நான் எப்போதும் என் கட்டுரைகளில், நாசீசிஸ தனிமனித இயல்பு கோளாறின் (narcissistic personality disorder or NPD) தாக்கமே முஹம்மதுதின் வெறுப்பிற்கு காரணம்  என்று அவர் மீது குற்றம் சுமத்துகிறேன். மேலும் என்னுடைய “முஹம்மதுவை பற்றி அறிவோம்” புத்தகத்தில் முஹம்மது ஒரு கொடிய “தன்னைத்தானே காதல் செய்வது” என்ற நோயால் அவதிப்பட்டார் என்பதை அதை படிக்கும் அனைவருக்கும் தெளிவாக விளக்குகிறது.

நாசீசிஸ தனிமனித இயல்பு கோளாறு உள்ள ஒரு நபரை, நாம் விமர்சனம் செய்யும் போது பெரும்பாலும் ஆத்திரமாக, அவமானபடுத்தும் விதமாக அல்லது இழிவாக குரூரமாக நம்மை தாக்குகிறான். தனது கூற்றுக்கள் முரணாக இருக்கும் பட்சத்தில், மற்றவர்கள் அவரது கூற்றுக்களை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறான், அந்த கூற்றுக்களை நிரூபிப்பதற்கு பதிலாக அச்சுறுத்துகிறான். (முஹம்மது வாழ்க்கை) குறித்தான சீராவை மற்றும் குர்ஆனை படிக்கும் போது, துல்லியமாக நமக்கு தெரியும் ஒரு காட்சியாகும்.

ஆனால் அவரது குணத்தை வடிவமைப்பதில் மற்றொரு காரணி இருந்தது : யூத மதக்குருக்களின் தாக்கம்.

யூத மற்றும் இஸ்லாமிய மதங்களில் இரண்டுக்கும் பொதுவாக நிறைய விஷயங்கள் உள்ளன. உலகின் அல்லது மனித குலத்தின் முடிவு குறித்தான கொள்கை மற்றும் போதனைகளில் அவைகள் அடிப்படையில் ஒரே மாதிரியாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, விபச்சாரம் செய்பவர்களை கல்லால் எறிந்து கொல்லும் வழக்கம் இஸ்லாமால் அதிகமாக நடைமுறைப்படுத்தப்படும் ஒன்று. இது பபைபிளில் உருவானதாகும். முஹம்மது கல்லால் எறிந்து கொல்லும் வழக்கத்தை நடைமுறை படுத்தினாலும், குர்ஆன்ல் அதை சேர்க்கவில்லை. ஆனால் அவர் ஒரு சட்டம் தெளிவாக இல்லாத போது, இஸ்லாமியர்கள் வழிகாட்டியாக பைபிளை பார்க்க வேண்டும் என்றார்.

இவைகள் தான் இஸ்லாமியம் மீதான யூத மதத்தின் மறைமுக தாக்கமாகும். சகிப்புத்தன்மை இல்லாததே இந்த இரு மதங்களுக்கு இடையேயான பொதுவான அம்சமாகும். யூத நூல்களில் இருந்த இந்த சகிப்புத்தன்மை இல்லாத வார்த்தைகளே நாசீசிஸவாதி முஹம்மதுக்கு அவர் மனம் விரும்பும்போதெல்லாம் அவருக்கு தேவையான சக்தியை கொடுத்தது. எனவே அவர் இந்த கருத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது.  அதுவே மற்றவர்கள் அவரை கேள்வி கேட்காமல் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்க வைத்தது. மறுத்தால் நரக நெருப்பை சொல்லி அவர்களை மிரட்டினார்.

எவ்வாறு அது சாத்தியமானது? நிரூபிக்கப்படாத, பகுத்தறிவற்ற அவரது போதனைகளை மக்கள் ஏன் நம்பினார்கள்? இந்த கேள்விகளுக்கு பதில் யூதமதத்தில் உள்ளது. அரேபியாவில் இருந்த யூத மதக்குருக்கள், சகிப்புத்தன்மை உடைய பாகன்களுக்குppppPagansPP மத்தியில் இஸ்லாமுக்காண உளவியல் ரீதியான அடித்தளத்தை நிறுவினர். 2000 ஆண்டுகளாக அவர்கள் Yahweh வை பற்றி போதித்தார்கள், அதாவது அவர்களின் கடவுள் பகுத்தறிய இயலாதவர், அவருடைய வழிகள் வித்தியாசமானது. எனவேதான் அவை சிலசமயம் அநியாயமாகவும், தீயதாகவும் தோன்றும் என்றனர். இருப்பினும் கடவுளின் ஞானத்தை மனிதர்கள் கேள்வி கேட்க தகுதி உள்ளவர்கள் அல்ல என்றனர்.

இது போன்ற அதிகாரம் மற்றும் ஆற்றல்தான் நாசீஸவாதியின் ஒரு சொப்பன ஸ்கலிதம். அதே சகிப்புத் தன்மையற்ற யூதர்களின் கடவுளின் தூதன் என்று கூறுவதால், முஹம்மது அவரது கூற்றை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அரேபியாவில் இருந்த யூத மதக்குருக்கள் மூலம் ஆரம்பகட்ட வேலைகள் செய்து முடிக்கப்பட்டிருந்ததே, அரபுக்கள் முஹம்மதின் வலையில் விழுந்ததன் காரணம்.

நான் பல முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ அறிஞர்களுடன் விவாதம் செய்திருக்கிறேன். நான் விவாதம் செய்த ஒரே ஒரு யூத மத குருவிடமும் ஒபாமா பற்றியே விவாதம் செய்தோமே அன்றி மதம் பற்றி அல்ல. அவர் மிகவும் பகுத்தறிவற்றவராக இருந்தார். ஆனால் அதில் அரசியல் இருந்தது.

சமீபத்தில் நான் ட்விட்டரில் இணைந்தேன். நான் யூதர்கள் இனப்படுகொலை குறித்து ட்வீட் அழைப்பு விடுத்திருந்த ஒரு பாலஸ்தீன மதகுருக்கு ட்வீட் செய்தேன். பதிலுக்கு ராபி (யூத மதகுரு) ட்வீட் அனுப்பினார். இதுவே எங்களது பரிமாற்றம்.

அலி சினா 17 ஜனவரி: யூதர்கள் இனப்படுகொலை குறித்து யூத மத குரு அழைப்பு விடுக்கிறார்

ரபி ஷஉல்17 ஜனவரி: உண்மைதான் சில யூதர்கள் இறந்து போகிறார்கள் ஆனாலும்………யார் மிக கேவலமான சாத்தானின் செய்கைகளை செய்தாலும்,  யஹோவா எப்போதும் சில யூதர்களை மிச்சமாகவைக்கிறார்,

அலி சினா: கடவுள் 6 மில்லியன் அப்பாவி மக்களை எரித்து கொல்லும்படி கைவிட்டதால், நாம் சாத்தானிடம் இருந்தும் முஹம்மதினிடம் இருந்தும் தற்காத்துக்கொள்ள நமது சொந்த ஆதாரங்களை நம்புவது இப்போது மேலானதாகும்.

ரபி ஷஉல்: நீங்கள் மனிதனின் ஞானத்தை வைத்து அவைகளைப் பார்கிறீர்கள், மற்றும் கடவுளின் திட்டம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. 2 – அவர்கள் இரட்சிக்கப் படவில்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்.

அலி சினா: நீங்கள் கூறும் அந்த கடவுள் எனக்கு மனித அறிவைத் தவிர வேறு ஞானத்தை எனக்குத் தரவில்லை. மனிதனின் அறிவினால் இல்லாவிடில் வேறு எந்த அறிவினால் நான் நியாயத்தை காண முடியும்?

ரபி ஷஉல்: உங்களுக்கு மனித அறிவுமட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கலாம், ஆனால் சாலமன் அதற்கும் மேலான ஒரு ஞானத்தை பிரார்த்தனை செய்தான் & கிடைத்தது. உங்களுக்கு பரிசுத்த ஆவியானவர் ஞானம் கூட வழங்கப்பட்டு இருக்கிறது. கடவுளால் முடியாது ஒன்றும் இல்லை. நீங்கள் 6 மில்லியன் மற்றும் ஸ்டாலினால் இறந்த 40 மில்லியன் மக்களும் இறந்தது பயனற்றது என்று நினைக்கிறீர்களா? கடவுளுக்குதெரியும்.

அலி சினா:ஆம், நான் அவர்கள் இறந்தது பயனற்றது என்று தான் நினைக்கிறேன். அவை ஒன்றும் நடக்க கூடாததாய் இருந்தது. அது கடவுளின் கவனக் குறைவையும் , கையாலாகாதனத்தையும், அறியாமையையும் தான் காட்டுகிறது.

ரபி ஷஉல்:அவர்கள் இறந்தது வீண் போகவில்லை. கவனக்குறைவு , ஆதரவற்றிருப்பது அல்லது அறியாமைக்கு போன்றவற்றிற்கு மேலானவர் கடவுள். அவரால் எதுவும் ஆகும். – அவர் தான் உங்களை உருவாக்கினார். நீங்கள் கடவுளை சரியாகத்தேடவேண்டும்.

அலி சினா: மக்கள் அனைவரும் சுதந்திரமானவர்கள் என்று காண்பிக்க , மில்லியன் கணக்கில் மக்களை கொல்ல கடவுள் ஹிட்லரை அனுமதித்தார். இது அவர்கேலிக்குரியவர் என்று காட்டுகிறது.

ரபி ஷஉல்: எனக்கு உங்களின் வலியை புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் தோரா மற்றும் மெசியாவின் நற்செய்தியை புரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்யாத வரையில், நீங்கள் குழப்பத்திலேயே இருப்பீர்கள். கடவுளுடனான உண்மையான உறவை தெரிந்து கொள்ளும்படி உங்களுக்கு உதவ நாங்கள் மிக ஆவலாக உள்ளோம். அது உங்களுக்கு ஒரு அற்புதமான ஒரு வெகுமதியாகும். தயவு செய்து கடவுளை வெறுக்காதீர்கள்.

அலி சினா: அன்புள்ள ராபி அவர்களே, நான் கடவுளை வெறுக்கவில்லை, ஏனென்றால் அவர் உண்மையில் காணப்படவில்லை. மாறாக அவர் இருந்தால் இகழ்ந்து வெறுப்பதற்கே தகுதியானவராவார் .

ரபி ஷஉல்: இப்படி சொல்வதற்கு மன்னிக்கவும் , நீங்கள் சொல்வது சரியல்ல. உண்மையில் கடவுள் இருக்கிறார். அவர் இப்போது உங்களிடம் தன்னை வெளிப்படுத்தவில்லை, அதற்கு காரணமும் நீங்கள் தான்.

நீங்கள் உண்மையில் கடவுள் இருக்கிறார் என்று காண விரும்புகிறீர்களா? நீங்கள் மனபூர்வமாக உங்களிடம் உள்ள தவறை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்களா ?

Psa 14:1 ல் கடவுள் இல்லை என்று முட்டாள் தன் இருதயத்தில் சொல்கிறான். அவர்கள் கேடு நிறைந்தவர்கள், அவர்கள் மிகவும் வெறுக்கத்தக்க காரியங்களை செய்கிறார்கள்… கடவுள் இப்படித்தான் சொன்னார்.

Psa 10:8 ல் நேர்மையான இருதயம் கடவுளின் கட்டளைகளை பெறுகிறது. ஆனால் தன்னில் உளறுகிற மூடன் வீழ்வான்.. கடவுள் உங்களை குறித்து மிக சரியாக சொன்னார் என்று உங்களுக்கு நிருபிக்கவும் வேண்டுமா?

அலி சினா: இது கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம் இல்லை.இது ஒருவரின் தனிப்பட்ட பரிசீலனைகள். – ஒரு தர்க்கரீதியான தவறான நம்பிக்கை. நான் தர்க்க ரீதியாக காண விளைகிறேன். அவர் அப்படியல்ல. எவ்வாறு  ஒருவர் அதை விளக்க முடியும்.

ரபி ஷஉல்: இப்போது உங்கள் சிந்தனை எங்கிருக்கிறது என்று காண்பதற்காக நான் அவைகளை பயன்படுத்தினேன். அனைத்தையும் விவரிக்க இரண்டு வசனங்கள் தேவைப்படும் என்று நான் நினைக்கவில்லை?. நீங்கள் நெடுநாள் வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

அலி சினா: நான் என்ன விரும்புகிறேன் என்பதும், நிதர்சனம் என்பதும் வேறு வேறானவைகள். நான் கோடிஸ்வரனாக ஆகவேண்டும் என்று விரும்புவதில்லை. மாறாக சாவாவரம் வேண்டுமென விரும்புகிறேன். ஆனால் நிதர்சனமான உண்மைக்கு என்னை சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது.

ரபி ஷஉல்: துரதிருஷ்டவசமாக, நீங்கள் என் ஊரில் இல்லை, இருந்தால் நான் என்னுடன் ஒரு வாரம் செலவிட சொல்வேன் – பின் நீங்கள் கடவுள் என்பது உண்மை என்று காண்பீர்கள். நான் பேச மாட்டேன். ஒ மன்னிக்கவும் , நான் உங்களிடம் பேசி உங்களை நம்ப வைக்க முயற்சி செய்ய மாட்டேன் என்று சொல்ல வந்தேன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கடவுள் என்ன செய்கிறார் என்று கண்டு உணர்ந்தால் போதும்.

அலி சினா: நான் உங்களுடன் உடன் இருந்தால் ஒருவேளை உங்களின் வசீகரத்தினால் கவர்ந்து இழுக்கப் படுவேன். ஆனாலும் கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம் அதுவல்ல. அறிவுப் பூர்வமாக உங்களால் கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்க முடியுமா ?

ரபி ஷஉல்: கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்க என்ன விதமான பகுத்தறிவை பயன் படுத்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள். அறிவியலும் , வரலாறும் பைபிளும் எவற்றிலெல்லாம் ஒத்துப் போகின்றன என்று நமக்கு தெரியும். உங்களுக்கு உண்மை தெரியும்.

நீங்கள் இந்த மூன்றையும், பகுத்தறிவினால் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா ? அறிவியலையும், வரலாறையும், புனித நூல்களையும் நினைத்துப் பாருங்கள்.

ஆம். என் கவர்ச்சி என்பது அதற்கே உண்டான ஒருஅதிசயம் தான். ஆனால் அதை நான் பயன் படுத்தமாட்டேன். நீங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நான் கடவுளானவர் அவருடைய மாட்சியைபயன் படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். நான் தூசிக்கு சமானமானவன்.

அலி சினா: நான் அறிவியலோடும் வரலாறோடும் அறிவோடும் (மனித அறிவு) ஒத்துப்போகிறேன். நான் புனித நூல்களை நம்புவதாக இருந்திருந்தால், இந்த வாதமே அவசியமில்லாமல் இருந்திருக்கும்.

