ஒdddரு மிதமான இறை நம்பிக்கையுள்ள குடும்பத்தில் நான் பிறந்தேன். என் அம்மா வழியில் சில உறவினர்கள் அயதுல்லாக்களாக இருக்கின்றனர். நான் பார்த்திராத தாத்தா ஓரளவுக்கு மத நம்பிக்கை இல்லாதவர் (freethinker) என்றாலும், நாங்கள் நம்பிக்கை உள்ளவர்கள். எனது பெற்றோர்கள் முல்லாக்களை அவ்வளவாக விரும்பவில்லை. எங்கள் அடிப்படைவாத (fundamentalist ) உறவினர்களிடம் எங்களுக்கு அவ்வளவாக உறவு இல்லை. நாங்கள் முல்லாக்களால் பரப்பப்படும், பின்ddddddபற்றப்படும் மதமில்லாமல் ‘உண்மையான இஸ்லாமை’ நம்புபவர்களாக எங்களை எண்ணிக்கொண்டோம்.

எனக்கு 15 வயது இருக்கும்போது என்னுடைய ஒரு ஆன்ட்டியின் கணவரிடம் மதத்தைப் பற்றி விவாதித்தது நினைவிருக்கிறது. அவர் ஒரு மதவெறி பிடித்த முஸ்லிம். அவர் பிஃக் (fiqh ) (இஸ்லாமிய சட்டம்) பற்றி மிகவும் தீவிரமானவர். இந்த பிஃக்தான் முஸ்லிம்களுக்கு எவ்வாறு தொழுவது, விரதம் இருப்பது, பொது மற்றும் தனி வாழ்க்கையை நடத்துவது, தொழில் செய்வது, உடலை சுத்தம் செய்துகொள்வது, கழிப்பறையை பயன்படுத்துவது, சிறுநீர், மலம் கழிப்பது, மற்றும் உடலுறவு கொள்வது போன்றவற்றை சொல்லித்தருகிறது. இவைகளுக்கும் உண்மையான இஸ்லாமுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவரிடம் வாதிட்டேன். இவைகளெல்லாம் முல்லாக்களின் கற்பனைகள் என்றும் இவைகளின் மீது மிதமிஞ்சிய கவனம் இஸ்லாமின் தூய பொருளிலிருந்து நம்மை பிரித்து விடும் என்றும் நான் நம்பினேன். இந்த தூய இஸ்லாம் நம்மை கடவுளுடன் இணைக்கிறது என்றும் நம்பினேன். இந்த கருத்து சுஃபிசத்தினால் (Sufism) உருவானது. சூஃபி கவிஞரான ரூமியின் பாடல்கள் காரணமாக பெரும்பாலான ஈரானியர்கள் சூஃபி கண்ணோட்டம் கொண்டுள்ளார்கள்.

உண்மையில் இஸ்லாமின் ஒரு கிளையான சூஃபிசம் அப்படியொன்றும் அமைதிவழி இல்லைதான். இருப்பினும் சூஃபிசம் முற்றிலும் இகத்தை சார்ந்ததும் ஆன்மீகமற்றதுமான மூல இஸ்லாமை விட புதிரானது (mystical). எப்படியோ, இதுவும் அதுவும் தெளிவற்றதுதான்.

ஈரானின் சிறுபான்மையினருக்கு எதிராக செய்யப்படும் பாரபட்சத்தையும் கொடுமைகளையும் நான் என் இளவயதில் கவனித்து இருக்கிறேன். முல்லாக்களின் இறுக்கமான பிடியில் உள்ள அப்பாவி மக்களுடைய சிறு நகரங்களில் இதுபோன்ற கொடுமைகள் இன்னும் அதிகம். என் தந்தையின் வேலை காரணமாக தலைநகரை விட்டு சிறு நகரங்களில் சில ஆண்டுகள் வாழ நேரிட்டது. ஒரு நாள் எங்கள் ஆசிரியர் எங்களை நீச்சல் குளத்திற்கு கூட்டிசெல்வதாக கூறினார். மூன்றாம் உலகநாட்டில் வாழும் எங்களுக்கு அந்த ஒரு சிறிய விஷயம் கூட ஒரு பெரிய கொண்டாட்டமாக இருந்தது. நாங்கள் எல்லோரும் மிகவும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் அதை எதிர்நோக்கி இருந்தோம். எங்கள் வகுப்பில் சில பஹாய் மற்றும் யூத மாணவர்கள் இருந்தார்கள். நீச்சலுக்கு போக வேண்டிய நாளில், எங்கள் ஆசிரியர் அவர்கள் வரமுடியாது என்று சொன்னார். ஏனென்றால் அவர்கள் முஸ்லிம்கள் குளிக்கும் அதே நீச்சல் குளத்தில் குளிக்க முடியாது என்று சொன்னார். அவர்களின் ஏமாற்றத்தை என்னால் இன்றும் மறக்கமுடியவில்லை. மனம் உடைந்தும் கண்களில் கண்ணீருடனும் அடக்கமாக பள்ளியைவிட்டு வெளியேறினார்கள். அப்பொழுது எனக்கு 9 அல்லது 10 வயது இருக்கும். அந்த வயதில் என்னால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த அநீதியால் நான் கவலையடைந்தேன். முஸ்லிமாக இல்லாதது அந்த சிறுவர்களின் தவறாக இருக்குமோ என்று எண்ணினேன்.

