஆனால் “நான் ”  என்ற ஒன்று மாறுவதில்லை.

நம்முடைய உடல் செயலிழக்கும் போது  இந்த “நான்” அழிந்து போகிறதா, அல்லது வாழ்கிறதா? அல்லது இது விளக்கு ஒளிர்வதை போல உடலின் ஒரு செயல்பாடா? அல்லது மின்சாரம் போன்று? அது ஒரு செயல்பாடாக இருந்தால், ஒரு கருவி வேலை செய்வதை நிறுத்தும்போது அந்த செயல் நின்றுவிடுகிறது என்பதுதான் நியாயமான வாதமாய் இருக்கும் அல்லது அது மின்சாரம் போன்று ஒரு அங்கமாக இருந்தால், கருவி பழுதடைந்த பின்னும் அது வாழ்கிறது என்று சிலர் வாதாடகூடும். ஒரு விளக்கு பழுதடைந்த பின்னும் மின்சாரம் இருக்கிறது. நாம் இந்த விவாதத்தினுள் நுழைய வேண்டாம். காரணம் முதலில் இந்த விவாதம் மிகவும் குழப்பமானது, இரண்டாவது எனக்கு பதில் தெரியாது. எனவே நாம் இந்த “நான்”ய் ஆன்மா என்று அழைப்போம்.

 

ஆன்மீகம் என்பது எதுவாக இல்லை (What Spirituality Is Not)

அறிவுப்பூர்வமாக ஆன்மாவை புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் எதிபார்க்கவில்லை. ஆன்மீகம் என்பது அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, தியாகம் என்று வரையறுக்கப் படுமானால், அதை விளக்குவதற்கான காரணம் சிறிது அவசியமாகிறது. மிக கொடிய குளிருள்ள ஒரு ஆற்றில் உயிருக்கு போராடும் ஒரு அந்நியன் ஒருவனை, தன் உயிரை பொருட்படுத்தாது அவனை காப்பாற்ற அந்த ஆற்றினுள் குதிக்கும் ஒருவனின் செயலை காரணப்படுத்த முடியாது, மாறாக அந்த மனிதனின் செயலை ஆன்மீக ரீதியிலேயே புரிந்து கொள்ள முடியும்.

2006 ல் வெளிவந்த ஜேம்ஸ் மார்டின்(James Martin) அவர்களின் புத்தகமான “புனிதர்களுடனான என் வாழ்க்கை”(My Life with the Saints) ல் அன்னை தெரேசா அவர்களை பற்றிய ஒரு கதையை விவரிக்கிறார். அன்னை தெரேசா ஒரு தொழு நோயாளி ஒருவனின் புண்களை கழுவுவதை ஒருவர் பார்க்கிறார். அவர் அன்னை தெரேசாவிடம் நான் எனக்கு “கோடி ரூபாய் கொடுத்தால் கூட இதை செய்யமாட்டேன்” என்றார். அன்னை தெரேசா அவர்களும் நானும் அப்படித்தான் “கோடி ரூபாய் கொடுத்தால் கூட இதை செய்யமாட்டேன்” என்றார்.

அன்னை தெரேசாவின் செயலை பகுத்தறிவினால் விளக்க முடியாது. ஆனால் ஆன்மீக ரீதியில் இதை புரிந்து கொள்ள முடியும். அவர் அன்பினால் இதை செய்தார். அன்னை தெரேசா மறுமொழியாக ” கிறிஸ்துவுக்காக  மிகுந்த சந்தோஷத்தோடு இதை செய்வேன்என்றார். அவர் கிறிஸ்துவையோ    அல்லது கடவுளையோ அந்த தொழு நோயாளியில் கண்டார்.

பகுத்தறிவின் மூலமாக ஒருக்காலும் இதை விவரிக்க முடியாது. ஆனால் அதை அப்படியே தள்ளுபடி செய்யவும்  முடியாது. அது  நம்மை தூண்டுகிறது, நம்மை உயர்த்துகிறது, நம்மை நெகிழ வைக்கிறது, நம்மை சிறந்தவர்களாக ஆக்குகிறது.

பவுல் கொரிந்தியருக்கு எழுதிய தன்னுடைய முதல் கடிதத்தில் கூறுகிறார் (2:14), “ஆன்மிகம் இல்லாத மனிதன், கடவுளின் ஆவியானவரிடம் இருந்து வருபவனவற்றை ஏற்றுக்கொள்ளமாட்டான். அவை அவனுக்கு அறிவீனமாக தோன்றும். அவனுக்கு அது புரிவதும் இல்லை. ஏனெனில் அவை ஆன்மீகமாகவே புரிந்து கொள்ளப்படக்கூடும்”.

அன்னை தெரேசா அவர்கள் தொழு நோயாளியின் மீது காட்டிய அன்பை, இந்த வாக்கியம், விளக்குமேயானால், அது மிக சரியான அர்த்தமாகும். ஏனெனில் அவர் ஆன்மீகத்தை பகுத்தறிந்து இருந்தார். ஆனால் ஒருவேளை நாம் இந்த வாக்கியத்தை, ஒருகிறுக்குத்தனத்தையோ, அபத்தத்தையோ, ஒரு முட்டாள்தனத்தையோ நம்பலாம் என்பதற்கான அனுமதிப்பத்திரமாக வைத்துக்கொண்டால், அது ஆன்மீகமாகாது. மிக சாதாரணமாக சொல்வதென்றால் அது ஒரு  முட்டாள்தனம்.