ரபி ஷஉல்: ஒருவேளை இப்படி செய்வோம், முதலில் நாம் புனித நூல்களில் உள்ள வரலாறை பார்ப்போம், பின் புனித நூல்களில் உள்ளவை உண்மையா பொய்யா என்று அறிவியலையும் மனித வரலாறையும் வைத்து சோதித்துப்பார்ப்போம்.

அலி சினா: நீங்கள் புனித நூல்களில் இருந்து மேற்கோள் காட்ட முடியும்,……………, நீங்கள் ஒரு இஸ்லாமியரோடு வாதம் செய்யும் போது , குரான் நை ஒரு சாட்சியாக ஏற்றுக்கொள்வீர்களா? இல்லையே. ஏன் இல்லை?

ரபி ஷஉல்: சுவாரஸ்யமாக இருக்கிறது. இஸ்லாமுக்கு குரான் பைபிள் போன்றது. ஆனால் நீங்கள் கடவுளைப் பற்றி விவாதிக்கும் போது நான் பைபிளை பயன்படுத்தக் கூடாது என்கிறீர்கள். எனவே உரையாடலானது கடவுள் உண்மையில் இருக்கிறாரா என்பது பற்றி அல்ல. கடவுளா அல்லது அல்லாவா என்பது பற்றி, நீங்கள் அல்லா உண்மையானவர் என்று நம்புகிறீர்கள். நான் சொன்னது சரிதானே?

அலி சினா: நான் அல்லா மற்றும் கடவுள் என்பது ஒரு கற்பனை கதை என்று நம்புகிறேன். ஒன்று ரத்த காட்டேரி போன்றது. மற்றொன்று தேவதை போன்றது.  இரண்டுமே கற்பனை தான். ஆனால் வேறானது

ரபி ஷஉல்: சரி……..நாங்கள் என்ன பெயரைப் பயன் படுத்தினாலும் சரி அனைத்தையும் படைத்தவரை மொத்தத்தில் நிராகரிக்கிறீர்கள். நீங்கள் எப்போது இந்த விவாதத்திற்கு தயாரோ(ஒருவேளை) அப்போது தெரியப்படுத்தவும். சமாதானம்.

கடவுளிடம் நான் கொண்டுள்ள பிராத்தனைகள் அனைத்தும் அன்பே அன்றி வெறுப்பல்ல என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

அலி சினா: இல்லாத ஒன்றை நான் எவ்வாறு மறுதலிக்க முடியும். நான் இந்த விவாதத்திற்கும் மற்றும் என்னுடைய வலைதளத்திலும் பதிவிடதயார். மின் அஞ்சல் மூலமாக சரியாக இருக்குமா ?

ரபி ஷஉல்: மின் அஞ்சல் மூலமாக மிகசரியாக இருக்கும் ? ஆனால் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக என்னுடைய பிராத்தனைகளும் இருக்கும். ஏனென்றால் அதன் வழியேதான் கடவுளும் அவரது அன்பும் உண்மையானது என்று காண்பிக்கமுடியும்.

அலி சினா: நிச்சயமாக. நீங்கள் பிராத்தனை செய்யலாம்.  அது நன்மையையே அறிவிக்கிறது. அதில் ஒன்றும் தவறில்லை.(நீங்கள் இஸ்லாமிய முறைப்படி பிராத்தனை செய்யாதவரை. ஏனென்றால் அது வெறுப்பை உமிழ்கிறது.) உங்களின் மின்னஞ்சல் முகவரி என்ன?

ரபி ஷஉல்: என்னுடைய பிராத்தனைகளில் வெறுப்பிருக்காது. ஆனால் என்னுடைய பிராத்தனைகள் எப்போதும் அன்பானது என்று கூற முடியாது.

[email protected]

நீங்கள் இந்த விவாதத்தில் பங்கெடுப்பேன் என்று கூறியது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

இந்த அறிமுக கருத்து பரிமாற்றங்களுக்கு பின் நான் ராபிஷாஉல் அவர்களுக்கு பின் வரும் கடிதத்தை அனுப்பினேன். தயவு செய்து கவனத்தில் கொள்ளவும். கடவுள் என்னை அன்பு செய்கிறார் என்று என்னிடம் நிரூபிக்க, ராபிஷாஉல் அவர்கள் தான் என்னை இந்த விவாதத்திற்கு அழைத்தார். நான் அவரிடம் இதை என் வலைத்தளத்தில் பதிவிடுவேன் என்றேன். அதற்கும் அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை. மேலும் தயவு செய்து கவனிக்கவும், என்னுடைய tweeter லோ அல்லது என்னுடைய மின் அஞ்சலிலோ, என் எதிராளியை ஒரு போதும் மரியாதைக் குறைவாய் பேசவில்லை. இதோ அந்த கடிதம்

அன்புள்ள ரபி ஷஉல்,

பொதுவாக நான் கடவுள் எனும் தலைப்பில் விவாதம் செய்வதில்லை என்றாலும், இது போன்றதொரு விவாதம் உங்களுடன் செய்வது எனக்கு பெருமையாகும். நான் நடைமுறை விளைவுகளை நம்புகிறவன், எனவே கடவுள் இருக்கிறாரா என்பது குறித்து நான் விவாதிப்பதில்லை, நாத்தீகம் சிறந்த மனிதர்களை உருவாக்குகிறது என்பதில் நான் ஒரு ஆதாரத்தையும் காணவில்லை. அதேபோல் மதமும் சிறந்த மனிதர்களை உருவாக்குகிறது என்பதிலும் நான் ஒரு ஆதாரத்தையும் காணவில்லை. நான் பெரும்பாலான மக்களின் குணாதிசயங்களை அறியும் வாய்ப்பு கிடைத்த போது, மனிதர்களை விட விலங்குகளை அதிகம் நேசிக்க ஆரம்பித்தேன். ஆம் உண்மையில் மிக அற்புதமான பலமனிதர்களை சந்திக்கும் வாய்ப்பும் அதிர்ஷ்டமும் எனக்கு வாய்த்தது. சிலர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். சிலருக்கு இல்லை. ஆனால் பொதுவாக, நான் மிக உயரிய ஒரு ஜீவனை காணவில்லை. நாம் கடவுளின் சாயலாக உருவாக்கப் பட்டிருந்தால், கடவுள் மிக வசமாக மாட்டிக்கொண்டார்.

எப்படியோ, அது ஒரு தனிக் கதை, நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நான் ஒரு நாத்திகன், காரணம் அது எனக்கு அறிவுப் பூர்வமாக படுகிறது. அறிவுப்பூர்வமாக மற்றும் தத்துவார்த்தமாக நான் ஒரு நாத்திகன் என்பதை ஏற்று கொள்கிறேன். ஆனால் மதத்தின் அடிப்படையில் அல்ல. நான் கிறிஸ்தவ சுவிசேஷத்தை போதிக்கும் ஒரு நாத்திகன் அல்ல. ஒரு வேளை பேரா.ரிச்சர்ட்டாவ்கின்ஸ்(Prof.Richard Dawkins) நாத்தீகம் மக்களை இன்னும் ஒழுக்கமாகவும் நன்னடத்தையோடும் மற்றும் மகிழ்ச்சியோடும் வைத்திருக்கிறது என்று காண்பித்தால், கடவுளுக்கும் மதத்திற்கும் எதிரான அவரது சிலுவைப் போராட்டத்தில் நானும் இணைந்து கொள்வேன். இது போன்றதொன்று நடக்காத வரையில் நான் இதுபோன்ற விவாதத்தில் இருந்து ஒதுங்கி இருப்பேன்.

உண்மை என்னவென்றால் நாத்தீகத்தின் பேரால், மிக பயங்கரமான குற்றங்களை நாத்தீகர்கள் புரிந்திருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் நாத்தீகவாதிகள் என்ற உண்மையில், யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை, மேலும் கம்யூனிஸ்டுகள் அவர்களது நம்பிக்கையின் பேரில் மக்களுக்கு எதிராக அவர்கள் செய்த குற்றங்கள் நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சில நாத்தீகர்கள் ஹிட்லர் கடவுள் நம்பிக்கையுள்ளவன் என்கிறார்கள். இது ஒரு பொய். அவனுடைய குரூரமான எண்ணங்களை முன்மொழியும் பொருட்டு சில நேரம் கடவுளை அழைக்க வேண்டி அவன் மதத்தை பயன்படுத்தினான்., மாறாக ஹிட்லர் தானே கடவுள் என்றும் தன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும் நம்பினான். அவன் கிறிஸ்த்தவத்தில் உள்ள அதன் போதனையான அனைவரையும் அன்பு செய்தல், மற்றும் வன்முறையின்மை என்பவை பலவீனத்தின் வெளிப்பாடு என்று சொல்லி அதை வெறுத்தான். அவன் முஹம்மதின் மீது அளவு கடந்த மதிப்பு கொண்டிருந்தான். மேலும் இஸ்லாம் ஜெர்மனியை வெற்றி கொள்ளவில்லை என்று ஒருவரின் மரணத்திற்காக கதறி அழுகிற ஒருவனைப்போல் அழுதான். ஆள்பவரை மதிக்கும் அறிவிழந்த பக்தி, வன்முறை மீதான நாட்டம் போன்ற இஸ்லாமிய குணங்கள் , ஜெர்மானிய உணர்வுக்கு மிக சரியாக பொருந்த கூடியது என்று நினைத்தான். மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அரபியர்களை விட உயர் குலமான ஜெர்மானியர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் வாரிசுகளாக ஆகிவிடுவார்கள் என்று முட்டாள்தனமாக சிந்தித்தான். நிச்சயமாக இது அவனது மற்றொரு வீணான நம்பிக்கையாகும். மரபணு ரீதியாக பெர்சியர்கலாகிய நாம், ஜெர்மனியர்களின் மரபணுவோடு பங்கு கொள்கிறோம். மேலும் நாம் அராபியர்களை விட மிக மிக உயர்ந்த நாகரீகம் உள்ளவர்கள். இருந்தாலும் நம்முடைய தற்போதைய நிலை இஸ்லாம் காரணமாக பாதிக்கப்பட்டு இறந்து, ஒரு ஓட்டினுள் அடைபட்டு கிடக்கும் இழிநிலை போல் தாழ்ந்து போனோம். மனித உரிமை குறித்து முதல் ஆவணம் வெளியிட்ட நம்முடைய நாடு, தற்போது உலகிலேயே மனித உரிமை மீறலில் முதன்மையாய் உள்ளது. இஸ்லாம் ஜெர்மனியை வெற்றி கொண்டிருந்தால் ஜெர்மனியும் இரானை போலவோ அல்லது வேறு எதாவது ஒரு இஸ்லாமிய நாட்டை போலவோ அல்லாது அதைவிட மேலானதாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

நாத்திகர்கள் கைகளில் ரத்தக் கரை படிந்துள்ளது. மனித இனத்திற்கு எதிரான குற்றங்களில் நாத்திகர்களை  வெற்றி கொள்ளும் ஒரே ஒரு மக்கள் முஸ்லீம்களாகும். நாத்திகர்கள் கடந்த நுற்றாண்டில் 100 மில்லியன் மக்களுக்கும் மேலாக மக்களை கொலை செய்தார்கள்.  மேலும் முஸ்லீம்கள் 280 மில்லியன் மக்களை கடந்த 14 நுற்றண்டுகளில் கொன்றிருக்கிறார்கள். ஆம், இஸ்லாமில் காணப்படும் பல குழுக்களுக் இடையேயான போர்களில் அவர்கள் தங்களுக்குளே ஒருவரை ஒருவர் கொன்றவர்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகும்.

நாத்தீகத்திற்கு இதற்க்கு மேல் வேறென்ன வேண்டும்? இங்குள்ள பிரச்சனையே மதங்கள் அன்பு அல்லது சிநேகம் அல்லது இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைஊக்கு விக்கவில்லை. நமக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால் மதங்களே  மக்களிடையே வேற்றுமை மற்றும் வெறுப்பை தூண்டும் மிகப் பெரிய காரணியாக இருக்கின்றது. நடுநிலை இல்லாத சில உதாரணங்களை வைத்துக்கொண்டு அவர்கள் ஈடுபட்டிருக்கும் தர்க்கரீதியான தவறான வாதங்கள் சாட்சிகளை புறக்கணிக்கிறது. ஒருவருக்கொருவர் உண்மையில் வெறுப்பை கொண்டிருக்கும் மக்கள் ஒரே மத நம்பிக்கையை ஏற்கும்போது அந்த வெறுப்பை கைவிட்டு ஒற்றுமையாகிறார்கள் என்று அவர்கள் வாதம் செய்கின்றனர். அவர்கள் பொருட்படுத்தாமல் விட்டது என்னவென்றால் மனிதகுலம் ஒருவரை ஒருவர் வெறுத்து தங்களுக்குள்ளே சண்டையிடும் வகையில் புதிய ஒரு பிரிவை உண்டாக்கி, அவர்கள் செய்கைக்கு ஒரு புதிய சாக்கு சொன்னார்கள். சிக்மன்ப்ருட்து (Sigmund Freud )சொன்னது போல்,”வம்பு சண்டை சம்பவங்கள் வெளிப்படும் போது அதை ஏற்றுக்கொள்ள எப்போது சில மக்கள் மிச்சமாய் இருக்கிறார்களோ அப்போது கணிசமான எண்ணிக்கையிலான மக்களை அன்பினால் ஒன்று சேர்ப்பது என்பது எப்போதும் சாத்தியமாகிறது”

நான் கடவுள் மற்றும் மதம் குறித்தான விவாதத்தில் இருந்து முழுவதுமாக விலகி இருக்கிறேன். Prof.டவ்க்கின்ஸ்(Prof. Dawkins) மற்றும் காலம் சென்ற கிறிஸ்டோபர்ஹிட்சென்ஸ் (Christopher Hitchens) சொன்னது போல் மதமும் கடவுள் நம்பிக்கையுமே தீயவைகளின் தாய் என நான் காணவில்லை. சஹிப்புத்தன்மை இன்மையும் தனிமனித தத்துவார்ந்த நம்பிக்கைகளுமே தீயவைகளின் தாயாக நான் காண்கிறேன். ஒரு நாத்திகன் ஆத்திகவாதிகளைப் போலவே சஹிப்புத்தன்மை இன்மையும் தங்களுக்கே உண்டான சுய தத்துவார்ந்த நம்பிக்கை உடையவனுமாய் இருக்கிறான்.