சொந்தமாக சிந்திக்க ஊக்கமூட்டிய திறந்த மனதை உடைய பெற்றோர்களை பெற்றதற்காக நான் அதிர்ஷ்டசாலிதான். அவர்கள் எனக்கு கடவுளிடமும் கடவுளின் தூதுவர்களிடமும் அன்பை புகட்டினார்கள். அதேசமயம் மனிதாபிமான மதிப்புகளான (v values) ஆண் பெண் சம உரிமையையும் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பையும் புகட்டினார்கள். அவர்கள் உண்மையான் இஸ்லாமை அறியவில்லை என்பதை இப்பொழுது நான் அறிவேன். ஒருவிதத்தில் பெரும்பாலான ஈரானிய குடும்பங்கள் இப்படித்தான். சொல்லப்போனால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இஸ்லாம் மனித உரிமைகளை மதிக்கின்ற, பெண் உரிமைகளை பாதுகாத்து பெண் நிலையை உயர்த்துகின்ற மனிதாபிமான மதம் என்றே நம்புகின்றனர். பெரும்பாலான முஸ்லிம்கள் இஸ்லாம் என்றால் சமாதானம் என்றே நம்புகின்றனர். சில முஸ்லிம்களே குரானை படித்து இருக்கிறார்கள் என்பதை சொல்லவே தேவை இல்லை. எனது இள வயதில், நான் இஸ்லாமை எப்படி இருக்கவேண்டும் என்று நினைத்தேனோ அப்படிப்பட்ட ‘உண்மையான இஸ்லாமை’ வலியுறுத்திக்கொண்டும், முல்லாக்களையும் அவர்களின் ‘உண்மையான இஸ்லாமை’ விட்டு விலகிய மார்க்கத்தை விமரிசித்துக்கொண்டும், அறியாமை சுகத்தில் திளைத்து வந்தேன். எனது மனிதாபிமான மதிப்புகளுக்கு இயைந்த ஒரு இஸ்லாமை கற்பனை செய்துகொண்டேன். எனது கற்பனை இஸ்லாம் மிகவும் அழகாக இருந்தது. அது சமத்துவத்திற்கும் சமாதானத்திற்குமான மதம். அது தனது மக்களை அறிவை தேடுவதற்கும் புதியவற்றை அறிய ஆவல் கொள்ளவும் தூண்டியது. அது அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் ஏற்றது. இஸ்லாமிலிருந்துதான் அறிவியல் தனக்கான தூண்டுதலை பெற்றது என்றும், இதுதான் மேற்குலகில் நவீன கண்டுபிடிப்புகளாக மனிதனுக்கு பயனளிக்கிறது என்றும்கூட நம்பினேன். இவ்வாறாக இஸ்லாம்தான் நவீன நாகரீகத்தின் காரணி என்றும் நம்பினேன். முஸ்லிம்களின் கேவலமான நிலைக்கும் அறியாமைக்கும் சுயநல முல்லாக்களும் மத தலைவர்களுமே காரணம் என்று நினைத்தேன். இவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக இஸ்லாமை தவறாக புரிந்துகொள்கிறார்கள் என்றும் நினைத்தேன். இப்படித்தான் பெரும்பாலான முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். அவர்கள் இஸ்லாமிடம் குறைகாண துணிவதில்லை. மதத்தின் எல்லா குறைகளுக்கும் அவர்கள் தங்களையும் மற்ற அனைவரையும் குற்றம் சாட்டுகிறார்கள்.

முஸ்லிம்கள் மேற்குலக நாகரீகத்தின் வேர்கள் இஸ்லாமில் இருப்பதாக நினைக்கிறார்கள். மத்திய கிழக்கு அறிவியல் மேதைகளின் படைப்புகள் நவீன அறிவியலின் தோற்றத்திற்கு ஆதாரமாக இருந்தன என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.

ஓமர் கய்யாம் (Omar Khayyam) வருடத்தின் நீளத்தை 0.74% துல்லியத்துடன் கண்டுபிடித்த கணித மேதை. சக்காரியா ராசி (Zakaria Razi) ஆரம்பகால விஞ்ஞானிகளில் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகள் மூலம் செயல் முறை அறிவியலை வளர்த்த விஞ்ஞானிகளில் முக்கியமானவர். அவிசென்னா (Avicenna) வினுடைய புகழ் பெற்ற மருத்துவ களஞ்சியம் ஐரோப்பியாவின் பல்கலை கழகங்களில் பல நூற்றாண்டுகளாக பாடமாக இருந்தது. ஐரோப்பா இருண்ட காலத்தில் இருந்த பொழுது, பல ‘இஸ்லாமிய மேதைகள்’ நவீன அறிவியலில் முன்னோடிகளாக இருந்தனர். மற்ற முஸ்லிம்களை போல, நான் இந்த மேதைகள் எல்லோரும் முஸ்லிம்கள் என்றும் அவர்கள் இஸ்லாமின் மறைந்திருக்கும் அறிவினால் தூண்டப்பட்டார்கள் என்றும், இன்றும், தூய்மையான இஸ்லாமை திரும்பப்பெற்றால் முஸ்லிம்கள் தங்கள் இழந்த பொற்காலத்தை மீண்டும் பெற்று உலக நாகரீகத்தை மீண்டும் வழி நடத்துவார்கள் என்றும் நம்பினேdddன்.

ஈரான் ஒரு முஸ்லிம் நாடு. ஆனால் ஊழல் நிறைந்த நாடும் கூட. ஒரு நல்ல பல்கலை கழகத்தில் இடம் பெரும் வாய்ப்பு மிகவும் குறைவு. பத்தில் ஒருவர் மட்டுமே இடம் பெற முடியும். இடம் வேண்டுமென்றால் விருப்பமில்லாத பாடங்களையும் தேர்ந்தெடுக்க வேண்டி வரலாம். பெரிய இடத்தில் தெரிந்தவர்கள் இருந்தால் மட்டுமே இடம் கிடைக்கும்.

ஈரானில் கல்வித் தரமும் அவ்வளவு சிறந்தது அல்ல. ஷா கல்வியில் நல்ல முதலீடு செய்வதற்கு பதிலாக ராணுவத்தை பலப்படுத்தி மத்திய கிழக்கு நாடுகளின் பெரிய ராணுவ சக்தியாக வருவதிலேயே குறியாக இருந்தார். எனவே பல்கலை கழகங்களுக்கு பண ஒதுக்கீடு குறைவு. இயல்பாகவே அவர் அறிஞர்களிடம் அவநம்பிக்கையே கொண்டிருந்தார். இந்த காரணங்களுக்காக என் தந்தை என்னை கல்லூரி படிப்பிற்காக அயல் நாட்டிற்கு அனுப்புதல் நல்லது என்று நினைத்தார்.

அமெரிக்க அல்லது ஐரோப்பா செல்ல நினைத்தோம். ஆனால் தன் மதவாத நண்பர்களின் ஆலோசனைப் படி தனது 16 வயது மகனை ஒரு இஸ்லாமிய நாட்டுக்கு அனுப்புதல் நல்லது என்று என் தந்தை நினைத்தார். மேற்கில் ஒழுக்கம் குறைவு என்றும், கடற்கரைகளில் அம்மணமாக இருப்பார்கள் என்றும், குடியும் கும்மாளமுமாக இருப்பார்கள் என்றும் இவை எல்லாமே வாலிப வயதில் அபாயமானது என்றும் செல்லப்பட்டோம். ஆகையால் மதப்பற்றும் ஒழுக்கமும் நிறைந்த நாடென சொல்லப்பட்ட பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டேன். என் குடும்ப நண்பர் ஒருவர் பாகிஸ்தான் இங்கிலாந்தைப் போலத்தான் என்றும் அதே சமயத்தில் விலையில் மலிவு என்றும் கூறினார்.