நாம் ஆதியாகமத்தில் உள்ள படைப்பின் கதையை  எடுத்துக்காட்டாக எடுத்து கொள்வோம். அந்த புத்தகத்தின் நேரடி விளக்கம் அறிவியல், பகுத்தறிவு மற்றும் பொது அறிவுக்கு நேர்எதிராக செல்கிறது. உலகம் எவ்வாறு உருவானது என்பது பற்றிய விளக்கத்தை ஏற்பது முட்டாள்தனம். அந்த கதை தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அன்பு மற்றும் தியாகத்தினை பகுத்தறிவினால் விளக்கமுடியாது என்றாலும், அதற்கு எதிராக போக வேண்டாம். எனவே ஆன்மீகம் என்பது இது போல முட்டாள்தனங்கள் அல்ல என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

நாம் விமர்சனமின்றி கண்மூடித்தனமாக, பகுத்தறிவினால் விளக்க முடியாத எதையும் “ஆன்மீகம்” என்று பொருள்படுத்தி, எதையும் ஏற்க தயாராக இருந்தால், பின் எப்படி நாம் பொய்யிலிருந்து உண்மையை வேறுபடுத்தி காண முடியும்? பின்எப்படி நாம்  முஹம்மதோ, அல்லது வேறு ஏதாவது ஒருகயவனோ கூறிய அபத்தமான கூற்றை நிராகரிக்க முடியும்? நம்மால் அவரது மிராஜ் (Mi’raj) அல்லது அவரது மற்ற அபத்தமான கூற்றுகளை நம்ப முடியுமா ? இல்லைஎன்றால், ஏன் இல்லை? ஒவ்வொரு முட்டாள்தனமாக கூற்றையும் ஆன்மிகம் என்று ஏற்று கொள்ள வேண்டும் என்றால், பதரில் இருந்து கோதுமை மணியை பிரிக்கக்கூடிய மற்றும் உண்மை மற்றும் பொய்யை வேறுபடுத்தி காண்பிக்க கூடிய வேறு எந்த கருவி இருக்கிறது. அபத்தத்தை நம்புவது ஆன்மீகம் அல்ல. முட்டாளாய் இருப்பது ஆன்மீகம்இல்லை.

ஆன்மீகம் பகுத்தறிவோடு இணக்கமாகசெல்கிறதா?

உண்மையில் ஆன்மீகம் பகுத்தறிவுக்கு முரணாக செல்லாது. காரணம், நீங்கள் ஒரு சிம்பொனி அல்லது ஒரு ஓவியத்தை பாராட்ட கலை மற்றும் அழகு பற்றிய புரிதல் வேண்டும். அதேபோல், நீங்கள் பிரபஞ்சத்தின் ஒழுங்கு குறித்து புரிந்துகொள்ள ஆன்மிகம் குறித்தவிழிப்புணர்வு வேண்டும்.

மனிதர்களில் மிகப் பெரிய அறிவு ஜீவிகளெல்லாம்  பெரும்பாலும் ஆன்மீகவாதிகள். ஐன்ஸ்டீன்: அவரது வாழ்க்கை மற்றும் பிரபஞ்சம்(Einstein :  His Life and Universe) எனும் புத்தகத்தில், ஆசிரியர் வால்டர் ஐசக்சன் (Walter Isaacson) எழுதுகிறார், ” கடந்த காலங்களின் நினைவில் பிரமிப்பு மற்றும் கிளர்ச்சி இரண்டும் சேர்ந்த கலவையான பண்புகள் ஐன்ஸ்டினை ஒரு விஞ்ஞானி என்பதிலிருந்து மேலும் விதிவிலக்கானவர் என்று காண்பிக்கிறது. அது தர்க்க ரீதியில் சரி எனவும்படுகிறது. ஆனால் மிக குறைவாக அறியப்படுவது என்னவென்றால் அந்த இரு பண்புகளும் இணைந்தே அவரது ஆன்மீக பயணத்தை வடிவமைப்பதையும், இயற்கை மீதான   அவரது நம்பிக்கையையும் தீர்மானித்தன. கிளர்ச்சி பகுதி அவரது வாழ்க்கையின் ஆரம்பத்தில் வருகிறது. அவர் முதலில் அவரது பெற்றோர்களின் “மதச்சார்பின்மையை” நிராகரித்தார். பின் உலகின் அன்றாட பணிகளில் குறுக்கிடும் நபரான  கடவுளின்(Personal God) சமய சடங்கு எனும் கருத்தையும் நிராகரித்தார்.

அப்பொழுது பிரமிப்பு பகுதி அவரது ஐம்பதுகளில் வருகிறது. அப்பொழுது அவர் “பிரபஞ்சத்தின் சட்டங்களில் வெளிப்படுகிற   ஆவியானவர்(Spirit)”   என்று அவர் அழைத்ததையும் “இருக்கிற அனைத்தின் இணக்கத்திலும் தன்னை வெளிப்படுத்துகிற கடவுள்” மேல் உண்மையான நம்பிக்கை என்பதையும் அடிப்படையாகக் கொண்டு , பிரபஞ்சத்தில் தலையிடாத சர்வ சக்திமிக்க படைப்பாளரிடம் நம்பிக்கை(Deism) என்பதில்  ஐக்கியமாகி இருந்தார்.

ஐன்ஸ்டீனின் யூத பெற்றோர்கள் முழுமையாக மதச்சார்பற்ற ஜெர்மனியர்களாகவே மாறிவிட்டனர். அவர்கள் கோஷர் வைத்துக்கொள்வதோ அல்லது யூத ஆலயம்(Synagog) சென்று கலந்து கொள்ளவோ இல்லை. அவரது தந்தை ஹெர்மன் யூதர்களின் மத சடங்குகளை “பண்டைய மூடநம்பிக்கை”  என்றார். எனவே ஆல்பர்ட் பள்ளி செல்லக்கூடிய காலம் வந்த போது, வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பள்ளி என்று பார்த்தனரே தவிரஅது ஒரு கத்தோலிக்க பள்ளி என்று கவலைப்படவில்லை.

