அலி அவர்களே,

 நீங்கள் இருமுனை கொண்ட கருத்துக்களைக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சரியானஇஸ்லாம் என்று ஒன்றும் இல்லை என்று உங்களுக்குத் தெரியும் என்பது உறுதி. எனது அண்டைவீட்டார் நம்பும் இஸ்லாம்தெருவில் சற்றுத் தள்ளி உள்ள முஸ்லிமுடைய இஸ்லாமை விட மாறுபட்டது. அவர்களின் இஸ்லாம் உங்கள் மனதிலிருக்கும் இஸ்லாமின் மாதிரியிலிருந்தும் வேறுபட்டதுதான். உங்கள் மாதிரி முகமது உருவாக்கிய மாதிரியை மிகவும் ஒத்து இருக்கலாம். ஆனால், மதங்கள் பரிணமிக்கின்றன. எனவே பல முஸ்லிம்கள் நம்பும் இஸ்லாம் அதைப் போன்று இல்லாமல் இருக்கலாம்.

 

என் கருத்துக்கள் இருமுனை கொண்டவைகள்தான். அப்படி இல்லாமல் இருப்பது பெரிய முட்டாள்தனம். புத்த மதத்தையும் மற்ற மதங்களையும் சாத்தானின் மதமான இஸ்லாமுடன் ஒப்பிட முடியுமா? எல்லா மதங்களையும் ஒரே தராசில் வைத்து அவைகளைப் பற்றி ஒரே முடிவை எடுக்க முடியுமா? கம்யுனிசம், நாசிசம், மக்களாட்சி இவை மூன்றும் அரசியல் வடிவங்கள் தான். இவைகள் எல்லாமே ஒரே விதமானவையா? அவைகள் எல்லாவற்றையும் ஒன்றாக தராசில் இட்டு எடை போட முடியுமா? எல்லா மதங்களும் ஒரே மாதிரியானவை அல்ல. எல்லாமே பொய்யானவை என்று வாதாடலாம். ஆனால் அது கூட உண்மையில்லை. முற்றிலும் உண்மையான சில விசயங்கள் எல்லா மதங்களிலும் இருக்கின்றன. இஸ்லாமைத் தவிர மற்ற எல்லா மதங்களுக்கும் மைய்யமாக இருக்கின்ற ‘தங்க விதி’ ஒரு முற்றிலும் சரியான உண்மை. மதங்களில் உள்ள சில விசயங்கள் நல்லவை, சில தீயவை, சில கோரமானவை. அவைகள் எல்லாமே நம் தேவைக்கு மிதமிஞ்சியவை. ஏனென்றால், மனித இனத்திற்கு சுயமாக எது நல்லது எது தீயது என்று பாகுபடுத்திப் பார்க்கும் திறன் உள்ளது. வல்லுறவு கொள்தல், கொலை செய்தல், கொள்ளை அடித்தல், போன்றவைகள் தீயவை என்று தெரிந்து கொள்ள நமக்கு எந்த மதமும் தேவையில்லை. இஸ்லாமைப் போன்ற மதம் இது போன்ற செயல்கள் அனுமதிக்கப் பட்டவை (ஹலால்) என்று கூறினாலும், தன்னை பின்பற்றுபவர்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக அவ்வாறு செய்யத் தூண்டினாலும், அவைகள் தீயவை என்று நமக்குத் தெரியும்.

இருப்பினும், பல மக்கள் ஏதேனும் ஒரு நம்பிக்கை கொள்ளவேண்டிய தேவை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை எனக்கு அபாயமாக இல்லாத வரைக்கும், அவர்களின் நம்பிக்கையைப் பற்றி எனக்கு கவலை இல்லை. மனிதர்கள் பல விதம் அவர்களின் தேவைகளும் பல விதம். எந்த மதத்தையும் நம்பாமல் இருப்பதும், இக்கட்டான சூழ்நிலைகளில் ஒரு கற்பனைக் கடவுளை உதவிக்கு அழைக்காமல் இருப்பதும் எனக்கு இயல்பானது. எனது இன்னல்களை தீர்ப்பதில் ஒரு கற்பனை உருவத்தை நம்புவதை விட என் சொந்த முயற்சியை நம்புவதில்தான் எனக்கு ஆறுதலாக இருக்கிறது. என்னால் ஏதேனும் செய்ய முடிந்தால் செய்வேன். இல்லையென்றால், நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடுவேன். பலருக்கு இது அச்சமூட்டும் கட்டமாக இருக்கிறது.