இது பொய் என்பதுதான் உண்மை. நான் பாகிஸ்தானியர்களை ஈரானியர்களைப் போல ஒழுக்கம் கெட்டவர்களாகவும் ஊழல் மிக்கவர்களாகவுமே கண்டேன். அவர்கள் மதப்பற்று மிக்கவர்கள் என்பது உண்மைதான். அவர்கள் பன்றிக் கறி உண்பதில்லை. நான் யாரையும் பொது இடங்களில் மது அருந்திப் பார்த்ததில்லை. ஆனால் அவர்கள் பொய்பேசினார்கள், போலி வேடம் போட்டார்கள், பெண்களிடம் கொடூரமாக நடந்து கொண்டார்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் எல்லோரும் இந்தியர்களை வெறுத்தார்கள். அவர்கள் சிறிதும் ஒழுக்கம் அற்றவர்கள். அவர்களுக்கு மத நம்பிக்கை இருந்தது ஆனால் நெறிமுறை (ethics) தவறியவர்கள்.

கல்லூரியில் எனது ஏ நிலை FSc (Fellow of Science) முடிப்பதற்கு, உருது படிப்பதற்கு பதிலாக பாகிஸ்தானிய கலாச்சாரத்தை படித்தேன். நான் பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட காரணத்தை தெரிந்துகொண்டேன். முதன்முறையாக பாகிஸ்தான் காயதே அசம் (Qaid-e A’zam, பெருந்தலைவர்), என்று அழைத்த முஹம்மது அலி ஜின்னா பற்றி அறிந்து கொண்டேன். அவர் ஒரு சிறந்த அறிவாளியாகவும், தேசத் தந்தை என்றும் அறிமுகப் படுத்தப்பட்டார். ஆனால் காந்தி இழிவாக பேசப்பட்டார். அப்பொழுதும் நான் காந்தியின் பக்கம்தான் நின்றேன். ஜின்னா ஒரு கர்வம் பிடித்த பேராசை மனிதன் என்றும் நாட்டை பிரித்து பல மில்லியன் மக்களின் படுகொலைக்கு காரணமானவர் என்றுதான் நான் எண்ணினேன். ஆம். எப்பொழுதும் எனக்கென்று ஒரு மனம் இருந்தது. எனது எண்ணங்களே அலாதியானது. எனக்கு என்னதான் சொல்லிகொடுக்கப்பட்டாலும், எனது சொந்த முடிவுக்குத்தான் வருவேன்.

மதம் நாட்டை பிரிக்க ஒரு சரியான காரணமாக எனக்கு படவில்லை. பாகிஸ்தான் என்ற வார்த்தையே இந்தியர்களை கேவலப்படுத்துகின்ற ஒன்று. பாக் (தூய) என்ற பெயரை தங்கள் நாட்டுக்கு வைத்ததன் மூலம் அவர்கள் ‘நஜிஸ்’ (அசுத்த, தொட்டால் தீட்டாகின்ற) என்று முஸ்லிம்கள் கருதிய இந்தியர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக்கொண்டார்கள். ஆனால் உண்மையில் பாகிஸ்தானிக்களைவிட உடலளவிலும் மனதளவிலும் அசுத்தமான மக்களை நான் வேறெங்கும் கண்டதில்லை. மற்றுமொரு இஸ்லாமிய நாட்டை இப்படிப்பட்ட அறிவு மற்றும் ஒழுக்கப் பஞ்சத்தில் பார்ப்பதற்கு எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

என் நன்பர்களிடம் பேசும்போது ‘உண்மையான இஸ்லாம்’ பற்றி ஏற்றுக்கொள்ள வைக்க முடியாமல் போயிற்று. நான் அவர்களின் மதவெறியை குறை கூறினேன். அவர்கள் என் கருத்துக்களை மதவிரோதம் என்றார்கள். பல ஆண்டுகளாக நிறைய படித்ததற்கு பிறகுதான் இஸ்லாம் பற்றிய அவர்கள் கருத்துக்கள் உண்மை என்றும் நான் அறியாமையில் இருந்தேன் என்றும் உணர்ந்தேன்.

இதை எல்லாம் என் தந்தையிடம் சொன்னேன். கல்வியை தொடர இத்தாலி செல்ல முடிவெடுத்தேன். இத்தாலியில் மக்கள் வைன் குடிக்கிறார்கள், பன்றிக்கறி சாப்பிடுகிறார்கள். ஆனால் மிகவும் வரவேற்கும் மனதுடனும், நட்புடனும், முஸ்லிம்களைவிட கபடு குறைந்தவர்களாகவும் கண்டேன். மக்கள் கைமாறு கருதாமல் மனம் உவந்து உதவினார்கள். நான் ஒரு அன்புள்ள வயதான ஜோடியைக் சந்தித்தேன். அவர்கள் நான் ஞாயிறுகளில் தனிமையில் வாடக்கூடாது என்று என்னை அவர்கள் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தார்கள். அவர்கள் என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வில்லை. அவர்களின் அன்பை என் மேல் பொழிய மட்டுமே விரும்பினார்கள். அவர்களுக்கு நான் ஒரு பேரனைப் போல. ஒரு புதிய நாட்டிற்கு வந்துள்ள ஒரு அன்னியனுக்குத்தான் உள்ளூர்வாசிகளிடமிருந்து கிடைக்கும் இது போன்ற வரவேற்பின் அருமை தெரியும்.

அவர்கள் வீடு மினுக்கும் பளிங்குக் கல் தரையுடன் பளபளவென்று இருந்தது. இது முஸ்லிமல்லதோர் பற்றி எனக்கு சொல்லப்பட்டதற்கு தலைகீழாக இருந்தது. இஸ்லாமில் முஸ்லிமல்லாதோர் அழுக்கானவர்கள் என்றும் அவர்களுடன் நட்பு பாராட்டக்கூடாது என்றும் இருக்கிறது. (Q.9:28) “முஸ்லிம்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய அவ்லியாக்களாக (நண்பர்கள், பாதுகாவலர்கள், உதவியாளர்கள்)ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் தங்களுக்குள்தான் அவ்லியாக்கள்…” என்று குரான் சொல்கிறது Q.5: 51