தனது வகுப்பில் இருந்த 70 மாணவர்கள் மத்தியில் ஐன்ஸ்டீன் மட்டுமே யூத குழந்தை. ஐன்ஸ்டீன் பொதுவானகத்தோலிக்க மதம் என்ற பாடத்தை எடுத்து படித்தார். அப்போது தான் அவர் இயேசுவை அன்பு செய்ய தொடங்கினார். பத்தாண்டுகளுக்கு பிறகு அவர் “நான் ஒரு யூதர் தான், ஆனால் நான் நசரேன் எனும் ஒளிரும் ஒரு மனிதனால் ஈர்க்கப்பட்டேன்” என்றார்.

அவர் 10 வயதாக இருக்கும்போது, யாரோ ஒருவர் அவருக்கு அறிவியல் புத்தகங்களை கொடுத்தார். மிகுந்த கவனத்தோடுஅவர்அதைபடித்தார். 12 வது வயதில் கடவுளை அவர் முற்றிலும் நிராகரித்தார். சிறிது காலத்திற்கு பின் அவர் சொன்னது என்னவென்றால், “பிரபலமான அறிவியல் புத்தகங்களை படித்ததின் மூலம், பெரும்பாலான பைபிள் கதைகள் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்ற தீர்வுக்கு வந்தேன்” என்று எழுதினார். விளைவு என்னவென்றால் அரசு பொய் பிரச்சாரம் மூலம் சுதந்திரமாக சிந்திக்கக் கூடிய இளைஞர்களிடம் வேண்டுமென்றே தீவிர மத நம்பிக்கை கூத்துகளை திணித்து ஏமாற்றியது. இது ஒரு மறுக்க முடியாதஉண்மையாகும்.

மேலும் ஐன்ஸ்டீன் செய்ததுயாதெனில், அவருக்கு ஒரு மிக ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது, அழகும் ஒரு ஒழுங்குமாய் இருந்த பிரபஞ்சத்தின்மேல் பெருமதிப்பு இருந்தது. அதை அவர் கடவுளின் மனம் என்றழைத்தார். மேலும் அந்த கடவுளின் மனம் படைப்பு மற்றும் பிரபஞ்சத்தின் விதிகளின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டது என்றார்.

ஒரு இரவு விருந்தில், ஐன்ஸ்டீன் க்கு 50 வயதானபோது, ஒரு விருந்தினர் சோதிடத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். ஐன்ஸ்டீன் ஏளனமாக அந்த கருத்தை தூய மூடநம்பிக்கை என்றார். மற்றொரு விருந்தினர் நுழைந்து அவ்வாறே  இதேபோல் மதத்தை இழிவுப்படுத்தி பேசினார். கடவுளை நம்புவதும்  அதேமாதிரி  ஒரு மூட நம்பிக்கை தான் என்று அவர் வலியுறுத்தினார்.  அந்த நேரத்தில் விருந்தளிப்பவர் ஐன்ஸ்டீன் ம் மத நம்பிக்கை உள்ளவர் தான் என்ற உண்மையை எடுத்துக்காட்டி  அவரை  வாயடைக்க முயற்சி செய்தார். அதற்கு வாய்பே இல்லை என்று நம்பிக்கை இல்லாத விருந்தினர் ஐன்ஸ்டீன் ஐ பார்த்து “இது உண்மையா” என்று வினவ, “ஆமாம், நீங்கள் அப்படியும் அழைக்க முடியும் என்று” ஐன்ஸ்டீன் அமைதியாக பதிலளித்தார். மேலும் “நம்மிடம் உள்ள குறைவான வழிமுறைகளை கொண்டு இயற்கையின் இரகசியங்களை ஊடுருவ முயற்சி செய்யுங்கள். புரிந்துகொள்ள முடிந்த சட்டங்கள் மற்றும் தொடர்புகள் எல்லாவற்றையும் தாண்டி நுணுக்கமான, கண்ணுக்கு புலனாகாத, தெளிவாக சொல்ல முடியாத ஏதோ ஒன்று உள்ளது என்பதை நீங்கள் காண்பீர்கள். நம்மால் புரிந்து கொள்ள முடிந்த எதையும்  தாண்டியுள்ள இந்த சக்தியின் மீதான பயபக்தியே என்னுடைய மதம். அந்த அளவுக்கு, நான் உண்மையிலேயே மத நம்பிக்கை உடையவன்.” (Isaacson)

உங்களுக்கு கடவுள்நம்பிக்கை உண்டா என கேட்டதற்கு, ஐன்ஸ்டீன் மறுமொழியாக “நான் ஒரு நாத்திகன் அல்ல என்று கூறினார்.  கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்று நம்புவன்(கடவுளும் பிரபஞ்சமும் ஒன்று என்று நம்புபவன்/Pantheist) என்று என்னை நான் அழைத்து கொள்ள முடியாது.  சம்பந்தப்பட்ட இந்த பிரச்சினையானது நமக்கு இருக்கின்ற, ஒரு எல்லைக்குட் பட்ட அறிவினை வைத்து அறிந்து கொள்ளமுடியாத அளவுக்கு மிகப் பறந்து விரிந்து உள்ளது. உதாரணமாக நாம் பல மொழிகளில் புத்தகங்கள் நிறைந்த ஒரு பெரிய நூலகத்தினுள் நுழையும் ஒரு சிறு குழந்தையை போன்ற ஒரு நிலையில் உள்ளோம். குழந்தைக்கு யாரோ ஒருவர் அந்த நூல்களை எழுதியிருக்கவேண்டும் என்று தெரியும். அது எப்படி என்று தெரியாது. அது எந்த மொழிகளில் எழுதப்பட்டுள்ளது என்றும் புரியவில்லை. அந்த புத்தகங்கள் ஏதோ ஒரு மர்மமான ஒழுங்கில் அடுக்கப்பட்டுள்ளதாக, ஒரு தெளிவில்லாமல் சந்தேகிக்கிறது. ஆனால் அது என்ன ஒழுங்கு என்றும் தெரியவில்லை. இதுவே கடவுள் குறித்தான புரிதலில் மிக அறிவார்ந்த மக்களின் அணுகுமுறையாகும் என்பது போல் எனக்கு தெரிகிறது. நமது பிரபஞ்சம் சில விதிகளுக்கு கீழ்படிந்து நடக்கும்வகையில் ஒரு அற்புதமான ஒழுங்கில் அமைக்கப்பட்டுள்ளதை காண்கிறோம். ஆனால் நாம் அந்த விதிகளை தெளிவில்லாமல் புரிந்துகொள்கிறோம்.”