இஸ்லாம் ஒரே ஒரு இஸ்லாம்தான். அது முகமதின் இஸ்லாம் தான். இது குரானிலும் முகமதின் வாழ்க்கை வரலாற்றிலும் விவரிக்கப் பட்டிருக்கிறது. முஸ்லிம்களுக்கு தங்களின் நம்பிக்கையைப் பற்றி வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். சிலர் மற்றவர்களை விட அதிகமாக பின்பற்றுகிறார்கள். ஆனால் இஸ்லாம் ஒன்றே ஒன்று தான்.

எந்த ஒரு பொருளும் வெவ்வேறு மக்களால் வெவ்வேறு விதமாக பார்க்கப் படலாம். இது பார்ப்பவரின் கோணத்தைப் பொருத்து அமைகிறது. வெவ்வேறு மக்கள் வெவ்வேறு விதமாக பார்க்கிறார்கள் என்பதற்காக அவர்கள் வெவ்வேறு பொருளை பார்க்கிறார்கள் என்று பொருள் அல்ல. முஸ்லிம்கள் இஸ்லாமை வெவ்வேறு விதமாக பார்க்கிறார்கள் என்பதற்காக இஸ்லாமில் பல வகை உண்டு என்பது ஒரு தவறான தர்க்கம். அது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல. உங்களைப் பற்றி வெவ்வேறு மக்கள் வெவ்வேறு விதமாக பேசலாம். அப்படிஎன்றால் அவர்கள் வெவ்வேறு மனிதர்களைப் பற்றி பேசுகிறார்கள் என்று அர்த்தமா?

ஒரே உண்மையான இஸ்லாமான, முகமதின் இஸ்லாமைத் தான் நான் தாக்குகிறேன். உங்களின் அண்டை வீட்டாரைப் பற்றி எனக்கு தெரியாது. அவர் எப்படி இஸ்லாமை புரிந்து கொள்கிறார் என்பதை அறிய எனக்கு ஆர்வம் இல்லை. நம்பிக்கை என்பது ஒரு தனிமனித விவகாரம். நான் அவர்களின் நம்பிக்கையை தாக்கவில்லை. நான் வன்முறையும் தீய்மையும் வடிவான ஒரு மதத்தைத்தான் தாக்குகிறேன். அவர்களின் இஸ்லாம் அப்படிப்பட்டதல்ல என்றால் அவர்கள் என்னால் பயம்கொள்ளத் தேவை இல்லை.

இதைப் புரிந்து கொள்வது அப்படி ஒன்றும் மிகவும் கடினமில்லை. ஆனாலும் இதே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்கிறார்கள். ஒரு குழந்தைக்கும் புரியக்கூடிய ஒரு எடுத்துக்காட்டைத் தருகிறேன். எங்கள் தெருவில் வெறிநாய் ஒன்று வீதியில் அலைந்து கொண்டு வருவோர் போவோரை கடித்துக்கொண்டு இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். நான் என் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அதைத் தேடித் போகிறேன். வழியில் யாரோ ஒருவர் என்னை நிறுத்தி என்னுடைய நாய் அமைதியும் நட்புமானது என்றும் அந்த வெறிநாய் என்னுடையதல்ல என்றும் சொல்வதாகக் கொள்வோம். நான் அவரிடம் எனக்கு நட்பான நாய்களைப் பிடிக்கும், நீங்கள் கவலைப் படாதீர்கள், கையை விடுங்கள், நான் கொல்லப்போவது வெறிநாயை மட்டும் தான் என்று சொல்கிறேன். அப்பொழுது அந்த மனிதன் என் நாயை நீ தாக்கக் கூடாது என்று கூறி என்னை தாக்க ஆரம்பிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் என்ன அர்த்தம்? அவரின் ‘நட்பான’ நாயும் அந்த வெறிநாயும் ஒன்றுதானே?