இதுபோன்ற வாசகத்திலிருக்கும் ‘ஞானத்தை’ என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னை அந்நிய மண்ணில் தனிமையாக உணரவைக்கக் கூடாது என்ற ஒரு எண்ணத்தைத் தவிர வேறு எந்த மறைமுக நோக்கமும் இல்லாது அவர்கள் வீட்டிற்கு என்னை வரவேற்ற அந்த அன்பான மக்களுடன் நான் ஏன் நட்பு கொள்ளக்கூடாது என்று வியந்தேன். அவர்கள் ‘உண்மையான முஸ்லிம்கள்’ என்றே நினைத்தேன். அவர்களுக்கு இஸ்லாமைப் பற்றி கூறி அவர்களையும் முஸ்லிம்களாக மாற்றும் நோக்கத்துடன் அதைப் பற்றிய பேச்சை எடுத்தேன். அவர்களுக்கு அதில் விருப்பம் இல்லாமல் நாசுக்காக பேச்சை மாற்றினார்கள். முஸ்லிமல்லாதோர் எல்லாம் முஸ்லிமாக இல்லாத காரணத்திற்க்காக நரகத்திற்கு போவார்கள் என்று நம்பும் அளவுக்கு முட்டாளாக நான் என் வாழ்க்கையில் எந்த காலத்திலும் இருந்தது இல்லை. முன்னர் குரானில் இப்படி இருக்கப் படித்தேன். ஆனால் அதைப் பற்றி யோசிக்க விரும்பவில்லை. அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கடவுள் தனது தூதுவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டால் மகிழ்வார் என்றும் அப்படி இல்லையென்றாலும் அவர்களை காலத்திற்கும் நரகத்தில் எரிக்கமாட்டார் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் குரான் இதில் தெளிவாக இருக்கிறது.

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். Q 3:85

இருப்பினும் நான் இதை பெரிது படுத்தவில்லை. இதற்கு வேறு ஏதேனும் பொருள் இருக்கும் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன். அந்த வயதில் இதை என்னால் சமாளிக்க முடியவில்லை. எனவே அதைப் பற்றி யோசிக்க மறுத்தேன். பெரும்பாலான் முஸ்லிம்கள் இது போன்ற மறுப்பில் தான் வாழ்கிறார்கள். எனக்கு சில முஸ்லிம் நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் பொதுவாக ஒழுக்கமற்ற இரட்டை வாழ்க்கை வாழ்ந்தார்கள். அவர்களுக்கு கேர்ள்ஃபிரெண்ட்ஸ் இருந்தார்கள். அவர்களுடன் உடலுறவும் கொண்டார்கள். இது இஸ்லாமிய வழிக்கு எதிரானது. அப்பொழுது நானும் அப்படித்தான் நினைத்தேன். எனக்கு அறவே பிடிக்காதது என்னவென்றால் அவர்கள் அந்த பெண்களை சக மனிதர்களாகக் கூட மதிக்க வில்லை. அந்த பெண்கள் முஸ்லிம்கள் இல்லை. எனவே போகப் பொருளாக மட்டுமே மதித்தார்கள். இந்த மனப்பான்மை பொதுவானது அல்ல. மதத்தில் அவ்வளவாக பற்று காட்டாதவர்கள் மேற்க்கத்திய பெண்களுடன் அதிக மரியாதையுடனும் நேர்மையுடனும் நடந்து கொண்டார்கள். சிலர் அவர்களை காதலிக்கவும் செய்தார்கள். மணமுடிக்கவும் விரும்பினார்கள். இதற்கு முரணாக, மதத்தில் அதிக வெறி காட்டியவர்கள் நேர்மையில்லாதவர்களாகவும் கபடதாரிகளாகவும் இருந்தார்கள்.

எதுவெல்லாம் சரியோ அதுவெல்லாம் ‘உண்மையான இஸ்லாம்’ என நான் எண்ணினேன். எதை ஒழுக்கம் கெட்டதாகவும், நெறியற்றதாகவும், நேர்மையற்றதாகவும், கொடூரமானதென்றும் நினைத்தேனோ அதையெல்லாம் இஸ்லாமுக்கு எதிரானதாக நினைத்தேன். இதற்கு நேர்மாறாக, எதுவெல்லாம் சரியோ அதை இஸ்லாமுக்கு உரித்தாக்கினேன்.இப்படித்தான் பெரும்பாலான முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது இஸ்லாம் அல்ல. அப்பொழுது முஸ்லிம்கள் கெட்டவர்களாக இருப்பது இஸ்லாமினால் தான் என்று என்னால் எண்ணமுடியவில்லை.

மிகவும் பக்தியாக இருந்தவர்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக இருந்தார்கள். இஸ்லாமை வெறித்தனமாக ஆதரிப்பவர்கள் எல்லாம் நேர்மையற்றவர்களாக இருந்தார்கள். யாரேனும் இஸ்லாமுக்கு எதிராக ஒரு வார்த்தை சொல்லிவிட்டாலும் இவர்கள் தங்கள் நிதானத்தை இழந்து சண்டைக்கு வருவார்கள்.

ஒருமுறை யூனிவெர்சிட்டி காண்டீனில் ஒரு ஈரானிய வாலிபனின் நண்பனானேன். அவரை என் மற்ற இரு ஈரானிய நண்பர்களிடம் அறிமுகப் படுத்தினேன். நங்கள் எல்லோரும் ஒரே வயதினர்தான். அவர் நல்ல படிப்பு, குணம், ஞானம் உடையவர். நாங்கள் மதிய உணவு வேளையில் அவருக்காக காத்திருந்து அவரருகில் அமர்ந்தோம். அவரிடமிருந்து நாங்கள் எப்பொழுதும் ஏதேனும் புதிய விசயங்களை தெரிந்து கொண்டோம். பொதுவாக நாங்கள் இத்தாலிய உணவையே உண்டோம். எனவே ஈரானிய உணவுக்காக ஏங்கிக்கொண்டு இருந்தோம். அந்த நண்பர் தனது அம்மா ஈரானிலிருந்து உணவுப் பொருட்கள் அனுப்பி இருப்பதாகவும் வரும் ஞாயிறில் அவர் வீட்டுக்கு மதிய உணவுக்கு வரும்படியும் சொன்னார். அவருடைய இரு-அறை அபார்ட்மென்ட் சுத்தமாக இருந்தது. எங்களுக்காக ருசியான காய் குர்மா செய்திருந்தார். வயிறுமுட்ட சாப்பிட்டோம். பிறகு டீ குடித்துக்கொண்டே பேசினோம். அப்பொழுதுதான் அவரின் பஹாய் புத்தகங்களை பார்த்தோம். அவைகளைப் பற்றி கேட்ட பொழுது அவர் தான் ஒரு பஹாய் என்றார்.