என்னை (Ali Sina)  ஒரு நாத்திகன் என்றுசொல்லிக் கொள்கிறேன் . அதாவது நான் கடவுளை நம்பவில்லை என்பதல்ல அதன் அர்த்தம். இதுதான் கடவுள் என்று நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட கடவுளை நான் நம்பவில்லை. புவியை மையமாக கொண்டே இந்த பிரபஞ்சம் இயங்குகிறது என்ற கொள்கையை (Geo-centricity) கலிலியோஅவர்கள் நிராகரித்த போது, அவர் பிரபஞ்சத்தை நிராகரிக்கவில்லை; பிரபஞ்சத்தை குறித்த மக்களின் புரிதலை நிராகரித்தார். அதேபோல், நான் கடவுள் குறித்து நம் மக்கள் புரிந்து கொண்டுள்ளதை நிராகரிக்கிறேன். என் கடவுளுக்கும், ஐன்ஸ்டீன் கடவுளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.  இருந்த போதிலும்   நான்  கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்று நம்புவன்(கடவுளும் பிரபஞ்சமும் ஒன்று என்று நம்புபவன்/Pantheist). நான் மத நூல்களிலோ, தேவாலயங்களிலோ மற்றும் கோயில்களிலோ கடவுளை தேடுவதில்லை. சிறு குழந்தைகளின் முகங்களில் தேடுகிறேன். மனித குழந்தைகள் மட்டும் அல்ல, அனைத்து உயிரினங்களின் குழந்தைகளின் முகங்களில் – ரம்மியமான வாழ்வில் அதை தேடுகின்றேன். அன்பை வெளிப்படுத்துகின்ற எதுவுமே எனக்கு கடவுள் தான். அது விண்ணில் இல்லை. ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு விலங்கின் உள்ளேயும் இங்கேதான் உள்ளது. பியர்ரி டேய்ஹர்ட்  டி சார்டின் (Pierre Teilhard de Chardin) சொன்னதை மேற்கோளிட்டால், நாம் ஆவிக்குரிய அனுபவத்தை கொண்டிருக்கிற மனித படைப்புகள் அல்ல; நாம் மனித அனுபவத்தை கொண்டிருக்கிற ஆவியான படைப்புகள்.(We are not human beings having a spiritual experience; we are spiritual beings having a human experience.)

 

குழந்தைகளே என் ஆன்மீகத்தின் ஆதாரமாகும். நான் கடவுளை எல்லா ஜீவராசிகளின் குழந்தைகளிடமும் காண்கிறேன்.

சூரியனின் கதிர்கள் வெவ்வேறு பொருள்களில் பிரகாசித்து திருப்பி வித்தியாசமாக பிரதிபலிப்பதை போலவே, ஒவ்வொன்றும்  கடவுளின் தோற்றமாக(Manifestation) அதனுடைய ஒளியை பிரதிபலிப்பதாக இருக்கிறது. நான் ஒவ்வொரு உயிரிலும் கடவுளை பார்க்கிறேன். எனவேதான் நான் உயிரை மதிக்கிறேன். ஒவ்வொரு உயிரையும் மதிப்பது என்பது ஆன்மீகத்தின் இன்றியமையாத மூலப்பொருள் என்று நினைக்கிறேன். ஒரு பேட்டியில், பில்மேகர்(Bill Maher) கருக்கலைப்பிற்கான தனது ஆதரவை எதனால் எடுத்தார் என்றபோது, சுதந்திரமான சமூகத்தை அமைப்பதற்காக மரண தண்டனையை ஆதரிக்கும் தனக்கு, கருக்கலைப்பை எதிர்ப்பது ஒரு பழமைவாதமாகும். அவர் மேலும் உயிருக்கு மிகப்பெரிய மதிப்பு ஒன்றும் இல்லை என்றார். குட்டிகளை ஈனுவதின் மூலம், நாய்களும் உயிர் கொடுக்கின்றன என்றார். மற்ற உயிருக்கு மதிப்பில்லாததுபோன்று, அவர் உயிருக்கும் மதிப்பில்லையா என்று அவரிடம் கேட்க எனக்கு ஆவலாக உள்ளது.

எனக்கு உயிர் என்பது விலைமதிப்பற்றதாகும். இந்த பிரபஞ்சத்தின் அளப்பறிய அதன் வெளியை பாருங்கள். அதில் மிக மிக சிறிதான இந்த பூமியைப் பாருங்கள். இதுவரை நாம் அறிந்ததில், பூமி மட்டுமே உயிரினங்கள் வாழ தகுதியுள்ளதாய் இருக்கிறது. எது மிக அரிதானதோ அது விலைமதிப்பற்றதாகும். உயிரை விட வேறொன்றும் அறிதானதில்லை. இறந்து போன முழுவதும் வைரத்தினாலான சூரியன்கள் இருக்கிறது. நான் வைரத்தினாலான மலைகள் பற்றி பேசவில்லை. அந்த பாழாய்ப்போன முழுநட்சத்திரமும் வைரத்தாலானது என்கிறேன். மற்ற சில இறந்த நட்சத்திரங்கள் கனரக உலோகங்கள் உள்ளிட்ட தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளியினாலானது. எது அரிதானதென்றால் அது உயிரே ஆகும்.