தாங்கள் பின்பற்றும் இஸ்லாம் வன்முறையற்றது என்று முஸ்லிம்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அருமை! நான் எந்த அமைதியான மதத்திற்கும் எதிரானவன் அல்ல. ஆனால் நான் வன்முறை இஸ்லாமை தாக்கும்போது, இவர்கள் என்னை தடுக்கவும் தாக்கவும் செய்வதிலிருந்து இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பது தெளிவு. அவர்களின் மதம் மிகவும் கொடூரமானது. அது அவர்களுக்கும் தெரியும்.

மற்ற மதங்கள் பரிணமிக்கலாம். ஆனால் இஸ்லாமால் முடியாது. ஏனென்றால், இஸ்லாமை எந்த விதத்திலும் மாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. எந்த புதுமையையும் (bid’a) நம்பிக்கை மறுப்பாக (kufr) பார்க்கப் படுகிறது. இஸ்லாம் “பரிணமிக்க” வேண்டுமானால் அது குரானின் 70% தை குப்பையில் எறியவேண்டும். மீதமிருக்கும் 30% வெறும் முட்டாள்தனமான பிதற்றல்கள் தான். நமக்கு குரானில் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு தேவையற்றவற்றை விட்டுவிட தடை இருக்கும் போது இஸ்லாமை எப்படி அமைதிப் படுத்துவது?

இஸ்லாமைப் பற்றிய உங்கள் எழுத்து மிகவும் தூற்றுவதாகவும் ஏசுவைப் பற்றி மிகவும் புகழ்ச்சியாகவும் இருக்கிறது. நீங்கள் இன்க்விசிசன்னையும் (Inquisition), சிலுவைப் போர்களையும் (crusades), இன்றைய ஆப்ரிக்காவில் சில கிறிஸ்துவர்கள் இயற்க்கைக்கு அப்பாற்ப்பட்ட சில நம்பிக்கைகளையும் கொண்டிருப்பதால் அவர்கள் சில குழந்தைகளை சூனியக்காரிகள் என்று பழி போட்டு எரித்தோ ஆசிட் ஊற்றியோ கொன்றுவிடுகிறார்கள் என்பதையும் கண்டுகொள்வதில்லை.

ஏசுவைப் பற்றிய கதைகள் உண்மையானால் அவர் தீயவரல்ல. அவருடைய போதனைகள் மிகவும் நல்லவை. நான் ஒரு நல்ல மனிதனை ஏன் தூற்ற வேண்டும்? ஏசு கடவுள் என்று நான் நம்பவில்லை. அவரை ஒரு மனிதனாகத்தான் பார்க்கிறேன். ஆனால் அதற்காக நேர்மையில்லாமல் ஒரு நல்ல மனிதனை தூற்றவேண்டும் என்பதில்லை.

இன்க்விசிசன்னுக்கும் (Inquisition = கிறிஸ்துவ மதத்துறவிகளின் அட்டூழியங்கள் – மக்களையும் அறிஞர்களையும் பகுத்தறிவுக் கருத்துகளை வெளியிடுவதற்கும் மதபுத்தகங்களில் உள்ளதற்கு மாற்றான அறிவியல் உண்மைகளை கண்டுபிடிப்பதற்கும் மதத் தலைவர்கள் இடையூறாக இருக்கும் கலாச்சாரம்) அல்லது கிறிஸ்தவர்களின் தீய செயல்களுக்கும் ஏசுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் அவைகளைத் செய்யச் சொல்லி தூண்டவில்லை.