முற்றிலும் அறிவுசார்ந்த பயிற்சிக்காகவே உங்களுடன் நான் விவாதம் செய்வேன். மக்கள் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களாய் இருந்தால் அவர்கள் தங்கள் விசுவாசத்தை கைவிடும்படி நான் விரும்புவதில்லை. நான் எதையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன். சந்தேகமே ஒரு மனிதன் மற்றொருவருக்கு அளிக்கும் மிகச்சிறந்த அன்பளிப்பு என்று நம்புகிறேன். இங்குள்ள அனைவரும் எதையும் சந்தேகத்தோடு காணும் திறனுடையவர்கள் அல்ல. அது ஒரு கலை. கற்றுக்கொள்ளக்கூடிய அந்த திறமையை பயிற்சி செய்வதின் மூலம் அந்த திறமையை மேலும் பட்டைதீட்ட முடியும். எதை குறித்தும் சந்தேகப்படுவதற்கு சாத்தியமாவதே ஞானத்தையும் சுதந்திரத்தையும் அடைவதற்கான முதல் படியாகும். என்னுடைய இளவயது வாசகர்கள் சந்தேகத்தின் மதிப்பை கண்டு உணர்ந்தார்களானால் நான் என் குறிக்கோளை அடைந்துவிட்டேன்.

நம்பிக்கை என்பது ஆத்தீகவாதிகளின் பிரத்யேக குணமல்ல. நான் அனேக ஆத்தீகவாதிகளை சந்தித்து அவர்களுடன் விவாதித்திருக்கிறேன்.  வெறுமனே அவர்கள் தங்களது நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்கள், அல்லது சிலநேரம் வைராக்கியமுடன் மதவெறி பிடித்தவர்களாய் இருந்தார்கள்.

இதையே தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலமாக நான் காண்கிறேன். அவர்களிடம் உள்ள கடவுள் நம்பிக்கையோ அல்லது அவநம்பிக்கையோ பிரச்சனைக்கான காரணம் அல்ல, பிரச்சனையே அந்த நம்பிக்கையில்தான் உள்ளது. நாம் ஒருமுறை இருட்டுக் குழிக்குள் விழுந்துவிட்டால் நம்மால் பார்க்க முடியாது. நாம் ஒரு குறுகலான கண்ணோட்டத்தை உருவாக்குகிறோம். என்னுடைய அனைத்து தத்துவங்களுமே சந்தேக கண் கொண்டு காண்பதையே அடிப்படையாக கொண்டது, சந்தேகபடுபவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று உங்கள் கடவுள் சொன்னாலும், எதையும் எளிதில் நம்பும் தன்மையின் மற்றொரு பெயரே மத நம்பிக்கை என்பதே என்னுடைய பார்வையாகும். சந்தேகப்படுபவர்கள் முட்டாளாய் இருப்பவர்களை காட்டிலும் எவ்வளவோ மேலானவர்கள். உண்மைக்கு எல்லையில்லை. ஒருவர் எல்லா விஷயங்களையும் கிரகித்துக்கொண்டார் என்றும் மற்றும் எவர் ஒருவருக்கு மத நம்பிக்கை இல்லையோ அவர் முட்டாள் என்றும் சொல்வது மிக அற்பமானதாகும்.

இந்த அறிமுகத்துடன், விவாத களத்தை உங்களுக்கு விடுகிறேன். நீங்கள் கடவுள் இருக்கிறார் என்பதை நிருபிக்க விரும்பியதால், அதை மெய்பிக்கும் பொறுப்பு உங்களைச் சார்ந்தது.  இதோ உங்களுக்கான வாய்ப்பு.

நம்முடைய விவாதத்தை என்னுடைய faithfreedom.org மற்றும் alisina.org இணையதளத்தில் பதிவிடுவேன். இது மற்றவர்களும் கருத்து சொல்ல ஏதுவாய் இருக்கும்.

 

அன்புடன்

அலி சினா

 

நான் என் மின்னஞ்சலை அனுப்பிய மறுநாள் ராபி ஷாகுல் அவர்களிடமிருந்து மின்வரும் டுவிட்டை பெற்றேன்.

ரபி ஷஉல்: நான் இவ்வாறு சொல்வதற்கு மன்னிக்கவும், உங்களின் மின்னஞ்சல் மூலமாக, நீங்கள் நிதர்சனத்தை புரிந்துகொள்வேன் என்று சம்மதித்ததை கண்டுகொள்ளவில்லை என்றுஅறிந்துகொண்டோம்.

எனவே நீங்கள், எங்களது பதிலை இந்த youtu.be/pitKfhAPD0o காணொளியில் காணவும், மின்னஞ்சல் மூலமாக வந்த இதே போன்ற கேள்விக்கு நாங்கள் பதிலளிக்கும் இரண்டாவது மின்னஞ்சலாகும்.

அது மட்டுமில்லாமல், மிக உயர்வான விஞ்ஞானிகளில் ஒருவரான, மற்றும் வரலாற்றில் மிக அரிதான, ஈடுபாடுள்ள ஒரு நாத்திகவாதியான ஐசக் நியுட்டனைப் பற்றி படியுங்கள். உங்களால் அதை ஒப்பிட்டு பார்க்க முடிகிறதா என்று பாருங்கள்.

உங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு ,முடிவுற்றது என கருதவும். ஜெகோவா எவ்வாறு எங்களோடு உறவாடுகிறார் என்று நீங்கள் இப்போது கண்டு உணர்ந்துகொள்ளமுடியும். நீங்கள் எங்களது பொன்னான நேரத்திற்கு தகுதியான நபராக நாங்கள் கருதவில்லை.

பொது அறிவிப்பு : வரலாறையும், அறிவியலையும் படித்து, பைபிளின் வரலாறு எங்கு நிருபிக்கப்படுகிறது என்று கண்டு கொள்ளும்படி அலிசினா FFI அவர்களிடம் விண்ணப்பித்திருந்தோம்.  முதலில் சம்மதித்து விட்டு பின், மின்னஞ்சல் மூலமாக அதை மறுதலித்து விட்டார்.

பொது அறிவிப்பு : நாங்கள் இனி ஒருபோதும் அலி சினா FFI உடன் எதைப்பற்றியும் விவாதிக்கப் போவதில்லை, அவருடைய மின்னஞ்சலானது உண்மையை அறிந்திருக்கின்ற ஒருவரிடம் இருந்து அதை அறிந்துகொள்ளும் ஆவல் உள்ள ஒன்றல்ல.

ரபி ஷஉல் என்னுடைய மின்னஞ்சலுக்கு பதிலளிக்கவில்லை , மாறாக அதை தனக்கு மேலுள்ள ஒருவருக்கு அனுப்பிவிட்டார். அவர் ஒரு வயது முதிர்ந்த ஒரு ரபி தனது யுடியுப் (YOU TUBE ) ஒளிபரப்பில் என்னுடைய மின்னஞ்சலுக்கு பதிலளித்து உரையாற்றினார்.

அந்த ரபியின் பெயர் என்ன வென்று என்னால் கண்டு கொள்ள இயலவில்லை. இது தான் http://torahabesorah.com/அவர்களின் வலைத்தளம் அவரது பெயர் உங்களுக்கு தெரிந்தால் எனக்கு தயவு செய்து தெரிவிக்கவும்.  நான் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டவனாக இருப்பேன்.

அந்த மிக நீளமான காணொளியில், ராபி அவர்களின் எனக்கான பதில் நேரம் 2.20 நிமிடத்தில் தொடங்கி 17.20 வது நிமிடத்தில் முடிகிறது. இதுவே அவர் கூறியதை கேட்டு எழுதப்பட்டதன் நகல், ராபி அவர்களின் மறுமொழி மிகவும் சுவாரஸ்யமானது. தயவு செய்து மேலே படிக்கவும் அல்லது காணொளியை காணவும்.

நம் இரண்டாவது மின்னஞ்சல் , நேர்மை குணமுள்ள ராபி ஷாகுல் அவர்களின் டுவிட்டுக்கு ஒருவர் அளித்த பதில். ராபி ஷாகுல்க்கு பதிலாக நாம் அளிக்கும் மறுமொழி என்னவென்றால்,

நாங்கள் புனித நூல்கள் குறித்து விவாதிப்பதில்லை என்று நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் புனித நூல்கள் சொல்வனவற்றிலிருந்து உணர்ந்து கொண்டதை, உங்களுக்கு தெரிவிப்போம். நாங்கள் புனித நூல்களில் உள்ள வரலாற்று பின்னணியை உங்களுக்கு விளக்குவோம். ஏன் அறிவியலையும் கூட அதில் சேர்த்துக் கொள்வோம். ஆனால் அது குறித்து விவாதிப்பதென்பது  கிடையாது.

ஒரு தனி மனிதன் இருந்தார் அவர் ஒருவருக்குடுவிட் செய்தார், அவர் அதற்கு பதிலளித்தார்.அந்த தனிமனிதனோ தந்தை ஜெஹோவா மூலமாகவும் புனித நூல்கள் மூலமாகவும் ,மூன்று வட்டங்கள் ஒன்றை ஒன்று குறுக்கிடும் வண்ணமும் அமைந்திருக்கிற உண்மை நிலைபோல, வரலாறு, அறிவியல் மற்றும் புனித நூல்கள் தம்மில் ஒன்று கூடுகின்றன என அவருக்கு விளக்குவதற்கு தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார். எங்கே அந்த இரண்டும் ஒன்றைஒன்று சந்திக்கின்றன என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். பெரும்பாலும் அது சரியாக இருக்கிறது ஆனால் எல்லா நேரமும் இல்லை.

அவர் அதற்கு சம்மதித்து ஒரு மிக நீண்ட மின்னஞ்சலை அனுப்பினார். நான் உங்களுடைய பேரை சொல்லி குறிப்பிட மாட்டேன் , நீங்கள் இந்த காணொளியை காணும் போது நீங்கள் யாரென்று உங்களுக்கு தெரியும்.

முதலில் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், நான் ஏமாற்றம் அடைந்தேன் காரணம் நீங்கள் செய்த உடன்படிக்கை மற்றும் ஒப்பந்தத்தை தொடக்கத்திலேயே முறித்து விட்டீர்கள்.அதை என்னுடைய பார்வையில் சாதாரணமாக சொல்வதென்றால் பொய்யாகும். இப்போது நீங்கள் அதை விரும்பவில்லை என்றால் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. நான் சொன்னால் சொன்னது தான்.

மேலும்நீங்கள் உங்களது நோக்கம் குறித்து பேசினீர்கள். நீங்கள் எவ்வாறு ஒரு காரியத்தை செய்கிறீர்கள் என்றும், எவ்வாறு ஓர் விஷயத்தை சந்தேக கண் கொண்டு காண்கிறீர்கள் என்றும் சொன்னீர்கள். சரி நன்று, நான் உங்கள் நேர்மையை சந்தேகப்படுகிறேன், நான் உங்கள் நம்பகத்தன்மையை சந்தேகப்படுகிறேன், மற்றும் உங்கள் நடத்தையை சந்தேகப்படுகிறேன். நீங்கள் எதிர் பார்ப்பது ஒரு சண்டையை, ஒரு வாக்கு வாதத்தை. மேலும் உங்கள் இணைய தளத்தில் அதை பதிவிட்டு உங்கள் மேதாவிதனத்தையும் , உங்கள் புத்திகூர்மையையும் வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்கிறீர்கள்.

நான் உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் நீங்கள் எவ்வளவு புத்திசாலி என்பதை குறித்து உண்மையில் எனக்கு கவலை இல்லை. உலகத்தின் பார்வையில் நான் பார்ப்பதாக இருந்தால், பெரும்பாலான மனிதர்கள் என்னையும் ஒருகெட்டிக்காரன் தான் என்று கருதுகின்றனர். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஜெஹோவாவின் பார்வையில் இவை அனைத்தும் முட்டாள்தனமானது. அவர் நம்முடைய பிறப்பானது , பெண்கள் மாதவிடாய் சமயத்தில் பயன்படுத்தும் துணி போல அருவருப்பான கந்தலை போன்றது என்கிறார்.

அந்த அளவே நாம் சிறந்தவர்கள். கடவுள் என்பது ஒரு ஜெர்மானிய மொழியிலிருந்து வந்த வார்த்தை. நீங்கள் கொடுத்த விளக்கத்தை நான் ஒரு குற்றமாக கருதுகிறேன். நாங்கள் அந்த பெயரை சுத்தமாக பயன் படுத்துவதில்லை. சிருஷ்டி கர்த்தா பாபேல் கோபுரத்தில், மொழிகளில் குழப்பத்தை உண்டாக்கியபோது மேன்மையான எபிரேய மொழியை எங்களுக்களித்து, அவர் தன் பெயரை எபிரேய மொழியில் எங்களுக்கு தந்தார். நாங்கள் அந்த எபிரேய பெயரையே பயன் படுத்துகிறோம். இங்கே நாம் வரலாறை பேசுகிறோம்.

ஆனால் பொதுவாக, நான் மிக உயரிய ஒரு ஜீவனை காணவில்லை. நாம் கடவுளின் சாயலாக உருவாக்கப் பட்டிருந்தால், கடவுள்மிக வசமாக மாட்டிக்கொண்டார்“…………என்கிறீர்கள்.

எப்படியோ, அது ஒரு தனிக் கதை, நான் சொல்லவிரும்புவது என்னவென்றால் நான் ஒரு நாத்திகன் ,காரணம் அது எனக்கு அறிவுப் பூர்வமாக படுகிறது. அறிவுப்பூர்வமாக மற்றும் தத்துவார்த்தமாக நான் ஒரு நாத்திகன் என்பதை ஏற்றுகொள்கிறேன் , ஆனால் மதத்தின் அடிப்படையில் அல்ல………….. என்கிறீர்கள்

மேலும் நீங்கள் ………..நான் கிறிஸ்தவ சுவிசேஷத்தை போதிக்கும் ஒரு நாத்திகன் அல்ல”…………. என்கிறீர்கள். நீங்கள் ஒரு பொய்யர் என்று நினைக்கிறேன். நீங்கள் அகப்பட்டுக் கொள்ளாமல் இருப்பதற்காக, கோபமூட்டி, ஆத்திரமூட்டும் வகையில் பேசி ,உங்களுடைய கருத்துக்களை நிருபிக்கும் வகையில் உங்களை பின்பற்றும் நபர்களுக்காக ஒரு பிரசங்கத்தை ஏற்பாடு செய்ய விழைகிறீர்கள். அந்த எண்ணம் நசுக்கப்பட்டுவிட்டது.