மக்கள் ஐன்ஸ்டீனின் மதநம்பிக்கைகளை பெரும்பாலும் தவறாகவே புரிந்து கொண்டார்கள் அல்லது ஒருவேளை வேண்டுமென்றே திரித்து கூறினார்கள். அதனால் 1930 ம் வருடம் கோடையில் அவரின் ஆன்மீக கொள்கையை “நான் நம்புவது எது? “, (“What I Believe.”) என்ற தலைப்பில் இயற்றினார். அதில் அவர் விளக்கும் போது, “நம்மால் அனுபவிக்க கூடிய, விசித்திரமானஅல்லது மர்மமான ஒன்றே நமது உணர்சிகளில் மிக அழகானதாகும். இந்த அடிப்படை உணர்வே, உண்மை கலையிலும், அறிவியலிலும் ஒய்யாரமாக மிளிர்கிறது. எவர் ஒருவருக்கு இந்த உணர்ச்சி அன்னியமாக தெரிகிறதோ, அவரால் ஆட்சரியப்பட்டு, மெய் மறந்து பிரமிக்க முடியாது. அது அவர் இறந்ததுக்கு சமானம் அல்லது கரைந்துபோன மெழுகுவர்த்திக்கு சமானம். அந்த உணர்வை அறிந்துகொள்ள, அனுபவிக்கக்கூடிய எதனின்பின்னும் உள்ள ஏதோ ஒன்றை நம்மால் கிரகிக்க முடியவில்லை. அதன் அழகு மற்றும் மேன்மை, மறைமுகமாக மட்டுமே நம்மை வந்தடைகிறது. இதுவே மதநம்பிக்கையாகும். இந்த ஒரு உணர்வு, மற்றும் இந்த ஒரு உணர்வு ஒன்றினால் மட்டுமே நான் பக்திமிக்க ஆன்மீகவாதி ஆகிறேன்.

இது “ஐன்ஸ்டீனுக்கு கடவுள்நம்பிக்கை உண்டா அல்லது இல்லையா” என்று நேரடியான பதிலை விரும்பியவர்களுக்கு ஐன்ஸ்டீனின் இந்த பதில் திருப்தியாக இல்லை. நியூயார்க்ல் இருந்த ஒரு யூத மத தலைவர், ராபி ஹெர்பர்ட் எஸ். கோல்ட்ஸ்டீன்(Rabbi Herbert S. Goldstein), ஐன்ஸ்டீன்க்கு ஒரு மிக காட்டமானதந்தி ஒன்றை அனுப்பினார்:

“நீங்கள்கடவுளை நம்புகிறீர்களா?”

“பதில் 50 வார்த்தைகளில்”

“ஐன்ஸ்டீன் அவருக்கு ஒதுக்கப்பட்ட 50 வார்த்தைகளில் பாதி மட்டுமே பயன்படுத்தினார். அவர் அடிக்கடி சொல்லும் பல பதில்களைப் போலவே இந்த பதிலும் மிக பிரபலமான பதிப்பாகிப்போனது,

“நான் டச்சு தத்துவ ஞானி ஸ்பினோசா (Dutch philosopher Spinoza) வின் கடவுளை நம்புகிறேன். விதிகளுக்கு உட்பட்டு ஒழுங்காய் உள்ள அனைத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்தும் ஒரு கடவுளையே அன்றி, விதியினாலும், மனிதர்களின் செயல்களினாலும் தன்னைப் பற்றி அதிகம் கவலை கொள்ளும் ஒரு கடவுளை அல்ல”.

(மொழி பெயர்ப்பாளரின் விளக்கம் : Dutch philosopher Spinoza சொன்னது, “அதாவது கடவுள் என்பது இயற்கைக்கு வெளியில் இருந்து அதை இயக்குவது இல்லை, அது இயற்கையின் ஒரு அங்கமாக இருக்கவேண்டும் என்பது அவசியமாகிறது”)

ஐன்ஸ்டீன் கடவுள் பற்றியமரபு வழிபொருள் விளக்கத்தை நிராகரித்த போதும், தன்னை ஒரு நாத்திகர் என்று குற்றப்படுத்துவதை மிக உறுதியாக மறுத்தார் “கடவுள் இல்லை என்று கூறும் மக்கள் இருக்கிறார்கள்”. அத்தகைய கருத்துக்கு ஆதரவாக அவர்கள் என்னை மேற்கோள் காட்டுவது எனக்கு கோபத்தை வரவழைக்கிறது என்று ஒரு முறைதன்நண்பரிடம் சொன்னார்.

ஐன்ஸ்டீன் வாழ்ந்த காலத்திலோ அல்லது தற்போது நாம் வாழும் காலத்திலோ உள்ள பெரும்பாலான நாத்திகர்கள் போல் அல்லாமல், ஐன்ஸ்டீன் அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை ஒருபோதும் குற்றப்படுத்தியோ,மனம் நோகும்படியோ விமர்சித்தது இல்லை.

“உண்மையில், ஐன்ஸ்டீன், உண்மையில்லாமல்,பணிவில்லாமல் மரியாதை இல்லாமல், கடவுள் நம்பிக்கையை விமர்சிக்கும் நபர்கள் குறித்து மிக கவனமாய் இருந்தார் என்று ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார். கடுமையாக போராடிஉடைத்தெறிந்த சங்கிலிகளின் எடையை இன்று வரை உணரும் அடிமைகள் போன்றவர்கள், “நாத்திகவெறியர்கள்” — பாரம்பரிய மதத்திற்கு எதிரான அவர்களது வன்மம் என்பது ஒரு கருத்துக்கு அடிமைப்பட்டு அதுவே சரி என்று கருதும் ஒரு கூட்டத்தை போன்றவர்கள்”, இது போன்ற ஜீவன்களால் நம் காதுகளால் கேட்கமுடியாத, நம்மால் உணர மட்டுமே முடிகின்ற இந்த பிரபஞ்சத்தின் இசையை கேட்க முடியாது” என்று ஐன்ஸ்டீன் குறிப்பிட்டதாக ஐசக்சன்(Isaacson) எழுதுகிறார்.