அவர் கத்தியெடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்றார்.

தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட மற்றவர்களின் தவறுகளை மன்னிக்கச் சொன்னார்.

மற்றவர்களின் கண்ணில் உள்ள தூசியை அகற்றச் சொல்லும்மும் உங்கள் கண்ணில் உள்ள உத்திரத்தை அகற்றும்படி சொன்னார்.

பாவம் செய்யாதவன் கல்லை எரியட்டும் என்றார்.

கள்ளத்தொடர்புகள் வேண்டாம் என்பதை விட அதைப் பற்றி மனதில் நினைத்தாலே பாவம் என்றார்.

இந்த போதனைகள் எல்லாம் எவ்வளவு மேன்மையானது என்பதை நவீன உளவியல் அடிப்படையில் என்னால் விளக்கமுடியும். ஆனால் என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. கிறிஸ்துவர்கள் செய்த கொடுமைகளுக்கு நியாயத்தை ஏசுவின் போதனைகளில் பார்க்கமுடியாது.

இன்க்விசிசன்னும் சிலுவைப்போர்களும் கத்தோலிக்க சபையின் மீதான இஸ்லாமின் தாக்கம்தான்.இஸ்லாமுடைய ஜிஹாதையும் மிஹ்னா (Mihnah = இஸ்லாமிய மத விசாரணை மன்றம்) வையும் அவைகளின் வெற்றியின் காரணமாக சர்ச்சும் பின்பற்ற ஆரம்பித்தது. கலாச்சாரங்கள் ஒன்றின் மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்றும் கூட மதச்சார்பற்ற சகிப்புத்தன்மையுள்ள மேற்கத்திய கலாச்சாரம், இஸ்லாமின் அடக்குமுறைக் கலாச்சாரத்தினால் பாதிக்கப் படுகிறது. நாம் இஸ்லாமுக்கு எதிராக உண்மையை பேசுகிறவர்களை தண்டிக்கிறோம். இந்த பைத்தியக்காரத் தனம் நமது மதச்சார்பின்மையால் அல்ல, மதச்சார்பற்ற நம் சட்டங்களில் ஊடுருவும் மதஅவமதிப்புச் (blasphemy) சட்டங்களால் தான் சாத்தியமாகிறது. கீர்ட் வைல்டர்ஸ் (Geert wilders) நீதிமன்றத்திற்கு இழுக்கப் படுகிறார் என்றால், அந்துரு ரயன் (Andrew Ryan) குரானை எரித்ததற்காக சிறையில் அடைக்கப் படுகிறார் என்றால், நாம் மதச் சார்பின்மையை பழி சொல்லமுடியாது. மேற்கத்திய மதச் சார்பின்மை இஸ்லாமியமயமாக்கப் பட்டுக்கொண்டு இருக்கின்றது. சர்ச்சுக்கும இதேதான் நடந்தது. அது இஸ்லாமியமயமானது.

ஆப்ரிக்காவில் சில கிறிஸ்துவர்களின் செயலுக்கு ஏசு பொறுப்பாகமாட்டார். இது போன்ற செயல்கள் கிறிஸ்துவம் அல்ல, மரபு வழி இயற்கை வழிபாடு. இதுபோன்ற செயல்கள் கிறிஸ்துவர்களால் ஏசுவின் பெயரால் செய்யப் படுகின்றன. ஆனால் அவைகள் ஏசுவின் போதனைகள் அல்ல. அது ஆப்ரிக்க மக்களின் மனங்களில் எஞ்சிஇருக்கும் இயற்கை வழிபாடு ஆகும்.