திரும்பிச்செல்லும் வழியில் என் நண்பர்கள் அவரிடம் நட்பை தொடர விரும்பவில்லை என்றார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏன் என்று கேட்டேன். அவர் பஹாய் என்பதால் அசுத்தமானவர் என்றும், இது முன்னரே தெரிந்திருந்தால் அவருடன் சேர்ந்திருக்க மாட்டார்கள் என்றும் சொன்னார்கள். எனக்கு ஒன்றுமே புரிய வில்லை. சற்று முன்னர்தான் அவர் வீடு மிகவும் சுத்தமாக இருந்தது என்று சொன்னோமே ஏன் அவர் அசுத்தமானவர் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டேன். எங்களுக்கு தெரிந்த முஸ்லிம்களைவிட அவர் நேர்மையானவர் என்பதை அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். அப்படியிருக்க ஏன் இந்த திடீர் மனமாற்றம்? அந்த மதத்தின் பெயரே விரும்பத்தகாதது என்றார்கள். பஹாய் மதத்தை ஏன் அனைவரும் வெறுக்கிறார்கள் என்று என்னை கேட்டார்கள். எனக்கு தெரியாது என்றேன். பஹா என்றால் புகழ் என்று பொருள். அதில் என்ன தவறு இருக்கிறது. நான் எல்லாரையும் விரும்புபவன். அவர்களுக்கு பஹாயீக்களை பிடிக்காது என்றால் அவர்கள் தான் அதற்க்கான காரணத்தை சொல்ல வேண்டும் என்று கேட்டேன். அவர்களுக்கு தெரியவில்லை. இந்த நபர்தான் அவர்கள் பார்த்த முதல் பஹாய். அவரோ முன்மாதிரியான மனிதர். எனக்கு அவர்களின் வெறுப்புக்கான காரணம் தெரிய விரும்பினேன். ஆனால் அவர்களுக்கு குறிப்பான காரணம் ஒன்றும் இல்லை. பஹாயீக்கள் கெட்டவர்கள் என்று மட்டும் தெரியும் என்றார்கள்.

நல்லவேளை நான் அந்த கபடதாரிகளுடன் நட்பை தொடரவில்லை. அவர்களிடமிருந்து நான் முன்முடிவுகள் (prejudice) எவ்வாறு தோன்றுகின்றன என்றும் அவை எவ்வாறு வேலை செய்கிறது என்றும் தெரிந்துகொண்டேன். முஸ்லிம்களின் முஸ்லிமல்லாதோர்மீது உள்ள முன்முடிவுகளும் வெறுப்பும் குரானின் போதனைகளால் ஏற்ப்பட்டது என்று பிறகு உணர்ந்தேன்.

மசூதிக்கு சென்று முல்லாக்களின் போதனைகளை கேட்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். குரானில் முஸ்லிமல்லாதோரை வெறுக்கச் சொல்லியும், அவர்கள் மீது போர் தொடுக்கச் சொல்லியும், அவர்களை அடக்கச் சொல்லியும், அவமானப் படுத்தச் சொல்லியும், பார்க்கும் இடங்களில் எல்லாம், தலை, கைகால்களை வெட்டச் சொல்லியும், சிலுவையில் அடிக்கச் சொல்லியும், கொல்லச் சொல்லியும் முஸ்லிம்களை தூண்டும் கட்டளைகள் பல உள்ளன.

நான் மதத்தை என் ஆழ்மனதிற்கு தள்ளிவிட்டேன். என் நம்பிக்கை குறையவில்லை. ஆனால் பல வேலைகளில் மதத்தைப் பற்றி யோசிக்க நேரமில்லை. இதற்கிடையில் நான் மேற்குலகை மென்மையாக்கிய மக்களாட்சி, மனித உரிமைகள், சமத்துவம், பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் போன்றவற்றைப் பற்றி அறிந்துகொண்டேன். இவைகள் எனக்கு பிடித்திருந்தன. தொழுகையை தொடர்ந்தேனா? எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுது மட்டும் செய்தேன். மேற்க்கத்திய நாட்டில் வாழ்ந்துகொண்டு மிகவும் வித்தியாசமாக இருக்க எனக்குப் பிடிக்கவில்லை.

ஒரு நாள், இஸ்லாம் பற்றி ஆழமாக தெரிந்து கொள்ளவும் குரானை முழுவதுமாக படிக்கவும் முடிவு செய்தேன். ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய அரபிக் குரானை தேடிப் பெற்றேன். எனது பாரசீக குரானையும் எடுத்துக் கொண்டேன். இதற்கு முன்னர் குரானை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் படித்திருந்தேன். இம்முறை முழுவதுமாக படித்தேன். முதலில் அரபிக் வாசகத்தை படிப்பேன். பிறகு ஆங்கில பாரசீக மொழிபெயர்ப்பு வாசகங்களை படிப்பேன். பிறகு மறுபடியும் அரபிக் வாசகத்தை படிப்பேன். அந்த அரபிக் வாசகத்தை புரிந்து கொள்ளும் வரை அடுத்ததற்கு போக மாட்டேன்.

விரைவிலேயே நான் ஏற்றுக் கொள்ள முடியாத வாசகத்திற்கு வந்தேன். அது போன்ற ஒரு வாசகம், “அல்லா தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர எதற்கும், தனக்கு விருப்பமானவர்களை, மன்னிப்பான்; யார் அல்லாவுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே செய்கின்றார்கள்” 4:48

ஒரு முஸ்லிம் கொலைகாரன் அல்லாவின் மன்னிப்பை பெற வாய்ப்பு இருக்கும்போது பல கடவுள்களை நம்பியதற்க்காக காந்தி காலத்திற்கும் நரகத்தில் எரிவார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. என்மனதில் ஒரு கேள்வி எழுந்தது. அல்லா தான் தான் ஒரே கடவுள் என்று அறியப்பட ஏன் இவ்வளவு வெறி கொண்டிருக்கிறார்? வேறு கடவுளே இல்லாத போது எதற்கு கூச்சல்? யாரேனும் அவரைப்பற்றி தெரிந்திருக்கவில்லை என்றாலும் அவரை போற்றிப் பாடவில்லை என்றாலும் அவருக்கு என்ன குறை?

சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறதே. சந்தேகப்பேர்வழியான கணவன் தன் மனைவியைப் பார்த்து மற்ற ஆண்களைப் பார்க்ககூடாது என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம். இதுவே கொடுமையாக இருக்கிறது. அதுவே அந்த ஜோடி யாருமில்லாத ஒரு தீவில் இருப்பத்தகக் கொள்வோம். இப்பொழுதும் அந்த கணவன் சந்தேகத்தோடு இருந்தால் பைத்தியக் காரத்தனமாக இல்லை? அல்லா தவிர வேறு கடவுள் இல்லை என்றால் எதற்கு இந்த மனநோய். அல்லா ஒரு புத்தி சுவாதீனமுள்ள கடவுளாக தெரியவில்லையே! இஸ்லாமில் நம்பிக்கைக்கான சத்யம் (shahadah) “அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்பதே முட்டாள்தனமாக தோன்றத் தொடங்கியது. தன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்றால் அல்லாவுக்கு ஏன் இவ்வளவு கவலை?