எந்த தவறான புரிதலையும் தவிர்ப்பதற்காக, மதம் மற்றும் அறிவியல் ஆகியவற்றின் செயல்பாட்டு பகுதிகளுக்கு இடையேயான இன்றைய மோதல்களின் மூல ஆதாரம் நபரான கடவுள்(Personal God) என்ற கருத்தாக்கத்தில் தான் படிந்து கிடக்கிறது என்று அவர் வலியுறுத்தி கூறினார்.

ஐன்ஸ்டீன், அமானுஷ்யத்தை நம்பவில்லை.  “சில மனிதர்களுக்கு, அற்புதங்கள் என்பது கடவுள் இருக்கிறார் என்பதன் ஆதாரமாக திகழ்கின்றன. ஆனால் ஐன்ஸ்டீன்க்கோ அற்புதங்கள் இல்லாமையே தெய்வீக விதியை பிரதிபலிப்பதாக இருந்தது. உலகம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது, அது சட்டங்களை பின்பற்றுகிறது என்ற உண்மையே பிரமிப்புக்குரியதாக இருந்தது என்று ஐசக்சன் எழுதுகிறார்.

இஸ்லாமியத்தில் ஆன்மீகம்

நான் ஆன்மீகத்தை பற்றியஒரு விரிவான விளக்கத்தை கொடுத்து விட்டேன். முஹம்மதுக்கு அது பற்றிய புரிதல் கொஞ்சம்கூட இல்லை என்பது மிக தெளிவாக தெரிகிறது. அவர் உயிருக்கு மதிப்பளிக்கவில்லை. அவர் அவருக்கு தேவை இல்லை என்று கருதிய நபர்களை கொன்று விட்டார். யார் ஒருவர் முஹம்மதுவை, நம்பவில்லையோ, அல்லது தோற்கடிக்கவோ, கொள்ளை அடிக்கவோ,  அடிமைகளைப் போல் மற்றும் திம்மிகளை போல்(Dhimmis) அவருக்கு வேலை செய்யவில்லையோ,  அவர்களை ஒழித்து கட்டினார்.

அவருடைய திருவிழாக்களில் , விலங்குகளின் ரத்தம் சிந்தப்பட வேண்டும் என்பது அவசியமாக்கப்பட்டது. ரத்தத்தைசிந்தும்போது சந்தோசப்படும் கடவுள் என்ன மாதிரியான கடவுள்? பிற உயிர்களை மதிப்பதால் நான் இந்து மதத்தை மதிக்கிறேன்.

ஈத் என்று அறியப்படும் இஸ்லாமின் மிக கொடூரமான சடங்குகள். இவை தான் முஸ்லீம்கள் மகிழ்ச்சியாக இருக்கும் சந்தர்ப்பங்களாகும்.

முஹம்மதின் மறு உலக வாழ்வென்பது உலக சிற்றின்பன்கள் சார்ந்ததாகும். அவரின் சொர்க்கத்தில் மனிதர்கள் மித மிஞ்சிய காமம், மிகுதியான உணவு, கணக்கிலடங்கா உடலுறவு இவையே பிரதிபலனாககொடுக்கப்படும். அவரின் சொர்க்கத்தில் ஒரு நுலகமோ, அருங்காட்சியகங்களோ, கலைக்கூடமோ இல்லை. பாவப்பட்ட மனிதன் அருமையான புத்தக வாசிப்பை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. வாழ்வின் ரகசியதில் உள்ள மிகசிறந்த விஷயங்களை புரிந்து கொள்ளவும் முடியாது. அவனுக்கு ஆண் குறியின் கிளர்ச்சியும் அவன் வயிற்றின் திருப்தியும் மட்டுமே தெரியும். முஹம்மதின் நரகமும் ஸ்தூல இடமாகவே(Physical place) உள்ளது. எப்படியெனில், அவருடைய அந்த நரகத்தில் அவருடைய எதிர்ப்பாளர்கள் சித்திரவதை செய்யப்படுவார்கள் மற்றும் வறுத்தெடுக்கப்  படுவார்கள்  மற்றும் சீழ் சாப்பிட வைக்கப்படுவார்கள். ஆன்மீகம் மற்றும் ஆன்மா என்ற வார்த்தை ஒரு முறைகூட குர்ஆனில் இடம் பெறவில்லை. நம்ப முடியவில்லை இல்லையா? முஸ்லீம்கள் ஆன்மீக வழிகாட்டுதலை, ஆன்மிகம் என்று ஒரே ஒரு முறை கூட குறிப்பிடாத அந்த புத்தகத்தில் தேடுகிறார்கள். இப்படி கற்பனை செய்து பாருங்கள் நீங்கள் கோல்ஃப்(Golf)கற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதி ஒரு புத்தகம் வாங்குகிறீர்கள். ஆனால் அந்த புத்தகத்தில் ஒரு இடத்தில்கூட கோல்ப் என்று குறிப்பிட இல்லை. எப்படிஇருக்கும்? முஸ்லீம்களே, இன்னும் எவ்வளவுக்கு உங்களையே முட்டாளாக்கிக் கொள்ள நீங்கள் விரும்புவீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் தீர்க்கமாக அதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். காதல், இரக்கம், சகிப்புத்தன்மை, மன்னிப்பு மற்றும் பொறுப்பு இவற்றின் கருத்தாக்கங்கள் முஹம்மதுக்கு அன்னியமாக இருந்தன. அவரால் கீழ்ப்படிதல் என்றால் என்ன என்று மட்டும் புரிந்து கொள்ள முடியும். அவர் உண்மையில் மிகவும் அறிவு வளர்ச்சி குறைந்த மற்றும் பழமையான மனதுடைய ஒரு மனிதன் தான்.