நீங்கள் மத நம்பிக்கையுள்ள ஒரு ஆத்தீகனும், மத நம்பிக்கையற்ற ஒரு நாத்தீகனும் கடவுளின் பேரால் எவ்வாறு அக்கிரமங்கள் செய்தார்கள் என்று வசை மாறி பொழிகிறீர்கள். அதற்கு முன்பாக நான் உங்களுக்கு ஏற்கனவே சொன்னது போல், கடவுள் என்பது ஒரு ஜெர்மானிய வார்த்தை. அது யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு சொல்வதில்லை. நாம் ஒரு கதவிடம் பேசிக்கொண்டு இருந்து விட்டு அதை ஒரு கடவுள் என அழைப்பது போன்றது.

நான் கண்டு வியந்தது என்னவென்றால், உங்கள் நிலை தாழ்ந்து வரும்பொழுது, நீங்கள் ஞானத்தை பற்றி குறிப்பிடுகிறீர்கள்…….எப்படி?……….. .”என்னுடைய அனைத்துதத்துவங்களுமேசந்தேக கண் கொண்டு காண்பதையே அடிப்படையாக கொண்டது”.“நாம் ஒரு முறை இருட்டுக் குழிக்குள் விழுந்துவிட்டால், நம்மால் பார்க்க முடியாது. ” எப்போது அதற்குபின் என்ற ஒன்றில்லையோ அப்போது சிருஷ்டிகர்த்தா என்ற ஒன்றில்லை அப்படியானால் எதுவென்று யூகியுங்கள். இருட்டான குழி ஒன்றும் இல்லை.அப்படி ஒன்று கிடையாது. 

உங்களுடைய தர்க்கம் [fought with a set of star trek?] முழுவதுமே தர்க்க பிளையானது. படைப்பாளி(சிருஷ்டிகர்த்தா) இல்லாமல் நீங்கள் ஒரு படைப்பை கொண்டிருக்க முடியாது. நீங்கள் அதை விரும்ப மாட்டீர்கள். நீங்கள் அதை பாராட்டமாடீர்கள், நீங்கள் ஒருவேளை அதை நம்பக் கூட மாட்டீர்கள். ஆனால் அதை குறித்து எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் அது உங்களுடைய தீர்மானம்.நீங்கள் எந்தஅளவு கொடுமைகாரனாக இருந்தால்,  இங்குள்ள ஜீவன்களெல்லாம் தானாகவே உருவானவை என்று உணர்கிறீர்கள்.நீங்கள் ஏன் மற்ற ஜீவன்களை விட்டுவிடவில்லை. எனவே உங்களை ஒருவிதமான புற்றுநோய் என்றழைக்கலாம்.மேலும் இந்த சமுதாயத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். If you’rethis miserable that you feel that the species is what it is then what you don’trid the species of another cancer as you call it and remove yourself fromsociety? நீங்கள் உங்களையும் மற்ற அனைவரையும் வசைமாரி பொழிந்து, மோசமானவர்களாக்க , முயற்சி செய்தால் பின் ஏன் சந்தேக கண் கொண்டு காணவேண்டும் என்று பரிந்துரைக்க வேண்டும். நம் அனைவருக்கும் ஒன்றுமே அங்கில்லை என்றால், எதிர்காலம் இல்லை என்றால் பின் இந்த மக்கள் வாழ்வதின் காரணம் என்ன? வேறு என்ன விதத்தில் நீங்கள் காரணம் கற்பிக்க முடியும்.நமக்கு நம்பிக்கை இல்லை என்றால் அது ஒரு பெரிய விஷயமல்ல. இது தெருவில் இரண்டுநாய்கள் எலும்பு துண்டுக்காக சண்டை இட்டு செத்துப் போவதை போன்று சாதாரணமானது.அது ஒரு பெரிய விஷயமில்லை.

சந்தேக கண் கொண்டு காண்பதென்பது ஒரு கலை அந்தகலை. எல்லோருக்கும் வாய்க்காது என்று சொல்கிறீர்கள். ஆம், அது ஒரு கலைதான். நீங்கள் எங்கிருந்தாலும், இந்த பிரபஞ்சத்தை படைத்த சிருஷ்டிகர்த்தாவின் எல்லைக்கு வெளியிலிருக்கும்படி வைக்கும் ஒரு கலை.மேலும் நான் சொன்னதுபோல் அது நல்லதுதான். நான் எதுகுறித்தும் உங்களை சம்மதிக்க வைக்க முயற்சி செய்யவில்லை. என் நண்பரும் எதுகுறித்தும் உங்களை சம்மதிக்க வைக்க முயற்சி செய்யவில்லை. அவர் வெறுமனே உங்களைஉங்களின் தர்க்கங்களின் மூலமாக,உங்கள் தவறான பாதைகளை உங்களுக்கு காண்பிக்க முயற்சி செய்தார். நீங்கள் இது போன்ற வாதத்தை இங்கு வைக்க முயற்சி செய்தீர்கள் … அதற்காகவே நீங்கள் ஒரு விவாதம் வேண்டும் என்கிறீர்கள்.மேலும் அதை பதிவிட போகிறீர்கள். நான் சொல்வது என்னவென்றால் , நீங்கள் ஒன்றையுமே பதிவிட முடியாது. ஏனென்றால் இங்கு விவாதிக்கப்படமாட்டாது.எனக்கு இந்த விவாதத்தை துவங்குவதற்கு கூட தேவையான தந்தையை பற்றிய நுண்ணறிவோ ,விவேகமோ, புரிந்துகொள்ளலோ இல்லை. இந்த சூழ்நிலையை அவர் தாமே எதிர்கொள்வார் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

எவராக இருந்தாலும் அங்கே ஒன்றும் இல்லை என்றால், பின் நாம் கவலை கொள்ள ஒன்றுமே இல்லை. ஏனென்றால் நாம் ஒரு போதும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாது, இன்னும் முக முகமாக சந்திக்கும் ஒரு நிலையும் வரவே வராது. ஆனால் ஒரு வேளை நீங்கள் தவறாக இருந்தால் நாம் சந்திப்போம். இது உங்களுக்கு எதிராக நியாய தீர்ப்புநாளில் சாட்சி சொல்லும். நீங்கள் இதை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஐசக் நியுட்டன் ஒரு நாத்தீகவாதி-ஒரு தீவிர நாத்தீகவாதி. மேலும் ஒரு நாள் அவர் நெடுநாள் கற்ற அவரது கல்வி அறிவின் மூலமாக அறிவார்ந்த ரீதியில் உண்மைகளை பார்த்த பொழுது, இப்படிப்பட்ட ஒரு ஒழுங்கான அமைப்பை பெற வேண்டும் என்றால்ஒரு சிருஷ்டிகர்த்தா இருந்தாக வேண்டும் என்று உணர்ந்தார்.

எதை குறித்தும் சந்தேகப்படுவதற்கு சாத்தியமாவதே, ஞானத்தையும்சுதந்திரத்தையும் அடைவதற்கான முதல்ப் படியாகும்”………. என்கிறீர்கள் அங்கே ஒன்றுமே இல்லாமல் அந்தகாரமாய் இருந்தால் ஞானத்தை ஏன் காணவேண்டும்.இவை எல்லாமே அங்கிருந்தால், ஒன்றுமே மீதமில்லாமலிருந்தால், ஞானத்தை அடைவதினால் என்னவாகிறீர்கள்? எனவே நீங்கள் இறந்து அழுகிப் போகலாம்.

நீங்கள் பரிதாபமான நிலையில் இருக்கிறீர்கள். நான் உங்களுக்காக மிகவும் வருந்துகிறேன். உங்களுக்காக இரக்கப்படுகிறேன். நீங்கள் மோசமாக அடிபட்ட ஒரு விலங்கை போல் இருக்கிறீர்கள்.அது எனக்கு வேதனையை தருகிறது. உங்களுக்காக பரிதாபப்படுகிறேன், பச்சாதாபம் அடைகிறேன். ஆனால் இந்த முடிவு நீங்கள் எடுத்தது.

இப்போது எந்தவிதமான பதில்களோ மேற்கொண்டு என்னிடமிருந்து உங்களுக்கு இருக்காது. நம்மிடையே விவாதத்தில் அடித்து வீழ்த்துவதோ, விட்டுவிட்டு ஓடிப்போவதோ இருக்காது. அதுபோன்று ஒன்றுமே சம்பவிக்காது.விவாதிப்பதோ, சண்டையிட்டு தர்மசங்கடதத்துடன் பின்வாங்குவதோ, ஒரு பிரச்சனை அல்ல. இது பற்றி நான் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கிறேன். எப்படிப்பட்ட முட்டாளாலும் ஒரு சண்டையை தொடங்க முடியும். நான் இளைஞனாக இருந்தபொழுது, என்னால் இனிமேல் ஒருபோதும் இளமையாக முடியாது. நான் இளைஞனாக இருந்த பொழுது,நான் அதில் நன்றாக தேர்ச்சி பெற்றிருந்தேன். எனக்கு எப்படி ஒரு சண்டையை துவக்க வேண்டும் என்றும் தெரியும், அதை எப்படி முடிக்க வேண்டும் என்றும் தெரியும். ஆனால் இப்போது அதை தொடங்குவதர்கான விருப்பமோ அல்லது முடிப்பதற்கான விருப்பமோ இரண்டும் இல்லை. ஆனால் நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். தந்தை அதை முடிப்பார். நான் உங்களைபோல் தனி நபர்களைப் பார்த்திருக்கிறேன். உங்களை போல் தனி நபர்களிடம் கேட்டிருக்கிறேன். ஆனால் தந்தை அந்தநாளை இறுதில் ஆட்கொள்ளுகிறார். ஜெஹோவா, ஜெஹோவா அவர் தான் இருக்கிறேன் என்பதை அறியப்படுத்துவார்.

நான் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்.  நீங்கள் என் பதிலை பெற்றுவிட்டீர்கள் என்று உங்களுக்கு சொல்லிவிட்டேன்.

இந்த அறிமுகத்துடன், விவாத களத்தை உங்களுக்கு விடுகிறேன். நீங்கள் கடவுள் இருக்கிறார் என்பதை நிருபிக்க விரும்பியதால், அதை மெய்பிக்கும்பொறுப்பு உங்களைச் சார்ந்தது, இதோ உங்களுக்கான வாய்ப்பு”……..என்றீர்கள்

சரி, நான் அந்த களத்தை பெற்றுக்கொண்டேன். நீங்கள் மிக சரியாக சொன்னீர்கள். எனக்கு அந்த களத்தை எடுத்துக்கொள்ள அனுமதி கொடுத்தீர்கள்.நான் உங்களுக்கு எதையும் நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இப்போது சொல்கிறேன். என்னிடம் நிருபிக்க ஏதுமில்லை. நான்  உங்களைப் போன்ற மனிதர்களை தேடவில்லை. நான் என்னைப் போன்று கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை தேடுகிறேன். நான் தேடுவது ஒரு குடும்பத்தை. இதுவரை இங்கு படித்ததில் நான் அனுமானிப்பது என்னவென்றால், இதில் ஒருவராக நீங்கள் இல்லை. நீங்கள் காணமுடியும், நீங்கள் பேரம் பேசி அறிய விரும்பியதை விட மிக அதிகமாக கூட பெறமுடியும். ஆனால் அதை நீங்கள் செய்ய விளையும் போது காலம் கடந்திருக்கும்.

நீங்கள் நான்அதை நம்பவில்லை என்று சொல்லமுடியும்.அது பரவாயில்லை.காலம் பதில் சொல்லும்.என்மனைவிஒருபழமொழி கூறுவாள். “நீங்கள் இறக்கும் போது அதை கண்டு கொள்வீர்கள். “எனவே நீங்கள் இன்று அதை கண்டுகொள்ள வேண்டுமென்றால், சாகவும். அல்லது நாளை கண்டுகொள்ள வேண்டுமென்றால் சாகவும். நீங்கள் காண்பீர்கள்.மேலும் நீங்கள் அங்கு நிற்கும் போது, என்ன பேச வேண்டும் என்று கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது, நான் உங்களுக்கு கூறிய இந்த வார்த்தைகளை நினைவு கொள்ளவும். நீங்கள் வித்தியாசமாக ஏதாவது செய்யக் கூடிய சந்தர்ப்பத்தை பெற்றிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் வேண்டாம் என்று தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.

நீங்கள்தான் உங்கள் பாதை மற்றும் தலைவிதியை தேர்வுசெய்து அதில் உங்கள் அடியை எடுத்து வைத்திருக்கிறீர்கள்.

அது பாதை பரந்து விரிந்தது.அந்த வழியும் பறந்து விரிந்தது மற்றும் அதன் வாயில் மிகப் பெரிதானது. அது அழிவுக்கே இட்டுச்செல்கிறது, அங்கே அநேகம் பேர் அந்த வாயிலில் நுழைவதற்காக இருப்பார்கள். எனக்கு ஒரு உணர்வு தோன்றுகிறது. ஒருவேளை நான் அந்த கதவை காணமுடியும் என்றால், நீ அங்கே உல்லாசாமாக உலா வந்து கொண்டிருப்பாய். நீ இதை விரும்புவாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இப்போது போதுமான அளவு கூறியாகிவிட்டது, இதுவே இந்த பிரச்சனை குறித்து நான் விளக்கவேண்டியது.நீங்கள் அதை விரும்பவில்லை என்றால் ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும்.

இந்த காணொளியை கண்டு இந்த விவாதத்தை பார்த்தவர்களிடம் நான் மன்னிப்பு கோர விரும்புகிறேன், சில சமயம் நாம் சொல்ல விரும்புவதை முகத்திற்க்கு நேராக நேர்மையுடன் சொல்லவேண்டி இருக்கிறது. இறுதியாக இதுவரை நடந்தது ஒரு விவாதமல்ல.

இந்த இரண்டு மத க்குருக்கள், நான் ஒரு உதவாக்கரை என்றாலும், நான் பதிலளிக்க விரும்பினேன். நான் இதை எழுதும்போது அடைந்த ஆனந்தத்தை போல, நீங்களும் இதை வாசிக்கும் போது அடைவீர்கள் என நம்புகிறேன்.

அன்பார்ந்த ராபிகளே, ராபி ஷாகுல் தான் என்னை இந்த விவாதத்திற்கு அழைத்து, கடவுள் இருக்கிறார் என்றும் அவர் என்னை அன்பு செய்கிறார் என்றும் நிருபிப்பதாக கூறினார். எனக்கு இது போன்ற விவாதத்தில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. ஆனாலும் நான் சம்மதித்தேன். இப்போது கூறுங்கள் ஒப்பந்தத்தை மீறுவது நானா அல்லது நீங்களா?