கிறிஸ்துவம் தான் மனிதனால் சொல்லப்பட்ட பொய்களிலேயே மிகவும் கொடூரமான பொய்யான காலத்திற்கும் நெருப்பில் எரியக்கூடிய நரகதண்டனையை பரப்பியது என்பதை மறந்துவிடாதீர்கள். இதைத்தான் முகமது பயன்படுத்திக் கொண்டார். ஏசுவின் திரும்பி வருவேன் என்ற உறுதி மொழியால்தான் இன்று பல ஏமாற்றுப் பேர்வழிகள் தாங்கள்தான் மறுவரவு என்று கூறிக்கொண்டு அப்பாவி குழந்தைகளையும் பெண்களையும் காம இச்சைக்கும் மற்றவர்களை பணம் பிடுங்குவதற்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நரகம் சொர்க்கம் என்பது மிகவும் பழைய நம்பிக்கை. இந்த மோசடியை ஆரம்பித்தது யார் என்பது யாருக்கும் தெரியாது. இருப்பினும், இங்கே யாரோ பின்னூட்டமிட்டதைப் போல இந்த நம்பிக்கையை ஆரம்பித்தது ஏசுவல்ல. ஏசு மக்களை நரகத்தைக் காட்டி பயமுறுத்தவில்லை. இதை செய்தது மத வெறியனான போல் (Paul) தான். இவர் தான் தனது புதிய மதத்தில் இந்த விசயத்தை நுழைத்துவிட்டார்.

தூதுவர்கள் திரும்ப வருவார்கள் என்ற மக்களின் நம்பிக்கையை முகமது போன்ற மோசடி பேர்வழிகள் பயன்படுத்திக் கொண்டு எண்ணற்ற மனிதர்களை ஏமாற்றியும் ஏமாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை கூட மிகவும் பழையது தான். எப்பொழுதெல்லாம் மக்கள் அநீதிகளுக்கு ஆளாகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்கள் இறைதூதரை கற்பித்துக் கொள்கிறார்கள். இது அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. இன்று மனித இனத்தின் வாழ்க்கை முன்னெப்போதையும் விட பாதுகாப்பானது. நமது முன்னோர்களுக்கு நேர்ந்ததைப் போன்ற அநீதிகள் இன்று நாம் இழைத்துக் கொள்வதில்லை. ஆகையால் இறைதூதர்களின் தேவையும் இல்லை. நம்மை நாமே விடுவித்துக் கொள்ளலாம். தூதுவர்களுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

உங்களுக்கு இஸ்லாம் பிடிக்காதது எனக்கு புரிகிறது. அது எனக்கும் பிடிக்காது. அதன் மீது நீங்கள் கொண்டுள்ள உள்ளார்ந்த வெறுப்பு உங்கள் விருப்பம். இஸ்லாம்மிற்கும் முகமதிற்கும் நீங்கள் வெறுப்பை உமிழ்கிறீர்கள். ஏசுவைப் பற்றி பேசும் போது நீங்கள் மிகவும் இனிமையாக பேசுவது (எனது கருத்துப்படி) நன்றாகப் படவில்லை. அதனால் தான் நீங்கள் ஒரு கிறிஸ்துவன் என்று சந்தேகப்பட்டேன்.

ஏசுவை முகமதுடன் ஒப்பிடுவது நேர்மையற்றது. ஏசு மற்றவர்களின் மீது திடீர் தாக்குதல் நடத்தினாரா? படுகொலைகளைப் புரிந்தாரா? வல்லுறவு கொண்டாரா? கொள்ளை அடித்தாரா? கொலைகளை தூண்டினாரா? இல்லை அவற்றை கட்டளை இட்டாரா? பெண் குழந்தைகளிடம் உடலுறவு கொண்டாரா? ஒரு கிராமத்தின் ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டு மீதமுள்ள பெண்களுடன் வல்லுறவு கொண்டாரா?

நீங்கள் கடவுள் நம்பிக்கையை துறந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். நடுநிலை உணர்வையும் கூடவே துறந்து விட்டீர்களா? ஏசுவை முகமதுடன் எந்த வழியில் ஒப்பிடமுடியும்? வாதத்திற்க்காக, ஏசுவைப் பற்றிய கதைகள் உண்மை என்று கொள்வோம். நான் சொல்வது அவர் செய்ததாக சொல்லப்படும் அற்புதங்களை அல்ல, அவரின் போதனைகளும் அவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையும். அவரை ஒரு மனிதனாக ஆராய்ந்து பாருங்கள். முகமது எசுவைப்போல நேர் எதிராக மாறுபடும் வேறு இரு மனிதர்கள் யாரேனும் இருக்கிறார்களா?