இது சூஃபிக்களுக்கு ஒருபிரச்சனையாகதெரிந்தது. இஸ்லாமில் ஆன்மீகம் என்பது முற்றிலும் ஒதுக்கப் பட்டு விட்டது என்பதை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக, அவர்கள் குர்ஆன்ல் இரண்டு முற்றிலும் மாறுபட்ட அர்த்தங்கள் உண்டு என்று கூறினார்கள். ஒன்று வெளிப்படையான அர்த்தம் (அதாவது ஒரு தேங்காய் மடல் போல). இதுவே தெளிவான பொருளை தருகிறது. மற்றொன்று இதற்கு நேர் எதிரான பொருளை தருகிறது. மேலும் அது ஆன்மீகத்தால் சுத்திகரிக்கப் பட்டவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். அதுவே அதன் உள் அர்த்தம் (அதாவது தேங்காய் நார் போல ) ஆகும் என்கின்றனர்.

குர்ஆன்ல் மறைக்கப்பட்ட பொருள்களை எவ்வாறு விளங்கிக் கொள்வது பற்றி சொல்லிக்கொடுப்பது நிச்சயமாக சுய தம்பட்டம் அடிப்பதற்கு ஏதுவான மற்றொரு அதிகாரமாகும். அவர்கள் பள்ளிகளை நிறுவினார்கள், சீடர்கள் சேர்த்தார்கள் — பின் தங்களை சாதாரண மக்களிடம் காணமுடியாத மிக சிறப்பான உள்ளுணர்வுகளை கொண்ட ஞானிகள் மற்றும் புனிதர்கள் என்று தங்களை தாங்களே அழைத்துக் கொண்டார்கள் — உண்மையில் அவர்கள் மற்றவர்களை ஏமாற்றி தனக்கு அதிகமாகத் தெரிந்தது போல் நடிக்கும் ஒரு வஞ்சககூட்டமாகும். மறைவான பொருள் என்ற ஒன்று குர்ஆன்ல் இல்லை.

பெரும்பான்மை முஸ்லீம்கள், சூஃபிக்கள் இஸ்லாமுக்கு எதிரானவர்கள் என்று சொல்லி முற்றிலும் புறக்கணித்தார்கள். சூஃபிக்கள் குர் ஆனின்   உண்மை பொருளை திரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டனர். சூஃபிக்கள் முன்வைத்த வாதத்தை குர்ஆனே முற்றிலுமாக நிராகரித்தது. குர்ஆன் திரும்ப திரும்ப தன்னை பற்றி சொல்வது என்னவென்றால் :

“தெளிவான புத்தகம்”  (5:15)

“புரிந்து கொள்ள எளிதான”  (44:58, 54:22, 54:32, 54:40 ),

” விவரமாக விளக்கியது” (6:114),

“தெளிவாகஉணர்த்தியது”(5:16, 10:15)

மேலும்   உள்ள “சந்தேகமில்லாமல் ” (2:1) .

குர்ஆன் ஆசிரியர் அதை எளிமையாக படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். குர்ஆன் வெளிப்படையான பொருளுக்கு இசைவானதாக இல்லாத   எந்த ஒரு விளக்கத்தையும் நிராகரித்தார். சுபிஇஸ்ம் இஸ்லாமியம் அல்ல. அது ஒரு சமயபேதம் உள்ளவரின் நம்பிக்கை மற்றும் ஒரு ஏமாற்று ஆகும். முஹம்மது உயிரோடு இருந்தால், யாரோ ஒருவன் முகம்மதின் சீடர்கள் சிலர் குர்ஆன் அவர்களுக்கு ஏற்றவாறு புரிந்து கொண்டு புனித போரில்நம்பிக்கை இல்லை என்று சொல்கிறார்கள் என்று சொன்னதால், அவர் துஅவான்(Dhu Awan) மசூதியில் உள்ளே வைத்து எரித்ததைப் போல் சூஃபிக்களையும் எரித்து விடுவார்.

ஆன்மிகம் என்பது பல வகையாக இருக்கிறது. பிரபஞ்சமும் அதன் சட்ட திட்டங்களும் நேருக்கு நேராக இருக்கலாம் (ஐன்ஸ்டீன்) அல்லது உயிருக்கு  சிரத்தையுடன் மதிப்பளிப்பதாக இருக்கலாம்(சமண மதம்). கடவுளிடம் தொடர்பு கொள்வதை அது  அர்த்தப்படுத்தலாம் (கிறிஸ்தவம்).  சக மனிதர்களுக்கு சேவை புரிவதை  அது அர்த்தப்படுத்தலாம்(அன்னை தெரசா). அன்பு, கருணை, கனிவு, மன்னிப்பு, பொறுப்பு, தியாகம் மற்றும் நியாயம் ஆகியவற்றை வளர்ப்பது என்பதை அர்த்தப்படுத்தலாம்(புத்த மதம் மற்றும் மனிதநேயம்). ஆன்மீகத்தில் திளைத்திருப்பது என்பதின் அர்த்தம் பரிணாமம் அடைந்த மனிதன் என்பதாகும். அதாவது நல்லது எது தீயது எது என்று அறிந்திருப்பதும், நல்லதை எடுக்க வேண்டுமா தீயதை எடுக்க வேண்டுமா என்று புரிந்திருப்பதுமாகும். ஆன்மீகத்தை அடைவதே ஒவ்வொரு நபருக்கும்  மிக முக்கியமான இலக்காக இருக்க வேண்டும். ஒரு ஆன்மீகமுள்ள மனிதனாக நீங்கள் பெயர்களைத் தாண்டி, எங்கெல்லாம் நல்லவை நடக்கிறதோஅவற்றை எல்லாம் உங்களால் காணமுடியும்.