நீங்கள் புனித நூல்களை ஆதாரமாக பயன்படுத்த விரும்புவதாக கூறினீர்கள். கடவுள் இருக்கிறார் என்று புனித நூல்களை வைத்து நிரூபிப்பது என்பது ஒன்றை நிரூபிக்க “ஒரு அனுமானத்தை கூறுவது பின் அந்த அனுமானத்தை நிருபிக்க மற்றொரு அனுமானத்தை கூறுவது போன்றதாகும்” என்று நான் கூறினேன். இது அடிப்படை தர்க்க தவறாகும். உயர்ந்த நிலையில் உள்ள வயது முதிர்ந்த உங்களைப் போன்ற ஒரு பண்டிதர்க்கு, ஒரு தவறான தர்க்கவாதத்தை முன்மொழிவது தகுதியானதல்ல. இது வெறுமனே காண்பிப்பது என்னவென்றால் தர்க்கத்தை குறித்து உங்களுக்கு மிக சிறிய புரிதலே உள்ளது என்பதைத் தான். இது குறித்து அநேகம் முறை முஸ்லீம்களோடு விவாதித்திருக்கிறேன். அல்லா தான் கடவுள் என்பதற்கு என்ன ஆதாரம் என்று அவர்களிடம் கேட்பேன். அவர்கள் குரான் அவ்வாறுதான் சொல்கிறது என்பார்கள். நான் ஏன் குரானை நம்பவேண்டும் என்று கேட்பேன். அவர்கள்அதற்கு மறு மொழியாக “ஏனென்றால் அது கடவுளின் வார்த்தை என்பார்கள்”. ஒன்றை நிரூபிக்க ஒரு அனுமானத்தை கூறுவது பின் அந்த அனுமானத்தை நிருபிக்க மற்றொரு அனுமானத்தை கூறுவதை நீங்கள் பார்த்தீர்களா?

நீங்கள் என் வாய்மை என் நேர்மை, மற்றும் என் நடத்தையை சந்தேகப்படுவதாக கூறியிருக்கிறீர்கள்.

மிக்க நன்று. நீங்கள் என் வாய்மை மற்றும் நேர்மையை சந்தேகப்படலாம், ஆனால் என் நடத்தையில் எது உங்களுக்கு ஆட்சேபணைக்குரியது? ராபி ஷாகுல், கடவுள் இருக்கிறார் என்று காண்பிக்க விரும்புவதாக கூறினார். நான் சம்மதித்தேன், மேலும் என்னுடைய டுவீட் பதிலில் நான் இதை பதிவிடுவேன் என்றும் அதனால் அதிகமானவர்கள் பலனடைவார்கள் என்றும் கூறினேன், அவர் சம்மதித்தார். இருந்தபோதிலும் நான் என்னுடைய நாத்தீகம் குறித்தான என் சிந்தனைகளை வெளிப்படுத்தியபோது கால் காசு பெறாதவன் என்று அறிவித்து அவமானபடுத்தினிர்கள். நான் மிக மோசமான மனிதன் என்றும்  நான் அனுப்பிய ஒரு மினஞ்சலுக்காக நான் இறக்கும்போது ஜெஹோவாவை சந்திக்க வேண்டும் என்றும்  நான் நரகத்திற்கு அனுப்ப படுவேன் என்றும் சொல்லி, அதற்காக நீங்கள் என் மேல் இரக்கபடுவதாக கூறினீர்கள். என்னுடைய நடத்தை உங்களுடையதை விட அதிக ஆட்சேபணைக்குரியதா என்ன?

நாம் தொடங்குவதற்கு முன்பே உங்களுக்கு சித்தபிரமை பிடித்துவிட்டதா? உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் நீங்கள் ஏன் அஞ்சவேண்டும்? இந்த உலகம் உங்கள் ஜெஹோவாவின் அந்த உயரிய ஞானத்தையும், மேன்மையான அறிவாற்றலையும் காணட்டும். அதை காணும்படி அதிகமான பார்வையாளர்களை பெரும் வாய்ப்பை நான் உங்களுக்கு வழங்குகிறேன். உங்களுடைய யுடிஊப்(You TUBE) காணொளியை ஒருவரும் பார்க்கிறதில்லை என்று நான் கண்டேன். அளவுக்கதிகமான மக்கள் என் தளத்தை வாசிக்கிறார்கள்.

மிக அதிகமான பார்வையாளர்களை சென்றடையும் ஒரு வலைவாசலை உங்களுக்கு இலவசமாக தருகிறேன். இப்படிப்பட்ட ஒரு அறிய வாய்ப்பை நீங்கள் துள்ளிக் குதித்து பிடித்துக்கொள்ள வேண்டாமா? உங்களுடைய சொந்த நம்பிக்கையில் நீங்கள் மிகவும் உறுதியாக இல்லை என்று தெரிகிறது. இல்லாவிட்டால், நீங்கள் உங்கள் நம்பிக்கை குறித்து சவால் விடுவதற்க்கு பதிலாக ஏன் வெட்கப்படவேண்டும்? இவைகள் உங்கள் வாய்மை மற்றும் நேர்மை பற்றி எதோ ஒன்றை சொல்லவில்லையா?

நான் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் அதை பற்றி உங்களுக்கு கவலை இல்லை என்றும் நீங்கள் என்னைவிட அதிபுத்திசாலி என்றும், ஜெஹூவாவின் புத்திசாலிதனத்தோடு ஒப்பிடும்போது நம்முடையது, அறிவீனமானது என்றும் கூறினீர்கள். மேலும், நாம்முடைய பிறப்பு (நான் நினைக்கிறேன் அது நம் நேர்மையின் சாட்சி என்று) கந்தல் துணி போன்றது, துணி என்றால் ,பெண்கள் மாதவிடாய் சமயத்தில் பயன்படுத்தும் ஒரு கந்தல் துணி போன்றது என்று நீங்கள் அவர் கூறியதாக மேற்கோள் காட்டினீர்கள்

இது அவர் உருவாக்கிய ஜீவராசியை குறித்து ஒரு சிருஷ்டிகர்த்தா சொல்லும் மிக நல்லவார்த்தைகள் இல்லை. அவர் மக்களை அர்த்தமற்றவர்களாக்குகிறார், இழிவுபடுத்துகிறார், அவமானப்படுத்துமகிறார். ஒரு நாசீசிஸவாதி இதைதான் செய்கிறான். நாசீசிஸவாதிகள் மற்றவர்களை சிறுமைப்படுத்துகிறார்கள். தங்களை மேலானவர்கள் என்று காண்பிக்க அவர்கள் அறிந்த ஒரேவழி இதுதான். இந்த பிரபஞ்சத்தை படைத்த சிருஷ்டிகர்த்தா ஒரு கொடிய சுய காதல் செய்யும் நோயினால் பாதிக்கப்பட்டவரா என்ன?

நான் ஒரு ஆசிரியராக இருந்தால் மாணவர்களை புகழ்வேன். அவர்களை ஒருபோதும் இழிவுபடுத்த மாட்டேன். உங்கள் அறியாமையையும்  முட்டாள்தனத்தையும் ஒப்பிடும் போது நான் தான் புத்திசாலி என்று இடைவிடாமல் அவர்களுக்கு நினைவூட்டி கொண்டே இருக்க மாட்டேன். அவர்களின் குறைபாடுகளை கண்டுக்கொள்ளாமல் அவர்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்துவேன். நான் அவர்களது வலிமைகளில் கவனம் செலுத்துவேனே அன்றி அவர்களது பற்றாக்குறைகளில் அல்ல. இதையே தான் நான் ஒரு தலைவனாக இருந்தால் என் பணியாளர்களுக்கு செய்வேன். இவ்வாறே நீங்கள் ஒரு சிறந்த பணியாளையோ அல்லது ஒரு சிறந்த மாணவனையோ மற்றவர்களில் இருந்து இனம் காண முடியும். ஆகையால் மனிதனைப் படைத்தவர், மனிதனின் உளவியல் சம்பந்தமாக வரும்பொழுது மிகவும் அறியாமை நிறைந்தவராக இருந்தார். நீங்கள் யாரை கடவுள் என்று குறிப்பிடுகிறீர்களோ, அந்த இந்த கடவுள் அட்சத்தை தரும் ஒரு நாசீசிஸவாதி.

நான் கிறிஸ்தவ சுவிசேஷத்தை போதிக்கும் ஒரு நாத்திகன் அல்ல”என்று நான் சொன்னதற்கு என்னை ஒரு பொய்யன் என்றழைத்து, ஆத்திரமூட்டும் வகையில் பேசினேன் என்று என் மேல் குற்றம் சுமத்தி,ஒரு பிரசங்கம் ஏற்பாடு செய்ய முயசிக்கிறீர்கள். எனவே என்னுடைய கருத்தை நிருபிக்கும் வகையில் மக்களுக்கு அதை தெளிவுபடுத்துவேன்.

நான் இஸ்லாம் குறித்து கடந்த பதினான்கு வருடமாக விவாதித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய நோக்கம் திரையிட்டு மறைக்கப்பட்டிருக்கும் உண்மையை, அந்த திரையை நீக்கி காண்பிப்பதாகும். எதிர்ரெதிரான கருத்துக்கள் மோதும் போது உண்மையின் தழல் மிளிரத்தொடங்கும். நிச்சயமாக என் கருத்துக்கள் உண்மையானவை என்று நம்புகிறேன். அது இயற்கையானது தான். எவர் ஒருவரும் ஒரு விஷயத்தை இது ஒரு பொய்யான நம்பிக்கை என்று தான் கருதுவதை மெய் என்று நம்பமாட்டார்கள். ஆனால் யாராவது ஒருவர் காரியங்களை காண்பதற்கு ஒரு சிறந்த மாற்று வழியை காண்பித்தால், அதை வரவேற்று என்னுடைய பார்வையை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன். நான் இதை என் வாழ்நாளெல்லாம் கடைபிடித்திருக்கிறேன். எப்போதெல்லாம் நான் புதிய விஷயங்களை குறித்து அறிகிறேனோ, அப்போதெல்லாம் என் பார்வையை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறேன். என் விவாதங்களை அதை கவனமாய் சோதனை செய்யும்படி உலகத்தின் பார்வைக்கு விடும் பொருட்டு பதிவிட ஒரு போதும் பயந்ததில்லை. நான் தவறாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு எல்லாம் தெரியும் என்று இங்கு ஒருவரும் எதிபார்க்கவில்லை. நான் என் தவறுகளை ஏற்றுக்கொண்டு, அதை திருத்திக்கொள்வதை என்னுடைய வாசகர்கள் காணும் போது, அவர்கள் என்னுடைய நேர்மையை, உண்மையை காண்பதற்கான என் அக்கறையான ஆவலை பாராட்டுகிறார்கள் என்று நினைக்கிறேன். குறைகளை ஏற்றுக்கொள்ளும் இந்த குணம் என்னை ஒரு போதும் தாழ்ந்து போக செய்ததில்லை. மாறாக என் வாசகர்களின் பார்வையில் என்னை மேலும் உயர்த்துகிறது. தவறுகள் செய்யக் கூடியவன் நான் என்று ஏற்றுக்கொள்ள விருப்பமுடன் இருப்பதை எல்லையற்ற ஞானத்தை அறிந்து கொள்ள பாசாங்கு செய்யாமலிருப்பதை அவர்கள் காண்கிறார்கள்.

ஆனால் நீங்கள் பொது விவாதங்கள் செய்யபயப்படுகிறீர்கள் ஏன்? நீங்கள் உங்களையே சந்தேகப்படுவதாலா? நான் இந்த விவாதத்தை பதிவிடுவேன் என்றபோது உங்கள் தொடை நடுங்கியதற்கு உங்களால் வேற என்ன விளக்கமளிக்க முடியும்?

நீங்கள் சரியாக இருந்தால் இந்த உலகம் பார்கட்டுமே? ஒருவேளை நீங்கள் தவறாக இருந்தால் உங்கள் பார்வையை மாற்றிக்கொள்ள முடியும். தர்க்க ரீதியில் சரியாக நாம் செய்யக்கூடிய காரியம் அல்லவா இது? அல்லது ஒருவேளை நான் என்னும் அகங்காரத்தோடு உள்ள உங்கள் இணைப்பு, நிதர்சனத்தின் மீதான உங்களின் அர்ப்பணிப்பை விட சக்திவாய்ந்ததா? மேலும் உங்கள் தர்க்க அறிவில் உள்ள குறைபாடுகளை நான் கண்டு கொள்ளும்போது அது உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் என்ற பயமா?

நான் உங்களுக்கு ஒன்றை சொல்லுகிறேன். நான் அனைவருமே அறியாமையில் தான் பிறந்தோம். நாம் தெரிந்துகொள்வது எதுவாக இருந்தாலும் மற்றவர்களிடமிருந்தே அவற்றை கற்றுக்கொள்கிறோம். ஒரு பாரசீக பழமொழி சொல்வதென்னவென்றால், “தொட்டிலில் இருந்து கல்லரைவரை அறிவை தேடுங்கள்” என்கிறது. அறியாமை ஒரு அவமானம் இல்லை. அறிந்து கொள்ள விருப்பம் இல்லாமலிருப்பதே அவமானம். என் வாழ்க்கை போக்கில் நான் சிலவற்றை கற்றுக் கொண்டிருக்கிறேன். மற்ற எல்லாவற்றையும் விட மதிப்புமிக்கது தன்னை அறிதல். நான் என்னை அறிந்தபோது நான் கண்டது அறியாமையே. அளவிடற்கரிய என் அறியாமையே. என்னை குறித்து நான் அறிந்து கொள்ளும் கற்றலே மற்ற அனைத்து விதமான கற்றலைவிட பேரானந்தம் தருகிறது.

நீங்கள் எபிரேய மொழி எவ்வாறு ஒரு தூய்மையான மொழி என்பது பற்றியும் பாபேல் கோபுர சம்பவத்திலே மற்ற அனைத்து மொழிகளையும் ஜெஹோவா எப்படி குழப்பி விட்டார் சொல்லிவிட்டு, “நாம் இங்கே வரலாறை குறித்து பேசுகிறோம்” என்றீர்கள்.

உண்மையாகவா? இவ்வாறா மொழிகள் உருவானது? ஆனால் அறிவியல் வேறு விதமான விளக்கத்தை தருகிறது. மொழியியலார்கள் மொழிகள் ஒவ்வொன்றும் தாங்கள் ஒரு சுயாதீனமான மொழிகளாகும் வரை கிளைகளிட்டு பிரிந்துகொண்டே இருக்கும் என்கின்றனர். பாபேல் கோபுரத்தின் கதை ஒரு வரலாறல்ல. அது கற்பனை சாகச கதை. மரியாதைகுரியவரே, நீங்கள் வரலாறை புரிந்து கொள்ளவில்லை. மேலும் நீங்கள் அறிவியலையும் புரிந்து கொள்ளவில்லை. உங்களுக்கு புனித நூல்களை குறித்து தெரியும். இருந்தாலும் அவைகளையும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. புனித நூல்களெல்லாம் பண்டைய கால மக்களின் நாட்டுப்புற இலக்கியங்களாகும். நீங்கள் அவற்றோடு ஒட்டி கொண்டிருக்க விரும்பினால், அது நன்று. ஆனால் நீங்கள் அறிவியலை பற்றியும் வரலாறு பற்றியும் பேசாதீர்கள். அறிவியல் மற்றும் வரலாறு உங்கள் புனித நூல்களை நிராகரித்து விட்டது.