நான் கிறிஸ்துவனாக இருக்க முடியாது. ஏனென்றால், நான் மனித விவகாரங்களில் தலையிடும் கடவுளை நம்புவதில்லை. அப்படி ஒரு கடவுள் இருந்தால், உலகமே அநீதியின் ஆதாரத்தில் இயங்குகிறது என்பதை எண்ணிக்கொள்ளும்போது, அவர் வணங்குவதற்கு அருகதை அற்ற சுயநலமான மற்றும் குரூரமான கடவுளாகும். நான் ஒரு வேகன் (விலங்குகளுக்கு எந்த வித தீங்கும் இளைக்காமல் இருப்பதற்காக இறைச்சி, பால் பொருள்கள், முட்டை, தேன், போன்ற பொருள்களை உண்ணாதவன்).  ஏனென்றால் நான் உண்ணவேண்டும் என்பதற்காக ஒரு அன்பான விலங்கை கொல்வதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. ஆமாம், நான் மனிதர்களை விட விலங்குகளை அதிகமாக நேசிக்கிறேன். விலங்குகளிடத்தில் வஞ்சகம் இல்லை. இருப்பினும், இந்த கடவுள், ஒரு விலங்கின் உணவாக மற்றொரு விலங்கை படைத்திருக்கிறார். இந்த கடவுள், இரையாகும் விலங்குகளுக்கு கூட வலியையும் உணர்வுகளையும் படைத்திருக்கும் அளவிற்கு வெறுக்கத்தக்கவர். ஒரு கன்றுக்குட்டி ஒரு புலியினால் கடித்துக் குதறப் படும் போது அதன் அம்மா எவ்வளவு துக்கம் அடைகிறது. குட்டியின் இழப்பை எண்ணி எவ்வளவு கண்ணீர் விடுகிறது. கடித்துக் குதறப்படும் போது அந்த கன்றுக்குட்டிக்கு எவ்வளவு வலி இருந்திருக்கும். இது எவ்வளவு வெறுக்கத்தக்கது! இவ்வளவு மட்டமான நெறியுடைய ஒரு கடவுளை எப்படி துதிப்பது?

நான் கடவுளைப் பற்றி பேசவில்லை. ஏசு என்ற மனிதனைப் பற்றி பேசுகிறேன். ஏசுவின் போதனைகளிலோ அவரின் வாழ்க்கையிலோ ஏதேனும் தீய்மையை கண்டு பிடியுங்கள், நான் அதை கண்டிக்கிறேன். கடவுளை மறுப்பதால் மட்டும் நேர்மையையும் நடுநிலையையையும் மறந்து விடமுடியாது.

முகமது முற்றிலும் மாறுபட்டவன். அவன் செய்யாத குற்றம் ஒன்றுமில்லை. அவனின் போதனைகள் எல்லாமே கொடுமையானது.

கிறிஸ்துவர்கள் தீய்மை செய்கிறார்கள் என்றால் அவர்கள் ஏசுவின் போதனைகளில் இருந்து விலகிப் போகிறார்கள் என்று பொருள். முஸ்லிம்கள் ஏதேனும் நல்லதைச் செய்கிறார்கள் என்றால், அவர்கள் தங்கள் தூதுவரை மீறிச் செய்கிறார்கள் என்று பொருள். அவனை பின்பற்றும்போது அவர்கள் கொடூரமானவர்களாக மாறுகிறார்கள். ஒரு நல்ல கிறிஸ்துவர் அன்னை தெரசாவாக மாறுகிறார். ஒரு நல்ல இந்து காந்தியாக மாறுகிறார். ஒரு நல்ல புத்த மதத்தினர் தலாய்லாமாவாக மாறுகிறார். ஒரு நல்ல முஸ்லிம் கொமேனியாக மாறுகிறார்.