நான் இந்த அண்டத்தின் (universe) அளவைப் பற்றி அறிந்துகொண்டேன். நொடிக்கு 3,00,000 கி.மீ. பயணிக்கும் ஒளி கண்ணில் படும் அண்டத்தின் ஓரத்தில் உள்ள காலக்ஸியில் இருந்து நம்மை அடைய 40 பில்லியன் ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றது. கண்ணில் படும் அண்டம் முழு அண்டத்தில் ஒரு தூசி மட்டுமே. எத்தனை ட்ரில்லியன் காலக்சிக்கள் இதில் இருக்கும்? ஒவ்வொரு காலக்சியிலும் எத்தனை பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கும்? ஒவ்வொரு நட்சத்திரத்திலும் டஜன் கோள்கள் இருக்கின்றன. இந்த அண்டமானது எவ்வளவு பெரியது? இந்த ஆகச்சிறிய கோளில் உள்ள அற்பமான உயிர்கள் அவரை துதிக்கவேண்டும் என்று அல்லாவுக்கு ஏன் இவ்வளவு கவலை?

நான் இப்பொழுது மேற்குலகில் வாழ்ந்திருக்கிறேன். தனது இதயங்களையும் இல்லங்களையும் எனக்காக திறந்துவைத்திருக்கும் மேற்க்கத்திய நண்பர்கள் பலர் எனக்கு இருக்கிறார்கள். அவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொள்ளவேண்டாம் என்று அல்லா சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. முஸ்லிம்கள் காஃபிர்களை (முஸ்லிமல்லாதோர்) தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி; எவரேனும் அப்படிச் செய்தால், அல்லாவிடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. (Q3:28). அல்லா தானே முஸ்லிமல்லாதோரையும் படைத்தார்? அவர் எல்லோருக்கும்தானே கடவுள்? தன் சொந்த படைப்புகளின் மீதே அவருக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? முஸ்லிம்கள் மற்றவர்களுடன் நட்புடன் பழகி தங்கள் நன்னடத்தையால் இஸ்லாமை அவர்களுக்கு போதித்தால் நன்றாக இருக்குமே? அவர்களிடமிருந்து பிரிந்து வாழ்வதால் இடைவெளியை எப்படி இணைப்பது? பிறகு எப்படி மற்றவர்கள் இஸ்லாமைப் பற்றி தெரிந்து கொள்வார்கள்? இதுபோன்ற பல கேள்விகள் எனக்குள் எழுந்தன. இதற்கிடையில் “அவர்களை கண்ட இடங்களில் வெட்டுங்கள்” (Q 2:191) . போன்ற வாசகங்களையும் படித்தேன். இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே. அல்லாவை விட நான் ஞானியா? அப்படித்தான் தெரிகிறது. அவர்களை கண்ட இடங்களில் வெட்டுங்கள் என்பதை யார் சொன்னாலும் முட்டாள்தனமானது தான். இவை கடவுளின் வார்த்தைகளா இல்லை தவறாக அவர் சொன்னதாக சொல்லப்படுபவைகளா? இந்த கேள்வி குரானைப் படிக்கப் படிக்க என்மனதில் திரும்பத் திரும்ப எழுந்தது.

என் நண்பர்களைப் பற்றியும் அவர்களின் அன்பைப் பற்றியும் எண்ணிப் பார்த்தேன். ஒருவரை எப்படி கடவுள் தன்னை நம்பாத ஒரே காரணத்திற்காக கொல்லச் சொல்லமுடியும்? இருப்பினும் இந்த கட்டளை குர்ஆனில் திரும்பத் திரும்ப வருவதால் இதில் சந்தேகம் ஒன்றும் இல்லை. 8:65 வாசகத்தில், அல்லா தனது தூதுவரிடத்தில் “ஓ தூதரே! முஸ்லிம்களை போருக்குத் தூண்டுங்கள். உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் ஆயிரம் காஃபிர்களை (முஸ்லிமல்லாதோர்) வெற்றி கொள்வார்கள்”

அல்லா ஏன் போர் செய்வதற்காக தூதுவரை அனுப்ப வேண்டும் என்று வியந்தேன். கடவுள் நம்மை ஒருவரை ஒருவர் அன்பு செலுத்த அல்லவா போதிக்கவேண்டும்? தன்னை துதிக்காதவர்களை கொன்றே ஆக வேண்டும் என்றால் அவரே அதைச் செய்யல்லாமே? ஏன் முஸ்லிம்களை அனுப்பவேண்டும்? முஸ்லிம்கள் அல்லாவின் அடியாட்களா?

ஜிஹாதைப் பற்ற எனக்கு தெரியும் என்றாலும் அதன் விளைவுகளைப் பற்றி நான் யோசித்ததில்லை. கடவுள் மக்களின் மீது வன்முறைதாக்குதல்களை ஏவுவார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இதைவிட அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் முஸ்லிமல்லாதோரின் மீதான அல்லாவின் க்ரூரம்தான்.

“என்னை நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” 8:12

அல்லாவுக்கு முஸ்லிமல்லோதோரை கொன்றால் மட்டும் போதாது போல இருக்கிறது. கொல்வதற்கு முன் சித்ரவதை செய்து ரசிக்கிறார். ஆனால் அதே சமயம் இதை அவரே செய்ய முடியவில்லை. முஸ்லிம்களை நம்பவேண்டியிருக்கிறது. பிடரியில் வெட்டுவது, விரல்களை கத்தரிப்பது, இவைகள் எல்லாம் இறை குணங்களா? இறைவன் உண்மையிலேயே இப்படிப்பட்ட கட்டளைகளை இடுவாரா? இதைவிடக் கொடூரம் என்னவென்றால் இவர் முஸ்லிமல்லாதோருக்கு பரலோகத்தில் என்ன வைத்திருக்கிறார் என்பது.