நாத்தீகர்கள் கைகளிலும் ஆத்தீகர்கள் கைகளிலும் ரத்தக் கரை படிந்துள்ளது என்று நான் கூறினேன்.

நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். நாத்தீகர்கள் கடவுளின் பேரால் கொலைகள் செய்தார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் சித்தாந்தத்தின் பொருட்டு கொலைகள் செய்தார்கள். அதாவது கம்யூனிசம், தேசிய சோஷியலிஸம் அல்லது வேறு ஏதாவதொரு நாசமாய்ப்போன ஒரு யிஸ்சமோ அதை செய்தது.

நான் மனிதர்கள் தீமைகளை செய்வதற்கான காரணம், “தான் நீதிமானாய் இருக்க வேண்டும் என்ற அர்பணிப்பு இல்லாமை, நாம் தவறாக இருக்கலாம் அல்லது மற்றவர்கள் சொல்வதிலும் ஏதாவதொரு காரணம் இருக்க வாய்ப்புள்ளது என்று சந்தேக கண் கொண்டுகாணும் திறமையின்மையால் தான்” என்று கூறினேன். அவர் கடவுள் நம்பிக்கையுள்ளவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எவர் ஒருவர் ஏதாவதொரு நம்பிக்கையை கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறாரோ, அவர் சகிப்பு தன்மையற்றவராகிறார். நான் உங்களிடம் சகிப்பு தன்மையின்மை என்ற துர்நாற்றத்தை முகர்ந்தேன். நீங்கள் எவர் ஒருவர் உங்களின் கருத்துகளோடு ஒத்துப்போகவில்லையோ அவரை தூற்றவும் துணிகிறீர்கள். நான் என்னுடைய பார்வை குறித்து உங்களுக்கு விளக்கினேன். எனவே என் பார்வையும், நான் எவ்வாறான கருத்துக்களை கொண்டிருப்பவன் என்றும், எங்கிருந்து வருகிறேன் என்றும் நீங்கள் காணமுடியும். எனவே என் புத்திக்கு உறைக்கக்கூடிய வகையில் உங்கள் வாதங்களை எடுத்து வைக்க முடியும். என்னை இகழ்ந்து பேச, என்னை பழித்து பேச, என் மேல் பரிதாபப்பட மேலும் என்னை ஒரு புற்று நோய் என்றழைக்க,  இந்த சமுதாயத்திலிருந்து வெளியேறும்படி என்னை வற்புறுத்த அது உங்களுக்கு போதுமானதாய் இருந்திருக்கும்.

பிரச்சனையே நம்பிக்கையில் தான் என்று உள்ளது என்று எழுதினேன். நாம் அந்த இருட்டான குழியில் விழும்போது அதாவது விசுவாசமெனும் இருட்டுக் குழியில் விழும்போது, நம்மால் ஒரு போதும் பார்க்க முடியாது என்று தான் கூறினேன். நீங்கள் நான் எழுதியதை கவனக் குறைவோடு வாசித்திருக்கிறீர்கள். உங்களின் நரகத்தை தான் நான் இருட்டுக் குழி என்று சொல்கிறேன் என்று அனுமானித்து விட்டீர்கள்.

இல்லை. நரகம் என்ற ஒன்று இல்லவே இல்லை. கடவுள் இருக்கிறார் என்று எடுத்துக்கொண்டால், அது போன்றதொரு சித்திரவதை கூடத்தை நடத்தும், சித்திரவதை செய்வதில் இன்பம் பெறும், ஒரு தீயவராகத்தான் இருக்க முடியும். நரகம் என்ற கருத்தாக்கமே நகைப்பிற்கு இடமானது. தான் ஒரு அறிஞர் என்று தானாகவே அறிவித்துக் கொண்ட, தனக்கு அதிகமாக தெரிந்தது போல் நடிக்கும் ஒரு முஸ்லிமுடன் நான் விவாதிக்கும் போது, “நான் என்னுடைய பூனையை குட்டியிலிருந்தே அதை கண்ணும் கருத்துமாக பேணி வளர்த்திருந்தும், என்னிடம் நன்றி கெட்டதாய் இருக்கிறது என்று அதை சித்திரவதை செய்தால் என்னைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என்று அவருக்கு நான் ஒரு உதாரணத்தை கூறினேன். இவ்வாறு என் பூனையின் மீது நான் குற்றம் சுமத்தினால் நான் ஒரு பைத்தியக்காரன் என்பதற்கு அது ஒரு அத்தாட்சியாகும்.

அதை செய்தால், ஆமாம் நிச்சயமாக அவ்வாறுதான். நான் ஒரு பைத்தியக்காரன் தான்.

என் பூனை எவ்வளவு நன்றி கெட்டதாக இருந்தாலும் அது ஒரு பெரிய விஷமே இல்லை, அதை சித்திரவதை செய்து கொல்லும்படி அதை நான் தண்டிக்கவே கூடாது. இப்போது ஒரு பூனைக்கும் மனிதனுக்கும் இடையேயான வித்தியாசம் இந்த பிரபஞ்சத்தையே படைத்த கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயான வித்தியாசத்தைவிட எல்லையற்ற அளவு சிறிதானது. இது போன்ற ஒரு கொடூரத்தை ஒரு பூனைக்கு செய்ய முடியாது. எவ்வளவு தான் அது தவறாக நடந்து கொண்டாலும் நாம் நிபந்தனையின்றி அவற்றை அன்பு செய்து மன்னிக்கிறோம். நம்மை சித்திரவதை செய்து நித்திய காலமும் நம்மை எரிக்கின்ற அளவு, எப்படி ஒரு கடவுள் இறக்கமற்று இருக்க முடியும்? இது கடவுளின் பைத்தியகார குணத்தை விளங்கப்பண்ணுகிறது. கடவுள் இருந்தாரேயானால், இது போன்ற முட்டாள் தனமான கருத்துக்களை சொல்லி கடவுளை சித்திரவதை செய்வதில் இன்பம் பெறுபவராக சித்தரிபவர்கள் உண்மையில் அவரை நிந்திகிறார்கள்.

மேலும் “நீங்கள் படைப்பாளி(சிருஷ்டிகர்த்தா) இல்லாமல் நீங்கள் ஒரு படைப்பை கொண்டிருக்க முடியாது.நீங்கள் அதை விரும்ப மாட்டீர்கள், நீங்கள் அதை பாராட்டமாடீர்கள்.நீங்கள் ஒருவேளை அதை நம்பக் கூட மாட்டீர்கள். ஆனால் அதை குறித்து எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் அது உங்களுடைய தீர்மானம்,” என்றீர்கள்.

உங்களுடைய தர்க்க வாதம். சிருஷ்டி கர்த்தாவைகுற்றம்சுமத்துகிறதா? ஒரு கருத்தை நிரூபிக்க வேண்டும்என்ற கவலை இல்லாமல், அதற்கு முன்பே அது உண்மைதான் என்று உரிமை கொண்டாடுகிறீர்கள்.“நீங்கள் படைப்பாளி(சிருஷ்டிகர்த்தா) இல்லாமல் நீங்கள் ஒரு படைப்பை கொண்டிருக்க முடியாது” என்கிறீர்கள், ஆமாம் அது முடியும். இந்த பிரபஞ்சத்தை ஆட்சி செய்யும் சட்டங்களின் கோட்பாடுகளால் பரிணாம வளர்ச்சி நடைபெறுகிறது. நீங்கள் ஒரு உயரமான இடத்திலிருந்து தண்ணீரை ஊற்றும் போது ஒரு பிரவாகம் உருவாகிறது. அந்த பிரவாகமானது, இந்த நிலத்தின் அமைப்பைபொறுத்து விதவிதமான வடிவத்தை பெறுகிறது. அது வலது பக்கமோ அல்லது இடது பக்கமோ திரும்புகிறது. சில இடங்களில் அமைதியாக ஓடும். சில இடங்களில் ஆர்பரித்து ஓடும். சில இடங்களில் குட்டை போல் தேங்கும். சில இடங்களில் அருவிகளை உருவாக்கும். வடிவம் எவ்வாறாகிலும், பிரவாகத்திற்கு என்று வேறுவேறான வடிவம் உள்ளது, அதை ஒரு வடிவமைப்பாளரும் வடிவமைக்கவில்லை. அது அந்த நிலத்தின் புவியியல் அமைப்பை பொருத்தும், புவிஈர்ப்பு விசையினாலும், தன்னைத்தானே உருவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதே விதமாகத்தான் மலைகள் உருவாக்கப்பட்டது. கடல்கள் உருவாக்கப்பட்டது. மேகங்கள் வடிவமைக்கப்பட்டது. இந்த நம் பூமிப் பந்தும் எல்லா கிரகங்களும் மற்றும் எல்லா நட்சத்திரங்களும் மற்ற அனைத்தும் இந்த இயற்கையின் சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டது. நாம் உதாரணத்திற்கு எடுத்துக்கொண்ட நம்முடைய பிரவாகத்தைப் போல். வடிவமைப்பாளர் தேவை இல்லை. இந்த பிரபஞ்சத்திற்கும் ஒரு வடிவமைப்பாளர் தேவை இல்லை, இயற்கை விதிகள் நமக்கு எல்லாவற்றையும் விளக்குகின்றன.

மேலும் நீங்கள் பரிகசித்து துவேஷமுடன் தர்க்க ரீதியான வாதத்தை விட ஒருவரின் சுய கருத்துக்களை முன்னிறுத்தும் வேலையில் ஈடுபட்டு முறையிட்டு தவறான தருக்கவாதங்களை உங்களது சாட்சியாக கூறுகிறீர்கள்.

உங்களுடைய பழங்கால நீதிக்கதை புத்தகங்களில் உங்கள் அறிவு புதைந்து கிடப்பதை விடுத்து நீங்கள் ஏன் தர்க்கரீதியான புத்தகங்களை வாசிக்ககூடாது? நீங்கள் இணையத்தில் அதை வாசிக்கலாம். நீங்கள் அதை படித்தால் வெளிப்படையான தவறுகளை செய்ய மாட்டீர்கள். நீங்கள் உங்களை ஒரு புத்திசாலிஎன்று அழைத்துக் கொண்ட போதிலும், நான் ஒரு போதும் என்னை அவ்வாறு சொல்லி கொண்டதில்லை. ஆனால் நான் தர்க்க ரீதியான வாதங்களை குறித்து அறிந்திருக்கிறேன். ஒரு விவாதத்தில் வெற்றி பெற புத்திசாலியாய் இருக்க வேண்டுமென்பதில்லை. விவாதிப்பதென்பது இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டுவது போல, வயலின் வாசிப்பது போல ஒரு கலை. நீங்கள் தர்க்கரீதியான வாதங்கள் குறித்தும் அதில் உள்ள தர்க்க தவறுகளில் இருந்து விலகி இருக்கும் போதும் நீங்கள் அதில் மேன்மை அல்லது சிறந்தவறாகிறீர்கள். யாராலும் அதைசெய்யமுடியும்.

மேலும்நீங்கள் “நீங்கள் எந்த அளவு கொடுமைகாரனாக இருந்தால், இங்குள்ள ஜீவன்களெல்லாம் தானாகவே உருவானவை என்று உணர்கிறீர்கள்.நீங்கள் ஏன் மற்ற ஜீவன்களை விட்டுவிடவில்லை.எனவே உங்களை ஒருவிதமான புற்றுநோய் என்றழைக்கலாம்.மேலும் இந்த சமுதாயத்திலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள்என்றீர்கள்.

உண்மை என்னவென்றால், நான் என்னை இந்த சமுதாயத்தின் புற்று நோய் என்று நினைக்கவில்லை. அறியாமையையும் வெறுப்பையும் பரப்புகிறவர்களே இந்த சமுதாயத்தின் புற்று நோயாகும் என்று நான் நினைக்கிறேன். கற்பனை வரைமுறைகளான இனம், வகுப்பு, ஜாதி, பாலினம், மற்றும் மதம் என்று மனிதத்தை துண்டாடும் மனிதர்களே இந்த சமுதாயத்தின் புற்று நோயாகும். ஆனபோதிலும், என்னுடைய தீர்வு இந்த மனிதர்களை குணப்படுத்துவதே அன்றி இந்த சமுதாயத்திலிருந்து அவர்களை நீக்கிவிடுவதல்ல. நாங்கள் இருட்டுக்கு எதிராக வாளை உயர்த்துவதில்லை. நாங்கள் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுகிறோம். என்னுடைய படவுருவை (ICON ) ஒரு முறை பார்வையிடவும். இரண்டு சிறகுகளுடைய இருட்டில் ஒளிர்கின்ற ஒரு மெழுகுவர்த்தியே அது. மெழுகுவர்த்தி உண்மையை குறிக்கின்றது, மற்றும் சிறகுகள் சுதந்திரத்தை குறிக்கின்றது.அந்த சித்திரம் இயேசுவின் வார்த்தைகளான “உண்மை உங்களை விடுதலையாக்கும்” என்பதின்சித்தரிப்பாகும். இதுவே எங்களது கொள்கையாகும். நான் உண்மையை தேடி, அதை என் எழுத்துக்களின் மூலமாக பரப்புகிறேன்.

ஆனால் நான் தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே தான், மக்கள் என்னுடைய கருத்துகளோடு உடன்படாமல், அதை விமர்சிக்கும் வகையில் ஒளிவு மறைவு இல்லாத பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன். அதனால் என்னுடன் கருத்து வேறுபடுகிறவர்களிடம் இருந்து நான் கற்றுக் கொள்கிறேன். அவர்கள் நான் மறுயோசனை செய்யும்படி என்னை நிர்பந்திக்கிறார்கள்.