நான் ஏன் நாஸ்திகத்தை வளர்க்கவில்லை என்றால் அது மனிதர்களை மேம்படுத்துவது குறைவு. மதவெறியர்களைப் போலத்தான் நாஸ்திகர்களும் வெறியர்களாகவும் நீதி இழந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாஸ்திகமே ஒரு மதம். அவர்கள் மற்ற மதத்தை குறைகூறவும் வெறுக்கவும் செய்கிறார்கள். பல நாஸ்திகர்கள் பாலினை (Palin) அவர் கடவுள் நம்பிக்கை உடையவர் என்பதற்காக கேவலப்படுத்தி மோசடிப் பேர்வழியான ஒபாமாவுக்கு ஆதரவளித்தனர். இது எனக்கு பரிசேயர்களின் (Pharisees) ஏசுவுக்கு பதிலாக பரப்பாசை (Barabbas) தேர்ந்தெடுத்த குறுக்கு புத்தியை நினைவு படுத்துகிறது. வெறித்தனம் மக்களை எப்படி குருடர்களாக்குகிறது என்பது மிகவும் வியக்கத்தக்கது.

என்னைப் பொறுத்தவரையில் நாஸ்திகம் என்பது ஒரு தத்துவம். நான் ஒரு நாஸ்திகன். ஏனென்றால், கடவுள் இருக்கிறார் என்றோ அவர் இவ்வுலகத்தையே நடத்துகிறார் என்றோ என்னால் நம்பமுடியவில்லை. கடவுளுக்கு இருப்பதாக சொல்லப்படும் சக்தி எனக்கு இருந்திருந்தால் அவரை விட நன்றாக படைத்திருப்பேன். அண்டத்தில் அணுக்கள் உட்பட எங்கும் பரவி இருக்கும் ஒரு அறிவாற்றல் (intelligence) இருப்பது உண்மைதான். ஆனால் அறிவாற்றலுள்ள ஒன்று (intelligent being) இவ்வண்டத்தை நடத்துவதில்லை.

மற்ற நாஸ்திகர்களுக்கும் எனக்கும் வேறுபாடு என்னவென்றால் எனக்கு நம்பிக்கைகள் இரண்டாம்பட்சம் தான். செயல்கள் தான் முதன்மையானது. நம்பிக்கைகள் அல்ல. நம்பிக்கைகள் மாறலாம். ஒரு சட்டையை மாற்றும் அளவுக்கு எளிதாக இது நடக்கலாம். எனக்கு இப்படித்தான். ஒவ்வொரு நாளும் புதிய விசயங்களை அறிந்துகொண்டு அதற்கேற்ப என் எண்ணங்களை மாற்றிக்கொள்கிறேன். வருடங்கள் போகப்போக என் எண்ணங்களும் பெரிய அளவில் மாறியிருக்கின்றன. இதை ‘நம்பிக்கைகளின் பரிணாமம்’ என்று அழைக்கிறேன்.

நான் மனிதர்களில் அவர்களின் மனிதத்தன்மையைத்தான் பார்க்கிறேன். அவர்களின் நீதி மற்றும் நடுநிலை உணர்வையும், பரிவையும், அன்பையும், மற்றவர்களின் மீதுள்ள அக்கறையையும் தான் பார்க்கிறேன். அறிவின் தேடல் (Intellectualism) என் மனதை துடிப்பாக வைத்திருக்கிறது. ஆனால் அன்புடன் செய்யும் சிறிய செயல்களும் என் மனதை உருகவைக்கிறது. நான் தயாள குணத்தை (goodness) வளர்க்க விரும்புகிறேன். நம்பிக்கைகளைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை.

Ali Sina

மொழிபெயர்ப்பு:Ali Sina’s Tamil Fan.