இரு தரப்பாரும் (முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதோர்) தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்; ஆனால் எவர் அல்லாவை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்படும்; கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும்.அதைக் கொண்டு அவர்களுடைய வயிறுகளிலுள்ளவையும், தோல்களும் உருக்கப்படும்.இன்னும் அவர்களுக்காக இரும்பினாலான தண்டங்களும் உண்டு.துக்கத்தினால் அவர்கள் அந் நரகத்தை விட்டு வெளியேற விரும்பும் போதெல்லாம், அதனுள்ளே திருப்பப்பட்டு, “எரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்” என்று சொல்லப்படும். 22:19-22

இந்த அண்டத்தைப் படைத்தவர் எப்படி இவ்வளவு கொடூரமானவராக இருக்க முடியும்? முஸ்லிம்களை கீழ்க்கண்டவாறு செய்யுமாறு குரான் கட்டளையிடுவதை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன்.

-   காஃபிர்களை கண்ட இடங்களில் வெட்டுங்கள் (Q.2:191),

-   அவர்களை கொலை செய்யுங்கள், கடினமாக நடத்துங்கள் (Q.9:123),

-   அவர்களுடன் சண்டை இடுங்கள், (Q.8:65), இஸ்லாமைத்தவிர வேறுமதம் இல்லாமல் போகும் வரை (Q.2:193)

-   அவர்களை கேவலமாக நடத்துங்கள், அவர்கள் கிறித்துவர்களாகவோ யூதர்களாகவோ இருந்தால் தண்ட வரி விதியுங்கள், (Q.9:29)

-   சிலை வழிபடுபவர்களை (Pagans) வெட்டுங்கள். (Q.9:5), சிலுவையில் இடுங்கள், அவர்களின் கைகால்களை வெட்டுங்கள்,

-   அவமானமான முறையில் நாட்டை விட்டு துரத்துங்கள். ஏதோ இது போதாதென்று “அவர்களுக்கு இன்னும் அதிக சித்ரவதைகள் அடுத்த உலகத்தில் காத்திருக்கிறது.” (Q.5:34),

-   முஸ்லிம்களாக மாறாவிட்டால் உங்கள் சொந்த பெற்றோர்களிடமும் சகோதரர்களிடமும் கூட நட்பு கொள்ளாதீர்கள். (Q.9:23), (Q.3:28),

-   பத்ர் மற்றும் உஹுத் போர்களில் தங்கள் சொந்த குடும்ப நபர்களையே கொல்லச் சொன்னார். மேலும் முஸ்லிம்களை “முஸ்லிமல்லாதோருக்கு எதிராக பெரும் முயற்சி எடுங்கள்” என்று சொல்கிறார். (Q.25:52),

-   அவர்கள் நரகத்திற்கு போகப் போவதால் அவர்களிடம் மிகவும் கண்டிப்பாக இருக்கச் சொல்கிறார். (Q.66:9), இது போன்று பலப் பல.

“முஸ்லிமல்லாதோரின் தலைகளை வெட்டி எறியுங்கள்” என்றும் “அவர்களில் நிறைய பேரை வெட்டிவிட்டு, மீதி பேரை கட்டிப்போட்டு அடிமையாக்குங்கள்” (Q.47:4) என்றும் சொல்லும் குரானைப் படித்துவிட்டு எந்த நியாயமான மனிதனாவது மனம் கலங்காமல் இருக்கமுடியுமா?

என்னாலும் முடியவில்லை. குரான் நம்பிக்கை சுதந்திரத்தை எல்லோருக்கும் மறுக்கிறது, இஸ்லாம் மட்டுமே ஏற்புடைய மதம் என்று தெளிவாக சொல்கிறது. (Q.3:85). உலகத்தை படைத்தவர் அவர் மேல் நம்பிக்கை இல்லாததற்காக மக்களை நரகத்தில் எரிப்பார் (Q.5:11) என்பதும், அவர்களை ‘நஜிஸ்’ (அசுத்த, தீண்டத்தகாத, தீட்டான) என்று கேவலப்படுத்துவதும் (Q.9:28) அவர்கள் கொதிக்கும் நீரை குடிக்க கட்டாயப் படுத்தப்படுவார்கள் (Q.14:17) என்பதும் மிகவும் அல்பமாக படுகிறது.

ஆனால் அல்லாவின் குரூரத்திற்கு எல்லையே இல்லை. “முஸ்லிமல்லாதோரைப் பொறுத்த மட்டில், அவர்களுக்கு நெருப்பினால் ஆன உடைகள் உடுத்தப்படும், கொதிக்கும் நீரை அவர்களின் தலைகளில் உற்றப்படும், அதனால் அவர்களின் குடல்களும் தோலும் கரைக்கப் படும், அவர்கள் கொக்கிகலுள்ள இரும்பு கம்பிகளால் சித்தரவதை செய்யப்படுவார்கள்.” (Q.22:9).

நான் மேலும் மேலும் படிக்கப் படிக்க, இஸ்லாமின் எல்லா குறைகளுக்கும் குரான்தான் காரணம் என்று கண்டுபிடித்தேன். வெறுப்பை உமிழும் கொடூர முல்லாக்கள் மார்க்கம் தவறியவர்கள் அல்ல. அவர்கள் முஹம்மது சொன்னதை செய்யும் நல்ல முஸ்லிம்கள். நான்தான் அறியாமையில் இருந்தேன்.

பெண்கள் ஆண்களை விட கீழானவர்கள் என்றும் அவர்களின் கணவர்கள் அவர்களை அடிக்க உரிமையுண்டு என்றும் (Q.4:34); கணவனுக்கு அடி பணிந்து நடக்கவில்லை என்றால் மனைவி நரகத்திற்கு செல்வார் என்றும் (Q.66:10); ஆண்கள் பெண்களை விட உயர்ந்தவர்கள் என்றும் (Q.2:228) பெண்களுக்கு ஆண்களுக்கு சமமாக சொத்துரிமை இல்லை என்றும் (Q.4:11-12) குரான் சொல்கிறது. குரான் பெண்கள் புத்தி ஸ்வதீனம் இல்லாதவர்கள் என்றும் அதனால் ஒரு தனி பெண்ணின் சாட்சி நீதிமன்றத்தில் செல்லாது என்றும் சொல்கிறது. (Q.2:282). மானபங்கப்படுத்தப்பட்ட பெண் நான்கு ஆண் சாட்சி இல்லாமல் குற்றவாளியின் மீது வழக்கு தொடுக்க முடியாது. என்ன கொடுமை இது. எவன் நான்கு சாட்சிகளுக்கு மத்தியில் ஒரு பெண்ணை வல்லுறவு புரிவான்? ஆனால், இதையும் விட கொடுமையான வாசகத்தில் அல்லா முஸ்லிம்கள் போரில் கைப்பற்றப்பட்ட பெண்களை, அவர்கள் மணமானவர்களாக இருந்தாலும், வல்லுறவு கொள்ளலாம் என்று சொல்கிறார். (Q.4:24 & 4:3).