நீங்கள்நம் அனைவருக்கும் ஒன்றுமே அங்கில்லை என்றால், எதிர்காலம் இல்லை என்றால் பின் இந்த மக்கள் வாழ்வதின் காரணம் என்ன? “கூறினீர்கள்

நம்பிக்கை இல்லை என்று யார்சொன்னார்கள்? மனிதகுலத்திற்கு என்று நம்பிக்கை உள்ளது. எதுவுமே நம் தனிப்பட்ட ஒருவரிடம் இருந்து தொடங்குவதோ அல்லது முடிவதோ இல்லை. எனக்கு முன்பாக இருந்த எண்ணற்ற தலைமுறைகளின் விவேகத்தை கொண்டிருக்கும் மரபணுக்களை நான் தாங்கி வந்திருக்கிறேன், அதை எனக்கு பின்னாக வரப்போகின்ற எண்ணற்ற தலை முறைகளுக்கு அந்த விளக்கு கடந்து போகும்படி செய்கிறேன். இந்த உலகம் சிறப்பானதாகும்படி என்னுடைய பங்கை அளிக்கிறேன். நான் என் முன்னோர்களிடம்இருந்து கற்றுக்கொண்டேன், அதை எனக்கு பின்வரும் சந்ததியினரிடம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த அளப்பரிய கடலினும் பெரிதான மனித அறிவில் ஒரு துளியை சேர்க்கிறேன் என்று நம்புகிறேன். இந்த உலகம் மிக சிறந்ததாக இருக்கும் பொருட்டு, அது ஒரு மிக சொற்பமான செயலாய்இருந்தாலும் கூட, நான் கொஞ்சம் வலியை தாங்கிகொள்ள முடியும் என்று நம்புகிறேன். ஏனெனில் நான் அதில் சிறிது காலம் வாழ்ந்திருக்கிறேன். எனவே நான் என் நல்ல செய்கைகளினால் நீடித்து வாழ்கிறேன். மாறாக, என் உடம்பினாலோ அல்லது ஆவியாகவோ அல்ல. இந்த இரண்டு நல்ல செய்கைகளும் மற்றும் தீய செயல்கள்- இந்த உலகத்தில் ஒரு குளத்தினில் உள்ளசிற்றலைகளை போல எதிரொலித்துக் கொண்டே இருக்கும். அது நம்முடைய மரணத்திலிருந்து பிழைக்கும்.

ஆலோயிஸ் ஹிட்லர் தன் மகனை கொடுமைப்படுத்தினார். அடோல்ப் வளர்ந்து ஒரு மன நோயாளியாகவும் வெகுஜன கொலைகாரனாகவும் மாறினான். முஹம்மதின் தாய் அவனை புறக்கணித்துவிட்டார். அவன் வளர்ந்து ஒரு மன நோயாளியாகவும் வெகுஜன கொலைகாரனாகவும் மாறினான். ஆன்னி சுலைவன் (Annie Sullivan) பார்வையற்ற ஒரு இளம் பெண். ஹெலன் கெல்லர் (Helen Keller ) என்னும் பார்வை இழந்த பெண் மட்டும் அல்ல. காதும் கேட்காத வாயும் பேசமுடியாத பெண்ணுக்கு வீட்டிற்க்கே வந்து சொல்லிகொடுக்கும் ஆசிரியை ஆனாள். ஆன்னியின் அன்பினால் ஹெலன் ஒரு படைப்பாற்றல் மிக்க ஒரு எழுத்தாளராய் ஆனாள். ஒரு அரசியல் செயல்வீரர் மற்றும் பார்வை இழந்த, காது கேளாதவர்களில் முதல் இளங்கலை பட்டப்படிப்பு பெற்றவராகவும் ஆனார். கோடிக் கணக்கான பேருக்கு ஹெலன் ஒரு தூண்டுதலாக அமைந்தார், ஆன்னிக்கு நன்றிகள் உரித்தாகட்டும். இந்த அனைத்து மக்களும் வரலாற்றில் தங்கள் தடயங்களை விட்டு சென்றனர். அவர்கள் மரணிக்கவில்லை. துன்பத்தில் வாழ்ந்தார்களா? அல்லது இன்பத்தில் வாழ்ந்தார்களா என்பதை அவர்கள் விட்டு செல்கின்றனர். நான் எளிமையை விட்டு செல்ல வேண்டும் என்று எதிர்பார்கிறேன். வலியையோ மகிழ்ச்சியையோ அல்லது நிச்சயமாக துக்கத்தையோ அல்ல. நாம் பிளைத்திருக்கிறோமா என்பது முக்கியமல்ல. நாம் இந்த உலகத்தின் மீது உண்டாக்கிய நம்முடைய தாக்கத்தின் மூலமாக வாழ்ந்து கொண்டிருப்போம். எனவே நாம் ஏன் அதை ஒரு நல்ல தாக்கமாக விட்டுச் செல்ல கூடாது? நீங்கள் மாறாக, உங்களை பற்றி அதிகம் அக்கறை கொண்டு, மறுவுலக வாழ்க்கைக்கு வாக்குறுதியளிக்கும் ஒரு பொய்யில் உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள். அவை அனைத்தும் பொய்யாய் இருந்தால் என்னவாகும்? நாம் இருவருமே மரணமடைகிறோம். மேலும் நரகம் என்ற ஒன்றோ அல்லது சொர்க்கம் என்ற ஒன்றோ இல்லை என்றால் என்னவாகும்? நீங்கள் எதை விட்டு சென்றீர்கள். நீங்கள் அறியாமையையும் வெறுப்பையும், வேற்றுமையையும் விட்டு செல்கிறீர்கள். நான் புரிதலை விட்டு செல்கிறேன். எனவே நாம் இருவருமே வாழ்கிறோம். ஆனால் என்னிடமிருந்து எது வாழ்கிறது என்பதற்கும் உங்களிடமிருந்து எது வாழ்கிறது என்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது.

நீங்கள் ஒரு நபராக மரணத்திற்கு பின் வாழ விரும்புகிறீர்கள். மேலும் ஒரு நாள் என்னை கண்டு என்னை பரிகாசம் செய்யவும் நான் நரகத்திலே எரியும்போது அதை கழி கூறவும் விரும்புகிறீர்கள். இதுவே உங்களின் உணர்வு மற்றும் ஆன்மீக முதிர்ச்சியின் தகுதியாகும். அது உங்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் எனக்கு அது சரியில்லை. ஏராளமானவர்கள் நரகத்திலே எரிந்து கொண்டிருக்கும் போது என்னால் சொர்கத்திலே சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது. நான் என் மனச்சாட்சியை கொன்றுவிட்டு எனக்கு நானே நினைவு படுத்தி பைபிளிலும் குரானிலும் சொன்ன அபத்தமான கூற்றை விசுவசிக்காதது அவர்களுடைய தவறு என்று கூறி கொள்ள, நான் உங்களைப் போல் மனம் படைத்தவன் அல்ல.

நீங்கள் தனிப்பட்ட முறையில் தப்பிபிழைக்க நம்புகிறீர்கள். அது என்னை பொறுத்தவரையில் பரிதாபகரமானது. என்னுடைய நம்பிக்கை இந்த மனித குலமே தப்பி பிழைப்பதற்கானது. அது மிகப் பெரிய ,உன்னதமான நம்பிக்கை. நீங்கள் உங்கள துபாவ விமோசனத்திற்கு போராடிகொண்டிருக்கும் போது, நான் இந்த இனம் முழுவதற்குமாய் அதை விரிவுபடுத்தி இருக்கிறேன். ஆமாம். உண்மைதான். மிகவும் இழிவான, தவறாக வழிநடத்தப்பட்டு இருக்கும் இந்த இனத்திற்காய் விரிவு படுத்தி இருக்கிறேன். நான் மனிதர்களிடம் தீமைகள் இருக்கின்றதை பார்க்கிறேன். ஆனால் அதே சமயம் மிக அதிகமான நன்மைகளுக்கும் அதிக சாத்தியமுள்ளதை காண்கிறேன். நான் அவர்களிடம் உள்ள நன்மையை வெளி கொணர முடியும் என நம்புகிறேன்.

நீங்கள்எனக்கு இந்த விவாதத்தை துவங்குவதற்கு கூட தேவையான தந்தையை பற்றிய நுண்ணறிவோ, விவேகமோ, புரிந்துகொள்ளலோ இல்லை. இந்த சூழ்நிலையை அவர் தாமே எதிர்கொள்வார் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.கூறினீர்கள்

கடவுள் என் முன் தோன்றி என்னோடு விவாதித்தால், நான் அவரை ஏற்றுகொள்வேன். ஆனால் அவர் அதை செய்வதில்லை. அவர் தன் செய்திகளை நடத்தையில் சரியில்லாத நபர்களிடம் கொடுத்தனுப்புகிறார். மேலும் அவைகள் தர்க்கபிழை உள்ளவைகளாகும். இந்த நபர்கள் பொய் செல்லவில்லை என்று எனக்கு எப்படி தெரியும்? முஹம்மது சொன்ன அதே வார்த்தைகளைதான் நீங்களும் கூறுகிறீர்கள். அவர் நாம் அவரை நம்பவில்லை என்றால், அல்லா நம்மை நரகத்தில் எரிப்பார் என்கிறார். ஆனால் நீங்கள் முகம்மதை நம்புவதில்லை. ஏன் இல்லை. குரானில் கூறப்பட்ட பகுத்தறிவில்லாத செய்தி அப்படியே பைபிளில் கூறப்பட்ட செய்தி தான். மேலும் முஹம்மது, கடவுள் ஞானத்தை ஒருவரும் கேள்வி கேட்க கூடாது, அது மனித ஞானத்தை விட மிகவும் வேறானது என்கிறார். எனவே நீங்கள் ஏன் அவரை நம்பக்கூடாது? அவர் சரியாக இருந்தால் என்னவாகும்?

நான் உங்களது கடவுளை என்ன காரணத்திற்காக நிராகரிக்கிறேனோ அதே காரணத்தினால் தான் முஹம்மதின் கடவுளையும் நிராகரிக்கிறேன். ஏன் ஒன்றிலுள்ள தர்க்க பிழையான கடவுளை நம்பி, மற்றொன்றை நம்பாதிருக்க வேண்டும்? அல்லாவிலிருந்து ஜெஹோவாவை வித்தியாசபடுத்திக் காண்பிப்பது எது (அல்லது மிகவும் சரியா என்றால் ஹுபால். ஏனென்றால் அல்லா என்பது கடவுள் என்பது போன்ற ஓர் பெயரே.,மேலும் ஒரு குறிப்பட்ட கடவுளை குறிப்பிடுவது இல்லை)

நீங்கள்ஆனால் ஒரு வேளை நீங்கள் தவறாக இருந்தால் நாம் சந்திப்போம், இது உங்களுக்கு எதிராக நியாய தீர்ப்புநாளில் சாட்சி சொல்லும்.நீங்கள் இதை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.கூறினீர்கள்

ஆம். நான் அதை கவனத்தில் கொண்டு ஏற்கனவே என்னுடைய உரையை தயார் செய்து வைத்திருக்கிறேன். இதுவே அதன் சாராம்சம். ஒ சர்வ வல்லமையுள்ள, விவேகமுள்ள கடவுளே, நான் உங்களை நிராகரிக்கவில்லை. நான் மக்கள் உங்களை குறித்து சொன்னவைகளைத்தான் நிராகரித்தேன். மதம் சார்ந்த மக்களால் சித்தரிக்கப்பட்ட பைத்தியக்காரத்தனமும், தீமையும் உள்ள கடவுள் நீங்கள் என்பதை நான் நம்ப மறுத்தேன். அவர்கள் தர்க்க ரீதியாக உங்களை புரிந்து கொள்ள முடியாது என்றனர். என்னால் அவர்கள் சொல்வதை ஏற்க முடியவில்லை. ஏனென்றால் :

  1. தர்க்க அறிவைப் படைத்த நீங்கள் தர்க்க பிழையாய் இருக்க முடியாது என்று வரையறுத்தேன். ஒளி சூரியனிடத்தில் இருந்து வருகிறதென்றால் சூரியன் இருளாய் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் உங்களை குறித்து என்னிடம் சொன்ன மனிதர்களெல்லாம் நீங்கள் ஒரு தர்க்க பிழையனவர் என்றார்கள். மேலும் அவர்கள் உங்களுடைய தர்க்கமும் மனிதர்களின் தர்க்கமும் வித்தியாசமானது என்றார்கள். ஆனால் அது எனக்கு அறிவற்றதாய் தெரிந்தது. ஒரு மிகப் பெரிய தர்க்கம். ஒரு சிறிய தர்க்கத்தோடு முரண்பட முடியாது. 2+2=4 என்பது சிக்கலான சமன்பாடுகளில்கூட அதுவே தான். இந்த வாதம் உங்களை தரம் தாழ்த்தியதால் நான் நிராகரித்தேன்.

 

  1. அவர்கள் நரக நெருப்பை கூறி என்னை பயமுறித்தியபோது, நானும் என்னுடைய தேடுதலை விட்டு விட்டு PASCAL கண்ணை மூடிக்கொண்டு நம்பியதைப் போல ஒருவேளை நம்பித் தொலையாலாம் என்று எண்ணினேன். சரி, அப்போது நான் எந்த கடவுளை நம்ப வேண்டும் என்று குழம்பிப் போனேன். உங்களுடைய படைப்புகள் கணக்கிலடங்க கடவுள்களை அறிமுகப்படுத்தினர். அவை அனைத்துமே தர்க்கப்பிழையானவை, பயமுறுத்துபவை, பழிவாங்கக் கூடியவை. நீங்கள் அதில் யாரென்று எனக்கு எப்படி தெரியும்? நான் ஒரு ஆள்மாறாட்ட கடவுளை நம்ப பயந்தேன். அது உங்களை மேலும் கோபப்படுத்தி என் நிலைமையை இன்னும் மோசமானதாக்கும். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணி, எந்த கடவுளையும் பின்பற்றாமல் இருப்பது பாதுகாப்பானதாகும் என்று எண்ணினேன். நான் உங்கள் போட்டி கடவுள்களை பின்பற்றாததினால் நீங்கள் மகிழ்ச்சி அடையவில்லையா? எனவே நான் ஏதாவதொரு வெகுமதிக்கு தகுதியானவனாகவில்லையா? உங்களை நான் காண்டுகொள்ள நம்பிக்கைக்குரிய ஒன்றையும் நீங்கள் விட்டு வைக்காததினால், உங்களை குறித்து நான் பல்லாங்குழி ஆடாமல், நான் சாகும் வரை காத்திருந்தேன்.

 

  1. நீங்கள் அன்பின் கடவுள் மற்றும் இரக்கத்தின் கடவுள் என்று சொன்ன அனைத்து மனிதரும், வெறுப்பு, குற்றம்,கொலை என்று வெறுக்கத்தக்க கேவலமான வாழ்க்கை வாழ்ந்து தங்களைத் தாங்களே ஏமாற்றினார்கள். நீங்கள் தவறான மனிதர்களை உங்கள் தூதுவராக தேர்ந்தெடுத்தீர்கள். நான் என்னை அவர்களில் பலரோடு ஒப்பிட்டுப் பார்த்தபொழுது, நான் அவர்களை விட உயர்வான நன்னெறி மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வதைக் கண்டேன். நான் அவர்களின் கெட்ட உதாரணங்களை பின்பற்ற விரும்பவில்லை. நீங்கள் எங்களை வழிநடத்த ஏன் நல்ல மனிதர்களை அனுப்பவில்லை? அவர்கள் வெறுப்பையும் வன்முறையையும் ஊக்குவித்தார்கள். நானோ சமாதானத்தை விருப்புபவன். மேலும் நான் முல்லாகளையும், பாதிரியார்களையும், ராபிக்களையும் கண்டபொழுது நான் பார்த்தது என்னவென்றால், அவர்கள் வெறுப்பை உமிள்பவர்களாகவும், முதிர்ச்சியடையாதவர்களாகவும் இருந்தார்கள். அது ஒன்றே உங்களிடம் இருந்து நான் விலகிப்போக போதுமானதாய் இருந்தது.