ரிச்சர்ட் டாக்கின்ஸ்(Richard Dawkins)  “கடவுளிடம் நம்பிக்கை உள்ள எவரும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபராக தேர்ந்தெடுக்கப் படக்கூடாது என்று நம்புகிறார். ஒபாமா தன்னை ஒரு கிறிஸ்தவறென்றும் கடவுள் நம்பிக்கை உள்ளவரென்றும் கூறிக்கொண்டார். இருப்பினும் ரிச்சர்ட் டாக்கின்ஸ், ஒபாமாவுக்கு முன்னுரிமை தருகிறார்.  காரணம் ரிச்சர்ட் டாக்கின்ஸ்க்கு ஒபாமாவின் மத நம்பிக்கை அவரது பிறப்பு சான்றிதழ் போன்ற ஒரு போலி என்றுதெரியும்.

கிறிஸ்தவர் அதிக தகுதியுடையவராக இருந்தபோதிலும் ஒரு நல்ல கிறிஸ்தவரை விட ஏமாற்று பேர்வழியை, அமெரிக்காவை திவாலாக்க போகிற, உலகத்துக்கு குழப்பத்தை கொண்டுவரப் போகிற ஒருவருக்கே டாக்கின்ஸ் முன்னுரிமை கொடுக்கிறார். “தகுதி என்பது முக்கியமல்ல, ஒருவரின் நம்பிக்கை, அல்லது அவநம்பிக்கையே மிக முக்கியமானது என்று டாகின்ஸ் சொல்கிறார். இது எனக்கு ஆன்மிகம் அல்ல. இது ஒரு இஸ்லாமிய கருத்தாக்கமாகும். நாத்திகம் எனும் போர்வையில் உள்ள இதை நான் வெகு காலத்திற்கு முன்பே ஏற்றுக் கொள்ள மறுத்து தள்ளுபடி செய்துவிட்டேன். நீங்கள் நியாயமாக இல்லை என்றால், நீங்கள் ஆன்மீகவாதி இல்லை. நீங்கள் மற்றவர்களின் நம்பிக்கை, பாலினம் அல்லது இனம் போன்ற வேறுபாடுகளை மறந்து அவர்களின் நற்காரியங்களை பாராட்டினீர்கள் என்றால் , உங்களை ஒரு ஆன்மீகவாதி என்று அழைத்துக் கொள்ளலாம் – ஒரு பரிணாம வளர்ச்சியில் முழுமைப் பெற்ற மனிதன்.

ஆன்மீகத்திற்கு பல வழிகள்உள்ளன. இஸ்லாம் அதில் ஒன்று இல்லை. ஏதாவது ஒன்று உங்களை ஒரு நல்ல மனிதனாக மாற்றுகிறதென்றால் அது ஒரு ஆன்மீக பாதையாகும். இஸ்லாமியத்தில் நீங்கள் அதிகமாக ஈடுபடும் போது , உங்கள் ஆன்மா மிக அதிகமாக இருண்டுவிடுகிறது. கடவுளின் ஒளியை தாங்கிச்செல்ல பிறந்திருக்கிறோம். நீங்கள் முகம்மதை பின்பற்ற தொடங்கும் போது, சாத்தானாகி விடுகிறீர்கள். உங்கள் நினைவுகள் அரக்கத்தனமாகி விடுகிறது. சக மனிதன் மேல் உங்களின் இதயத்தில் நிறைந்துள்ள உள்ள உங்களின் வெறுப்பு அவர்களை அன்பு செய்ய உங்களுக்கு இடம் அளிப்பது இல்லை. நீங்கள் சாத்தானின் வெளிப்பாடாக மாறிவிடுகிறீர்கள். உண்மையாக அதிக பக்திமிக்க முஸ்லீமின் முகங்களில் அந்த தீமை வெளிப்படுகிறது. ஆச்சரியப்படும் வகையில் மனிதர்கள் ஒரு பக்தி மிக்க முஸ்லீமாக மாறும் போது அருவருப்பான தோற்றம் உடையவர்களாக  மாறிவிடுகிறார்கள். அறிவுப்பூர்வமாக இதை என்னால் விளக்க முடியவில்லை. ஆனால் அவதானிக்கக்கூடிய உண்மை நிகழ்வாகும். சாதாரணமாக தீவிரவாதிகளின் முகங்களைப் பாருங்கள். அவர்கள் ஒரு பக்தி மிக்க முஸ்லீம்களாகும். அல்லது இஸ்லாமிய கட்சிகளின் தலைவர்களின் முகங்களைப் பாருங்கள். ஏதோ ஒரு கொடூரம் அவர்கள் கண்களில் உள்ளது. இஸ்லாமியம் ஆன்மீகத்திற்கு எதிரான கோட்பாடுகள் கொண்டது. அதால் உங்களை ஒரு சிறந்த மனிதனாக மாற்ற முடியாது. மிக அதிகமாக நீங்கள்அதை பின்பற்றினால் இன்னும் மோசமாக நீங்கள் ஆகிறீர்கள். அதன் கோட்பாடுகள் தேவதைகளில் இருந்து அரக்கர்களை உருவாக்குகிறது. நான் சாத்தானை நம்புவதாக இருந்தால், இஸ்லாம் என்பது இந்த உலகத்தை அழித்து அனைவரையும் நரகத்திற்கு இட்டுசெல்வதற்கான சாத்தானின் ஒரு சதி என்று சொல்வேன்.

 

— அலி சினா

மொழியாக்கம் : அந்தோணி