முஹம்மதின் வாழ்க்கை வரலாறைப் படித்த போது அவன் போரில் பிடிபட்ட அழகான பெண்களை அவர்களின் கணவர்களை கொன்றொழித்த அதே நாளில் வல்லுறவு கொண்டான் என்பதை அறிந்தேன். இந்த உதாரணத்தை வைத்துத் தான் முஸ்லிம் ராணுவம் மற்ற காபிர் நாடுகளை பிடிக்கின்ற போது அவர்களின் பெண்களை வல்லுறவு புரிகிறார்கள். 1971 ல் கிழக்கு வங்காளம் தனி நாடாக விரும்பிய போது அம்மக்கள் இஸ்லாமியர்கள் இல்லை என்று பாகிஸ்தானிய மதத் தலைவர்கள் அறிவித்ததால் பாகிஸ்தானி ராணுவத்தினர் 2,50,000 வங்காளப் பெண்களை வல்லுறவு புரிந்தார்கள் மற்றும் 30,00,000 ஆயுதமேந்தாத பொதுமக்களை சுட்டுத் தள்ளினார்கள். இஸ்லாமிய நாடான ஈரானில் முல்லா ஆட்சியை எதிர்ப்பவர்களை அல்லாவின் எதிரிகள் என்று அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிப்பார்கள். இப்படி மரண தண்டனை விதிக்கப் பட்ட பெண் கைதிகளை கொல்லும் முன் வல்லுறவும் செய்கிறார்கள். இப்படித்தான் முஹம்மதும் செய்தான். அவனை எதிர்த்த யாரையும் அல்லாவை எதிர்த்தவர்கள் என்று அறிவித்து அவர்களின் ரத்தம் ஹலால் என்றான்.

குரான் முழுக்க முஸ்லிமல்லாதோரை கொல்வதைப் பற்றிய போதனையும் அல்லா எப்படி அவர்களை நரகத்தில் சித்ரவதை செய்வார் என்பதைப் பற்றிய வாசகங்கள் தான் இருக்கின்றன. இந்த புத்தகத்தில் ஒழுக்கம், நீதி, நேர்மை, அன்பு பற்றியெல்லாம் ஒரு போதனையும் இல்லை. குரானில் உள்ள ஒரே செய்தி அல்லாவையும் அவரின் தூதுவரை நம்புவதும் மட்டுமே. குரான் அதை நம்புபவர்களுக்கு பரலோக மாதுக்களுடன் கட்டற்ற கலவியின்பம் என்று ஆசை காட்டுகிறது, அதை நம்பாதவர்களுக்கு நரகத்தில் பெரும் நெருப்பில் எறிவார்கள் என்று பயமுறுத்துகிறது.

குரானில் சரியானவழி என்பது நமக்குத் தெரிந்த பொருளில் அமைந்த சரியானவழி இல்லை. சரியானவழி என்பது முஹம்மது சொன்னைதையும் செய்ததையும் செய்தல் ஆகும். இவை ஒன்றுக் கொன்று சம்பந்தமில்லாதது.

ஒரு முஸ்லிம் கொலைகாரனாக இருக்கலாம். ஆனால் அதேசமயம் நியாயமானவனாக பார்க்கப்படுவான். நமக்கு பொதுவாக தெரிந்த நற்செயல்கள் எல்லாம் இரண்டாம்பட்சம் தான். சொல்லப்போனால் அவை எல்லாம் முற்றிலும் பொருளற்றது. அல்லாவின் மீதும் அவர் தூதரின் மீதும் நம்பிக்கை தான் மனித வாழ்க்கையின் ஒரே நோக்கமாகும்.

குரானை படித்து முடித்த பிறகு, நான் மிகவும் மனத்தளர்ச்சி அடைந்தேன். இந்த புத்தகம் தீய்மையே உருவானது. இவ்வளவு தீய்மையை என்னால் நம்பவே முடியவில்லை. நான் இயற்கையில் அன்பானவன். வன்முறையை வெறுப்பவன். ஆரம்பத்தில் சரியாக புரிந்துகொள்ள வில்லையோ என்று நினைத்தேன். அந்த தீய வாசகங்களுக்கு வேறு ஏதேனும் மறைமுக பொருள் இருக்குமோ என்று தேடினேன். ஆனால் பலன் இல்லை. அவற்றில் தவறாக புரிந்துகொள்வதற்கு வழியே இல்லை. குரான் சிறிதும் மனிதாபிமானம் அற்றது. அது மட்டுமல்ல. அதில் நிறைய அறிவியலுக்குப் புறம்பான உளறல்களும் பிதற்றல்களும் உள்ளன. ஆனாலும் அவைகள் என்னை அவ்வளவாக பாதிக்க வில்லை. என்னை மிகவும் பாதித்து என் நம்பிக்கையின் அஸ்திவாரத்தையே தகர்த்தது அதில் அடங்கியுள்ள சிறிதும் கருணையற்ற குரூரம்தான்.

எனக்கு துணையாக ஆங்கில மற்றும் பாரசீக மொழிபெயர்ப்புகளை பயன்படுத்தியதால், ஆங்கில மொழிபெயர்ப்பு துல்லியமானதாக இல்லை என்பதையும் கண்டேன். மொழிபெயர்ப்பாளர் தன்னால் முடிந்தவரை குரானின் குரூரத்தையும் முட்டாள்தனத்தையும் மூடிமறைக்க பார்த்திருக்கிறார். அவர் வார்த்தைகளின் பொருளை திரித்தும் தனது சொந்த விளக்கங்களை அடைப்புக் குறிகளிற்கிடையில் சொருகியும் கசப்பை இனிப்பாக்க முயற்சி செய்திருக்கிறார். மற்ற ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் சோதித்துப்பார்த்தேன். அவைகள் எல்லாமே ஏமாற்றும் நோக்கத்தில் மென்மையாக்கபபட்டும் இனிப்பு பூசியும் இருக்கின்றன. இந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு இதை முஸ்லிமல்லாதோர் படிப்பார்கள் என்று நன்றாக தெரியும். எனவேதான் அவர்களால் முடிந்தவரை நயவஞ்சகம் செய்திருக்கிறார்கள். பாரசீக மொழிபெயர்ப்பாளருக்கு இந்த சிக்கல்கள் ஏதும் இல்லை. எனவேதான் குரானின் தூய விஷத்தை அப்படியே உமிழ்ந்து இருக்கிறார்.

-Ali Sina.

மொழிபெயர்ப்பு: Ali Sina’s Tamil Fan