 

  1. நான் விலங்குகளின் மேல் காண்பிக்கும் குரூரத்தை வெறுகிறேன். எனவே அவைகளின் சதையை நான் உண்பதில்லை. நான் என் நாக்கின் சுவைக்கும் உணர்வை திருப்தி படுத்தும் விதமாக, அவைகளின் உயிரை எடுக்க வேண்டும் என நினைப்பதை என்னால் தாங்கிகொள்ள முடியாது. ஆனால் உங்கள் சாமியார்கள் (மதகுருமார்கள்) நீங்கள் ஒரு ரத்த தாகம் உள்ள கடவுள் என்றும் ரத்தமும் பலிகளும் உங்களது கோரிக்கைகள் என்றும் அவர்கள் சொன்னார்கள். இவை சாத்தானுக்குரிய வழிபாடு என்று நான் நினைத்தேன். நான் நீங்கள் இந்த விலங்குகளுக்கான கடவுளும் கூட என்று நினைத்தேன். மேலும் நீங்கள் அவைகளையும் அன்பு செய்கிறீர்கள் என்றும் நினைத்தேன். ஆகவே மனிதர்களை அந்த அற்புதமான விலங்குகளின் ரத்தத்தை சிந்தும்படி சொல்ல மாட்டீர்கள் என்றும் நினைத்தேன். அதுவே உங்களை குறித்த நம்பிக்கையில் நான் தடுமாறிய மிக பெரிய தடை கல்லாகும். என்னால் உங்களை ஒரு குரூரமான கடவுளாய் கற்பனை செய்தும் பார்க்கமுடியவில்லை?

 

  1. உங்களைப்பற்றி என்னிடம் கூறியவர்கள் நீங்கள் ஒரு சித்திரவதை செய்வதில் இன்பம் பெறுபவராக, ஒரு சித்ரவதை கூடத்திற்கு சொந்தக்காரர் என்றும், அங்கே மனிதர்களை வருத்தெடுக்கிறீர்கள் என்றும் சித்தரித்தார்கள். நீங்கள் இந்த அளவு பைத்தியம் என்பதை என்னால் நம்ப முடிவவில்லை. பைத்தியக்காரத்தனத்தை உங்களுடைய இயற்பண்புகள் என்பதை மறுத்துதேன். நீங்கள் உண்மையில் உண்டாயிருந்தால், நீங்கள் பகுத்தறிவின் கடவுள் மற்றும் அன்பின் கடவுள் என்பதை நான் அறிந்திருந்தேன். ஆனால் நான் தோராவில் வாசித்த ஒன்றும் குர்ஆனில் வாசித்த ஒன்றும் எனக்கு இது போன்ற ஒரு உணர்வை தரவில்லை.

கடவுள் நியாயமானவராக இருந்தால் அவர் என் பகுத்தறிதலோடு உடன்படுவார். ஒருவேளை அவர் நியாயமானவராக இல்லை என்றால் அவர் ஒரு கணிக்க இயலாத கடவுள். மேலும், அவர் என்ன செய்வார் என்று உறுதிப்படுத்தி கொள்ள நமக்கு வேறுவழி இல்லை. ஒரு வேளை அவர் இறை மறுப்பாளர்கள் அனைவரையும் சொர்க்கத்திற்க்கும் விசுவாசிகள் அனைவரையும் நரகத்திற்க்கும் அனுப்ப முடிவு செய்யலாம். ஒரு பைத்தியக்கார கடவுள் எதை வேண்டுமானாலும் செய்யும் திறனுள்ளது. அதனால் நாம் ஏன் கவலைப்படவேண்டும்?

நீங்கள் “ஐசக் நியுட்டன் ஒரு நாத்தீகவாதி – ஒரு தீவிர நாத்தீகவாதி.மேலும் ஒரு நாள் அவர் நெடுநாள் கற்ற அவரது கல்வி அறிவின் மூலமாக அறிவார்ந்த ரீதியில் உண்மைகளை பார்த்த பொழுது, இப்படிப்பட்ட ஒரு ஒழுங்கான அமைப்பை பெற வேண்டும் என்றால் ஒரு சிருஷ்டிகர்த்தா இருந்தாக வேண்டும் என்று உணர்ந்தார்” என்கிறீர்கள்.

இந்த அறிக்கையில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. அது கெளரவமிக்க மக்கள் தவறாக இருக்க முடியாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அது ஒரு தவறான தருக்க வாதமாகும் அல்லது ஒரு அதிகார முறையீடு. புத்திசாலி மக்கள் கூட தவறாக இருக்க முடியும். ஐன்ஸ்டீன் கடவுள் பல்லாங்குழி விளையாடுவதில்லை என்றார். அவர் ஹீசென்பர்க்கின் நிச்சயமற்ற கோட்பாடு மற்றும் குவாண்டம் இயற்பியலில் துகள்களின் பண்புகள் குறித்து பேசிகொண்டிருந்தார். அவரின் தவறு நிரூபிக்கப்பட்டுள்ளது. கடவுள் எப்போதுமே பல்லாங்குழிதான் விளையாடுகிறார். அரிஸ்டாடில் திமிங்கிலங்கள் மீன் வகையை சார்ந்தது என்று நம்பினார். அவர் தவறாக யூகித்தார். நியூட்டன் கூட சூரியனை சுற்றி கோள்களின் இயக்கம் தேவதூதர்களின் வேலை என்று நம்பினார். பின்னர் ஐன்ஸ்டீன் அது அண்ட வெளியில் மிகப் பெரிய நிறைகொண்ட பொருட்களை சுற்றியிருக்கும் ஒரு வளைவினால் ஏற்படுகிறது என்று காட்டினார்.

அடுத்த தவறு நியூட்டன் ஒரு நாத்திகர் இல்லை என்பது தான். அவரது வாழ்க்கை முழுவதும் அவர் ஒரு ஆழ்ந்த ஒரு விசுவாசி இருந்தார் . அவரது காலத்தில் பெரும்பாலான மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தனர். இன்று சில விஞ்ஞானிகளே கடவுள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

எதை குறித்தும் சந்தேகப்படுவதே ஞானத்தை அடைவதின் முதல் படியாகும். என்று நான் சொன்னபோது நீங்கள் என்னை விமர்சித்தீர்கள். அதற்கு நீங்கள் “அங்கே ஒன்றுமே இல்லாமல் அந்தகாரமாய் இருந்தால் ஞானத்தை ஏன் காணவேண்டும்.இவை எல்லாமே அங்கிருந்தால், ஒன்றுமே மீதமில்லாமலிருந்தால், ஞானத்தை அடைவதினால் என்னவாகிறீர்கள்? எனவே நீங்கள் இறந்து அழுகிப் போகலாம்.”

ஞானத்தை குறித்து உங்கள் வரையறை என்ன என்று எனக்கு நிச்சயம் இல்லை. ஞானம் என்பதின் அர்த்தம் அறிவார்ந்த (அல்லது ஆன்மீக) ஒளி கொடுத்தல்; அறிவுறுத்துவது மற்றும் அறிவாற்றலை வெளிப்படுத்துவது என்பதாகும். ஞானம் இறப்பிற்கு பின் அல்லது மறு உலக வாழ்வோடு சம்பந்தமுள்ளதாக ஏன் நினைகிறீர்கள்.? ஞானம் என்பது அறிவு, மற்றும் விவேகதிற்கு இடையுறு செய்வதிற்கும் மற்றும் குருட்டு மத நம்பிக்கைக்கும் எதிரானது.

நீங்கள் சுருக்கமாக உங்கள் பதிலில் இவ்வாறு கூறினீர்கள்,  “நீங்கள்பரிதாபமான நிலையில் இருக்கிறீர்கள். நான் உங்களுக்காக மிகவும் வருந்துகிறேன். உங்களுக்காக இரக்கப்படுகிறேன். நீங்கள் மோசமாக அடிபட்ட ஒரு விலங்கை போல் இருக்கிறீர்கள் , அது எனக்கு வேதனையை தருகிறது. உங்களுக்காக பரிதாபப்படுகிறேன், பச்சாதாபம் அடைகிறேன். ஆனால் இந்த முடிவு நீங்கள் எடுத்தது.”

இவை அனைத்தும் தர்க்கரீதியான மூடநம்பிக்கைள். இகழ்ச்சி, ஏளனம், தனிப்பட்ட கேலிக்கருத்து, இவற்றின் மேல்முறையீடு. கடவுள் இருக்கிறார் என்று என்னால் நிருபிக்க முடியும் என்று கூறிய நபர் தான் நீங்கள்? உங்கள் தர்க்கம் குறைபாடுகளை கொண்டுள்ளது. நான் உங்களை குற்றம் சொல்ல மாட்டேன்.  ஏனெனில் கடவுள் என்பதே தர்க்க பிழையாகும்.

நீங்கள்  “நான் உங்களுக்கு எதையும் நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இப்போது சொல்கிறேன். என்னிடம் நிருபிக்க ஏதுமில்லை. நான் உங்களைப் போன்ற மனிதர்களை தேடவில்லை. நான் என்னைப் போன்று கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை தேடுகிறேன் கூறினீர்கள்

இறுதியாக நான் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றை கூறியிருக்கிறீர்கள். நீங்கள் நிருபிப்பதற்கு ஒன்றுமே இல்லை. நீங்கள் நம்புகின்றதை விசுவாசித்துப் பாடுகின்ற மக்களிடம் மட்டுமே நீங்கள் போதனை செய்யமுடியும். நீங்கள் வேறு யாரையும் சம்மதிக்க வைக்க முடியாது காரணம் நிருபிப்பதற்கு ஒன்றும் இல்லை. நீங்கள் இதை ராபி ஷாஉல் இடம் இதை தெரிவிக்க வேண்டும். ஏனெனில் கடவுள் இருக்கிறார் என்று என்னால் நிருபிக்கமுடியும் என்று மக்களிடம் சென்று அவர் சத்தியம் செய்யமாட்டார்.

“நீங்கள் இறக்கும்போதுஅதை காண்பீர்கள்” என்றீர்கள்.

இது உங்களுக்கு மிக அற்பமாக இல்லை? எந்த விவேகமுள்ள கடவுளாவது, ஒருவகையிலும் நிருபிக்க முடியாத, காலம் கடந்த பின், அவர்களின் இறப்பிற்கு பின் மட்டுமே நிருபிக்க முடிகின்ற ஒரு செய்தியை மனித இனத்திற்கு அளிப்பாறா? ஒரு ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு கணக்கை அளித்துவிட்டு, இறுதியில் அதை எவ்வாறு விடை காண வேண்டும் என சொல்லாமல் விட்டு விடுவது போல் கற்பனை செய்து பாருங்கள். அந்த கணக்கு முற்றிலும் முட்டாள்தனமாக மற்றும் பகுத்தறிவற்றதாக தெரிகிறது. ஆனால் அவர் இந்த கணக்கு தான் அவர்களின் இறுதித் தேர்வில் மிக முக்கியமான கணக்கு என்றும் தேர்வு முடிந்த பின்பே மாணவர்கள் யூகித்தது சரியா தவறா என்று சொல்வேன் என்கிறார். இது முட்டாள்தனமாக இல்லை? ஆனால் நிலைமை இன்னும் மோசமாகிறது. அதாவது அவர் மேலும் கூறுவது என்னவென்றல் தோல்வி அடைந்தால், ஒரு வருடத்தை மட்டும் இழக்க மாட்டீர்கள். மாறாக, பல ஆண்டுகள் அவர்களை உதைத்து, சித்திரவதையும் செய்வேன் என்கிறார். எந்த அறிவுள்ள மனிதனும் இந்த ஆசிரியர் ஒரு பைத்தியம் என்று சொல்லி பள்ளிகூடத்தை விட்டே விரட்டி விடுவார்கள் என்று நான் நம்புகிறேன். அடடா உங்கள் கடவுள் ஒன்றும் இதைவிட உயர்ந்தவரில்லை. அவர் ஒரு முழுப் பைத்தியம். கடவுள் ஒரு பைத்தியமாக இருப்பது என்பதை நீங்கள் வேண்டுமானால் சரி என்று நினைக்கலாம். ஆனால் நான் ஒரு பைத்தியக்கார கடவுளை நிராகரிக்கிறேன்.

நான் இந்த ராபி பேசியதை கேட்ட பின்பு, இயேசு மீது எனக்கு எப்படியோ ஒரு அனுதாபம் ஏற்பட்டது. அவர் என்ன மாதிரியான மக்களை சமாளிக்க வேண்டியிருந்தது. இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் இந்த ராபி கடவுளின் அன்பை எனக்கு காண்பிக்க போவதாக கூறினார். மாறாக, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடமும் அவர்களின் குழுவில் இல்லாதவர்களிடமும்  தீவிரமான வெறுப்பே அன்றி வேறில்லை.

இந்த கட்டுரை இஸ்லாமில் உள்ள அபத்தத்தை பார்க்க முஸ்லீம்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். பெரும்பாலும் மக்கள் தங்கள் குறைகளை உணர்ந்து கொள்வதைவிட பிறர் குறைகளை எளிதாக காண்கிறார்கள். இதேபோன்றே மிக சரியாக முஸ்லிம்களும் வாதம் செய்கின்றனர். ஏனென்றால் முஹம்மது யூதர்களிடம் இருந்து கற்று, நகல் எடுத்து தன் மதத்தை உருவாக்கினார். இஸ்லாமிய சிந்தனை மற்றும் யூத சிந்தனைக்கு இடையேயான  ஒற்றுமைதற்செயலாக நடந்தது அல்ல. இந்த நபர் போன்ற மதக்குருக்களால் முஹம்மது ஈர்க்கப்பட்டு அவர்களின் மதத்தின்  அடிப்படையையும் கற்றுகொடுத்தனர். முஸ்லிம்கள் இந்த நல்ல வயதான ராபி வாதாடுவதை போன்று வாதிடும்போது, எவ்வளவு கேலிக்குரியவராக பார்க்கப்படுவார்கள் என்பதை காணட்டும். காரணம், ஒரே மாதிரியாக தான் இருக்கும்.

 

தமிழாக்கம் : அந்தோணி